பனிக்கடுப்பு - Frostbite in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

November 30, 2018

July 31, 2020

பனிக்கடுப்பு
பனிக்கடுப்பு

பனிக்கடுப்பு என்றால் என்ன?

பனிக்கடுப்பு என்பது மிகவும் குறைந்த வெப்பநிலையின் வெளிப்பாடு அல்லது கடுங்குளிரின் தாக்கத்தால் காரணமாக தோல் புண்களை ஏற்படுத்தும் ஒரு பிரச்சனையாகும். நீண்ட காலமாக குறைந்த வெப்பநிலையில் வாழும் இராணுவ வீரர்கள் அல்லது தொழில்முறை குளிர்கால விளையாட்டு வீரர்கள் போன்றவர்களிடம் இது பொதுவாக காணப்படுகிறது.

இது பொதுவாக பாதிக்கப்படும் பகுதிகள் கால்விரல்கள், விரல்கள், கன்னங்கள், மற்றும் தாடை ஆகும்.

இதனுடன் தொடர்புடைய முக்கிய அடையாளம் மற்றும் அறிகுறிகள் என்ன?

  • பனிக்கடுப்பின்  பொதுவான அடையாளங்களும் அறிகுறிகளும் -
    • உணர்வின்மை.
    • தோல் நிறம் சிவப்பு, வெள்ளை அல்லது நீலத்திற்கு மாறுதல்.
    • கொப்புளங்கள் கொண்ட அழற்சி ஏற்பட்டு தோல் கடினமாதல்.
  • ஒரு பனிக்கடுப்பு பல நிலைகளாக ஏற்படுகிறது, ஒவ்வொரு கட்டத்திலும் முதலில் ஏற்பட்டதை விட விளைவுகள் கடுமையாக இருக்கும்.
    • முதல் நிலை - ஆரம்ப கட்டத்தில் தற்காலிக உணர்வின்மை மற்றும் மேலோட்டமான சரும பிரச்சனை ஏற்படும்.
    • இரண்டாவது நிலை - கொப்புளங்கள் சேர்ந்து நீண்ட காலமாக உணர்வின்மையை உண்டாக்கி   காலமாக சருமத்தை கடினப்படுத்தி தோலினை உரிய செய்கிறது.
    • மூன்றாவது நிலை - தோலின் உட்பகுதி வரை உறைதல் ஏற்பட்டு வலி மற்றும் புண்கள் ஏற்படுவது பல வாரங்களுக்கு நீடிக்கிறது.
    • நான்காம் நிலை - எலும்புகள், தசைகள் மற்றும் உள்ளமைந்த இரத்த நாளங்கள் ஆகியவை பாதிக்கப்படுகின்றன, இதனால் கடுமையான நிரந்தர சேதத்துடன் தோலை கருப்பு நிறமாக்குகிறது.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

  • தொடர்ச்சியான குளிர்பருவத்தில் நீண்ட நேரம் இருப்பது, பனி, பனிக்கட்டி அல்லது குளிர் திரவங்கள் ஆகியவை என்பது பனிக்கடுப்பை ஏற்படுத்தும் முக்கிய காரணிகள் ஆகும்.
  • குளிர்காலத்தில் வீசும் மிக குளிர்ந்த காற்று பனிக்கடுப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
  • பனிக்கடுப்பு ஏற்படுவதற்கான சில ஆபத்தான காரணிகள் -
    • நீரிழிவு மற்றும் ஹைப்போ தைராய்டிசம்.
    • நீர்ச்சத்துக் குறைவு.
    • மது அருந்துதல் மற்றும் புகைப்பிடித்தல்.
    • சருமத்திற்கு குறைவான ஆக்சிஜன் செல்லுதல்.
    • ஏற்கனவே ஏற்பட்ட காயம் அல்லது பனிக்கடுப்பு.

இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

  • பாதிக்கப்பட்டப் பகுதி, நோயாளியின் சமீபத்திய நடவடிக்கைகள், மற்றும் பிற அறிகுறிகள் ஆகியவற்றின் மருத்துவத் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பனிக்கடுப்புநோய் கண்டறியப்படுகிறது.
  • பனிக்கடுப்பு அளவை சரிபார்க்க மற்றும் உட்புற தோல் அடுக்குகள் மற்றும் எலும்பு நிலையை மதிப்பீடு செய்ய, மருத்துவர் ஒரு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் அல்லது எம்ஆர்ஐ எடுக்க ஆலோசனை கூறுவார்.
  • உறைபனியை ஒத்திருக்கும் சில நிலைகள் ஃபுரோஸ்ட்நிப் , நாள அழற்சி (வாஸ்குலிட்டிஸ்),நீர்க்கொப்புளம் மற்றும் அகழி கால் ஆகும்.

சிகிச்சை உடனடியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் மற்றும் அவை அடங்கியவை:

  • நீங்கள் பனிக்கடுப்பு இருப்பதை சந்தேகிக்கிறீர்கள் என்றால், சூடான பகுதிக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதியை சூடாக்குங்கள், உங்கள் பாதிக்கப்பட்ட பகுதி மீண்டும் உறைவதை அனுமதிக்காதீர்கள். சூடான தண்ணீர் குளியல் மூலம் அல்லது சூடாகபாதிக்கப்பட்ட பகுதியை தேய்த்தல் மூலம் உடலின் வெப்ப நிலையை பழைய நிலைக்கு கொண்டுவரலாம்.
  • பனிக்கடுப்புக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகள் நோய்த்தொற்று சந்தேகத்திற்குரியவையாக இருந்தால் வலி நிவாரணிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படுகிறது. தேவைப்பட்டால் மருத்துவர் அழற்சி எதிர்ப்பு மருந்துகளை பரிந்துரைப்பார்.
  • பாதிக்கப்பட்ட திசு, குணமாக்கமுடியாதபடி பாதிக்கப்பட்டிருந்தால், உறிஞ்சி வெளியிழுத்தல் மற்றும் அழுகல் திசு நீக்கம் போன்ற செயல்முறைகளால் நீக்கப்படும்.
  • கடுமையான பனிக்கடுப்பு பாதிக்கப்பட்ட பகுதி அறுவை சிகிச்சை மூலம் உறுப்பு நீக்கம் செய்ப்படுகிறது.
  • ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை என்பது ஒரு புதிய மற்றும் குறைவாக அறியப்பட்ட பனிக்கடுப்பு சிகிச்சை முறை ஆகும்.



மேற்கோள்கள்

  1. Jay Biem, Niels Koehncke et al. Out of the cold: management of hypothermia and frostbite. Canadian Medical Association; February 04, 2003 168 (3) 305-311
  2. Millet et al. Frostbite: Spectrum of Imaging Findings and Guidelines for Management.. Radiographics. 2016 Nov-Dec;36(7):2154-2169. PMID: 27494386
  3. Stathis Poulakidas et al. Treatment of Frostbite With Subatmospheric Pressure Therapy. Journal of Burn Care & Research, Volume 29, Issue 6, November-December 2008, Pages 1012–1014,
  4. Adrian E. Flatt et al. Frostbite. Proc (Bayl Univ Med Cent). 2010 Jul; 23(3): 261–262. PMID: 20671824
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Frostbite