உயர் இரத்த அழுத்தம் - High BP (High Blood Pressure) in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

January 23, 2017

April 28, 2023

உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம்

சுருக்கம்

உயர் இரத்த அழுத்தம், ஹைபர்டென்ஷன் எனவும் அழைக்கப்படுகிறது, இதன் அர்த்தம் உடலின் இரத்த அழுத்தம் ஆரோக்கியமற்ற பொதுவாக இருக்க வேண்டிய அளவை விட அதிக அளவை அடைந்துள்ளது என்பதாகும். இரத்த அழுத்தம் என்பது இரத்த நாளங்களின் (தமனிகள் / குடல்கள்) சுவர்களில் இரத்தம் பாயும் வேகம் மற்றும் இதயம் இரத்தை பீச்சும் போது இதய வால்வுகள் / அடைப்பான்களின் தாங்கக்கூடிய வலிமை ஆகும். நீண்ட கால உயர் இரத்த அழுத்தம் இதய சம்பந்தமான கோளாறுகளை ஏற்படுத்தும்.

உயர் இரத்த அழுத்தம் பரவலாக இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகிறது- அவை முதன்மை அல்லது அத்தியாவசிய உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரண்டாம்நிலை உயர் இரத்த அழுத்தம். லேசான உயர் இரத்த அழுத்த வியாதிக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம், எனவே, மிதமான இரத்த அழுத்தத்தில் உயர்வு இருக்கும் நோயாளிக்கு தனக்கு இவ்வாறு லேசான உயர் இரத்த அழுத்தம் இருப்பதே தெரியாத நிலை இருக்கவும் வாய்ப்பு உண்டு. எனினும், கடுமையான உயர் இரத்த அழுத்தம் கொண்ட நோயாளிக்கு, தலைவலி. போன்ற அறிகுறிகள் இருக்க வாய்ப்பு உண்டு. உயர் இரத்த அழுத்த பிரச்சனை உடலின் வேறு சில அடிப்படை அல்லது தொடர்புடைய உடல்நல பிரச்சனைகளின் விளைவாக இருக்கலாம். இருப்பினும், சில நேரங்களில், உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் தெரியாமலேயும் இருக்கும்.

உடற்பயிற்சி, முக்கியமாக உணவில் உப்பின் அளவை குறைவாக சேர்த்துக்கொள்ளல், மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் மருந்துகளை எடுத்துக்கொள்ளல் போன்ற முறைகளை பின்பற்றுவதால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். உயர் இரத்த அழுத்தம் கண்டறிதல் மற்றும் சிகிச்சையைத் தொடங்குதல் ஆகியவற்றில் தாமதம் ஏற்பட்டால், கடுமையான தொடர் சிக்கல்கள் ஏற்படுத்தும் மாரடைப்பு (மையோ கார்டில் என்பீராக்ஷன்) மற்றும் கண் பிரச்சினைகள் (ரெட்டினோபதி) போன்ற தீவிர சிக்கல்கள் ஏற்படலாம். உயர் இரத்த அழுத்த கட்டுப்பாடு பெரும்பாலும் அடிப்படையில் தொடர்புள்ள நோயின் காரணத்தையும், சிகிச்சையையும் சார்ந்திருக்கிறது. பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

உயர் இரத்த அழுத்த கட்டுப்பாட்டில், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் கொண்டுவருதல் மற்றும் வாழ்நாள் முழுவதும் மருந்துகளை எடுத்து கொண்டும் இருக்கும் அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் மருந்துகளுக்கு தவறாமல் உட்கொள்வது கடினமாகத்தான் இருக்கும். இவைகள் தான் வழக்கமான உடல் பரிசோதனை மற்றும் சரியான நேரத்தில் மருத்துவமனை சென்று மருத்துவ ஆலோசனை பெறுவது உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு என்பதற்கான முக்கியக் காரணமாகும்.

உயர் இரத்த அழுத்தம் என்ன - What is High Blood Pressure in Tamil

கடந்த பல ஆண்டுகளில், உயர் இரத்த அழுத்த பாதிப்பு இந்தியாவில் மரணத்திற்கான ஒரு முக்கிய காரணமாக அறியப்பட்டுள்ளது. இது மிகவும் பொதுவான நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனை. ஒருவர் உடலில் உயர் இரத்த அழுத்தம் கண்டறியப்பட்டவுடன், வாழ்க்கை முழுவதும் உயர் இரத்த அழுத்த சிகிச்சை எடுத்துக்கொள்ளுதல் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வருவது ஆகிய இரண்டும் மிக முக்கியமாகிறது. உயர் இரத்த அழுத்தம் இதய நோய்கள், பக்கவாதம், மாரடைப்பு போன்ற இதர இதய நோய்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாகிறது. எனவே, உயர் இரத்த அழுத்தம் நன்கு கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், இது மற்ற உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதன் சிகிச்சையின் விளைவு ஒரு நபரின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், மற்றும் உயர் இரத்த அழுத்தம் குடும்ப வரலாறு ஆகியவற்றிற்கு தொடர்பானது. 30 வயதிற்குப் பின்னர் வழக்கமான உடல்நல பரிசோதனைகள் இரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பதற்கும் அத்துடன் மற்ற உடல்நலப் பிரச்சினைகளை கண்டறியவும் உதவியாக இருக்கும். மின்னணு தானியங்கி இரத்த அழுத்தம் கண்காணிப்பு இயந்திரங்கள் மூலம் வீட்டிலேயே அவ்வப்பொது இரத்த அழுத்தத்தை  அளவிட்டு தெரிந்து கொள்ள முடியும். இந்த இரத்த அழுத்தம் கண்காணிப்பு இயந்திரங்கள் பயன்படுத்துவது எளிதானது மற்றும் அவற்றில் காட்டப்படும் அளவுகள் எளிதாக புரிந்து கொள்ளக்கூடியவை. ஒவ்வொரு ஆண்டும் உயர் இரத்த அழுத்த்தினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரத்த அழுத்தம் 2020 ஆம் ஆண்டில் உறுப்பு செயலிழப்பு மற்றும் இறப்புக்கு முக்கிய காரணியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகள் என்ன - Symptoms of High Blood Pressure in Tamil

உயர் இரத்த அழுத்தத்தின் மிகவும் இக்கட்டான அம்சம் எதுவெனில் நோயாளிக்கு உயர் இரத்த அழுத்தத்திற்கான எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருத்தல், பெரும்பாலான நேரம் இந்த நோய் கவனிக்கப்படாமல் விடக்கூடும். பெரும்பாலான உயர் இரத்த அழுத்தம் உள்ள மக்கள் தங்கள் நிலைமை பற்றி தெரியாதவர்களாக இருக்கிறார்கள். எனவே, உயர் இரத்த அழுத்தம் மிகவும் முக்கியமான கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்க வேண்டிய ஒன்று என்பதால், உங்கள் இரத்த அழுத்த அளவுகளில் எந்த மாற்றத்தையும் கவனிக்க நீங்கள் தவறாமல் இருக்க உங்கள் மருத்துவரை வழக்கமாக சந்திக்க வேண்டும். நீங்கள் கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தத்துடன் இருந்தால், பின்வரும் அறிகுறிகளை கொண்டிருக்க கூடும்:

 • கடும் தலைவலி - உயர் இரத்த அழுத்தம் காரணமாக தலை பாரம் அல்லது தலை வலியை நீங்கள் உணரலாம்.
 • களைப்பு அல்லது குழப்பம் - நீங்கள் பலவீனமாக அல்லது ஊக்கமின்மை அல்லது நிலையின்மையை உணரலாம்.
 • பார்வை பிரச்சினைகள் - நீங்கள் இரட்டை பார்வை அல்லது மங்கலாக பார்வையை உணரலாம்.
 • நெஞ்சு வலி - நீங்கள் மார்பில் கூர்மையான வலி அல்லது பாரமாக உணரலாம்.
 • மூச்சு விட சிரமபடுதல் - நீங்கள் ஒழுங்காக மூச்சுவிட முடியாதவாரு உணரக்கூடும்.
 • நெஞ்சுத்துடிப்பு - நீங்கள் உங்கள் சொந்த இதய துடிப்புகள் உணரலாம்.
 • சிறுநீரில் இரத்தம் - அரிதாக, நீங்கள் அடர்ந்த நிற சிறுநீர் அல்லது சிறிது பழுப்பு நிற சிறுநீரை கவனிக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம் சிகிச்சை - Treatment of High BP in Tamil

உயர் இரத்த அழுத்தமானது முற்றிலும் குணப்படுத்த இயலாது. ஆனால் முறையான பராமரிப்பு மற்றும் மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த இயலும். உயர் இரத்த அழுத்த  சிகிச்சையானது உங்கள் மருத்துவர் எடுத்த இரத்த அழுத்த அளவீடுகளை பொருத்து இருக்கும். சிகிச்சை தொடுங்குவதற்கு முன்பாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இரத்த அழுத்த அளவீடுகள் எடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் சிகிச்சை ஆரம்பிக்க பட வேண்டும்.

 • உங்களின் இரத்த அழுத்தம் 120/80 mm Hg மெர்குரியின் அளவில் இருந்து சரியான அளவில் அல்லது அதற்கு கீழே இருந்தால், உங்களின் இரத்த அழுத்தம் உயர்வதை தவிர்க்க வாழ்க்கை முறையையும், உணவு முறையையும் ஆரோக்கியமாக பின்பற்றி அதனுடன் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்  என மருத்துவர் அறிவுருத்துவார்.
 • உங்கள் சிஸ்டாலிக் பிபி (இரத்த அழுத்தம்) 120-129 mm Hg மெர்குரியின் அளவில் இருந்து ஆனால் டைஸ்டாலிக் பிபி 80 mm Hg-க்கு குறைவாக இருந்தால், மருத்துவர் உங்களை ஆரம்ப நிலை இரத்த அழுத்த நோயாளி என்று அதாவது முன் உயர் இரத்த அழுத்த வகையைச் சேர்ந்தவர் என்று கூறுவர். இந்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு மருந்துகள் தேவையில்லை ஆனால் தினசரி உடற்பயற்சியும் உணவு கட்டுப்பாடும் வேண்டும். ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒரு முறை இரத்த அழுத்ததை வீட்டில் மின்னணு இயந்திரம் மூலம் அல்லது மருத்துவ நிலையத்தில் சென்று இரத்த அழுத்த அளவீடுகளை பார்வையிட வேண்டும் என மருத்துவர் அறிவுருத்துவார்.
 • உங்கள் சிஸ்டாலிக் பிபி 130-139 mm Hg மெர்குரியின் அளவில் ஆனால் டைஸ்டாலிக் பிபி 80-89க்கும் குறைவாக இருந்தால், உங்களுக்கு முதல் நிலை உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக அர்த்தம். ஆதலால் மருத்துவர் உங்களுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகள், உணவு மாற்றங்கள், உடற்பயிற்சி மற்றும் கட்டுப்பாடான இரத்த அழுத்த பரிசோதனைகளை பரிந்துரைக்கலாம்.
 • உங்கள் சிஸ்டாலிக் பிபி 140mm Hg மெர்குரியின் அளவில் அல்லது அதிகமாக இருந்து மற்றும் டைஸ்டாலிக் பிபி 90mm Hg மெர்குரியின் அளவிற்க்கும் குறைவாக அல்லது அதிகமாக இருந்தால், உங்களுக்கு இராண்டாம் நிலை முன் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக அர்த்தம். ஆதலால் மருத்துவர் உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள், கட்டுப்பாடான உணவு மாற்றங்கள், உடற்பயிற்சி மற்றும் கண்டிப்பான இரத்த அழுத்த கண்கானிப்புகளை பரிந்துரைக்கலாம்.
 • கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ், எசிஇ இன்ஹிபிட்டர்ஸ், பீட்டா பிளாக்கர்ஸ், மற்றும் டையூரிட்க்ஸ் போன்ற உயர் இரத்த அழுத்த மருந்துகள் ஆண்டிஹய்பர்டென்சிஸிவ் மருந்துகளாக பயன்படுகின்றன. இதில் ஒன்று அல்லது இரண்டின் கலவை அல்லது அதற்கு மேற்ப்பட்ட மருந்துகளின் கலவை உயர் இரத்த அழுத்தத்தை கட்டுபடுத்துகிறது. இரத்த அழுத்த அளவீடுகள், நோயின் தீவிரம், வயது மற்றும் தேவையான மருந்துகள் இவ்வற்றின் அடிப்படையில் மருத்துவர் மருந்துகளை தேர்வு செய்வார்.
 • உயர் இரத்த அழுத்த மருந்துகள் எடுத்துகொள்ளும்போது உப்பு கட்டுப்பாடு, மன அழுத்தம் தவிர்த்தல், மற்றும் தினசரி உடற்பயிற்சி அவசியம். இதனால், மேலும் இதன் மூலம் வரக்கூடிய உயர் இரத்த அழுத்த சிக்கல்களை தவிர்க்கலாம்.

 

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மாற்றங்கள்

 • ஆரோக்கியமான உணவு

காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள் .ஃப்ரைடு ரைஸ், ஃப்ஸ்ட் புட் போன்றவற்றை தவிர்க்கவும்.

 • ஆல்கஹால் உட்கொள்ளுதளை குறைத்தல்

அழுத்தத்தை சீராக வைக்க ஆல்கஹால் மற்றும் புகையிலை உட்கொள்ளுவதை குறைக்கவும், முடிந்தவரை தவிர்ப்பது நல்லது மேலும் இது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.

 • குறைந்த அளவு உப்பு, மற்றும் அடைத்துவைக்கப்பட்ட நெடுங்கால புட்டி வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது, அதில் அதிக அளவு சோடியம் உள்ளது.
 • கட்டுக்கோப்பாக இருக்கவும்

தினசரி உடற்பயிற்சிகளில் நடைபயிற்சி, ஜாகிங், நீச்சல் மற்றும் தீவிர பயிற்சி ஆகியவற்றை சேர்த்துகொள்ளுதல் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். ஆனால் அவை உங்கள் மருத்துவர் அல்லது நிபுணர் வழிகாட்டுதலின் படி இருக்க வேண்டும்.

 • மன அழுத்தத்தை கட்டுப்படுத்தல்

மன அழுத்தமும் உயர் இரத்த அழுத்ததின் முக்கிய காரணி ஆகும். அதை கட்டுப்படுத்த யோகா, தியானம், சுவாச பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்ளுதல் மூலம் மனஅழுத்தம் மற்றும் இரத்த அழுத்தத்தை முறைப்படுத்தி கையாள முடியும்.

 

வாழ்கைமுறை மேலாண்மை:

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக கண்டறியப்பட்டால் வாழ்க்கைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வருவது மிகவும் கட்டாய பயனுள்ளதாக இருக்கும். உங்கள் தினசரி வாழ்க்கையில் செய்யப்படும் மாற்றங்கள் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முக்கியமானது. ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதிப்படுத்தவும் ஆரோக்கியமான வாழ்க்கை நடவடிக்கைகள் உங்கள் மருந்துகளின் அளவைக் குறைக்கவும் வழிவகுக்கும் மற்றும் மேலும் சிக்கல்களை தவிர்த்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் அது உதவலாம். அத்தகைய வாழ்கைமுறை மாற்றங்கள் பின்வருமாறு:

 • உங்கள் எடையை கண்காணிக்கவும்:

உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உடல் எடையை குறைப்பது மிகவும் பயனுள்ள வழியாகும்.எடை அதிகரிப்பு இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வழி வகுக்கும். உடல் பருமன் அதிகப்படியான இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான ஆபத்தான காரணியாகும். உங்கள் உயரத்திற்கும் வயதிருக்கும் பொருத்தமான எடையை நீங்கள் அடைய முயற்சிக்க வேண்டும். சிறந்த உடல் நிறை குறியீட்டெண் 18 மற்றும் 24.5 kg/m2 க்கு இடையில் இருக்க வேண்டும்.

 • தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும்:

பல உடல்நலப் பிரச்சினைகளை தவிர்க்க தினசரி உடற்பயிற்சி செய்வது முக்கியம். வாரம் குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்வது உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். மிக முக்கியமாக, சிறந்த பலனை அடைய உடற்பயிற்சியை வழக்கமாக தொடர்ந்து செய்ய வேண்டும். உங்கள் அன்றாட நடவடிக்கைகளில் நீங்கள் சேர்த்துக்கொள்ளக்கூடிய பிற பயிற்சிகள் நீச்சல், நடனம், ஜாகிங், ஓடுதல் போன்றவை. எந்த ஒரு உடற்பயிற்சியை தொடங்கும் முன்பும் உங்கள் மருத்துவர் அல்லது உடல் உடற்பயிற்சி நிபுணரின் ஆலோசனையை பெறுவது அவசியமாகும்.

 • DASH உணவு முறை பழக்கத்தை பின்பற்றவும்:

ஆரோக்கியமான உணவு பழக்கம், ஆரோக்கியமான உடலுக்கு முக்கியமானது. ஒரு ஆரோக்கியமான உணவு முறையில் முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் ஆகியவை அடங்கும்.மேலும், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் நல்ல கொழுப்பு கொண்ட உணவுகளும் இதில் அடங்கும். இந்த உணவு முறை உணவுப்பழக்கவழக்கத்தின் மூலம் உயர் இறைத்த அழுத்த நிறுத்தம் எனப்படும் Dietary Approaches to Stop Hypertension (DASH)” டேஸ்” எனவும் அழைக்கப்படுகிறது. எப்போதும் நீண்ட காலமாக நீங்கள் பின்பற்றும் உணவு பழக்கத்தை மாற்றுவது கடினம் என்றபொதிலும் ஒரு நல்ல ஆரோக்கியமான உணவு முறையை எப்போதும் தங்களுக்குள் உற்சாகப்படுத்துங்கள். சமையலறையில் ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை வைத்துக் கொள்ளாதீர்கள், அது உங்கள் பசியையும் உங்களின் கட்டுப்பாடான உணவு பழக்கத்தையும் ஆழ்ந்த சோதனைக்கு உள்ளாக்கும்.

 • உப்பு உட்கொள்வதை கட்டுப்படுத்தவும்:

இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டின் கீழ் பராமரிப்பதற்கு உணவில் பயன்படுத்தும் சோடியம் எனப்படும் உப்பு பயன்பாட்டை குறைப்பது மிகவும் முக்கியம். உணவு லேபிள்களில் குறிப்பிடப்பட்டுள்ள உப்பின் அளவீட்டை எப்போதும் படித்து பார்க்கவும். உணவில் உப்பு கட்டுப்பாடு அளவிற்கான ஆலோசனையை உங்கள் மருத்துவரிடம் பெறலாம். ஏற்கனவே தயார் செய்யப்பட்ட உணவின் மீது கூடுதல் உப்பு தெளிப்பதை தவிர்ப்பது நல்லது.

 • ஆல்கஹால் பயன்பாட்டை குறைக்கவும்:

மிதமான அளவு எடுத்துக் கொண்டால் மதுபானம் இதயத்திற்கு நன்மை பயக்கும், மாறாக அதிகமான அளவு எடுத்துக் கொள்வதால் தீங்கே விளையும். ஆல்கஹாலால் ஏற்படும் விளைவுகளை புரிந்துகொள்வதற்கு டாக்டரிடம் பேசலாம் மற்றும் எவ்வளவு அளவு ஆல்கஹாலை உட்கொள்ளலாம் என கேட்டு தெரிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

 • புகைப்பதை நிறுத்துக:

புகைப்பிடித்தல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே, சிகரெட் புகைப்பதை படிப்படியாகக் குறைத்து, பின்னர் புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள். இது உங்களுக்கு இதய நோய் உருவாவாகும் அபாயத்தை தவிர்த்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

 • மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்:

மன அழுத்தம் மிக்க வாழ்க்கை முறையானது இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். எனவே, தியானம் கற்றல் மூலம் மன அழுத்ததை குறைத்தல் உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும்.

 • உங்கள் மருத்துவரைப் பார்க்கவும்:

வழக்கமாக தவறாமல் சென்று மருத்துவரை அணுகுகி உடல்நிலயை சோதனை செய்து உங்கள் இரத்த அழுத்தத்தை கண்காணிப்பதன் மூலம் மருத்துவர் உங்கள் சிகிச்சையின் பலனை கவனிக்க முடியும் மற்றும் தேவையான மாற்று சிகிச்சை செய்ய முடியும்.

 • ஆதரவு கோருங்கள்:

உங்கள் மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ,  குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆதரவு அவசியம்.மேற்கோள்கள்

 1. Roy A, Praveen PA, Amarchand R, et al. Changes in hypertension prevalence, awareness, treatment and control rates over 20 years in National Capital Region of India: results from a repeat cross-sectional study. BMJ Open 2017;7:e015639. doi: 10.1136/bmjopen-2016-015639
 2. Kayce Bell, June Twiggs, Bernie R. Olin. Hypertension: The Silent Killer. Alabama pharmacy Association; 2015.
 3. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; High Blood Pressure
 4. Whelton PK, He J, Appel LJ, Cutler JA, Havas S, Kotchen TA, Roccella EJ, Stout R, Vallbona C, Winston MC, Karimbakas J. Primary prevention of hypertension: clinical and public health advisory from The National High Blood Pressure Education Program.. National High Blood Pressure Education Program Coordinating Committee. JAMA. 2002 Oct 16;288(15):1882-8. PMID: 12377087.
 5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Preventing High Blood Pressure: Healthy Living Habits
 6. Chobanian AV, Bakris GL, Black HR, Cushman WC, Green LA, Izzo JL Jr, Jones DW, Materson BJ, Oparil S, Wright JT Jr, Roccella EJ. Seventh report of the Joint National Committee on Prevention, Detection, Evaluation, and Treatment of High Blood Pressure.. Joint National Committee on Prevention, Detection, Evaluation, and Treatment of High Blood Pressure. National Heart, L
 7. Thasvi Kareem, Sudha M J, Ramani PT, Ashkar Manakkalavalappil, Parvathy G. Prescription pattern of antihypertensive drugs in a tertiary care hospital in Kerala and adherence to JNC-8 guidelines.. Universal Journal of Pharmaceutical Research. 2018; 3(3): 1-3.

உயர் இரத்த அழுத்தம் க்கான மருந்துகள்

Medicines listed below are available for உயர் இரத்த அழுத்தம். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for உயர் இரத்த அழுத்தம்

Number of tests are available for உயர் இரத்த அழுத்தம். We have listed commonly prescribed tests below: