சொரியாஸிஸ் - Psoriasis in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

January 10, 2019

March 06, 2020

சொரியாஸிஸ்
சொரியாஸிஸ்

சுருக்கம்

சொரியாஸிஸ் என்பது, தோலின் அணுக்களில் தூண்டப்படும் ஒரு அசாதரணமான பெருக்கத்தின் காரணமாக ஏற்படும், ஒரு நாள்பட்ட தோல் பிரச்சினையாகும். இந்த அணுக்கள் விரைவாகப் பெருகி, பாதிக்கப்பட்ட பகுதியில் வீக்கத்தைத் தூண்டுகிறது. சொரியாஸிஸ் வழக்கமாக, தோலில் சிவந்த தடிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்தத் தடிப்புகள் வேதனையை ஏற்படுத்துகின்றன மற்றும் அவை கொடூரமாக அரிக்கக் கூடிய வெள்ளி போன்ற வெண்மை நிற செதில்களைக்கொண்டிருக்கின்றன. உடலியல்ரீதியான அறிகுறிகள், வளர்வது மற்றும் தேய்வதின் பல்வேறு கட்டங்களைக் காட்டுகிறது, ஆனால், எதிர்பாராத விதமாக, இந்த நோயைக் குணப்படுத்த முடியாது. இருப்பினும், போதுமான சிகிச்சையினால், அறிகுறிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும். வாழ்க்கை முறை மாற்றங்களுடன் (மன அழுத்தத்தைத் தவிர்த்தல், மாயிச்சரைசர்களைப் பயன்படுத்துதல், புகைப்பிடித்தலை மற்றும் மது அருந்துவதைத் தவிர்த்தல் போன்றவை) கூடவே, குறி வைத்த சிகிச்சை ( குறிப்பிட்ட இடப் பயன்பாடுகள், ஒளிக்கதிர் சிகிச்சை மட்டும் வாய்வழி மருந்துகள்), வழக்கமாக,  குணமடைந்திருக்கும் காலத்தை நீட்டிக்கச் செய்கின்றன (அறிகுறி இல்லாத கட்டம்).

சொரியாஸிஸ் (காளாஞ்சகப்படை) அறிகுறிகள் என்ன - Symptoms of Psoriasis in Tamil

சொரியாஸிஸின் அறிகுறிகள், நபருக்கு நபர் மற்றும் சொரியாஸிஸின் வகையைப் பொறுத்து வேறுபடுகின்றன. இந்தத் தடிப்புகள், சிறிய புள்ளிகளில் இருந்து பெரிய புண்கள் வரை வேறுபடுகின்றன. மிகவும் பொதுவாக பாதிக்கக்கூடிய பகுதிகள், உச்சந்தலை, முழங்கைகள், முழங்கால்கள், கைகள் மற்றும் பாதங்கள் ஆகியனவாகும்.

சொரியாஸிஸின் அறிகுறிகளில் அடங்கியவை:

 • தோலின் மேல், வெண்மை நிற செதில்களால் மூடப்பட்டிருக்கும் சிவந்த தடிப்புகள் தோன்றுதல்.
 • இந்த இடங்கள், ஒரு எரிச்சல் உணர்வையும் வேதனையையும் ஏற்படுத்தும் அரிக்கும் இடமாக மாறுதல்.
 • சிலநேரங்களில், அதிகமான வறட்சி மற்றும் சொறிவதன் காரணமாக, தோலில் இரத்தக் கசிவு ஏற்படலாம்.
 • உச்சந்தலை, முழங்கைகள், முழங்கால்கள் அல்லது உடலின் மேல்பகுதி ஆகியவை, பாதிக்கப்படும் பகுதிகளாகும்.
 • நக சொரியாஸிஸ், நகங்களில் கெட்டித்தன்மை, குழிகள் மற்றும் நிறமாற்றத்திற்கு காரணமாகிறது. சில நேரங்களில் நகங்கள், விரல்களில் இருந்து தனியாக வெளியே வந்து விடுகின்றன.
 • சீழ்த்தன்மை சொரியாஸிஸ், கைகள் மற்றும் கால்களில்,சீழ் நிரம்பிய சிரங்குகளுடன், செதில்கள் மூடிய-சிவந்த, விரிசலான தோல் ஏற்படக் காரணமாகிறது.

வழக்கமாக, இந்த அறிகுறிகள்,  குறிப்பிட்ட கால இடைவெளியில் அல்லது வளரும் மற்றும் தேயும் சுழற்சியில் தோன்றுகிறது. இந்த அறிகுறிகள், சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு கடுமையாக இருக்கலாம், பிறகு சீராகலாம் அல்லது சில நேரங்களில், அவை இல்லாமல் கூட மறைந்து, கவனிக்க முடியாத அளவிற்கு மாறுகின்றன. பிறகு, ஏதேனும் தூண்டும் காரணிகளின் காரணமாக, இந்த அறிகுறிகள் மீண்டும் தோன்றுகின்றன.

சொரியாஸிஸ் மூட்டழற்சியின் அறிகுறிகளில் அடங்கியவை:

 • உடலின் ஒன்று அல்லது இரண்டு பக்கமும் உள்ள மூட்டுக்களோடு சிக்கலாக்குதல்.
 • பாதிக்கப்பட்ட மூட்டுக்கள், வலிமிகுந்தவையாக மற்றும் வீக்கத்துடன் இருக்கின்றன, மேலும் தொடும் போது வெதுவெதுப்பாக உணர முடியலாம்.
 • விரல்களின் மூட்டுகள், வீக்கத்தின் காரணமாக ஒரு கொத்துக்கறி போன்று தோற்றமளிக்கலாம், மேலும் இவை ஊனங்களுக்கும் காரணமாகலாம்.
 • சில நேரங்களில், முதுகெலும்புகளுக்கு இடையிலுள்ள மூட்டுக்கள் பாதிக்கப்பட்டு, கீழ்ப்புற முதுகு வலியின் ((கீழ்முதுகு முதுகெலும்பு அழற்சியை ஒத்திருக்கும்) அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. 
 • பாதிக்கப்பட்ட குதிகால் தசைநாரும் மற்றும் உள்ளங்கால் திசுப்படலமும், குதிகாலில் அல்லது பாதத்தின் பின்புறத்தில், கடுமையான வலியை ஏற்படுத்துகின்றன. (மேலும் படிக்க - குதிகால் வலி காரணங்கள் மற்றும் சிகிச்சை)

சொரியாஸிஸ் (காளாஞ்சகப்படை) சிகிச்சை - Treatment of Psoriasis in Tamil

சொரியாஸிஸ்க்கு நிரந்தரமான தீர்வு இல்லை. சிகிச்சை, அந்த நபரின் வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவது மற்றும் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. சொரியாஸிஸ்க்கான சிகிச்சை, மூன்று வகைகளில் பிரிக்கப்படுகின்றன - மேற்பூச்சு சிகிச்சை, முறைப்படுத்தப்பட்ட மருந்துகள் மற்றும் ஒளிக்கதிர் சிகிச்சை (ஒளி சிகிச்சை)

 • மேற்பூச்சு சிகிச்சை
  மிதமான சொரியாஸிஸ்க்கு, மேற்பூச்சு மருந்துகள் மட்டுமே போதுமானவையாக இருக்கக் கூடும். நடுத்தரமான அல்லது கடுமையான சொரியாஸிஸ்க்கு, மேற்பூச்சு மருந்துகள், வாய்வழி மருந்துகள் அல்லது ஒளிக்கதிர் சிகிச்சையோடு இணைக்கப்படுகிறது. மேற்பூச்சு மருந்துகளில் அடங்கியவை:
  • கார்டிகோஸ்டெராய்டுகள்
  • வைட்டமின் டி-ஐ ஒத்த செயலிகள்
  • மேற்பூச்சு ரெட்டினாய்டுகள்
  • சாலிசிலிக் அமிலம்
  • நிலக்கரி தார்
  • கால்சினியூரின் தடுப்பிகள்
  • ஆந்த்ராலின்
  • மாயிச்சரைசர்கள்
 • முறைப்படுத்தப்பட்ட மருந்துகள்
  சொரியாஸிஸ் கடுமையாக இருக்கும் பொழுது அல்லது மேற்பூச்சு சிகிச்ச்சைக்கு எதிர்ப்பாற்றல் மிக்கதாக இருக்கும் பொழுது, வாய்வழியாக அல்லது ஊசி மூலம் செலுத்தக் கூடிய மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. வழக்கமாக, இந்த மருந்துகள் கடுமையான பக்க விளைவுகளைக் கொண்டவை, அதனால், இவை ஒரு குறுகிய காலகட்டத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் வேறு வகையான சிகிச்சைகளுடன்  மாற்றியமைக்கப்படுகின்றன. சொரியாஸிஸ் சிகிச்சைக்குப் பயன்படும் மருந்துகள்:
  • மெத்தாட்ரெக்ஸேட்
  • சைக்ளோஸ்போரின்
  • ரெட்டினாய்டுகள்
  • நோய் எதிர்ப்பு பண்பேற்றிகள்
  • ஹைட்ராக்ஸியூரியா
  • ஒளி சிகிச்சை
   நிறைவான ஒளிக்கதிர் சிகிச்சை, செதில்களால் மூடப்பட்ட காயங்களை, புற-ஊதா கதிர்கள் (இயற்கையான அல்லது செயற்கையான) படும்படி காட்டுவதை உள்ளடக்கியது. வழக்கமாக, நடுத்தர அல்லது கடுமையான சொரியாஸிஸ், மேற்பூச்சு மருந்துகள் அல்லது முறைப்படுத்தப்பட்ட மருந்துகளின் சேர்க்கையோடு ஒளிக்கதிர் சிகிச்சை மூலம் சமாளிக்கப்படுகிறது. வேறுபட்ட ஒளிக்கதிர் சிகிச்சையின் மாதிரிகளில் அடங்கியவை
   • சூரிய ஒளி படும்படி வைத்தல்
   • யூ.வி.பி. ஒளிக்கதிர் சிகிச்சை
   • கோய்க்கெர்மன் சிகிச்சை
   • லேசர் சிகிச்சை
   • சொரெலென் கூட்டு புற ஊதா ஏ சிகிச்சை

வாழ்க்கைமுறை மேலாண்மை

சொரியாஸிஸ், ஒரு நபரின் வாழ்க்கைமுறையையம், அதே போன்று அவர்/அவளின் வாழ்க்கையின் தரத்தையும் பாதிக்கக்கூடியது. சொரியாஸிஸ் பற்றிய விழிப்புணர்வு, ஒரு நபருக்கு சொரியாஸிஸை மிகவும் திறம்பட சமாளிக்க உதவகிறது. இது, நோயோடு அனுசரித்துப் போவதிலும், அதே போன்று அந்த நோய்கள் வெளிப்படுத்தும் சவால்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதிலும் உதவிகரமாக இருக்கிறது. இந்த சமாளிக்கும் உத்திகளில் அடங்கியவை:

 • அரிப்பை சமாளித்தல்
  வழக்கமாக, அரிப்பு ஒரு கொடூரமான சுழற்சி போல இருக்கிறது. அதாவது, எந்த அளவுக்கு நீங்கள் சொரிகிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் அரிப்பை உணர்வீர்கள். ஆக சொறிவதைத் தவிர்ப்பது, குறிப்பாக சொரியாஸிஸின் செதில்கள் வடிவங்களில், நன்கு வேலை செய்கிறது. மாயிச்சரைசர்களைப் பயன்படுத்துவது அரிப்பைக் குறைப்பதில் நன்கு உதவுகிறது.
 • எடை பராமரிப்பு
  எடையைக் குறைப்பது அல்லது பி.எம்,ஐ. இலக்கை அடைவது, சொரியாஸிஸின் அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைப்பதில், நன்கு வேலை செய்கிறது. அதைத் தவிர, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், ஒல்லி இறைச்சிகள் மற்றும் மீன் நிறைந்த ஒரு உணவு, சொரியாஸிஸில் ஒரு சாதகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இன்னொரு புறம், அதிக அளவிலான சிவப்பு இறைச்சி, அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் மது ஆகியவை சொரியாஸிஸை மேலும் மோசமாக்குகின்றன.
 • மன அழுத்த மேலாண்மை
  மன அழுத்தம், சொரியாசிஸ்ஸை தூண்டி விடும் மிகவும் பொதுவான காரணிகளில் ஒன்று. யோகா, மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானத்தின் மூலம் உங்கள் மன அழுத்தத்தை சமாளிப்பது, சொரியாஸிஸ்ஸின் சீறி வரும் சிக்கல்களை குறைக்க உதவுகிறது.
Skin Infection Tablet
₹499  ₹799  37% OFF
BUY NOW

சொரியாஸிஸ் (காளாஞ்சகப்படை) என்ன - What is Psoriasis in Tamil

மனிதர்களைப் பாதிக்கக் கூடிய, நூற்றுக்கும் மேற்பட்ட தோல் வியாதிகள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை ஒரே மாதிரி அறிகுறிகளைக் கொண்டிருக்கின்றன. இந்த பிரச்சினைகள், தற்காலிகமான அல்லது நிரந்தரமான, வலிமிகுந்த அல்லது வலியற்ற, அரிப்புடன் அல்லது அரிப்பு இல்லாமல் போன்ற இருக்கக் கூடிய அறிகுறிகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன. காரணங்கள் பல்வேறு வகைப்படுகின்றன மற்றும் ஒவ்வாமை, நோய்த்தொற்று, நோய் எதிர்ப்பு அமைப்பில் அல்லது மரபணுவில் குறைபாடு ஆகியவையும் அடங்கும். அறிகுறிகள், அவற்றின் கடுமையில் வேறுபடுகின்றன. சில அறிகுறிகள் மிகவும் கடுமையாக, மருத்துவமனையில் அனுமதிக்கும் தேவை ஏற்படுமாறு இருக்கும் பொழுது, சில சிறியவையாக, தானாகவே மறையக் கூடியவையாக இருக்கின்றன. உலக மக்கள் தொகையில் 5% வரை பாதிக்கக் கூடிய சொரியாஸிஸ், மிகவும் பொதுவான தோல் பிரச்சினைகளில் ஒன்றாகும்.

சொரியாஸிஸ் என்றால் என்ன?

தோல் அணுக்களின் பெருக்கம் அதிகரிப்பதன் மூலம், தோலின் வளர்ச்சி அதிகரிக்கிற ஒரு தோல் பிரச்சினையாகும். இது, தோல் அணுக்களின் திரட்சிகளுக்கு காரணமாகிறது. இந்த அணுக்களின் திரட்சி, அரிப்புடைய மற்றும் சிவப்பாக மாறக் கூடிய, சில சமயங்களில் வலி மிகுந்ததாகக் கூட மாறக் கூடிய, திட்டுக்களாக ஒன்று சேர்கின்றன. இது, ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் தோன்றக் கூடிய, ஒரு நீண்ட-கால (நாள்பட்ட) பிரச்சினையாகும். இது குணப்படுத்த முடியாதது, அதனால், சிகிச்சையின் முதன்மையான இலக்கு, அறிகுறிகளைக் கட்டுப்பாட்டில் வைப்பதாகும்.மேற்கோள்கள்

 1. Merck Manual Consumer Version [Internet]. Kenilworth (NJ): Merck & Co. Inc.; c2018. Psoriasis.
 2. National Health Service [internet]. UK; Psoriatic arthritis
 3. National Health Service [Internet]. UK; Psoriasis
 4. National Psoriasis Foundation [Internet] reviewed on 10/23/18; Causes and triggers.
 5. American Academy of Dermatology. Rosemont (IL), US; Are triggers causing your psoriasis flare-ups?
 6. Whan B. Kim, Dana Jerome, Jensen Yeung. Diagnosis and management of psoriasis. Can Fam Physician. 2017 Apr; 63(4): 278–285. PMID: 28404701
 7. National Psoriasis Foundation [Internet] reviewed on 10/23/18; Life with Psoriasis.
 8. Gulliver W. Long-term prognosis in patients with psoriasis. Br J Dermatol. 2008 Aug;159 Suppl 2:2-9. PMID: 18700909

சொரியாஸிஸ் க்கான மருந்துகள்

Medicines listed below are available for சொரியாஸிஸ். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.