சிறுநீரில் இரத்தம் - Blood in Urine in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

January 10, 2019

March 06, 2020

சிறுநீரில் இரத்தம்
சிறுநீரில் இரத்தம்

சுருக்கம்

சிறுநீரில் இரத்தம் தோன்றுவது ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும். சிறுநீரில் இரத்தத்தைக் கொண்டிருப்பது, அவ்வப்போது சிறுநீர் கழிக்கும் பொழுது வலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற மற்ற அறிகுறிகளோடு சேர்ந்து காணப்படலாம். சிறுநீரில் இரத்தத்தைக் கொண்டிருக்கும் ஒரு நபர், அதன் மறைமுக காரணத்தை அறிய ஒரு முழுமையான மருத்துவ பரிசோதனையைக்கு உட்பட வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கும் மேலாக, சரியான காரணத்தைக் கண்டறிய, குறிப்பிட்ட இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. வயிறு மற்றும் இடுப்புப் பகுதியின் எக்ஸ்ரே அல்லது அல்ட்ராசோனோகிராஃபியும் நோய் கண்டறிதலுக்கு அவசியமாகிறது. சிறுநீரில் இரத்தத்துக்கான காரணங்கள், ஒரு சிறிய மிதமான சிறுநீர் பாதை தொற்று (யு.டி.ஐ.) முதல் சிறுநீரக கற்கள், புற்றுநோய் போன்ற சிக்கலான நோய்கள் வரை பரவலாக இருக்கின்றன. சிறுநீரில் இரத்தத்துக்கான சிகிச்சை, ஒவ்வொரு நிலையின் காரணத்தைப் பொறுத்து இருக்கும். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் பொழுது, சிலருக்கு சிறிய அளவிலான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எடுப்பதன் மூலம் குணமாகக் கூடும். சிக்கல்கள் உருவாகும் வாய்ப்புகள் அரிதாகவே இருப்பதோடு, வழக்கமாக பலன் நன்றாக இருக்கின்றது.

சிறுநீரில் இரத்தம் அறிகுறிகள் என்ன - Symptoms of Blood in Urine in Tamil

சிறுநீரில் இரத்தம், ஒரு மறைந்திருக்கும் பிரச்சினையின் அறிகுறியோடு சேர்ந்ததாக இருக்கிறது. சிறுநீரில் இரத்தத்தோடு இணைந்து, திட்டவட்டமான மற்றும் குறிப்பிட்ட பிரச்சினைகளில் இந்த அறிகுறிகள் தோன்றலாம்.

சிறுநீரில் இரத்தம் சிகிச்சை - Treatment of Blood in Urine in Tamil

சிகிச்சைகள்

 • மருந்துகள்
  அதிக சிக்கலில்லாத நோய்த்தொற்றுகளில், ஒரு குறுகிய கால நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சிலநேரங்களில், வலிநிவாரணிகள், சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படும் வலி மற்றும் எரிச்சலைக் குறைக்க நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளோடு சேர்ந்து பரிந்துரைக்கப்படுகின்றன. சில பிரச்சினைகளில், குறைந்த அளவு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் ஆறு மாதங்களுக்கு கொடுக்கப்படுகின்றன. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சிகிச்சையும் கட்டாயம் கொடுக்கப்படும்.
 • அறுவை சிகிச்சை
  நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் பிற மருந்துகளுக்கு குணமாகாத நபர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படலாம். பெரிய சிறுநீரக கற்கள், அடைப்புகள் மற்றும் கட்டிகளை நீக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்படக் கூடும்.

வாழ்க்கைமுறை மேலாண்மை

ஒரு நபர் அனுபவிக்கும், சிறுநீர் கழித்தல் பிரச்சினைகளில், பின்வரும் குறிப்புகள் அசௌகரியத்தைக் குறைக்க உதவுகின்றன:

 • நீர்ச்சத்தோடு இருத்தல்
  சிறுநீரை நீர்த்துப் போகச் செய்யவும், நச்சுக்களை நீக்கவும் போதுமான அளவு அல்லது தினசரி 10 முதல் 12 குவளைகள் வரை தண்ணீர் அருந்துவது, அறிவுறுத்தப்படுகிறது.
 • வெப்ப பட்டைகளைப் பயன்படுத்துதல்
  வெப்ப பட்டை, சிறுநீர்ப்பை பகுதியில் ஏற்படும் அசௌகரியம் அல்லது வலியைக் குறைக்க உதவுகிறது.
 • காஃபின் மற்றும் பிற தூண்டும் பொருட்களைத் தவிர்த்தல்
  காஃபின் அல்லது மது, சிறுநீர்ப்பையை எரிச்சல்படுத்தி சிறுநீர் கழிக்கும் உந்துதலை அதிகரிக்கிறது; அதனால், நோய்த்தொற்று சிகிச்சை முழுமையாக முடியும் வரை அவற்றைத் தவிர்ப்பது மிக நல்லது.
 • ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்தல்
  புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்ட சரிவிகித உணவு, ஊக்குவிக்கப்பட வேண்டியதாகும். கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் வறுக்கப்பட்ட பொருட்கள், ப்ரோஸ்டேட் நோய்களோடு இணைந்த உடல் பருமனுக்கு வழிவகுக்கின்றன.
 • மூலிகைப் பொருட்களைப் பயன்படுத்துதல்
  கம்பு புற்கள் மற்றும் குருதிநெல்லி சாறு போன்ற குறிப்பிட்ட  மூலிகைப் பொருட்கள், சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்றுகளை குறைக்க உதவக் கூடும். மூலிகை பொருட்களை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்கும் முன்னால், ஒரு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் நல்லது.

சிறுநீரில் இரத்தம் என்ன - What is Blood in Urine in Tamil

சிறுநீரில் இரத்தம் தோன்றுவதற்கு மருத்துவ சொல் ஹைமேட்டுரியா ஆகும். இது மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்து அல்லது சேராமல் தோன்றலாம். இது, நீண்ட காலத்துக்கு தோன்றி மறையும் நிலை அல்லது விடாப்பிடியாக இருக்கலாம், அல்லது தனிமைப்படுத்தப்பட்ட அம்சமாக இருக்கலாம். சில நேரங்களில் சிறுநீரில் இரத்தத்துடன், சிறுநீரில் புரதங்களும் (சிறுநீரில் புரதம்) இருக்கலாம்.

இது, இரத்தக்கசிவைத் தூண்டக்கூடிய, சிறுநீர்ப்பாதை அல்லது சிறுநீர் பாலியல் அமைப்பில்  மறைந்திருக்கும் ஒரு பிரச்சினையை சுட்டிக்காட்டுகிறது. பல நிலைகளில், சிறுநீரில் இரத்தம் பாதிப்பில்லாதது, ஆனால், சிலநேரங்களில், ஒரு கடுமையான நோயின் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கக் கூடும். யூ.டி.ஐ.க்கள் மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற தீவிரமான  நோய்கள், சிறுநீரில் இரத்தத்துக்கு வழிவகுக்கலாம். இருப்பினும், சிறுநீரில் இரத்தம் நாள்பட்டதாக இருந்தால், மற்ற நோயியல் வல்லுனர்களை சந்திப்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை மருத்துவர் சிறுநீரில் இரத்தத்துக்கு கண்டறியும் காரணங்கள் தீங்கற்றவையாக இருப்பின், தீவிரமான காரணங்களைக் கண்டறிய மற்ற பரிசோதனைகள் அறிவுறுத்தப்படலாம்.மேற்கோள்கள்

 1. American Kidney Fund [Internet] Maryland, United States; Blood in urine
 2. Melissa Yeoh Nai Kid Lai Daniel Anderson Vinesh Appadurai. Macroscopic haematuria. The Royal Australian College of General Practitioners [Internet] A urological approach Volume 42, No.3, March 2013 Pages 123-126. Australian Family Physician
 3. PP Varma, T Mohanty. Approach to Hematuria. The Association of Physicians of India [Internet]
 4. Elbouaeshi A, Rayani A, Irheem M, Habas E. Causes and diagnostic significance of macroscopic hematuria in children and young adults. . Libyan Journal of Medical Sciences. 2017 Jul 1;1(3):72. [Internet]
 5. Antoniewicz AA, Zapała Ł, Poletajew S, Borówka A. Macroscopic hematuria—a leading urological problem in patients on anticoagulant therapy: is the common diagnostic standard still advisable?.. ISRN urology. 2012 Apr 1;2012. [Internet]
 6. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Kidney Stones.
 7. Shlomo Melmed Kenneth Polonsky P. Reed Larsen Henry Kronenberg. [link]. 12th Edition St. Louis. Missouri: Elsevier Saunders; 27th May 2011
 8. American Cancer Society [Internet] Atlanta, Georgia, U.S; What Is Kidney Cancer?.

சிறுநீரில் இரத்தம் க்கான மருந்துகள்

Medicines listed below are available for சிறுநீரில் இரத்தம். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.