வலி தருகிற சிறுநீர் கழித்தல் - Painful Urination in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

October 26, 2017

March 06, 2020

வலி தருகிற சிறுநீர் கழித்தல்
வலி தருகிற சிறுநீர் கழித்தல்

சுருக்கம்

நமது உடல், மலம் சிறுநீர் மற்றும் வியர்வையின் வழியாக நச்சுக்கள், கழிவுப் பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்றும் ஒரு இயற்கையான இயக்க முறையைக் கொண்டிருக்கிறது. அந்த அமைப்புகளில் ஒன்றான நமது உடலின் சிறுநீர் தொகுதி, பல உறுப்புகளின் தொகுதியான இது ரத்தத்தை சுத்தப்படுத்தி, கழிவுகளை சிறுநீர் வடிவில் சிறுநீர் குழாய் வழியாக வெளியேற்றுகிறது. சிறுநீர் கழிக்கும் போது உணரப்படும் எந்த ஒரு வலி அல்லது அசௌகரியம் வலி தருகிற சிறுநீர் கழித்தல் என அறியப்படுகிறது. மற்ற காரணங்களோடு சேர்ந்த பொதுவான காரணங்கள், சிறுநீர் பாதை அல்லது மற்ற இடுப்பு பகுதி உறுப்புகளில் ஏற்படும் நோய்த்தொற்றுகள், வீக்கம், நீர் வற்றிப் போதல், சிறுநீரக கற்கள், கட்டிகள், மருந்துகள் உட்கொள்ளுதல் அல்லது கதிர்வீச்சு சிகிச்சை, ஒவ்வாமைகள் ஆகியனவாகும். சிறுநீர் கழிக்க முற்படும் போது அல்லது கழிக்கும் போது வலி ஏற்படுவது மிகவும் பொதுவான அறிகுறியாகும். இருப்பினும், மோசமான வாடை, சிறுநீர் குழாயிலிருந்து வெளியேற்றம், சிவந்து போதல் அல்லது இடுப்பு பகுதியில் எரிச்சல், இன்னும் சில., போன்ற பிற அறிகுறிகளோடு இணைந்து இருக்கலாம். 

சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலியை, ஆரோக்கியமான உணவு, போதுமான அளவு நீர் அருந்துதல், சுய சுகாதாரத்தைப் பராமரித்தல், மது மற்றும் புகைப் பழக்கத்தைத் தவிர்த்தல் மற்றும் வருடத்திற்கு ஒருமுறை முறையான மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் மூலம் வராமல் தடுக்க இயலும். சிகிச்சை, நோய்த்தொற்று, வீக்கம் மற்றும் சிறிய சிறுநீரக கற்கள் ஆகியவற்றுக்கு மருந்து உட்கொள்ளுதலையும், கட்டிகள் மற்றும் பெரிய சிறுநீரக கற்களை நீக்குவதற்கு அறுவை சிகிச்சையையும் உள்ளடக்கியது. சரியான நேரத்தில் சிகிச்சை தேவைப்படும் பொழுது நோய் பற்றி முன்கூட்டியே அறிதல் வழக்கமாக நல்லது. சிக்கல்கள் மிகவும் அரிதானது மற்றும் திரும்ப திரும்ப வரும் தொற்று, இரத்த தொற்று அல்லது சீழ் பிடித்தல், சிறுநீரக பாதிப்பு, குறைப்பிரசவம் அல்லது எடை குறைவாகப் பிறத்தல், மேலும் பல., ஆகியவற்றை உள்ளடக்கியது.

வலி தருகிற சிறுநீர் கழித்தல் என்ன - What is Painful Urination in Tamil

ஒரு சராசரி, ஆரோக்கியமான வயது வந்த நபர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஐந்து அல்லது ஆறுமுறை சிறுநீரை வெளியேற்றுகிறார். மேலும், வழக்கமாக 1.2 முதல் 1.5 லி. சிறுநீர் தினந்தோறும் வெளியேற்றப்படுகிறது. சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும் போது அல்லது சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் நேரம் முழுவதும் வலி அல்லது அசௌகரியம் சேர்ந்து இருந்தால், அது டைசுரியா (வலி தருகிற சிறுநீர் கழித்தல்) என அறியப்படுகிறது. சிறுநீர் தொகுதியில் ஏற்படும் நோய்களின் மிகவும் வழக்கமான அறிகுறிகளாகக் கூறப்படுவனவற்றில் இதுவும் ஒன்று.

வலி தருகிற சிறுநீர் கழித்தல் அறிகுறிகள் என்ன - Symptoms of Painful Urination in Tamil

சிறுநீர் கழித்தல் அத்துடன் பல்வேறு அறிகுறிகளோடு இணைந்து தோன்றலாம். அவை கீழே விவரிக்கப்படுள்ளன:

 • வலி
  வலி தருகிற சிறுநீர் கழித்தலின் அறிகுறிகள் பெரும்பாலும் சிறுநீர் கழிக்கும் போது காணப்படுகிறது. சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும் போது அல்லது சிறுநீர் கழிக்கும் மொத்த நேரமும் நீங்கள் வலியை உணரக் கூடும்.அந்த வலி பெரும்பாலும் கூர்மையானதாக, விரும்பாததகாத மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.சிறுநீர் கழித்த பிறகு உங்கள் வலி நீடிக்கலாம் அல்லது நீடிக்காமலும் இருக்கலாம்.  
 • காய்ச்சல்
  உங்கள் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், நீங்கள் உங்கள் உடல் வெப்பநிலை அடிக்கடி உயர்வதை உ(ணரலாம். உங்கள் காய்ச்சல் மிதமான அளவிலிருந்து நடுத்தரமான அளவு (38.5⁰ செல்சியஸ்க்கு மேல் ) இருக்கலாம். உங்கள் காய்ச்சல் குளிரோடு சேர்ந்தும் கூட இருக்கலாம்.
 • மங்கலான அல்லது இரத்தம் கலந்த சிறுநீர்
  வலியுடன் கூடவே, நீங்கள் சிறுநீரின் நிறத்தில் ஒரு மாற்றத்தைக் கவனிக்கலாம். உங்கள் சிறுநீர் தெளிவாக, வெளிர் மஞ்சள் நிறத்தில் இல்லாமல், மங்கலாக அல்லது  சிறுநீர் கழிக்கும் போது வரும் இரத்தத்தால், சிகப்பு கலந்தது போன்று தோன்றக் கூடும்.
   
 • சீழ்/ இரத்தம்/ வேறு ஏதாவது திரவத்தின் அசாதாரணமான வெளியேற்றம்
  சிலநேரங்களில், சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது அதன் பிறகோ, திரவம், இரத்தம் அல்லது சீழ் வெளியேறுவதையும் நீங்கள் உணரக் கூடும்.  
 • வாடை
  உங்கள் சிறுநீரில் ஒரு நெடி மிகுந்த மற்றும் விரும்பத்தகாத மணமும் இருக்கலாம்.
 • அடிக்கடி சிறுநீர் கழித்தல்
  சில நேரங்களில், வலி தருகிற சிறுநீர் கழித்தல், அதிகரிக்கப்பட்ட அளவில் சிறுநீர் கழித்தல் அடிக்கடி நிகழ்வது மற்றும் சிறுநீர் கழிக்கும் உந்துதல் அதிகரிப்பதோடு சேர்ந்து இருக்கிறது.
 • பக்கவாட்டு வலி
  பக்கவாட்டு வலி என்பது, விலா எலும்புகளுக்கும் இடுப்புப் பகுதிக்கும் (இடுப்பெலும்புக்கு அருகே; இரண்டு பக்கமும் இருக்கிற இடுப்பு எலும்பின் ஒரு பகுதி) இடையே தோன்றுகிற வலி அல்லது அசௌகரியம் ஆகும்.
 • சொறிகள், அரிப்பு, எரிச்சல்
  ஒரு மறைமுகமான நோய்த்தொற்றோடு இணைந்த வலி தருகிற சிறுநீர் கழித்தல், அடிக்கடி சொறிகள், சிவந்து போதல், மற்றும் எரிச்சல் உணர்வைக் கொண்டு இருக்கிறது, மற்றும் அந்த நபர் இடுப்புப் பகுதியில் உணர்கிற அரிப்பிலிருந்து சற்று விடுபட சொறிவதால் எரிச்சல் உணர்வு உண்டாகிறது.
 • கொப்புளங்கள்/புண்கள்
  கொப்புளங்கள் மற்றும் புண்கள், பால்வினை நோய்களின் காரணமாக ஏற்படும் வலி தருகிற சிறுநீர் கழித்தலில் காணப்படும். இந்தக் கொப்புளங்கள், இடுப்புப் பகுதியில் பெண்ணுறுப்பை சுற்றியும் மற்றும் ஆண்குறியின் மீதும் தோன்றுகிறது.

வலி தருகிற சிறுநீர் கழித்தல் சிகிச்சை - Treatment of Painful Urination in Tamil

வலி தருகிற சிறுநீர் கழித்தலுக்கான சிகிச்சை, மறைந்திருக்கும் மருத்துவ காரணத்தை சார்ந்திருக்கிறது.

மருத்துவங்கள்
சிறுநீர் பாதை அல்லது இனப்பெருக்க அமைப்பில் ஏற்பட்ட  நோய்த்தொற்று ஒரு காரணமாக இருந்தால், உங்கள் மருத்துவர் சில மருந்துகளை (நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் அல்லது வைரஸ் எதிர்ப்பு மருந்துகள்)  பரிந்துரைக்கலாம். பரிந்துரைக்கப்பட்ட கால அளவிற்கு மருந்துகளை எடுத்துக் கொண்ட பிறகு, உங்கள்  மருத்துவர் தொடர்ந்து பின்பற்றவும், அறிகுறிகள் குறைந்து விட்டதா என அறிய மீண்டும் உங்களை பரிசோதிக்குமாறும் கூறக் கூடும்.

சிறுநீரக கற்கள் காரணமாக இருந்தால், கற்களின் அளவைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும். உங்கள் சிறுநீரக கல்லின் அளவு சிறியதாக இருந்தால், உங்கள் மருத்துவர் சிறுநீரில் அந்தக் கற்களை நீங்கள் வெளியேற்றும் வரை காத்திருக்குமாறு கூறலாம். கற்களை கரைப்பதற்கு சில மருந்துகளும் கூட பரிந்துரைக்கப்படலாம்.

அறுவை சிகிச்சை
பெரிய சிறுநீரக கற்கள், ஒரு அடைப்பு, ஒரு கட்டி அல்லது சிறுநீர் பாதை குறுக்கம் இருக்கும் பட்சத்தில், அதை சரி செய்ய உங்கள் மருத்துவர் ஒரு அறுவைசிகிச்சை மேற்கொள்ள உங்களை அறிவுறுத்தலாம்.



மேற்கோள்கள்

 1. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Urinary Tract Imaging
 2. STD-GOV [Internet]. St SW, Rochester, USA. Painful Urination (Dysuria)
 3. Bueschen AJ. Flank Pain. In: Walker HK, Hall WD, Hurst JW. Clinical Methods: The History, Physical, and Laboratory Examinations. 3rd edition.. 3rd edition. Boston: Butterworths; 1990. Chapter 182.
 4. Hochreiter W . [Painful micturition (dysuria, algiuria). Ther Umsch. 1996 Sep;53(9):668-71.PMID: 8966693.
 5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Urination - difficulty with flow

வலி தருகிற சிறுநீர் கழித்தல் க்கான மருந்துகள்

வலி தருகிற சிறுநீர் கழித்தல் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

translation missing: ta.lab_test.sub_disease_title

translation missing: ta.lab_test.test_name_description_on_disease_page

translation missing: ta.lab_test.test_names