முதுமை மூட்டழற்சி - Osteoarthritis in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

April 30, 2019

March 06, 2020

ஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்
முதுமை மூட்டழற்சி
முதுமை மூட்டழற்சி
ஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்

முதுமை மூட்டழற்சி என்றால் என்ன?

முதுமை மூட்டழற்சி என்பது, மெதுவாக வளர்ச்சி அடைந்து மூட்டுகளில் வலியையும், விறைப்பு தன்மையையும் ஏற்படுத்தக்கூடியதாகும். இப்பிரச்சனை முக்கியமாக நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்களிடத்தில் அதிகம் காணப்படுகிறது. உடலியக்க இயக்கத்தினால் ஏற்படும் அழுத்தம் அல்லது உயிர்வேதியியல் மாற்றங்கள் காரணமாக குருத்தெலும்புகளில் ஏற்படும் முறிவு எடை தாங்கும் மூட்டுகளை பாதிக்கிறது. இந்நோய் சில நேரங்களில் பிற வகை கீல்வாத பிரச்சனைகளுடனும் காணப்படலாம்.இந்த கீல்வாதம் பிரச்சனையால் உடலில் உள்ள எந்த ஒரு மூட்டும் பாதிக்கப்படலாம், எனினும், கையில் உள்ள சிறிய மூட்டுகள், முழங்கால்கள் மற்றும் இடுப்பு பகுதிகளில் பொதுவாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

அவ்வப்பொழுது ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:

 • மூட்டுகளில் வலி மற்றும் விறைப்பு.
 • மெலிந்த தசை திரளுடன் தொடர்புடைய தசைகள் பலவீனமாக காணப்படுதல்.
 • பாதிக்கப்பட்ட மூட்டுகளை நகர்த்துவதில் சிரமம், குறைந்த அளவிலான இயக்கம்.
 • மூட்டுகள் வழக்கமானதை விட மெலிந்து மற்றும் பெரிதாக வீங்கி காணப்படுதல்.
 • மூட்டுகளில் விரிசல் சப்தம், மென்மையான உணர்வு அல்லது உராய்கிற சப்தம் ஏற்படுதல்.
 • தினசரி நடவடிக்கைகளை செய்வதில் சிரமம்.
 • விரல்கள் வளைந்து காணப்படுதல்.
 • பாதிக்கப்பட்ட பகுதிகளில் வலிமிகு புடைப்புகள் அல்லது திரவ நிரப்பு கட்டிகள் தோன்றுதல்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இணைப்பு மூட்டுகளில் ஏற்படும் நிலையாக, மெதுவாக ஏற்படும் சேதமானது பொதுவாக உடல் ரீதியாகவே சரி செய்யப்படுகிறது. ஆனால் இந்த நோயில், எலும்பின் முனைகளில் ஏற்படும் சேதம் மற்றும் பாதிக்கப்பட்ட குருத்தெலும்பு முறிவுகள் தானாக சரிசெய்யப்படுவதில்லை. அசாதாரண எலும்பு வளர்ச்சி மற்றும் அழற்சியின் காரணமாக பாதிக்கப்பட்ட மூட்டானது சிவந்தும், வீக்கமும் அடைந்தும் காணப்படும் . இந்த கீல்வாதம் ஏற்படுவதற்கான காரணம் முரண்பாடாகவும், அறியப்படாததாகவும் உள்ளது, ஆனால் இவை பின்வரும் அறிகுறிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்:

 • காயத்திற்கு பிறகு அதிகமான மூட்டுகளின் செயல்பாடு.
 • முடக்கு வாதம் அல்லது கீல்வாதம் போன்ற நோய்களின் காரணமாக கடுமையாக சேதமடைந்த மூட்டுகள்.
 • அதிக எடை அல்லது வயதுமுதிர்வு அல்லது குடும்பத்தில் இந்நோய் பாதிப்பு உள்ளவர்கள்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

மருத்துவர் முதலில் நோய்க்கான அறிகுறிகளின் முழுமையான அறிக்கையை எடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மூட்டுகளில் முழுமையான பரிசோதனையுடன் முன்கூட்டியே நோய்த்தாக்கநிலை அல்லது அதற்கான காரணிகளை சோதிப்பார்.மேலும், பின்வரும் சோதனைகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம்:

 • குறிப்பிட்ட இரத்த பரிசோதனைகள்.
 • எலும்பு முறிவு அல்லது முடக்கு வாதம் ஆகியவற்றை தீர்மானிக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் எக்ஸ்- கதிர் ஸ்கேன் எடுத்தல்.

கீல்வாதம் பிரச்சனையை நிர்வகித்தல்:

இந்நோயினால் ஏற்படும் லேசான அறிகுறிகளைக் குறைப்பதற்கான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

 • உடல் எடையை சரியான அளவில் நிர்வகிக்க தினசரி உடற்பயிற்சி.
 • பொருத்தமான சாதனங்களுடன் சரியான காலணி உபயோகிப்பதன் மூலம் மூட்டுகளில் ஏற்படும் அழுத்தங்களை கட்டுப்படுத்துதல்.
 • கடுமையாக தோன்றும்  அறிகுறிகளைக் குறைப்பதற்கான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
 • வலி நிவாரண மருந்துகளின் பயன்பாடு பின்வருமாறு:
 • பாரசெட்டமால்.
 • ஸ்டீராய்டுகள் அல்லாத அழற்சி மருந்துகள் (என் எஸ் எ ஐ டி): இபுரூஃபன், நாப்ராக்ஸன், செலகோக்சிப், எட்டோரிகோக்ஸிப் மற்றும் டிக்லோஃபெனாக்.
 • ஓபியோட்கள் (கோடெய்ன்).
 • கேப்சாசின் கிரீம்.
 • ஸ்டீராய்டு ஊசி.
 • பிளேட்லெட் நிறைந்த பிளாஸ்மா (பி ஆர் பி) ஊசி.
 • ஊட்டச்சத்து உணவுகள்.
 • பிசியோதெரபிஸ்ட் மேற்பார்வையின் கீழ் பயிற்சி மேற்கொள்ளுதல் பிசியோதெரபி சார்ந்த உடற்பயிற்சி திட்டம்.
 • டிரான்ஸ்குட்டனீஸ் மின் நரம்பு தூண்டுதல் (டி இ என் எஸ்).
 • சூடான அல்லது குளிர்ந்த ஒத்தடம்.
 • இந்நோய் முற்றிய நிலையில் சேதமடைந்த மூட்டு பகுதியை சரி செய்யவும், வலுவடைய செய்யவும் அல்லது மூட்டு மாற்று சிகிச்சை முறைக்கு அறுவை சிகிச்சை செய்வதே வெற்றியை தரும் அவைகள் உள்ளடக்கியவை:
 • மூட்டுச்சீரமைப்பு.
 • மூட்டுநீக்கி.
 • எலும்பு வெட்டுஅறுவை சிகிச்சை.
 • மாற்று சிகிச்சை முறைகள் பின்வருமாறு:
 • அக்குபஞ்சர்.
 • அரோமாதெரபி.மேற்கோள்கள்

 1. National Health Service [Internet]. UK; Osteoarthritis.
 2. American College of Rheumatology. Osteoarthritis. Georgia, United States [Internet]
 3. National Institute on Aging [internet]: US Department of Health and Human Services; Osteoarthritis
 4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Osteoarthritis (OA)
 5. National Health Portal [Internet] India; Osteoarthritis
 6. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Osteoarthritis
 7. healthdirect Australia. Osteoarthritis treatment. Australian government: Department of Health

முதுமை மூட்டழற்சி டாக்டர்கள்

Dr. Tushar Verma Dr. Tushar Verma Orthopedics
5 वर्षों का अनुभव
Dr. Urmish Donga Dr. Urmish Donga Orthopedics
3 वर्षों का अनुभव
Dr. Sridhar Reddy Dr. Sridhar Reddy Orthopedics
4 वर्षों का अनुभव
Dr. Sunil Kumar Yadav Dr. Sunil Kumar Yadav Orthopedics
3 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

முதுமை மூட்டழற்சி க்கான மருந்துகள்

முதுமை மூட்டழற்சி के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

दवा का नाम

कीमत

₹35.0

20% छूट + 5% कैशबैक


₹52.5

20% छूट + 5% कैशबैक


₹113.4

20% छूट + 5% कैशबैक


₹103.0

20% छूट + 5% कैशबैक


₹52.75

20% छूट + 5% कैशबैक


₹119.0

20% छूट + 5% कैशबैक


₹97.85

20% छूट + 5% कैशबैक


₹86.45

20% छूट + 5% कैशबैक


₹33.3

20% छूट + 5% कैशबैक


₹71.76

20% छूट + 5% कैशबैक


Showing 1 to 10 of 995 entries