இக்தியோசிஸ் - Ichthyosis in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 08, 2018

March 06, 2020

இக்தியோசிஸ்
இக்தியோசிஸ்

இக்தியோசிஸ் என்றால் என்ன?

இக்தியோசிஸ் என்பது மரபணு கோளாறினால் தோலில் ஏற்படுகிற ஒரு வகை நோய் ஆகும், இது வறண்ட மற்றும் செதில் தோல் என்று வகைப்படுத்தப்படும். இது அனைத்து வயதினரையும், இனத்தவரையும், பாலினத்தவர்களையும் பாதிக்கின்றது மற்றும் பொதுவாக பிறப்பில் இருந்து அல்லது பிறப்பின் முதல் வருடத்தில் ஏற்பட்டு, ஒரு மனிதரின் வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கும்.

அதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இக்தியோசிஸின் வகையைப் பொறுத்து அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் மாறுபடும்.

  • இக்தியோசிஸ் வல்கரிஸ் - இது மிகவும் பொதுவான வகையாகும் மற்றும் வாழ்வின் முதல் ஆண்டில் இருந்து அறிகுறிகள் தென்படும். தோலானது செதில்களாகவும், வறண்டு மற்றும் சொரசொரப்பாக மாறுகிறது மற்றும் உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்கால்களில் தோல் தடித்து வழக்கத்தை விட வரிகளை அதிகமாக காட்டும். முகம் மற்றும் முழங்கை வளைவுகள் மற்றும் முழங்கால்களில் பாதிப்பு இருக்காது.
  • எக்ஸ்-பிணைப்பு இக்தியோசிஸ் பெரும்பாலும் இது ஆண்களை பாதிக்கின்றது மற்றும் உடற்பகுதி மற்றும் கை கால்களில் தோல்கள் தடித்து இருக்க காரணமாகின்றது.
  • ஹார்லெக்வின் இக்தியோசிஸ் - இது ஒரு அரிய வகை மற்றும் தோலானது அளவில் கடுமையாக தடித்து இருக்க காரணமாகிறது.
  • வியர்வை சரியாக வர இயலாமையினால் அதிக உடல் வெப்பநிலை அல்லது அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது.
  • தோலில் ஏற்படும் நோய்த்தன்மையின் தோற்றத்தினால் உளவியல் அறிகுறிகளாக மோசமான சுய மதிப்பு போன்றவை நோய் பாதித்தவருக்கு காணப்படுகின்றது.

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

மரபணு மாற்றங்கள் உடைய பெற்றோர்கள் மூலம் குழந்தைக்கு இக்தியோசிஸ் நோய்க்கு பொறுப்பாகின்றது. சில சந்தர்ப்பங்களில், பெற்றோர்களே குறைபாடுள்ள மரபணு பரப்புபவர்களாக உள்ளனர், இதன் பொருள் அவர்கள் இந்த குறைபாடுள்ள மரபணுவை கொண்டுள்ளனர், ஆனால் நோய் அவர்கள் மீது வெளிப்பட்டிருக்காது. இருப்பினும், இரு பெற்றோர்களுக்கும் இந்த மரபணு குறைபாடு உடையவராக இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கும் கண்டிப்பாக இந்த இக்தியோசிஸ் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இச்தியோசிஸ் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சில மருந்துகளினாலும் வரலாம்.

குறைபாடுள்ள மரபணுவானது, தோலின் மீளுருவாக்கத்தில் தொந்தரவு ஏற்படுத்துகின்றது. இதனால் புதிய தோல் செல்கள் மிக விரைவாக உருவாகின்றன அல்லது பழைய தோல் மிகவும் மெதுவாக உதிர்வது, தோல் கடினமான செதில்களாக மாற வழிவகுக்கின்றது.

இது எப்படி நோயறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

அடிக்கடி ஏற்படும் தோல் மாற்றங்களை பார்த்து மருத்துவர் இக்தியோசிஸ் நோயை கண்டறியலாம். அவர்/அவள் உங்கள் மருத்துவ மற்றும் குடும்ப வரலாற்றைப் பற்றி விரிவாக விசாரிக்கலாம். மற்ற தோல் நோயில் இருந்து இக்தியோசிஸை வேறுபடுத்துவதற்கு ஒரு தோல் திசு ஆய்வு செய்யப்படலாம்.

இந்நோய்க்கு குறிப்பிட்ட எந்த சிகிச்சையும் இல்லை அல்லது குணப்படுத்த முடியாது என்பதே உண்மை. சிகிச்சையின் முதன்மை நோக்கமானது தோல் வறட்சியினை குறைப்பதோடு நன்கு ஈரப்பதமாக வைத்துக் கொள்வதாகும். அடிக்கடி குளிப்பதன் மூலம் மென்மையான செதில்கள் அகற்றப்படுகின்றன, குளித்த பின் உடனே ஈரப்பசை (மாய்ஸ்சரைசர்) போடுவதன் மூலம் மற்றும், திறந்த காயங்கள் மீது பெட்ரோலியம் ஜெல்லியைப் பயன்படுத்துவது நிலைமையை நிவர்த்தி செய்ய உதவலாம்.



மேற்கோள்கள்

  1. National Health Service [Internet]. UK; Ichthyosis
  2. British Association of Dermatologists [Internet]. London, UK; Ichthyosis.
  3. American Academy of Dermatology. Illinois, US; Ichthyosis vulgaris
  4. Foundation for Ichthyosis and Related Skin Types. What is Ichthyosis?. Pennsylvania, US State. [internet].
  5. American Academy of Dermatology. Rosemont (IL), US; Ichthyosis vulgaris