டிப்தீரியா (தொண்டை அடைப்பான் நோய்) - Diphtheria in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

April 19, 2019

October 28, 2020

டிப்தீரியா
டிப்தீரியா

டிப்தீரியா (தொண்டை அடைப்பான் நோய்) என்றால் என்ன?

டிப்தீரியா என்பது கோரினேபாக்டீரியம் டிப்தீரியா என்ற பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு பரவக்கூடிய பாக்டீரியல் நோயாகும். டிப்தீரியா வழக்கமாக 1-5 வயது வரையுள்ள குழந்தைகளை தாக்குகிறது மற்றும் இது மிகப்பொதுவாக குளிர்காலத்தில் ஏற்படுகிறது. இந்த தோற்று தொண்டையின் பின்பகுதியில் ஒரு தடித்த உரையை ஏற்படுத்துவதால், உண்பதும் விழுங்குவதும் சிரமமாகிறது. இந்த பாக்டீரியா மிகப்பொதுவாக மூக்கையும் தொண்டையையும் தாக்குமென்றாலும் சில சமயங்களில் இது தோலையும் பாதிக்கிறது.

இதன் முக்கிய அறிகு.றிகள் என்ன?

இதன் அறிகுறிகள் வழக்கமாக பாக்டீரியல் தொற்று ஏற்பட்ட 1-7 நாட்களுக்குள் தெரியத் தொடங்கும். டிப்தீரியாவில் கவனிக்கப்படும் பொதுவான அறிகுறிகள் கீழ்வருமாறு:

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

இந்த நோய் ஏற்படுவதற்கு காரணம் பாக்டீரியா என்றாலும் இது பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது அல்லது தும்மும்போது வெளியாகும் சுவாச நீர்த்துளிகள் வாயிலாக பரவுகிறது. இந்த பாக்டீரியம் சுவாசப்பாதை வழியாக நுழைவதால் இதன் அறிகுறிகள் மிக பொதுவாக தொண்டையிலோ அல்லது மூக்கிலோ உருவாகிறது.

தோல்புண்கள் அல்லது தொடுபொருட்கள் (பாதிக்கப்பட்ட நபரால் பயன்படுத்தப்பட்டதால் பாக்டீரியா தொற்றிக்கொண்ட பொருட்கள்) மூலமாகவும் இந்த பாக்டீரியா பரவக்கூடும்.

இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

டிப்தீரியாவை ஆரம்பத்தில் ஒரு உடல் பரிசோதனை மூலம் கண்டறியலாம், இது தோல்ப்பகுதியிலுள்ள இறந்த திசுவின் பின்பக்கம் அல்லது பழுப்பு பூச்சைக் காண மருத்துவருக்கு உதவும். மற்ற சோதனைகள் கீழ்வருமாறு:

 • தொண்டைத்தொற்றின் மாதிரி பகுப்பாய்வு.
 • முழுமையான ரத்த எண்ணிக்கை, டிப்தீரியாவுக்கான ஆன்டிபாடிகள், டிப்தீரியா எதிர்ப்புத் திறனூட்டி போன்ற மற்றும் பல நீணநீரிய சோதனைகள் மற்றும் ரத்த சோதனைகள்.

இந்த நோயை சரியான நேரத்தில் கண்டறிவதென்பது அவசியமானதாகும், ஏனென்றால் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொள்வது உயிர் வாழ்வதற்கு மிகவும் இன்றியமையாததாகும்.

இந்த பாக்டீரியாவால் உருவான நச்சுக்களை தடுப்பதற்காக டிப்தீரியாவின் சிகிச்சை நச்சுமுறிகளின் பயன்பாட்டை உள்ளடக்கியுள்ளது.

இந்த நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாவை கொல்வதற்காக ஆண்டிபையோட்டிக்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் உண்டாகும் அசைவுகரியத்தை குறைப்பதற்காக இந்த மருந்துகளுடன் சேர்த்து வேறு சில நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். அவை:

 • நரம்பு வழியாக திரவங்களை செலுத்துதல்.
 • படுக்கையில் ஓய்வெடுத்தல்.
 • சுவாசக்குழாயை பயன்படுத்துதல்.
 • சுவாசவழி அடைப்புகளை சுத்தம் செய்தல்.

டிப்தீரியாவால் பாதிக்கப்பட்ட  நபர்களிடமிருந்து அடுத்தவருக்கு நோய் பரவாது என மருத்துவருக்கு உறுதியாக தெரியும் வரை அவர்கள் வழக்கமாக தனிமையில் வைக்கப்படுவார்கள்.மேற்கோள்கள்

 1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Diphtheria
 2. National Health Portal. Diphtheria. Centre for Health Informatics; National Institute of Health and Family Welfare
 3. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Diphtheria: Diagnosis and Treatment
 4. Department of Health. Diphtheria. New York State. [internet].
 5. Vaccines. Diphtheria. U.S. Department of Health and Human Service. [internet].

டிப்தீரியா (தொண்டை அடைப்பான் நோய்) டாக்டர்கள்

Dr Rahul Gam Dr Rahul Gam Infectious Disease
8 Years of Experience
Dr. Arun R Dr. Arun R Infectious Disease
5 Years of Experience
Dr. Neha Gupta Dr. Neha Gupta Infectious Disease
16 Years of Experience
Dr. Anupama Kumar Dr. Anupama Kumar Infectious Disease
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

டிப்தீரியா (தொண்டை அடைப்பான் நோய்) க்கான மருந்துகள்

Medicines listed below are available for டிப்தீரியா (தொண்டை அடைப்பான் நோய்). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.