இணைப்புத்திசுப் புற்று - Sarcoidosis in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 12, 2019

March 06, 2020

இணைப்புத்திசுப் புற்று
இணைப்புத்திசுப் புற்று

இணைப்புத்திசுப் புற்று என்றால் என்ன?

இணைப்புத்திசுப் புற்று என்பது அழற்சி காரணமாக உடலில் உள்ள திசுக்களில், பெரும்பாலும் நுரையீரல் மற்றும் நிணநீர்க்கணுக்களில் சிவந்த மற்றும் வீங்கிய கழலை (நுண்மணிப்புத்து) ஏற்படும் நிலைமையே ஆகும்.எந்த வயதிலும் இணைப்புத்திசுப் புற்று பாதிப்பு ஏற்படக்கூடும்.இருப்பினும், 20-40 வயதுடையவர்களில் இந்த நிலை அதிகமாக காணப்படுகிறது.சில சமயங்களில், இது நுரையீரல் ஃபைப்ரோஸிஸையும் ஏற்படுத்தும்.

அசாதாரண வளர்ச்சி (நுண்மணிப்புத்து) இருந்த போதிலும், இணைப்புத்திசுப் புற்று என்பது ஒரு புற்று நோய் அல்ல.இந்த நிலையிலிருந்து நோயாளிகளுக்கு 1-3 வருடங்களுக்குள் நிவாரணம் கிடைக்கும்.மருந்துகள் நோய் அறிகுறிகளைக் குறைக்க உதவுகின்றன அல்லது நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒடுக்க உதவுகின்றன.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இந்த நிலையின் முதல் அறிகுறி மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் ஆகும்.இதனைத் தொடர்ந்து  திடீரென தடிப்புகள் தோன்றும்.முகம் மற்றும் கைகளில் சிவப்பு புடைப்புகள், கண்களில் வீக்கம், எடை இழப்பு, இரவு நேரங்களில் வியர்த்தல் மற்றும் சோர்வு ஆகியவை இதன் பிற பொதுவான அறிகுறிகள் ஆகும்.

இந்த நிலையின் பிற அறிகுறிகள் பின்வருமாறு:

 • நெஞ்சு வலி.
 • மூச்சு திணறல்.
 • சோர்வு.
 • முகம் வீங்கி காணப்படுதல்.
 • கீல்வாதம்.
 • கால்களில் ஏற்படும் வலியோடு கூடிய கட்டி.
 • அக்குள், கழுத்து மற்றும் இடுப்பு பகுதிகளில் வீங்கிய மற்றும் தொடு உணர்திறன் கொண்ட சுரப்பிகள்.
 • குருதி ஊட்டக்குறை.
 • சிறுநீரக கற்கள்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இந்த நிலை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், கிருமிகள் மற்றும் தொற்றுக்களுக்கு எதிராக செய்யும் போராட்டத்தின் விளைவாகும்.இதன் விளைவாக, திசுக்களில் வீக்கம் மற்றும் சிவத்தல் ஏற்படுகிறது.ஆரோக்கியமான திசுக்களும் உறுப்புகளும் பாதிக்கப்படுவதால், இந்த நிலை மோசமடைகிறது.மேலும் நுண்மணிப்புத்து வெளிப்பட்டு, இது ஒரு தன்னுடல் தாக்கு நோய்க்குரிய பொதுவான தன்மையைக் காட்டுகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் மரபணு காரணிகள் இந்த நிலையின் முக்கிய தூண்டுதல்கள் என்று நம்பப்படுகிறது.எனவே, இந்த நிலை இயற்கையாக பரவும் ஒரு தொற்றுநோய் அல்ல.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

இந்த நிலையை கண்டறிய நோயாளியின் மருத்துவ பின்புலம், உடல் பரிசோதனை மற்றும் மார்பு எக்ஸ்-ரே ஆகியவை உபயோகப்படுகின்றன.இணைப்புத்திசுப் புற்று நோயை ஒத்த நிலைகளான காசநோய், பூஞ்சை நோய்த்தொற்றுகள், வாதக் காய்ச்சல் மற்றும் நிணநீர் புற்றுநோய் போன்றவை இல்லை என்று தீர்மானிக்க இந்த பரிசோதனைகள் பயனுள்ளதாக இருக்கும்.

நுரையீரலில் இணைப்புத்திசுப் புற்று இருப்பின் (நுரையீரல் இணைப்புத்திசுப் புற்று) அதனை கண்டறிவதற்கு, நுரையீரல் சி.டி. ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது.

ப்ரிட்னிசோன் போன்ற இயக்க ஊக்கி மருந்துகள் வீக்கத்தின் மேலாண்மை மற்றும் நுண்மணிப்புத்துக்களின் சிகிச்சைஆகியவற்றுக்கு பயனுள்ளதாக உள்ளன.பாதிக்கப்பட்ட உடல் உறுப்புகளை செயல்பட செய்தல் மற்றும் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளித்தல் ஆகியவை வேறு சில சிகிச்சை முறைகளாகும்.இருப்பினும், இந்த நிலை தானாகவே குணமடையலாம்.எனவே, சிகிச்சை ஆரம்பிக்க ஒரு சரியான தருணத்தை மருத்துவர் பரிந்துரைக்க மாட்டார்.

மேற்குறிப்பிட்ட எல்லாவற்றிற்கும் மேலாக, நோயாளி நோயை கண்காணிக்கவும், அதற்கேற்றாற் போல் சிகிச்சை பெறவும், தவறாது மருத்துவரிடம் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.அதே போல், இயக்க ஊக்கி மருந்துகள் உட்கொள்ளுவதனால் மனநிலை மாற்றங்கள், திசுக்களில்  திரவம் தேக்கி வைத்திருத்தல், உயர் இரத்த சர்க்கரை போன்ற பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.இவைகளின் நீண்ட கால பயன்பாடு எலும்பு வலிமை குறைவு மற்றும் அல்சர்களை (வயிற்றுப் புண்) ஏற்படுத்தும்.எனவே, மருந்தின் உகந்த நன்மைகளை அடைய பரிந்துரைக்கப்பட்ட அளவிலேயே இம்மருந்துகளை உட்கொள்ளுதல் அவசியமாகும்.மேற்கோள்கள்

 1. National Health Service [Internet]. UK; Sarcoidosis.
 2. National Heart, Lung, and Blood Institute [Internet]: U.S. Department of Health and Human Services; Sarcoidosis
 3. Illinois Department of Public Health [Internet] Springfield, Illinois; SARCOIDOSIS.
 4. Hilario Nunes et al. Sarcoidosis . Orphanet J Rare Dis. 2007; 2: 46. PMID: 18021432
 5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Sarcoidosis
 6. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Sarcoidosis