காதிரைச்சல் (டின்னிடஸ்) - Ringing in ears (Tinnitus) in Tamil

Dr. Abhishek Gupta

May 21, 2019

March 06, 2020

காதிரைச்சல்
காதிரைச்சல்

காதிரைச்சல் (டின்னிடஸ்) என்றால் என்ன?

இந்த காதிரைச்சல் நோயின் அறிகுறிகள் மருத்துவ ரீதியாக டின்னிடஸ் என கூறப்படுகிறது. இந்த டின்னிடஸ் என்பது  ஒன்று அல்லது இரு காதுகளிலும் அசாதாரண அல்லது வழக்கத்திற்கு மாறான மணி அடிப்பது போன்ற அல்லது சலசலப்பு போன்ற சத்தம் ஒலிப்பதை குறிக்கிறது. இந்த சத்தமானது ஒரு கர்ஜனை, சொடுக்கு அல்லது சீறொலி போன்று தோன்றலாம். இந்த சத்தமானது மெதுவான அல்லது உரக்க சத்தமாகவும் இருக்கலாம். எனினும் இந்த காதிரைச்சல் பிரச்சனை என்பது ஒரு நோயல்ல, மேலும் இந்த பிரச்சனை பொதுவாக பல தனி நபர்களால் தெரிவிக்கப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

டின்னிடஸ் என்பது கேட்கும் திறனில் ஒரு அசாதாரண நிலையை குறிக்கும் ஒரு அறிகுறியாகும்.

டின்னிடஸ் என்பது ஒன்று அல்லது இரண்டு காதுகளிலும் மணி அடிப்பது போன்ற ஒலி கேட்பதை வைத்து வரையறுக்கப்படுகிறது. இந்த பிரச்சனையினால் பாதிக்கப்பட்ட நபர் இதன் சத்தத்தினை வரையறுக்கும் முறை பின்வருமாறு:

 • கூச்சல்.
 • இரைப்பு.
 • விசிலடித்தல் ஒலி.
 • தெளிவற்ற ஒலி.

சில நபர்களில் இந்த காதிரைச்சலானது உரத்த சத்தமாக இருப்பதாக தெரிவிக்கலாம், சில நபர்களுக்கு இது அதிக மயக்கத்தை உண்டாக்கும் ஒலியாக இருக்கும். இருப்பினும், இந்த டின்னிடஸில் சத்தமானது வெளிப்புற மூலத்திலிருந்து நிச்சயமாக வரவில்லை. இந்த சத்தம் சில நிமிடங்கள் அல்லது நீண்ட நேரத்திற்கு ஏற்படும் ஒரு அனுபவமாக இருக்கலாம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

முதியவர்களிடத்தில் இந்த டின்னிடஸானது பொதுவாக ஏற்படும் ஒரு நிகழ்வாகும் மற்றும் இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரையும் பாதிக்கிறது. இந்த டின்னிடஸ் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள் பின்வருமாறு:

 • காதில் தொற்று ஏற்படுதல்.
 • சைனஸ் தொற்று.
 • ஹார்மோன் மாற்றங்கள்.
 • தைராய்டு குறைபாடுகள்.
 • காதில் காயம் ஏற்படுதல்.
 • களைப்பு.
 • காதில் மெழுகு படிவதன் காரணமாக காது அடைத்தல்.
 • சில மருந்துகளை உட்கொள்ளுதலின் விளைவு.

வயதானவர்கள, காது கேட்கும் திறனை இழத்தலுக்கு இந்த டின்னிடஸ் பிரச்சனை முதல் அறிகுறியாக இருக்கலாம்.

தொழிற்சாலை, இசை நிகழ்வுகள் போன்ற சத்தமாக இருக்கும் சுற்று சூழலில் வேலை செய்யும் நபர்களில் இந்த டின்னிடஸ் ஒரு குறுகிய காலத்திற்கு ஏற்படும் அல்லது ஒரு தொடர்ச்சியாக இருக்கும் காது கேட்கும் திறனை இழத்தல் போன்ற அறிகுறியாகும்.

மன அழுத்தம் மற்றும் மற்ற மன நோய்கள் காரணமாகவும் இந்த டின்னிடஸ் பிரச்சனையானது ஏற்படலாம்.

இது ஒரு பொதுவான பிரச்சனை என்பதால், எந்த ஒரு வெளிப்படையான காரணமும் இல்லாமல் இந்த டின்னிடஸ் பிரச்சனை ஏற்படலாம்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

டின்னிடஸின் காரணத்தை கண்டறிய அல்லது தீர்மானிக்க மருத்துவர் கேட்டல் சோதிக்கும் சோதனையை மேற்கொள்வார். மேலும் காதில் ஏற்படும் சப்தத்தினை குறித்து கேட்டறிவார். ஸ்கேனிங் மற்றும் இமேஜிங் சோதனைகளான சி டி மற்றும் எம் ஆர் ஐ போன்ற சோதனைகள் காயம் ஏற்பட்டதற்கான ஏதேனும் அறிகுறி உள்ளதா என கண்டறிய செய்யப்படலாம். ஏதேனும் வேற்றுப் பொருள் காதினுள் உள்ளதா என அறிய ஒடோஸ்கோபி எனப்படும் உபகரணம் காதின் உள்பகுதியை பார்க்க பயன்படுத்தப்படும்.

பொதுவாக காதில் ஏற்படும் இந்த இரைச்சல் தானாகவே சரியாகிவிடும். எனவே இதற்கென தனி சிகிச்சை முறை ஏதும் தேவை இல்லை. எனினும், வேறு ஏதேனும் குறிப்பிட்ட காரணி இருந்தால் அதற்கு ஏற்றாற்போல் சிகிச்சை எடுப்பது அவசியமாகும்.

இரத்தக் குழாய் பகுதியில் உள்ள காயத்தினை சரி செய்யவும் அல்லது  மன அழுத்தம் தொடர்பான டின்னிடஸைக் குறைப்பதற்கும்  மருந்து வழங்கப்படலாம். காது கேட்கும் திறன் இழப்புக்கு, காது கேட்பதற்கான உபகரணம் கொடுக்கப்படலாம்.மேற்கோள்கள்

 1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Tinnitus.
 2. National Institutes of Health; National Institute on Deafness and Other Communication Disorders. [Internet]. U.S. Department of Health & Human Services; Tinnitus.
 3. Healthdirect Australia. Tinnitus. Australian government: Department of Health
 4. Byung In Han et al. Tinnitus: Characteristics, Causes, Mechanisms, and Treatments. J Clin Neurol. 2009 Mar; 5(1): 11–19. PMID: 19513328
 5. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Tinnitus.
 6. National Organization for Rare Disorders [Internet]; Tinnitus.

காதிரைச்சல் (டின்னிடஸ்) டாக்டர்கள்

Dr. Chintan Nishar Dr. Chintan Nishar ENT
10 वर्षों का अनुभव
Dr. K. K. Handa Dr. K. K. Handa ENT
21 वर्षों का अनुभव
Dr. Aru Chhabra Handa Dr. Aru Chhabra Handa ENT
24 वर्षों का अनुभव
Dr. Jitendra Patel Dr. Jitendra Patel ENT
22 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

காதிரைச்சல் (டின்னிடஸ்) க்கான மருந்துகள்

காதிரைச்சல் (டின்னிடஸ்) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

காதிரைச்சல் (டின்னிடஸ்) की जांच का लैब टेस्ट करवाएं

காதிரைச்சல் (டின்னிடஸ்) के लिए बहुत लैब टेस्ट उपलब्ध हैं। नीचे यहाँ सारे लैब टेस्ट दिए गए हैं:

टेस्ट का नाम