ஏடிஹெச்டி - ADHD in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 26, 2018

March 06, 2020

ஏடிஹெச்டி
ஏடிஹெச்டி

ஏடிஹெச்டி (கவனக்குறைவு மற்றும் உயர் செயல்திறன் டிஸ்ஆர்டர்) என்றால் என்ன?

ஏடிஹெச்டி என்பது மூளை செயல்பாட்டின் ஒரு பொதுவான வளர்ச்சி குறைபாடு, இது பொதுவாக குழந்தை பருவத்தில் கண்டறியப்படுகிறது என்றாலும் வயது முதிர்ந்த நிலையிலும் தொடரக்கூடியது. இது மூளையின் மரபணு, இரசாயன மற்றும் கட்டமைப்பு மாற்றங்களுடன் தொடர்புடைய ஒரு நோயாகும். ஏடிஹெச்டி உள்ள குழந்தைகள் பொதுவாக உயர் செயல்திறன் கொண்டவர்களாகவும், கவனம் செலுத்துவதில் ஈடுபாடில்லாமலும், ஒரு செயலை செய்வதால் ஏற்படும் விளைவுகளை பற்றி யோசிக்க இயலாதவர்களாகவும் இருப்பார்கள்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

ஏடிஹெச்டி நோய் உள்ள குழந்தைகள் கவனமின்மை, உணர்ச்சிவசப்படுதல் மற்றும் உயர் செயல்திறன் போன்ற முக்கிய அறிகுறிகளுடன் காணப்படுவார்கள். இந்த மூன்று அறிகுறிகளும் கலந்த விளைவுகளோ அல்லது ஒரே ஒரு அறிகுறியின் அதிகபட்ச தாக்கமோ, குழந்தையின் நடத்தையில் தென்படலாம். இதில் உயர் செயல் திறன் தான் பொதுவாக அனைத்து குழந்தைகளிடமும் காணப்படும் முக்கியமான அறிகுறியாகும். ஏடிஹெச்டி உள்ள மக்களிடம் இந்த அறிகுறிகள் இன்னும் தீவிரமாக காணப்படும், மேலும் இந்த அறிகுறிகள் அடிக்கடி தென்படலாம் மற்றும் பள்ளி அல்லது வேலை இடங்களில், நடக்கும் பொது நிகழ்ச்சிகளின் தரத்தில் குறுக்கிடக்கூடும். இதன் மூன்று முக்கிய அம்சங்களின் விவரங்கள் பின்வருமாறு:

 • செயல்திறன் குறைபாடு:
  கவனச் சிதைவு, மறதி அல்லது பொருட்களின் தவறான இடமாற்றம், ஒரு வேலையை முடிப்பது அல்லது ஏற்பாடு செய்வதில் சிரமம், கட்டளைகள் மற்றும் விவாதங்களை பின்தொடர்வதில் சிரமம், எளிதாக திசை திருப்பப்படுவது மற்றும் தினசரி நடவடிக்கைகளை பற்றிய நினைவின்மை போன்றவை செயல்திறன் குறைபாடுகள் ஆகும்.
 • உணர்ச்சிவசப்படுதல் மற்றும் உயர் செயல்திறன்:
  நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர இயலாமை, விபத்து பாதிப்புக்குள்ளாகக்கூடிய தன்மை, அடிக்கடி படபடப்புடன் இருத்தல், தொடர் பேச்சு; மற்றவர்களை தொந்தரவு செய்வது, மற்றவர் பொருட்களை அனுமதியின்றி கைப்பற்றுவது, தேவையற்ற நேரங்களில் பேசுவது, சரியான நேரத்திற்காக காத்திருக்காமல் சட்டென்று பேசிவிடுவது போன்றவை மற்ற அறிகுறிகளாகும்.
 • ஒன்றிணைந்த வடிவம்:
  மேற்கூறிய இருவித அறிகுறிகளும் ஏடிஹெச்டி நோய் உள்ள ஒருவரிடம் சரிசமமாக தென்படலாம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இந்த நோய் தாக்குதலுக்கான துல்லியமான காரணம் கண்டறியபடவில்லை, ஆனால் விஞ்ஞானிகள் தொடர்ந்து இந்த ஏடிஹெச்டி நோய் தாக்குதலை தடுப்பதற்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நோயின் பொதுவான அபாயங்கள் பின்வருமாறு:

 • மரபணு:
  ஏடிஹெச்டி நோய் தாக்குதலில் மரபணு ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மரபணு மாற்றங்கள் ஏற்படுத்தும் அபாய விளைவுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏடிஹெச்டி ஒரு பரம்பரை நோய் ஆகவும் இருக்கலாம்.
 • மூளையில் ஏற்படும் காயங்கள்:
  கருவில் இருக்கும் பொழுதோ அல்லது வளரும் பொழுதோ மூளையின் கட்டமைப்பு அல்லது செயல்பாட்டில் ஏற்படும் எந்த ஒரு காயம் அல்லது சிதைவின் விளைவாக ஏடிஹெச்டி நோய் தாக்கக்கூடும்.
 • போதை மருந்துகள்:
  கருவுற்றிருக்கும் ஒரு தாய் மது, புகையிலை அல்லது கொக்கைன் போன்ற போதை வஸ்துக்களை உட்கொள்ளும்போது, கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏடிஹெச்டி நோய் தாக்க கூடிய அபாயம் உள்ளது.
 • ஈயம்
  கருவுற்றிருக்கும் போது, ஈயம் போன்ற சுற்றுசூழல் மாசுபாட்டின் தாக்கங்கள், ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது.
 • பிறப்பு குறைபாடுகள்:
  குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் மற்றும் பிறக்கும்போதே எடை குறைவாக இருந்த குழந்தைகளுக்கு நோய் தாக்கும் அபாயம் உண்டு.

இதை எவ்வாறு கண்டறிவது  மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

ஏடிஹெச்டி நோயை கண்டறிவதற்கான குறிப்பிட்ட சோதனை முறைகள் எதுவும் இல்லை. குழந்தையின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பெறப்படும் விரிவான மருத்துவ மற்றும் குழந்தையின் நடத்தை வரலாற்றை பொறுத்தே ஒரு குழந்தை மருத்துவர் அல்லது ஒரு மன நல மருத்துவரால் மட்டுமே ஏடிஹெச்டி நோயை கண்டறிய இயலும்.

நீங்கள் ஒரு மருத்துவரை அணுகும் போது, எப்போது இந்த அறிகுறிகள் தோன்றின, குறிப்பாக இது எங்கே ஆரமித்தது (பள்ளி அல்லது வீடு), இவை குழந்தையின் தினசரி மற்றும் சமுதாய வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது , குடும்ப நபர்கள் யாருக்காவது ஏடிஹெச்டி இருக்கிறதா, குடும்பத்தில் திடீர் மரணம் அல்லது விவாகரத்து நடந்துள்ளதா , குழந்தையின் வளர்ச்சி வரலாறு, முந்தையை நடவடிக்கைகள் , காயங்கள் மற்றும் உடல் நல குறைவு  ஆகியவை பற்றி  உங்கள் மருத்துவர் உங்கள் குழந்தையிடம் நீங்கள் காணும் அறிகுறிகளை பற்றி கேட்டறிவார் . பல்வேறு சர்வதேச அங்கீகாரம் பெற்ற கருவிகள், அளவீடுகள் மற்றும் இன்ன பிற நுணுக்கங்கள் கொண்டு உங்கள் மருத்துவர் மற்றும் மனநல நிபுணர் ஏடிஹெச்டி நோயை கண்டறிவார்கள்.

ஏடிஹெச்டி தாக்கத்திற்கு பல்வேறு வகைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல மருந்துகளும் சிகிச்சை முறைகளும் இணைந்த நிலையை  பயன்படுத்தி  மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.  மூளை தொடர்பான செயல்பாடுகளை மருந்துகள் நெறிப்படுத்துகின்றன, அதேசமயம், எண்ணங்கள் மற்றும் நடத்தை மாற்றங்களை சிகிச்சை முறைகள் சீர்செய்கின்றன.

பொதுவாக ஸ்டிமுலண்ட்ஸ் மருந்துகள் உணர்ச்சிவசப்படுதல் மற்றும் உயர் செயல்திறன் ஆகியவற்றை கட்டுப்படுத்தி குழந்தை கவனம் செலுத்தி, செயல் ஆற்ற மற்றும் கற்றுக்கொள்ள உதவுகிறது. மனநோய் சிகிச்சை முறைகளான நடத்தையியல் சிகிச்சை முறை மற்றும் அறிவாற்றல் உளவியல் சிகிச்சை முறை ஆகியவை மருத்துவர்களால் பின்பற்றப்படுகின்றன. குழந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. தம்பதியினருக்கு பெற்றோர் என்னும் கண்ணோட்டத்தில் பயிற்சி அளிக்கப்படுவதோடு, மன அழுத்தம் மேம்பாட்டு திட்டங்களும்  செயல்படுத்தப்படுகின்றன. போஸ்ட்- ட்ராமாடிக் ஸ்ட்ரெஸ் டிஸ்ஆர்டர் உள்ள குழந்தைகளுக்கும், ஏடிஹெச்டி யை ஒத்த அறிகுறிகளே காணப்படுகின்றன, இருப்பினும் அதற்கு வேறு விதமான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றது. குழந்தை மற்றும் குடும்ப நபர்களை பொறுத்தே மிகவும் சரியான சிகிச்சை முறை அமைகிறது. ஒரு நல்ல சிகிச்சைக்கு, தீவிரமான கண்காணிப்பு, பின் தொடர்தல் மற்றும் மருந்து, சிகிச்சை முறை ஆகியவற்றில் தேவையான மாற்றங்கள் போன்றவை தேவைபடுகின்றன.மேற்கோள்கள்

 1. National institute of mental health. Attention-Deficit/Hyperactivity Disorder. U.S. Department of Health and Human Services
 2. National Health Service [Internet]. UK; Attention deficit hyperactivity disorder (ADHD)
 3. Centre for Health Informatics. [Internet]. National Institute of Health and Family Welfare What is ADHD?
 4. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Attention deficit hyperactivity disorder (ADHD)
 5. Mental health .Attention deficit hyperactivity disorder (ADHD). U.S. Department of Health & Human Services. [internet].

ஏடிஹெச்டி டாக்டர்கள்

Dr. Ankit Gupta Dr. Ankit Gupta Psychiatry
10 वर्षों का अनुभव
Dr. Anil Kumar Kumawat Dr. Anil Kumar Kumawat Psychiatry
5 वर्षों का अनुभव
Dr. Dharamdeep Singh Dr. Dharamdeep Singh Psychiatry
6 वर्षों का अनुभव
Dr. Samir Parikh Dr. Samir Parikh Psychiatry
24 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

ஏடிஹெச்டி க்கான மருந்துகள்

ஏடிஹெச்டி के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।