கண்சவ்வடி இரத்த ஒழுக்கு - Subconjunctival Hemorrhage in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 14, 2019

July 31, 2020

கண்சவ்வடி இரத்த ஒழுக்கு
கண்சவ்வடி இரத்த ஒழுக்கு

கண்சவ்வடி இரத்த ஒழுக்கு என்றால் என்ன?

கண்களுக்குள் பல இரத்த நாளங்கள் உள்ளன.இந்த நாளங்கள், காயம் அல்லது வேறு பல காரணங்களால் சேதமடைந்தால், கண்களை பாதுகாக்கும், கண்களுக்கு அடியில் உள்ள ஒரு வெளிப்படையான படலத்தில் அதாவது கண்விழி படலத்தில் உள் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. கண்விழி படலத்திற்கு அடியில் ரத்தம் சேர்க்கப்படுவதால் இது  துணை-கண்சவ்வடி இரத்த ஒழுக்கு என்றும் அழைக்கப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

சில நேரங்களில் உங்களுக்கு நீண்ட காலத்திற்கு துணை-கண்சவ்வடி இரத்த ஒழுக்கு இருப்பதை உணரமுடியாது.

 • மிகவும் பொதுவான அறிகுறி என்னவென்றால், கண்ணின் வெள்ளை நிறப்பகுதியில் (ஸ்கெலெரா) ஒரு சிவப்பு திட்டு உருவாகிறது.
 • பாதிக்கப்பட்ட கண்களில் லேசான அரிப்பு இருப்பதை நீங்கள் உணரலாம்.
 • வலி மற்றும் எரிச்சல் போன்ற அறிகுறிகள் மிகவும் அரிதானவையாகும், பெரும்பாலான நேரங்களில் இதுபோன்ற அசௌகரியம் இருப்பதில்லை.
 • காலப்போக்கில், சிவப்பு நிறத்திட்டுக்கள் பழுப்பு அல்லது மஞ்சள் நிறமாக மாறலாம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன         ?

 • நிறைய துணை-கண்சவ்வடி இரத்த ஒழுக்கு வகைகள் தன்னிச்சையானவை மற்றும் குறிப்பிட்ட தூண்டுதல் அல்லது காரணமின்றி எழுகின்றன.
 • சில நேரங்களில், தீவிரமான தும்மல் அல்லது இருமல், கண்ணில் ஒரு அதிர்ச்சிகரமான காயம் ஏற்படுத்தலாம்.
 • இரத்தக் கசிவு சீர்குலைவுகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற மருத்துவ நிலைமைகள் இந்த நிலையின் தீவிர ஆபத்து காரணிகள் ஆகும்.
 • கண்களை கடுமையாக தேய்ப்பதால் இரத்த நாளங்கள் கிழிவது மற்றும் இரத்த கசிவு ஆகியவை ஏற்படலாம்.
 • அரிதாக, கண்புரை அறுவை சிகிச்சை அல்லது லாசிக் போன்ற லேசர் அறுவை சிகிச்சைகளின் ஒரு பக்கவிளைவாக இரத்தப்போக்கு ஏற்படலாம்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

 • ஒரு கண் பரிசோதனையின் மூலம் கண்சவ்வடி இரத்த ஒழுக்கு நோயை மருத்துவர் கண்டறிய முடியும்.
 • உங்கள் இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும்.
 • ஏதேனும் அடிப்படை மருத்துவ நிலை இருப்பதாக  சந்தேகிக்கப்படாவிட்டால், வேறு நோயறிதல் சோதனைகள் தேவையில்லை.
 • இது போன்ற நிலையில், நோயறிதலுக்காக ஒரு முழுமையான மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனை மிகவும் அவசியம்.

சிகிச்சை முறைகள் 

 • பொதுவாக, இந்த நோய்க்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை.
 • ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் இந்த இரத்த கசிவு தானாகவே குணமாகிவிடும்.
 • உங்கள் கண்களுக்கு கண்காணிப்பைத் தவிர வேறு எந்த மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை.
 • கண்களில் ஏற்படும் ஏதேனும் எரிச்சல் அல்லது அரிக்கும் உணர்வைத் தீர்ப்பதற்கு கண் சொட்டு மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.மேற்கோள்கள்

 1. Bercin Tarlan, Hayyam Kiratli. Subconjunctival hemorrhage: risk factors and potential indicators . Clin Ophthalmol. 2013; 7: 1163–1170. PMID: 23843690
 2. Mimura T et al. Subconjunctival hemorrhage and conjunctivochalasis. Ophthalmology. 2009 Oct;116(10):1880-6. PMID: 19596440
 3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Subconjunctival hemorrhage
 4. National Health Portal [Internet] India; Sub-conjunctival Haemorrhage
 5. Merck Manual Consumer Version [Internet]. Kenilworth (NJ): Merck & Co. Subconjunctival Hemorrhage.
 6. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; International Notes Acute Hemorrhagic Conjunctivitis -- Mexico