myUpchar प्लस+ के साथ पूरेे परिवार के हेल्थ खर्च पर भारी बचत

முடக்குவாதம் என்றால் என்ன?

இரத்தத்தில் அதிக அளவு யூரிக் அமிலம் இருக்கும் நபர்களுக்கு இந்த கீல்வாதம் என்று அழைக்கப்படும் முடக்குவாதம் ஏற்படுகிறது. இது கடுமையான மூட்டு வலி, வீக்கம், மற்றும் சிவத்தல் ஆகியவற்றின் தொடர்ச்சியான பாதிப்புகளின் மூலம் வகைப்படுத்தப்படுகிறது, இவை திடீரென மற்றும் ஒரே இரவில் கூட உருவாகலாம். மூட்டுகளில் யூரிக் அமிலத் தேக்கம் காரணமாக ஊசி போன்ற படிகங்கள் உருவாகின்றன, இது திடீர் வலிக்கு வழிவகுக்கிறது.

இதனுடன் தொடர்புடைய முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இது காலின் பெருவிரல் மூட்டை பொதுவாகப் பாதிக்கிறது. கீல்வாதத்துடன் தொடர்புடைய பொதுவான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு:

 • விறைப்புடன் சேர்ந்து மூட்டுகளில் கடுமையான மற்றும் திடீர் வலி (குறிப்பாக முழங்கால், கால்விரல்கள், முழங்கை, மற்றும் விரல்).
 • வீக்கம் மற்றும் சிவத்தல், பாதிக்கப்பட்ட பகுதியில் சருமம் சூடாக இருத்தல்.
 • காய்ச்சல் மற்றும் குளிர்தல்.

இதன் முக்கிய காரணங்கள் யாவை?

முடக்குவாதம் ஏற்பட முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

 • உங்கள் இரத்த ஓட்டத்தில் யூரிக் அமிலத்தின் குவிப்பு மற்றும் மூட்டில் சிறுநீர்ப் புளிம உப்பு உருவாகுதல்.
 • மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் ஒருங்கிணைப்பு.
 • பியூரின் நிறைந்த உணவுகள்.
 • உடல்பருமன்.
 • அதிகப்படியான மது உட்கொள்ளல்.
 • பொய்யான கீல்வாதம் (அல்லது கடுமையான கால்சியம் பைரோபாஸ்பேட் ஆர்த்ரிடிஸ்).

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

அறிகுறிகளின் விரிவான அறிக்கை மற்றும் ஒரு உடல் பரிசோதனை மருத்துவரால் நடத்தப்படும். நோயறிதலுக்கு உதவுவதற்காக சில சோதனைகள் நடத்தப்படுகின்றன:

 • சீரம் யூரிக் அமில அளவுகளைக் கண்டறிய இரத்த சோதனை.
 • எக்ஸ்-கதிர்கள் சோதனை.
 • திரவங்களுக்கு இடையே ஏற்படும் படிகங்களின் உருவாக்கத்தை கண்டறிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யப்படுகிறது.
 • மென்மையான திசு மற்றும் எலும்புகளை ஆய்வு செய்ய கணிப்பொறி பருவரைவு (சி.டி) ஸ்கேன் அல்லது காந்த ஒத்ததிர்வு தோற்றுருவாக்கல் (எம்.ஆர்.ஐ) சோதனை பயன்படுகிறது.

முடக்குவாதத்திற்கு சிகிச்சையளிக்க:

 • விரிவடைவதால் ஏற்படும் வலியை நிர்வகித்தல்:
  • ஸ்டெராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (என்.எஸ்.ஏ.ஐ.டி) விரிவுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகின்றன, இதில் இப்யூபுரூஃபன், ஸ்டெராய்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்து கொல்சிசின் ஆகியவை அடங்கும்.
 • எதிர்காலத்தில் பக்கவாதம் ஏற்படாமல் இருக்க தடுப்பு முறைகள்:
  • உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம்.
  • கூடுதல் எடை குறைதல்.
  • மது அருந்துதலை தவிர்த்தல்.
  • பியூரின் நிறைந்த உணவுகளை தவிர்த்தல் (சிவப்பு இறைச்சி அல்லது உறுப்பு இறைச்சி).
  • இரத்த யூரிக் அமிலமிகையுடன் (எ.கா., சிறுநீரிறக்கிகள்) தொடர்புடைய மருந்துகளை மாற்றுதல் அல்லது நிறுத்துதல்.
 • யூரிக் அமிலம் குறைக்கும் காரணிகளின் பயன்பாடு:
  • ஆலோபியூரினல்.
  • பெபுக்சோஸ்டாட்.
  • பேக்லோடிகேஸ்.
 • சுய பாதுகாப்பு உத்திகள்:
  • ஆரோக்கியமான உணவு உண்ணுதல்.
  • தேவையான அளவு  உடற்பயிற்சி செய்தல்.
 1. முடக்குவாதம் க்கான மருந்துகள்
 2. முடக்குவாதம் டாக்டர்கள்
Dr. Vivek Dahiya

Dr. Vivek Dahiya

ओर्थोपेडिक्स

Dr. Vipin Chand Tyagi

Dr. Vipin Chand Tyagi

ओर्थोपेडिक्स

Dr. Vineesh Mathur

Dr. Vineesh Mathur

ओर्थोपेडिक्स

முடக்குவாதம் க்கான மருந்துகள்

முடக்குவாதம் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

Medicine NamePack SizePrice (Rs.)
Diclogesic RrDiclogesic Rr 75 Mg Injection33
DivonDIVON GEL 10GM0
VoveranVOVERAN 1% EMULGEL 30GM105
DolserDolser 400 Mg/50 Mg Tablet Mr0
Renac SpRenac Sp Tablet51
Unofen KUnofen K 50 Mg Tablet0
ExflamExflam 1.16%W/W Gel48
Rid SRid S 50 Mg/10 Mg Capsule32
Diclonova PDiclonova P 25 Mg/500 Mg Tablet13
ValfenValfen 100 Mg Injection10
FeganFegan Eye Drop16
RolosolRolosol 50 Mg/10 Mg Tablet67
DiclopalDiclopal 50 Mg/500 Mg Tablet16
VivianVivian 1.16% Gel0
I GesicI Gesic 0.1% Eye Drop26
Rolosol ERolosol E 50 Mg/10 Mg Capsule51
DicloparaDiclopara 50 Mg/500 Mg Tablet0
Vivian PlusVivian Plus 50 Mg/500 Mg Tablet13
Instanac TpmInstanac Tpm 1.16% W/W Gel76
Rolosol RbRolosol Rb 50 Mg/10 Mg Tablet55
Diclopil PlusDiclopil Plus 50 Mg/500 Mg Tablet3
Vivogesic(Bes)Vivogesic 25 Mg Injection3
LofenLofen 1% Gel0
Saral DSaral D 50 Mg/10 Mg Tablet49

உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா? தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்

References

 1. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Gout
 2. tional Institutes of Health; [Internet]. U.S. National Library of Medicine. Gout
 3. Dinesh Khanna. et al. 2012 American College of Rheumatology Guidelines for Management of Gout Part I: Systematic Non-pharmacologic and Pharmacologic Therapeutic Approaches to Hyperuricemia. Arthritis Care Res (Hoboken). 2012 Oct; 64(10): 1431–1446. PMID: 23024028
 4. Newberry SJ. Diagnosis of Gout: A Systematic Review in Support of an American College of Physicians Clinical Practice Guideline.. Ann Intern Med. 2017 Jan 3;166(1):27-36. PMID: 27802505
 5. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Gout
और पढ़ें ...