எலும்பு முறிவு - Fractured Bones in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

December 13, 2018

March 06, 2020

ஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்
எலும்பு முறிவு
ஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்

எலும்பு முறிவு என்றால் என்ன?

எலும்பில் ஏற்படும் விரிசல் அல்லது முறிவே எலும்பு முறிவு எனக் குறிப்பிடப்படுகிறது. எலும்பு முறிவுகள் என்பது எந்த எலும்பில் வேண்டுமானாலும் முழுமையான பாதிப்பையோ அல்லது பகுதி பாதிப்பையோ ஏற்படுத்தக்கூடும். சுற்றியுள்ள திசுக்களுக்கு சேதம் விளைவிக்காத முறிவு மூடிய (எளிய) எலும்பு முறிவு என அழைக்கப்படுகையில், திசுக்களை சேதப்படுத்தி தோலினுள் ஊடுருவி செல்லும் முறிவு திறந்த (கூட்டு) எலும்பு முறிவு என அழைக்கப்படுகின்றது.

எலும்பு முறிவுகளின் மற்ற வகைகளுள் அடங்குபவை பின்வருமாறு:

 • நிலையான முறிவு - இந்நிலையில் பெரும்பாலும் எலும்பின் முனைகள் உடைந்து ஒரே இடத்தில் இருக்கும்.
 • குறுக்கு எலும்பு முறிவு - எலும்பில் ஏற்படும் கிடைநிலை முறிவு.
 • சாய்ந்த எலும்பு முறிவு - தூண்டில் போன்று அதாவது, எலும்பு மேலே அல்லது கீழே வளைந்திருக்கும் கோணத்தில் ஏற்படும் முறிவு.
 • எலும்பு நொறுங்கல் முறிவு - எலும்புகள் பல துண்டுகளாக நொறுங்கிப்போகும் முறிவு.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

எலும்பு முறிவுகளுக்கான மூன்று பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு

 • வலி:
  எலும்பின் உட்பூச்சு (எலும்புச் சவ்வு) அதிகமான நரம்புகளைக் கொண்டது. அழிற்சி அல்லது வீக்கத்தின் போது இந்த நரம்புகள் கடுமையான வலியினை ஏற்படுத்தும். எலும்பு முறிந்த பகுதியிலிருந்து இரத்தப்போக்கு ஏற்படுவதால் அந்த இடம் முழுவதும் இரத்தம் திரண்டிருக்கும்.
 • வீக்கம் 
  இரத்தம் திரண்டு இருப்பதாலும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிர்வினையின் காரணமாகவும் காயம் வீக்கத்தை விளைவிக்கும்.
 • குறைபாடு:
  இது எலும்பின் உடைந்த பகுதி இடம்பெயர்வதான் காரணத்தினால் ஏற்படுகிறது.
 • தமணியின் அருகில் சேதம் ஏற்பட்டிருந்தால் அந்த பகுதி குளிர்ச்சியாகவும், வெளிறிய நிறமாகவும் மாறிவிடும். ஒருவேளை நரம்புகளில் சேதம் ஏற்பட்டால், முறிவு ஏற்பட்ட பகுதியில் உணர்ச்சியின்மை ஏற்படும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

எலும்பு முறிவுகளுக்கான மிக பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

 • கீழே விழும் போது எலும்பில் ஏற்படும் அதிர்ச்சி, விபத்து அல்லது கால்பந்து போன்ற விளையாட்டுக்கள் ஆகியவைகளின் போது அதிகபட்ச அழுத்தத்தை தங்குவதன் விளைவாக எலும்பு முறிவு ஏற்படுகின்றது.
 • ஆஸ்டியோபோரோசிஸ் வழக்குகளில் பலவீனமாக இருக்கும் எலும்புகளில் முறிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எலும்பிலிருக்கும் கால்சியம் சத்து இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுவதால், எலும்பின் அடர்த்தி குறைந்துவிடும்.
 • நீங்கள் ஒரு குறிப்பிட்ட எலும்பை அதிகமாக தொடர்ந்து பயன்படுத்தும் போது அழுத்த முறிவுகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து மீண்டும் செயல்படுவதால் தசைகள் சோர்வடைந்து எலும்புகளில் அழுத்தத்தை அதிகரிக்கின்றது.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

உங்கள் மருத்துவர் பாதிக்கப்பட்ட இடத்தை முழுமையாக பரிசோதிப்பதோடு அதன் செயல்பாடுகளின் அளவு மற்றும் உடல் உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் அழற்சி ஆகியவற்றையும் பரிசோதனை செய்வார். மருத்துவர் உங்களது மருத்துவ வரலாறு, காயம் ஏற்பட்டதன் காரணம் மற்றும் அதன் அறிகுறிகள் ஆகியவற்றை பதிவு செய்து கொள்வார். எலும்பு முறிவிற்கான நோய் கண்டறிதலில் சோதனையின் மூலம் அறிந்து கொள்ளவேண்டிய காயத்தின் வகை, அளவு மற்றும் சரியான இடம் ஆகியவற்றை கண்டறிய உதவும் எக்ஸ்-கதிர்கள் சோதனையே ஒரு சிறந்த நோயறிதல் கருவியாகக் கருதப்படுகிறது.

அசையவிடாமல் தடுப்பது (மூட்டுகளின் இயக்கங்கள் மேலே மற்றும் கீழே உள்ள எலும்பு முறிவுகளை அசையவிடாமல் தடுக்கும்), இழுவை காஸ்ட்டின் மூலம் இயக்கத்தை கட்டுப்படுத்துதல் (வார்ப்பை பயன்படுத்தி முறிவு ஏற்பட்ட எலும்பின் மூட்டுகள் மேல் மற்றும் கீழே இயங்காமல் தடுத்தல்), ட்ராக்ஷன் (உடைந்த போன எலும்பு துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்திற்கே இழுக்கப்படுகின்றன), வெளிப்புற திருத்தம், செயல்படுகின்ற காஸ்ட்(குறிப்பிட்ட சில அசைவுகளை அனுமதிக்கும் வார்ப்பு), உலோக பின்களை வெளிப்புறத்தில் பொருத்துதல், மற்றும் அறுவை சிகிச்சையின் மூலம் இடம்பெயர்ந்த எலும்புகளை உள் நிலைப்படுத்துதல் (உடைந்த எலும்பு துண்டுகளை ஒன்றாக சேர்த்தல் மற்றும் உடைந்த எலும்புகளை அதன் இடத்திலே மீண்டும் நிலைப்படுத்தும் போது எலும்புகள் இடம்பெயராமல் பற்றிக்கொள்ள கருவியை உட்புறமாக பொருத்துதல்) ஆகிய முறைகளே எலும்பு முறிவுகளுக்கு பயன்படுத்தப்படும் சிகிச்சைகளாகும்.

எலும்பு முறிவின் தீவிரத்தை பொறுத்து காயங்கள் குணமாக சில வாரங்களிலிருந்து சில மாதங்கள் வரை ஆகலாம். பிசியோதெரபி உதவியுடன் செய்யப்படும் குறிப்பிட்ட உடற்பயிற்சிகள் எலும்பு முறிவினை சுற்றியுள்ள தசைகளை பலப்படுத்த தேவைப்படுகின்றது.எலும்பு முறிவு டாக்டர்கள்

Dr. Urmish Donga Dr. Urmish Donga Orthopedics
3 वर्षों का अनुभव
Dr. Sridhar Reddy Dr. Sridhar Reddy Orthopedics
4 वर्षों का अनुभव
Dr. Sunil Kumar Yadav Dr. Sunil Kumar Yadav Orthopedics
3 वर्षों का अनुभव
Dr. Deep Chakraborty Dr. Deep Chakraborty Orthopedics
10 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

எலும்பு முறிவு க்கான மருந்துகள்

எலும்பு முறிவு के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

दवा का नाम

कीमत

₹21.39

20% छूट + 5% कैशबैक


₹20.75

20% छूट + 5% कैशबैक


₹143.86

20% छूट + 5% कैशबैक


₹53.0

20% छूट + 5% कैशबैक


₹68.0

20% छूट + 5% कैशबैक


₹15.61

20% छूट + 5% कैशबैक


₹64.9

20% छूट + 5% कैशबैक


₹92.33

20% छूट + 5% कैशबैक


₹20.58

20% छूट + 5% कैशबैक


₹7.7

20% छूट + 5% कैशबैक


Showing 1 to 10 of 340 entries