ஆஞ்சியோடெமா (இரத்தக் குழாய் வீக்கம்) - Angioedema in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 27, 2018

March 06, 2020

ஆஞ்சியோடெமா
ஆஞ்சியோடெமா

ஆஞ்சியோடெமா என்றால் என்ன?

ஆஞ்சியோடெமா இரத்தக் குழாய் வீக்கம் (குருதிக் குழல்வீக்கம்) என்பது அடித்தோலின் கீழ் ஏற்படும் வீக்கம் அல்லது ஆழ்ந்த தோல் திசுக்களில் இருக்கும் வீக்கம் ஆகும். இது பொதுவாக மருந்து, உணவு, மகரந்தம், சுற்றுச்சூழல் நச்சுகள் அல்லது பிற ஒவ்வாமையூக்கிகளுக்கான நோயெதிர்ப்பு விளைவாக இருக்கிறது. திசுக்களை சுற்றியுள்ள இரத்த நாளங்களில் திரவம் வடிய காரமனாக இருப்பதால், அங்கே வீக்கம் ஏற்படுகிறது.

ஆஞ்சியோடெமாவின் நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

உதடுகள், கைகள், கால்கள், நாக்கு மற்றும் கண்களை சுற்றி வீக்கம் ஏற்படும். எப்போதாவது, யூரிடிக்ரியா என்றழைக்கப்படும் அரிப்பு அல்லது சொறியினால் ஏற்படும் தடிப்பு போன்றவை உருவாகிறது. வலி மற்றும் லேசான அரிப்பு, சிவந்திருத்தல், குறிப்பிட்ட இடத்தில் வெப்பமிதமாக இருப்பது ஆகியவை பொதுவாக காணப்படும் அறிகுறிகளாகும். நீர்க்கட்டு (எடிமா) அல்லது சுவாச குழாயில் ஏற்படும் வீக்கத்தினால், சுவாச கோளாறுகள் ஏற்படும். கேஸ்ட்ரோஇன்டென்ஸ்டின் குழாயில் நீர்க்கட்டுஏற்படுவதால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு அல்லது வலி ஏற்படுகிறது.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

ஆஞ்சியோடெமாவின் சரியான காரணம் புலப்படவில்லை. இது வழக்கமாக ஒவ்வாமையின் எதிர்வினையால் ஏற்படுகிறது அதாவது ஒவ்வாமையூக்கிகளான மருந்துகள், பூச்சி கடித்தல், ரப்பர் மரப்பால், வளர்ப்பு பிராணிகளின் முடி அல்லது உணவு போன்றவைகளால் தூண்டப்படுகிறது.

சில மருந்துகள் பொதுவாக வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றுள் ஆஞ்சியோடென்ஸின்-கன்வெர்ட்டிங் என்சைம் தடுப்பான்கள், ஸ்டீராய்டல் அல்லாத ஆன்டி இன்பிலம்மேட்டரி மருந்துகள் மற்றும் ஆன்ஜியோடென்சின் ரெசிப்டார் பிளாக்கர்கள் ஆகியவகைகள் அடங்கும்.

சிலர் மரபணு மாற்றங்களின் காரணமாக ஏற்படும் ஆன்சியோடெமாவை தன்னுடைய முந்தைய பரம்பரையிலிருந்து பெற்றிருக்கலாம்.

லுகேமியா அல்லது நோய் தொற்று காரணமாகவும் ஆன்ஜியோடெமா தாக்கக்கூடும்.

இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

முதல் கட்டமாக, உங்களுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் உங்களை உடலளவில் பரிசோதிப்பார்கள். பாதிக்கப்பட்ட பகுதியைச் சரிபார்த்து, உங்களது மருத்துவ வரலாறு அல்லது உங்களுக்கு நேர்ந்த ஒவ்வாமை விவரங்கள் பற்றியும் கேட்டறியலாம். இது உங்களுக்கு ஒவ்வாமை உண்டாக்கிய காரணியை கண்டறிய உதவுகிறது. மருத்துவர்கள் சருமத்தில் செய்யப்படும் பிரிக் பரிசோதனை அல்லது இரத்த பரிசோதனை போன்ற ஒவ்வாமைக்கான சில சோதனைகளை செய்யலாம். இரத்தத்தில், குறிப்பாக சி1 எஸ்டிரேஸ் தடுப்பானை கண்டறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் அளவுகள் குறைந்து காணப்பட்டால், அது பரம்பரை தாக்கத்தின் வெளிப்பாடாக கருதப்படுகிறது. சோதனைகளின் அசாதாரணமான முடிவுகள், அதாவது சி2 அல்லது சி4 போன்றவை, உள்ளார்ந்த காரணங்களினால் கூட இருக்கலாம்.

ஆஞ்சியோடெமாவின் காரணத்தை பொறுத்தே மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைப்பார்கள். சில நேரங்களில் இந்த நிலைக்கு மருந்துகள் தேவையில்லை மற்றும் தானாகவே குணமாகிவிடும். எனினும், நோயின் தீவிரத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.சிகிச்சையின் முக்கிய நோக்கமானது வீக்கம், அரிப்பு, வலி ​​ஆகியவற்றிலிருந்து விடுவிப்பதே ஆகும்.

பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்துகளானது அரிப்பு-தடுப்பு மருந்துகள், அழற்சி தடுப்பு மருந்துகள், நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒடுக்கும் மருந்துகள், வலி ​​மற்றும் வீக்கத்தை குறைக்கும் மருந்துகள்.

ஆஞ்சியோடெமா ஒவ்வாமையின் காரணமாக ஏற்பட்டால், அது விளைவிக்கும் பொருளினை உபயோகிக்காமல் தடுத்தாலே போதுமானது. இத்தகைய நிலைமைகளில் ஆன்டி-ஹிஸ்டமினிக் மற்றும் ஸ்டீராய்டல் மருந்துகளை பயன்படுத்தப்படலாம்.

ஆஞ்சியோடெமா சில மருந்துகளின் உபயோகத்தினால் ஏற்பட்டால், உங்கள் மருத்துவரிடம் பேசி, உங்களுக்கு ஏற்ற மாற்று மருந்தினை பெற்றுக்கொள்ளலாம்.

பரம்பரை ஆஞ்சியோடெமா நோய்க்கு சிகிச்சையளிக்க முடியாது, ஆனால் அதன் அறிகுறிகளை, சி1 எஸ்டிரேஸ் தடுப்பான் அளவை அதிகரிக்காமல் இருக்க மருந்துகள் அளித்து, மேலும் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.



மேற்கோள்கள்

  1. National Health Service [Internet]. UK; Treatment - Angioedema
  2. MSDmannual consumer version [internet].Angioedema. Merck Sharp & Dohme Corp. Merck & Co., Inc., Kenilworth, NJ, USA
  3. Australasian Society of Clinical Immunology and Allergy. Angioedema. Australia; [internet]
  4. American Academy of Family Physicians. Urticaria and Angioedema: A Practical Approach. Am Fam Physician. 2004 Mar 1;69(5):1123-1129.
  5. Allen P Kaplan. Angioedema. World Allergy Organ J. 2008 Jun; 1(6): 103–113. PMID: 23282406