குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய் - Asthma in Children in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 29, 2018

March 06, 2020

குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்
குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்

குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய் என்றால் என்ன?

இருமல், மூச்சுத்திணறல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற காரணங்களால் ஆஸ்துமா ஒரு நாள்பட்ட நோயாக கருதப்படுகிறது. ஏறத்தாழ பாதி ஆஸ்துமா வழக்குகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கின்றன என பதிவுசெய்யப்பட்டு இருக்கின்றன. பெரியவர்களுடன் ஒப்பிடுகையில் காற்றுப்பாதையின் குறுகல் காரணமாக குழந்தைகளுக்கு ஆஸ்துமா அதிக ஆபத்தை விளைவிக்கின்றது. எனவே, குழந்தைகளில் ஆஸ்துமாவை கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளித்தல் மிகவும் அவசியமாகும். பல குழந்தைகள் பருவ வயதிற்கு வரும்போது, ஆஸ்துமாவிலிருந்து நிவாரணம் பெறுகிறார்கள்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை ?

ஆஸ்துமாவின் அறிகுறிகள் குழந்தைகளின் ஆரம்ப காலத்திலேயே காணப்படலாம், அவர்கள் 5 வயதை எட்டும் முன்பே கூட கண்டறிய முடியும். மிகவும் வெளிப்படையான அறிகுறிகளை கொண்டிருந்தாலும், உண்மையில் இது ஆஸ்துமா என்ற முடிவிற்கு வருவது கடினம். வெவ்வேறு குழந்தைகள் வெவ்வேறு அறிகுறிகளை அனுபவிக்கலாம், அவற்றில் மிகவும் பொதுவானவை பின்வருமாறு:

 • தொடர்ந்து இருமல்.
 • மூச்சுத்திணறல்.
 • அடிக்கடி சளி பிடித்தல்.
 • மார்பு ஒடுங்கி காணப்படுதல் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் அல்லது மிக விரைவாக சுவாசித்தல்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

ஆஸ்துமாவின் முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

 • விலங்குகளின் முடிகள், தூசி, மகரந்தங்கள் மற்றும் அச்சுகள் போன்ற பல்வேறு ஒவ்வாமைகள்.
 • உடற்பயிற்சிகள் மற்றும் அதிக உயரத்திற்கு செல்லுதல்.
 • குளிர் கால நிலை மற்றும்/அல்லது வானிலை மாற்றம்.
 • சளி மற்றும் ஃப்ளு காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுக்கள்.
 • புகை உட்பட மாசுப்பொருட்கள் மற்றும் எரிச்சலூட்டிகள்.

ஆரம்ப அறிகுறிகள் பொதுவாக காலையிலோ அல்லது நடுராத்திரியிலோ காணப்படும்.

இதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

மருத்துவ வரலாற்றின் விவரங்கள் உட்பட பிறந்ததிலிருந்து இருக்கும் சுவாச பிரச்சனை மற்றும் ஆஸ்துமாவின் குடும்ப வரலாறு போன்ற விவரங்களை மருத்துவர் பெறுவார். பின்னர், இதயம் மற்றும் நுரையீரலில் ஒரு உடல் பரிசோதனை நடத்தப்படும். நுரையீரல் திறனை அளவிட மற்றும் காற்று எவ்வளவு உள்ளே மற்றும் வெளியே செல்கிறது என்பதை கணக்கிட, ஒரு நுரையீரல் செயல்பாட்டு சோதனையை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

பொதுவாக ஆஸ்துமாவின் சிகிச்சைக்கு இரண்டு முறைகள் உள்ளன:

 • உடனடி நிவாரணம்: இது ஆஸ்துமா தாக்கும் போது செய்யப்படும் உடனடி சிகிச்சை. பொதுவாக ஒரு அறிகுறி வந்தவுடன் உள்ளிழுப்புகளை பயன்படுத்த மருத்துவர் பரிந்துரைப்பார். இருமல் மற்றும் மூச்சு திணறல் ஆகியவற்றிற்கும் உடனடி நிவாரணம் தேவையாக இருக்கும்.
 • ஸ்டீராய்டு மற்றும் பீட்டா முதன்மை இயக்கிகள் போன்ற மருந்துகள் காற்று பாதைகளில் வீக்கத்தை குறைக்க மற்றும் தெளிவாக சுவாசிக்க மேற்கொள்ளப்படும் நீண்டகால சிகிச்சைகளுக்கு பயன்படுகிறது.
 • கூடுதலாக, ஒவ்வாப்பொருட்களுக்கு வெளிப்படுவது மற்றும் ஆஸ்துமா தாக்குதலுக்கு சாத்தியமானவைகளை தடுக்க கூர்ந்து கவனித்து செயல்படவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். சில வழக்குகளில், ஒவ்வாமைப்பொருட்கள் கூட கொடுக்கப்படலாம். மேற்கோள்கள்

 1. American Academy of Allergy, Asthma and Immunology [Internet]. Milwaukee (WI); Asthma in Children
 2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Asthma in Children
 3. Wim M. van Aalderen. Childhood Asthma: Diagnosis and Treatment. Scientifica (Cairo). 2012; 2012: 674204. PMID: 24278725
 4. U.S. Department of Health & Human Services. Asthma in children. Centre for Disease Control and Prevention
 5. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Asthma in children

குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய் க்கான மருந்துகள்

குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।