மூலநோய் - Piles in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

March 28, 2017

March 06, 2020

மூலநோய்
மூலநோய்

சுருக்கம்

மூலநோய், பயில்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு மலக்குடல் மற்றும் ஆசனவாயில் வீங்கிய மற்றும் நொதிக்கப்பட்ட நரம்புகள் உண்டாவதால் ஏற்படும் நிலை ஆகும். எளிமையாக இதை ஆசனவாய் மற்றும் மலக்குடலின் 'சுருள் சிரை நாளங்கள்' என்று கூறலாம். மூல நோய் உள் (மலக்குடலுக்குள் வளரும்) அல்லது வெளிப்புறமாக (ஆசனவாயை சுற்றிய தோலில்) இருக்க முடியும்.

பல காரணங்களால் மூல நோய் ஏற்படக்கூடும், இருப்பினும் சரியான காரணம் பெரும்பாலும் தெரியவில்லை. அவை மலம் கழிக்கும்போது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதாலோ அல்லது கர்ப்ப காலத்தில் மலக்கழி நரம்புகளில் அதிகரித்த அழுத்தம் காரணமாகவோ இருக்கலாம். மூல நோயின் தீவிரத்தை பொறுத்து அறிகுறிகள் லேசான அரிப்பு மற்றும் அசௌகரியம் போன்றவற்றிலிருந்து இரத்தப்போக்கு வரை வேறுபடுகின்றன. சிகிச்சையானது அறிகுறிகளையும் மூல நோயின் தீவிரத்தையும் பொறுத்தது. சிகிச்சையானது, வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்வது, நார்ச்சத்துள்ள உணவை உண்பது, வலி நிவாரணிகளை பயன்படுத்துவது போன்ற சில எளிய வழிமுறைகளை உள்ளடக்கியது அல்லது அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. மூல நோயில் சிக்கல்கள் பொதுவாக அரிதானவை. சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், மூல நோய் நாள்பட்டதாகவும் அழற்சியாகவும் மாறிவிடும் மற்றும் இரத்த உறைவு மற்றும் புண்களை உருவாக்கும்.

மூல நோய் பொதுவாக ஆபத்தானது அல்ல, அது மிகவும் தொந்தரவாக இருந்தால் மட்டுமே சிகிச்சை செய்யப்பட வேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படுகின்ற மூல நோய் வழக்கமாக பிரசவத்திற்க்குப் பிறகு தானாகவே சரியாகிவிடும். மலச்சிக்கல் காரணமாக ஏற்படும் மூல நோய், உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் முக்கியமான மாற்றங்கள் கொண்டுவருவதால் ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்யப்படுவதும் கூட திருப்திகரமான முடிவுகளை அளிக்கிறது.

மூலநோய் என்ன - What is Piles in Tamil

மூல நோய் மிகவும் பொதுவான ஆரோக்கியப் பிரச்சனை. அவை வழக்கமாக தீவிரமான பிரச்சனை இல்லை, ஆனால் மிகவும் விரும்பத்தகாத மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் வாழ்க்கை தரத்தை பாதிக்கக்கூடிய ஒன்றாகும். மூல நோய்த்தாக்கம் வயது அல்லது பாலியல் தொடர்பானதில்லை. இருப்பினும், வயது மூல நோய்க்கான ஒரு ஆபத்துக் காரணி ஆகும். மூல நோய்த்தாக்கம் வளராத நாடுகளில் குறைவாகவே உள்ளது. பொதுவாக மேற்கு நாடுகளில் வழக்கமாக குறைந்த ஃபைபர் மற்றும் உயர் கொழுப்பு உணவுகளின் அதிக பயன்பாடு மலச்சிக்களை ஏற்படுத்துவதால் அது மூல நோய்வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

மூல நோய் என்பது ஒரு மலக்குடல் மற்றும் ஆசனவாயில் வீங்கிய மற்றும் நொதிக்கப்பட்ட நரம்புகள் உண்டாவதால் ஏற்படும் நிலை ஆகும். மூல நோய், சாதாரண மனித உடற்கூறின் ஒரு பகுதியாக இருப்பதைப் புரிந்துகொள்வது அவசியம். குடல் கால்வாய் மற்றும் மலக்குடலுக்கு மிகவும் கீழேயுள்ள, சளி சவ்வுகளுக்கு அடியில் வரிசையிடும், பருத்த நரம்புகளை மூல நோய் உண்டாக்குகிறது. இந்த நரம்புகள் வீங்கி மற்றும் அகலமானதாகி அறிகுறிகளை ஏற்படுத்தும் போது மட்டுமே, நாம் ஒரு நபருக்கு மூல நோய் உருவாக்கப்பட்டடுள்ளது என்று கூறப்படுகிறது. இதில் ஈடுபட்டுள்ள இரத்த நாளங்கள் இதயத்தில் இரத்தத்தை மீண்டும் பெறுவதற்கு ஈர்ப்பு விசைக்கு எதிராக தொடர்ச்சியாக போராட வேண்டும்.

மூலநோய் அறிகுறிகள் என்ன - Symptoms of Piles in Tamil

மூல நோயின் அறிகுறிகள் பின்வருமாரு:

 • மலம் கழித்த பிறகு கழிப்பறைத் தாளில் பிரகாசமான சிவப்பு இரத்தப்போக்கு அல்லது கழிப்பறைக்குள் இரத்தக்கறை இருப்பது. இந்த இரத்தப்போக்கு பொதுவாக வலியற்றது மற்றும் குறிப்பாக மலச்சிக்கல்,மலம் கழிக்க மிகவும் கடினமாக இருப்பது அல்லது மலம் மிகப்பெரியதாக இருப்பதால் ஏற்படுகிறது.
 • மல வாய் திறப்பில் இருந்து சளி வெளியேற்றம்.
 • மல வாயை சுற்றிய பகுதியில் அரிப்பு, சிவத்தல் அல்லது வேதனை.
 • மலம் கழித்தப்பிறகும் மீண்டும் மல உந்துதல் போன்று உணர்தல்.
 • மலம் கழிக்கும் போது வலி.
 • மென்மையான, திராட்சை போன்ற வீக்கம் ஆசன வாயின் முனையிலிருந்து புடைத்துக் கொண்டிருக்கலாம்.
 • வெளிப்புற மூல நோய், குறிப்பாக வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கலுக்கு பிறகு இடைப்பட்ட வீக்கம், எரிச்சல் மற்றும் அசௌகரியம் ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.
 • வெளிப்புற மூல நோய், கட்டிகளை கொண்டிருக்கும்போது, அந்த கட்டி பழுப்பு அல்லது நீல நிறமாகவும் மேலும் அது வலி மிகுந்ததாகவும் இருக்கலாம். அந்த கட்டி இரத்தத்தை வெளியேற்றலாம் மற்றும் திடீரென்று அது ஆசனவாயின் விளிம்பில் வந்து தோன்றக்கூடும்.
 • சில கடுமையான சந்தர்ப்பங்களில், அதிகப்படியான ஆசனவாய் இரத்தப்போக்கு, நோய்தொற்று, ஹேமிராய்ட்ஸ் களைப்பு, ஆசன வாய் பௌத்திரம் (ஃபிஸ்துலா) உருவாக்கம் மற்றும் மலத்தை வெளி விடாமல் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம்.

வேதனையான மூலநோய் நிலைமை, ஆசன வாய் தோலில் கிழிசல்(ஆனல் ஃபிஸ்ஸுரெ), குரோன்ஸ் நோய், பெருங்குடல் புண், ஆசன வாய் பௌத்திரம் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற வலி மிகுந்த இரத்தப்போக்கு நிலைமைகளிலிருந்து வேறுபடுத்தப்பட வேண்டும்.

மூலநோய் சிகிச்சை - Treatment of Piles in Tamil

துளையில்ல சிகிச்சை

மூல நோயானது லேசானதாக  இருந்தால், மருத்துவர் உங்களுக்கு  கிரீம்கள், மேற்ப்பூச்சுகள் மாற்று மருந்துகள்அல்லது பேடுகளை பரிந்துரைக்கலாம். அவை ஹைட்ரோகார்டிசோன் மற்றும் லிடோகைன் போன்ற பொருட்களால் தயாரிக்கப்படுவதால், இது தற்காலிகமாக வலி மற்றும் அரிப்புகளைத் தடுக்கிறது.

குறைந்த துளையிடும் சிகிச்சை

தொடர்ச்சியான இரத்தப்போக்கு அல்லது வலியுடைய மூல நோயாக இருந்தால், மருத்துவர் உங்களுக்கு கீழ்காணும் செயல் முறைகளை பரிந்துரைக்கலாம். இந்த செயல் முறைகளுக்கு மயக்க மருந்துகள் தேவையில்லை மற்றும் மருத்துவரின் அலுவலகத்தில் மட்டுமே செய்ய முடியும்.

 • ரப்பர் பேண்ட் கட்டுதல்
  உள் மூலத்தை சுற்றி ஒன்று அல்லது இரண்டு சிறிய ரப்பர் பேண்டுகள் வைக்கப்படுகின்றன பின் அது இரத்தப்போக்கு சுழற்சியினால் துண்டிக்கப்படுக்கிறதா என உறுதி செய்யப்படுகிறது. பின்னர், மூலமானது ஒரு வாரத்திற்குள் வீழ்ந்து விடும். இது நடைமுறையில் பலருக்கும் நன்றாக வேலை செய்கிறது. எனினும், இந்த மூல நோய் கட்டுப்பாடுனாது சில சமயங்களில் இது நடைமுறை செய்யப்பட்டு 2-4 நாட்களுக்கு பின்னர் இரத்தப்போக்கு ஏற்படலாம் மற்றும் எப்போதாவது கடுமையானதாகவும், தீவிர சிக்கல்களும் ஏற்படலாம்.
 • ஊசி மூலம் உட்செல்லுத்தல் (ஸ்கெலரோதெரபி)
  இந்த நடைமுறையில், உங்கள் மருத்துவர் பாதிக்கப்பட்ட மூல நோயிக்கு ஒரு இரசாயனத்தை உட்செலுத்திவார். இது மூல நோயின் திசுக்களை சுருக்க உதவுகிறது. இந்த செயல்முறையானது குறைந்த அல்லது மிகுந்த வலியை ஏற்படுத்தும் ஆனால் ரப்பர் பேண்ட் கட்டுப்பாட்டை விட குறைவானதாக இருக்கும்.
 • இரத்தக்கட்டு (இன்ஃப்ராரெட், லேசர் அல்லது பய்போலார்)
  இந்த செயல்முறையில்  லேசர் அல்லது இன்ஃப்ராரெட் ஒளி அல்லது வெப்பத்தை கொண்டு பயன்படுத்தபடுகிறது. இந்த செயல்முறையில், சிறு இரத்தப்போக்கு மற்றும் உட்புற மூல நோய்களைக் கடினமாகவும்,சுருங்கவும் செய்கிறது.ரப்பர் பேண்ட் கட்டுத்தளை ஒப்பிடும்போது இரத்தக்கட்டு செயல் முறையானது குறைவான பக்க விளைவுகளைக் கொண்டது.

அறுவை சிகிச்சையின் வழிமுறைகள்

மூலத்திற்கான அறுவை சிகிச்சையை ஹேமோர்ஹையோடிமை என அழைக்கப்படுகிறது. ஹேமோர்ஹையோடிமையின் ஐந்து அறிகுறிகள்:

 • மூன்றாம் மற்றும் நான்காம் நிலை மூல நோய்.
 • செயல்பாட்டு நடைமுறைகளால் குணப்படுத்த முடியாவிட்டால் இரண்டாம் நிலை மூல நோயுக்கும் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
 • ஃபைப்ரோஸ் மூலம்.
 • வெளிப்புற மூலம் நன்கு வரையறுக்கப்படும் போது அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

அறுவை சிகிச்சை தொடங்கும் முன்பாக முதுகெலுப்பில் அல்லது பொது இடங்களில் மயக்க மருந்து செலுத்தி செய்யப்படுகிறது. கடுமையான அல்லது தொடர்ச்சியான இரத்தப்போக்கு மூலத்திற்கு அறுவை சிகிச்சையானது மிகவும் பயனுள்ள சிகிச்சையாகும். நோயாளி, அறுவை சிகிச்சை  செய்த அதே நாளில் வீட்டிற்கு திரும்பிச் செல்ல முடியும் மற்றும் சுமார் 7-10 நாட்களில் தனது வழக்கமான வேலைகளை மீண்டும் செய்யலாம்.அறுவை சிகிச்சையின்போது  உங்களது சிறுநீர்ப்பையை வெற்று  சிறுநீர்ப்பையாக வைப்பத்தால் தற்காலிக சிரமம் மற்றும் சிறுநீரக மூல தொற்றுநோய்  ஏற்படலாம்.

 • ஹெமோர்ரோயிட் ஸ்டேபிலிங் (ஸ்டேபிள் ஹெமோர்ரோயாய்டிரிமை அல்லது ஸ்டேபிள்ஸ் ஹெமோர்ரோஹைடோப்சிசி)
  ஹெமோர்ரோயாய்டிக்டமைக்கு மாற்று முறையில், மூலத்திசுகளின்  இரத்த ஓட்டத்தை தடுத்து  உள் மூலத்தை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இது ஹெமோர்ரோயாய்டிக்டமை விட குறைவான வலியுடையது, இருப்பினும் ஹேமோர்ஹையோடைக்கோமையுடன்  ஒப்பிடுகையில் இதில் மீண்டும் ஏற்படக்கூடிய  மற்றும் மலக்குடல் வீக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கிறது. இதில்  இரத்தப்போக்கு, சிறுநீராக தேக்கம் மற்றும் வலி மற்றும்  உயிருக்கு ஆபத்தான இரத்த நோய்த்தொற்று (செப்சிஸ்) சிக்கல்கள் ஆகியவை அடங்கும். ஆதலால் உங்களுக்கான சிறந்த சிகிச்சையை பற்றி மருத்துவரிடம் கலந்து ஆலோசித்துப் பெற வேண்டும்.

சுய பாதுகாப்பு

 • சிட்ஸ் பாத் முயற்சிக்கவும்
  குளியல் ("சிட்ஸ்சன்" என்பது ஜெர்மன் மொழியில் "உட்கார்ந்து" என்று அர்த்தம்) என்பது அமரும் இடம் மற்றும் இடுப்புகளுக்கு ஒரு வெது வெதுப்பான தண்ணீர் குளியல் ஆகும், இது குடல் பகுதி மற்றும் குடல் தசைகளில் ஏற்படும்  எரிச்சல் மற்றும் அரிப்புகளுக்கு நிவாரணமாக இருக்கும்.  ஒரு சிறிய பிளாஸ்டிக் தொட்டியை கழிப்பறை இருக்கை மீது பொருத்தியோ அல்லது குளியல் தொட்டியிலோ சிறிது அளவு வெது வெதுப்பான நீரை நிரப்பி உட்காரந்து கொள்ளவும்.ஒரு நாளில் 2-3 முறை என 20 நிமிட சிட்ஸ் குளியலை எடுத்து கொள்ளவும்.  அதன்பிறகு, மென்மையாக ஆழ்ந்த பகுதியை உலர வைக்கவும், கடுமையாகவோ அல்லது தேய்க்கவோ முயற்சி செய்யாதீர்கள்.
 • ஐஸ் பேக் பயன்படுத்தவும்
  பேக் வைப்பதினால் குடல் பகுதியில் உள்ள வீக்கம் மற்றும் வலியை குறைக்கலாம்.
 • ஒரு குஷன் / மென்மையான இடத்தை பயன்படுத்தவும்
  இடத்திற்கு பதிலாக, ஒரு மெத்தை அல்லது மென்மையான மேற்பரப்பில் உட்காரவதினால் மூல நோயின்  வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் புதிய மூலம் உருவாவதைத் தடுக்கிறது.
 • மேற்பூச்சு மருந்துகளை முயற்சிக்கவும்
  மூல மேற்பூச்சு மருந்தில் மயக்க தன்மை இருப்பதால் தற்காலிக வலி நிவாரணமாக செயல்படுகிறது மற்றும் பக்க விளைவுயற்றது. 
 • கால்களை உயர்த்தவும்
  நீங்கள் மேற்கத்திய முறை கழிப்பறையில் உட்காரும் போது, ஒரு படி கால்களை உயர்த்தவும் இது மலச்சிக்கலின் நிலைமையை மாற்றியமைத்து எளிதாக வெளிவர உதவுகிறது.


மேற்கோள்கள்

 1. American Society of Colon and Rectal Surgeons [internet]; Diseases & Conditions
 2. Health Harvard Publishing. Harvard Medical School [Internet]. Hemorrhoids and what to do about them. February 6, 2019. Harvard University, Cambridge, Massachusetts.
 3. Shrivastava L, Borges GDS, Shrivastava R (2018). Clinical Efficacy of a Dual Action, Topical Anti-edematous and Antiinflammatory Device for the Treatment of External Hemorrhoids. Clin Exp Pharmacol 8: 246. doi:10.4172/2161-1459.1000246
 4. Hamilton Bailey, Christopher J. K. Bulstrode, Robert John McNeill Love, P. Ronan O'Connell. Bailey & Love's Short Practice of Surgery. 25th edition Taylor and fransis group, USA.
 5. Health Harvard Publishing. Harvard Medical School [Internet]. 6 self-help tips for hemorrhoid flare-ups. OCTOBER 26, 2018. Harvard University, Cambridge, Massachusetts.

மூலநோய் டாக்டர்கள்

Dr. Abhay Singh Dr. Abhay Singh Gastroenterology
1 वर्षों का अनुभव
Dr. Suraj Bhagat Dr. Suraj Bhagat Gastroenterology
23 वर्षों का अनुभव
Dr. Smruti Ranjan Mishra Dr. Smruti Ranjan Mishra Gastroenterology
23 वर्षों का अनुभव
Dr. Sankar Narayanan Dr. Sankar Narayanan Gastroenterology
10 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

மூலநோய் க்கான மருந்துகள்

மூலநோய் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

மூலநோய் की जांच का लैब टेस्ट करवाएं

மூலநோய் के लिए बहुत लैब टेस्ट उपलब्ध हैं। नीचे यहाँ सारे लैब टेस्ट दिए गए हैं: