கண்கட்டி - Stye in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

May 14, 2019

March 06, 2020

கண்கட்டி
கண்கட்டி

கண்கட்டி என்றால் என்ன?

கண்கட்டி என்பது கண் இமைகளை பாதிக்கும் ஒரு தொற்று நோய் ஆகும். இது ஹார்டியோலம் என்றும் அழைக்கப்படுகிறது. இது கண் இமைகளின் வெளிப்புற அல்லது உட்புற மேற்பரப்பில் காணப்படுகிறது மற்றும் இமைகளின் சுரப்பியை பாதிக்கிறது. கண்ணிமையில் ஒரு சிறிய பரு அல்லது தடிப்பு போல கண்கட்டி தோன்றும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

 • பொதுவாக கண்ணிமைக் கட்டி பார்ப்பதற்கு ஒரு சிறிய பரு போல கண்ணுக்கு அருகில் தோன்றும்.
 • இது சிறியதாக சிவப்பு நிறத்தில் இருக்கும். அதில் சீழ் இருப்பதால், அது ஒரு சிறிய மஞ்சள் நிற மையத்தைக் கொண்டிருக்கும்.
 • கண்கட்டி தோன்றினால் கண் பகுதியில் வலியை ஏற்படுத்தும், இது கண்களை மூடும்போதும் திறக்கும்போதும் வலியை அதிகரிக்க செய்கிறது.
 • கண் இமைகளில் வீக்கம் ஏற்படலாம் மற்றும் இந்த வீக்கத்தில் இருந்து சில திரவம் வெளியேறலாம்.
 • கண் இயக்கங்களில் அசௌகர்யமான நிலை, கண்களில் இருந்து அடிக்கடி நீர் வடிதல், மேலும் கண்ணில் வேற்றுப் பொருள் இருப்பதை போன்ற ஒரு நிரந்தரமான உணர்வு ஏற்படுகிறது.

நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

 • பாக்டீரியா தோற்று ஏற்படுத்துவதன் காரணமாக கண்கட்டி ஏற்படும்.
 • ஆபத்து காரணிகளில் ஒரு நோய்எதிர்ப்புத்திறன் அற்ற நிலை மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ள உணவுகள் அடங்கும்.
 • இது ஒரு தொற்றுநோய் என்பதால், இது தொடுதல் மூலம் பரவுகிறது, அல்லது நாப்கின்கள் மற்றும் பிற பொருட்களை பகிர்தல் மூலம் பரவுகிறது.
 • மோசமான தனிப்பட்ட சுகாதாரம், கண்கட்டி உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும் மற்றொரு காரணியாகும்.
 • சில சமயங்களில், அதிகமான உலர் கண்கள் தொற்றுநோயை தூண்டலாம்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

 • ஒரு கண்கட்டியை கண்டறிவது மிகவும் எளிதானது மற்றும் இதற்கு எந்தவொரு விசாரணை நடைமுறைகளும் தேவையில்லை.
 • ஒரு மருத்துவர் இந்த நிலையை ஒரு ஒளியின் கீழ் பார்த்து கண்டறிவார்.
 • A பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஒரு கண்கட்டி தானாகவே குணமடைகிறது, இது குணமடைய சில நாட்கள் ஆகிறது.
 • வலி தொடர்ந்தால் அல்லது வலி அதிகமாக இருந்தால், மருத்துவர் சிகிச்சைக்கு ஆலோசனை கூறுவார்.
 • தேவைப்பட்டால், தொற்றுநோயை குணப்படுத்துவதற்கும் பாக்டீரியாவை அகற்றுவதற்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொடுக்கப்படுகின்றன.
 • கண்கட்டியில் மிக அதிகமான சீழ் குவிப்புடன் சேர்ந்து அதிக அழுத்தம் இருந்தால், ஒரு சிறிய கீறல் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
 • நல்ல தனிப்பட்ட சுகாதார பராமரிப்பு, துண்டுகள் பகிர்வதை தவிர்ப்பது மற்றும் மீண்டும் மீண்டும் கண்கட்டியை தொடுவதை தவிர்ப்பது ஆகியவை அறிவுறுத்தப்படுகிறது.மேற்கோள்கள்

 1. Willmann D, Patel BC, Melanson SW. Stye. [Updated 2019 Apr 7]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-.
 2. Bragg KJ, Le JK. Hordeolum. [Updated 2019 May 4]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-.
 3. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Styes
 4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Eyelid bump
 5. healthdirect Australia. Stye. Australian government: Department of Health
 6. HealthLink BC [Internet] British Columbia; Styes and Chalazia