நீச்சலுடை காது - Swimmer's Ear in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 14, 2019

March 06, 2020

நீச்சலுடை காது
நீச்சலுடை காது

நீச்சலுடை காது என்றால் என்ன?

வெளிக்காது அழற்சி (ஒட்டிட்ஸ் எக்ஸ்டர்னா) என்று அழைக்கப்படும் நீச்சலுடை காது, வெளிக்காது பாதையில் ஏற்படும் ஒரு தொற்று ஆகும். இந்த வெளிக்காது பாதை என்பது காதுக்குள் ஒலியைக் கொண்டு செல்லும் பாதை ஆகும். இந்த தொற்றுநோய் நீரில் அதிக நேரம் செலவழிப்பவர்களிடையே பொதுவாக காணப்படுகிறது என்பதால் இது 'நீச்சலுடை காது' என்று அழைக்கப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

நீச்சலுடை காதுகளின் அறிகுறிகள் காது வலி மற்றும் அரிப்பு ஆகியவையாகும். காது சிவப்பு நிறமாக மாறும், மேலும் காதுகளில் இருந்து சில திரவம் வெளியேறுவதைக் காணலாம்.

நோய்த்தாக்கம் முன்னேறும்போது, ​​வலி, சிவத்தல் மற்றும் அரிப்பின் தீவிரம் அதிகரிக்கும். திரவத்துடன் சேர்த்து, காதுகளில் இருந்து சீழ் வடிதல் இருக்கும். நோயாளிகள் கேட்பதில் குழப்பம் இருப்பதாக கூட புகார் செய்யலாம்.

நோய்த்தாக்கம் அதிகரிக்கும் போது, மேலே உள்ள எல்லா அறிகுறிகளும் மோசமாகிவிடுகின்றன. கூடுதலாக, தொற்றுநோயால் காய்ச்சல் மற்றும் நிணநீர் மண்டலங்களில் வீக்கம் ஏற்படலாம்.

நோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

  • நீச்சலுடை காது முக்கியமாக பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்கள் போன்ற நுண்ணிய உயிரணுக்களால் ஏற்படுகிறது.
  • காதுகளில் ஈரப்பதம் பாக்டீரியாவை பெருக்குவதற்கு பொருத்தமான சூழலை உருவாக்குகிறது. அதனால் தான் தண்ணீரில் அதிக நேரத்தை செலவிடுகிறவர்கள் இந்த தொற்றுநோயால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
  • காதை சுத்தம் செய்வதற்கு உபயோகப்படுத்தும் பஞ்சு, ஊக்கு அல்லது விரல் ஆகியவற்றின் காரணமாக காதுகளின் தொடர்ச்சியான எரிச்சல் ஏற்படும், இதனால் நோய்த்தொற்றின் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.
  • காது உபரி பாகங்கள் மற்றும் இயர்போன்கள் போன்ற அயல் பொருட்களும் தொற்றுநோயைக் கொண்டு வரும்.
  • தோல் ஒவ்வாமை கொண்ட நபருக்கு இத்தகைய நோய்த்தாக்கங்களுக்கான அதிக வாய்ப்புகள் உண்டு.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

உங்கள் அறிகுறிகளையும் மருத்துவ வரலாற்றையும் அடிப்படையாகக் கொண்ட மருத்துவர், உங்கள் காதுகளைப் பரிசோதிப்பதில் இருந்து ஆரம்பிப்பார்.

  • அட்டோஸ்கோப் என்று அழைக்கப்படும் ஒரு சிறப்பு கருவி மூலமாக காதில் ஏற்படும் சிவப்பு, சீழ் அல்லது அழுக்குகள், காதின் பாதைக்கு உள்ளே பார்க்க பயன்படுத்தப்படுகிறது.
  • செவிப்பறை கடுமையாக சேதமடைந்தால், எந்த உயிரினத்தால் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள மேலும் சோதனைகள் தேவைப்படலாம்.

சிகிச்சை: 

  • முதன்மையான சிகிச்சை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மூலம் நுண்ணுயிர்களை நீக்குவதாகும்.
  • லேசான அமில கரைசல் கொண்டு காது சுத்தப்படுத்தப்படுகிறது, மேலும் அனைத்து அழுக்குகளும் அகற்றப்படுகின்றன.
  • காது பாதையிலுள்ள வீக்கத்தைக் குறைக்க ஸ்டெராய்டுகளைக் கொண்டிருக்கும் காது சொட்டுகள் உதவுகின்றன.
  • பொதுவாக எந்த முக்கிய சிக்கல்களும் இல்லாமல் 10-12 நாட்களில் தொற்று குணமடைகிறது.



மேற்கோள்கள்

  1. Hajioff D, MacKeith S. Otitis externa. BMJ Clin Evid. 2015 Jun 15;2015. pii: 0510. PMID: 26074134
  2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Swimmer's ear
  3. HealthLink BC [Internet] British Columbia; Swimmer's Ear (Otitis Externa)
  4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Ear Infections
  5. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Swimmer's ear
  6. healthdirect Australia. Swimmer's ear (otitis externa). Australian government: Department of Health