கண்களில் நீர் வடிதல் - Eye Discharge in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

April 24, 2019

July 31, 2020

கண்களில் நீர் வடிதல்
கண்களில் நீர் வடிதல்

கண்களில் நீர் வடிதல் என்றால் என்ன?

நமது கண்கள்,அதன் பாதுகாப்பு மற்றும் வழக்கமான செயல்பாட்டிற்காக தொடர்ந்து சில சளி போன்ற  படலத்தை உருவாக்குகிறது. இந்த சளிப் படலம் ஒவ்வொருமுறை நாம் கண்களை இமைக்கும் போதும் மெல்லிய கண்ணீராக வெளிவருகிறது.ஒரு தனி நபர் தூங்கும் போது கண்களை இமைக்கவில்லை எனில், இந்த சளி படலம் பெருகி, கண்களில் மூளைகளில் யில் தங்கிவிடுகிறது மற்றும் புருவங்களிலும் ஒட்டி கொள்கிறது.சில நேரங்களில் அது விரும்பத்தகாததாக இருக்கலாம். சிறிய அளவிலான கண் நீர் வடிதல் (தெளிவான அல்லது வெண்மையான) என்பது வழக்கமான ஒன்று ஆகும். இருப்பினும், அதிகமாக நீர் வெளியேற்றம் அல்லது அதன் நிறத்தில் மாற்றம் ஏற்பட்டால் (பச்சை அல்லது மஞ்சள்), கண்களில் நீர் வடிதல் என்பது, அசாதாரணமான ஒன்றாக கருதப்படுகிறது.

இதன் முக்கிய தொடர்புடைய அடையாளம் மற்றும் அறிகுறிகள் என்ன?

கண்களில் நீர் வடிதலுடன் தொடர்புடைய அடையாளங்கள் அறிகுறிகள் பின்வருவனவற்றை உள்ளடைக்கியது:

 • கண்களிலிருந்து சீழ் அல்லது நீர் வெளியேற்றம் (இது மஞ்சள் அல்லது பச்சை நிறமாக இருக்கலாம்).
 • கண் இமைகள் மற்றும் புருவம் மீது உலர்ந்த சீழ் படிதல்.
 • உறக்கத்திலிருந்து விழிக்கும் போது, ஒருவருடைய கண் இமைகள் ஒன்றோடொன்று ஒட்டியிருக்கலாம்.
 • கண்களின் வெள்ளை பகுதியில் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாற்றம் (இது இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்) (மேலும் படிக்க: சிவப்பு நிற கண்களுக்கான காரணங்கள்).
 • பொதுவாக கண் இமைகள் புடைத்து காணப்படுகிறது.

இந்த நோய்த்தொற்று கடுமையாகும் சந்தர்ப்பங்களில், பின்வரும் ஆபத்தான அறிகுறிகள் காணப்படலாம்:

 • 104 ° F க்கு அதிகமாக காய்ச்சல்.
 • கண்களில் கடுமையான வலி, வீக்கம் அல்லது சிவந்த கண் இமைகள்.
 • பார்வை மங்கலாக்குதல் (மேலும் படிக்க: மங்கலான பார்வைக்கான சிகிச்சைமுறைகள்).

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

கண்களில் நீர் வடிதலுக்கான முக்கிய காரணங்களாவன:

இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

ஆரம்பத்தில், உங்கள் மருத்துவர் அறிகுறிகளின் விரிவான அறிக்கையை எடுத்து, உங்கள் கண்களை கவனமாக பரிசோதிப்பார்.

கண்களில் நீர் வடிதலுக்கான சிகிச்சை அதன் காரண காரணிகளை சார்ந்துள்ளது. இதைச் சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறது, அவை:

 • கண்களில் இருந்து சாதாரணமாக வெளியேறும் நீர் அல்லது சீழை சுத்தம் செய்ய சூடான தண்ணீர் மற்றும் ஈரமான பருத்தி துண்டுகள் பயன்படுத்தப்பட வேண்டும். சுத்தம் செய்த பிறகு, பருத்தி துண்டுகள் கவனமாக அகற்றப்பட வேண்டும், மறுமுறை இந்த தொற்று ஏற்படாமல் இருக்க கைகளை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.
 • முகத்தைத் தொடுவதை தவிர்த்தல் அல்லது கண் இமைகளில் கண் ஒப்பனை பயன்பாட்டை தவிர்த்தல்.
 • நோய்த்தொற்று ஒரு காரணியாக இருக்கும் இடங்களில் ஆண்டிபயாடிக் அல்லது ஆன்டிவைரல் கண் சொட்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
 • ஒரு தனிநபருக்கு அசாதாரண அல்லது அதிகமான கண் நீர் வடிதல் இருக்கும் போது அவர் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிவதையம் கண்ணாடிகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.மேற்கோள்கள்

 1. Healthychildren. Eye: Pus or Discharge. American academy of pediatrics. [internet].
 2. Seattle Children’s Hospital. Eye: Pus or Discharge. Seattle, Washington. [internet].
 3. Healthessentials. Why Your Eyes Are Crusty in the Morning?. Cleveland Clinic. [internet].
 4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Conjunctivitis (Pink Eye)
 5. Healthdirect Australia. Eye discharge. Australian government: Department of Health. [internet].

கண்களில் நீர் வடிதல் டாக்டர்கள்

Dr. Meenakshi Pande Dr. Meenakshi Pande Ophthalmology
22 वर्षों का अनुभव
Dr. Upasna Dr. Upasna Ophthalmology
7 वर्षों का अनुभव
Dr. Akshay Bhatiwal Dr. Akshay Bhatiwal Ophthalmology
1 वर्षों का अनुभव
Dr. Surbhi Thakare Dr. Surbhi Thakare Ophthalmology
2 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

கண்களில் நீர் வடிதல் க்கான மருந்துகள்

கண்களில் நீர் வடிதல் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।