ஆன்டித்ரோம்பின் பற்றாக்குறை - Antithrombin Deficiency in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 27, 2018

March 06, 2020

ஆன்டித்ரோம்பின் பற்றாக்குறை
ஆன்டித்ரோம்பின் பற்றாக்குறை

ஆன்டித்ரோம்பின் பற்றாக்குறை என்றால் என்ன?

ஆன்டித்ரோம்பின் என்பது ஒரு விதமான புரதம், இது இரத்தத்தில் இருக்கக்கூடியது. முதன்மையாக, இது ஒரு லேசான இரத்த மெலிவூட்டியாக செயல்படுகிறது மற்றும் இரத்தத்தின் அதிகப்படியான உறைவையும் தடுக்கின்றது. செயல்பாட்டின் ரீதியாக, இது த்ரோம்பினுக்கு எதிராக செயல்பட்டு, இரத்தத்தில் இருக்கும் புரதத்தை உறையச்செய்கிறது.

ஆன்டித்ரோம்பின் புரதக் குறைபாட்டினால் நரம்புகளில் உருவாகும் உறைவின் அபாயத்தை ஒருவரால் முன்பே கணிக்க முடியும். (சிரை இரத்த உறைவு).

ஆன்டித்ரோம்பின் குறைபாடு மரபுவழியாகவோ அல்லது ஈட்டியதாகவோ இருக்கலாம்.

அதன் முக்கிய அறிகுறிகள் என்ன?

ஆன்டித்ரோம்பின் குறைபாடு உள்ளவர்களின் நரம்பில் இரத்த உறைவு உருவாகும் அபாயம் உள்ளது. இது சிரை இரத்த உறைவு என அழைக்கப்படுகிறது. அத்தகைய தனிநபர்களுக்கு, முதல் அத்தியாயமான த்ரோம்போசிஸ் அல்லது இரத்தக் உறைவுப் பெரும்பாலும் 40 வயதிற்கு முன்பே ஏற்படுகிறது, அத்தருணத்தில் இரத்த உறைவானது நரம்பின் உட்புற சுவற்றில் அதனை தானாகவே இணைத்துக்கொள்கின்றது. பொதுவாக, சிரை இரத்தக் உறைவு கீழ் மூட்டுகளில் ஏற்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட காலில் கவனிக்கூடிய அறிகுறிகள் பின்வருமாறு:

உறைவானது காலில் இருந்து பிரிந்து நுரையீரலுக்கு செல்லும் போது அதற்கு தொடர்புடைய பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

ஆன்டித்ரோம்பின் பற்றாக்குறையின் முக்கிய காரணங்கள் யாவை?

ஈட்டிய ஆன்டித்ரோம்பின் குறைபாடிருந்தால், பின்வருபவை காரணங்களாக இருக்கலாம்:

ஆன்டித்ரோம்பின் பற்றாக்குறையானது மரபுவழியாகவும் ஏற்படலாம். இந்த குறைபாடு ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவருக்கும் சமமாக மரபுவழியாக ஏற்படலாம் என மரபணுவினால் முன்பே கணிக்கப்படுகிறது. ஒரு அசாதாரண மரபணுவின் இருப்பு இரத்தத்தில் குறைந்த அளவு ஆன்டித்ரோம்பின் புரதத்திற்கு வழிவகுக்கும்.

இதை கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

இந்நிலையை கண்டறிதலில் நோயாளியின் உடல்ரீதியான அறிகுறிகளை பரிசோதித்தல் மற்றும் மற்ற நோய்களுக்கான வாய்ப்புகளைக் கண்டறிதல் ஆகியவைகள் அடங்கும். இதனைத் தொடர்ந்து, மருத்துவர் பெரும்பாலும் இரத்த பரிசோதனையை பரிந்துரைக்கலாம், இது இரத்தத்தில் குறைந்த அளவு ஆன்டித்ரோம்பின் இருக்கிறதா என்பதை தீர்மானிக்க உதவுகிறது. இருப்பினும், குறைந்த ஆன்டித்ரோம்பின் நிலையை விளைவிக்கும் பிற காரணிகளும் உள்ளன. எனவே, அடிப்படை காரணத்தை உறுதிப்படுத்தவும், மரபுவழியிலான ஆன்டித்ரோம்பினின் குறைபாட்டை உறுதிப்படுத்தவும் மீண்டும் சோதனைகள் தேவைப்படலாம்.

ஆன்டித்ரோம்பின் குறைபாடு முதன்மையாக ஆன்டி-கோகுலன்ட்ஸ் என்று கூறப்படும் இரத்த மெலிவூட்டி மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. எனினும், மருந்தின் அளவு நபருக்கு நபர் வேறுபடும் மற்றும் கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைக்க வேண்டும்.



மேற்கோள்கள்

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Congenital antithrombin III deficiency
  2. National Organization for Rare Disorders. Antithrombin Deficiency. US; [Internet]
  3. National Blood Clot Alliance. ANTITHROMBIN DEFICIENCY. Gaithersburg. [internet]
  4. U.S. Department of Health & Human Services. Hereditary antithrombin deficiency. National Institutes of Health. [internet]
  5. National Centre for Advancing Translational Sciences. Hereditary antithrombin deficiency. U.S. Department of Health & Human Services. [internet]

ஆன்டித்ரோம்பின் பற்றாக்குறை டாக்டர்கள்

நகரின் Hematologist தேடல்

  1. Hematologist in Surat