நீரிழிவு நோய் - Diabetes in Tamil

Dr. Anurag Shahi (AIIMS)MBBS,MD

January 21, 2017

October 09, 2021

நீரிழிவு நோய்
நீரிழிவு நோய்

சுருக்கம்

நீரிழிவு(சர்க்கரை நோய்) நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் பொதுவான ஒரு கோளாறு ஆகும், இது எந்த வயதினரையும் எந்த பாலின மக்களையும் பாதிக்கக் கூடும். இது வெல்லமுள்ள நீரிழிவு என மருத்துவ முறைப்படி அழைக்கப்படுகிறது. இந்த நோய் இரத்த ஓட்டத்தில் உயர் இரத்த குளுக்கோஸ்(சர்க்கரை) அளவுகள் இருப்பதால் ஏற்படுகிறது. நீரிழிவை சர்க்கரை நோய் வகை 1 மற்றும் சர்க்கரை நோய் வகை 2 என வகைப்படுத்தலாம். குழந்தைகளுக்கான நீரிழிவு, கர்பகால நீரிழிவு, பலவீனமான குளுக்கோஸ் சகிப்புத்தன்மை போன்றவை நீரிழிவின் பிற பிரிவுகள் ஆகும். மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நீரிழிவு நோயை முழுமையாகக் கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றனர், ஏனெனில் நீரிழிவுக்கு ஒழுங்காக சிகிச்சை அளிக்கப்படாமல் அல்லது பெறப்படாமல் இருப்பது எப்போதும் முக்கிய உடல் நல சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பாக குருட்டுத்தன்மை, இதய நோய்கள், மற்றும் முடக்குவாதம்/ஊனம் ஆகியவற்றை உண்டாக்கலாம். இருப்பினும், வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்தல் , உணவு, மருந்துகள், உடற்பயிற்சிகள் மற்றும் சில சிகிச்சைகள் (தெரபிஎஸ்)மூலம் ஆரம்பகட்ட நிலையிலேயே நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் சரியான முறையில் கையாளவும் உதவுகின்றன.

நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) வகைகள் என்ன - Types of Diabetes in Tamil

பல்வேறு வகையான நீரிழிவு நோய்கள் உள்ளன. ஆனால் இப்போது, நாம் முதலில் வகை 1 நீரிழிவு மற்றும் வகை 2 நீரிழிவு என்ற இரண்டு முக்கிய வகைகளை பற்றி விளக்கமாக பார்ப்போம்.

 • நீரிழிவுக்கு முந்தய நிலை:
  இது ஒரு சுட்டிக்காட்டி வகையாகும், மேலும் அடிக்கடி "எல்லைக்குட்பட்ட நீரிழிவு"(“Borderline diabetes") எனவும் குறிப்பிடப்படுகிறது. இரத்த சர்க்கரை பரிசோதனையில், உணவிற்கு முன் சாதாரண இரத்த சர்க்கரை அளவை விட அதிக இரத்த சர்க்கரை  இருக்கும் போது, உணவிற்கு பின் சாதாரண இரத்த சர்க்கரை அளவை விட இரத்த சர்க்கரை அதிகமாக இருக்கும் போதும் ஒரு மருத்துவரால் நீரிழிவை கண்டுபிடிக்க இயலும். ஆராய்ச்சியில், வகை 2 நீரிழிவு நோயைத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் தடுக்க அல்லது தாமதப்படுத்த முடியும் என ஆய்வு கடுமையாக பரிந்துரைக்கிறது. அவை பின்வருமாரு: நீரிழிவுக்கான உணவு வகைகளை பின்பற்றுதல், கார்போஹைட்ரேட், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரி பொருட்கள் போன்றவற்றை தவிர்த்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, நீச்சல், ஜாகிங், ஜிம்மிங், சைக்லிங் மற்றும் 45 நிமிடங்கள் உற்சாகமான நடைபயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது.
 • வகை 1
  வகை 1 நீரிழிவு இன்சுலின் சார்ந்த நீரிழிவு ஆகும், பெரும்பாலும் 30 வயதிற்குட்பட்ட குழந்தைகளிலும் மக்களிடத்திலும் கண்டறியப்பட்டுள்ளது, இதில் உலகின் நீரிழிவு நோயாளர்களில் 10 சதவிகிதம் பங்களிப்பதாக நம்பப்படுகிறது. சேதமடைந்த கணைய பீட்டா செல்கள் காரணமாக மனித உடல் குறைந்த இன்சுலின் உற்பத்தி செய்யும் போது அல்லது இன்சுலின் உற்பத்தி செய்யாமல் இருக்கும்போது இந்த நிலை ஏற்படுகிறது. இந்த குளுக்கோஸ் சேமித்து வைக்கப்படாததால் மற்றும் பயன்படுத்த முடியாததால் ஆற்றலாக அதை பயன்படுத்த முடியாத காரணமாக இரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் அளவு(சர்க்கரை) அதிகரிக்கிறது. ஏனேனில், குளுக்கோஸ்-ஐ ஆற்றலாக மாற்ற இன்ஸுலின் மிகவும் அவசியமானது.

வகை 1 நீரிழிவு மேலும் இரண்டு துணை பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது:

 • சிறுநீரக நீரிழிவு: டைப் 1 நீரிழிவு, 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் இன்சுலின்-சார்ந்த(வாழ்நாள் முழுவதுமான) சிறுநீரக நீரிழிவையும் உள்ளடக்கியது. பொதுவாக 3சிறு குழந்தைகளுக்கு இன்சுலின் ஊசி மருந்துகள் போடப்படும்போது பெற்றோர்கள், காப்பாளர்கள் மற்றும் செவிலியர்களால் மேற்பார்வையிடப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளான பதின் பருவ சிறுவர்கள் தங்கள் டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இன்சுலின் அளவை தாங்களாகவே சுய-செலுத்திகளின் (self-administer insulin shots) உதவியால் போட்டுக்கொள்ளலாம்.
 • LADA: வகை 1 -ல் மேலும் ஒரு சிறப்பு வகையாக, வகை 2 நீரிழிவு நோயாளிகளை உள்ளடக்கியது ஆனால், அவை கணையத்தின் பீட்டா செல்கலிளிருந்து தவறான அல்லது இன்சுலின் சுரப்பு இல்லாததன் காரணமாக வகை 1-ன் நிலைகளை பிரதிபலிக்கின்றன. இதுவே LADA (Latent Autoimmune Diabetes Adulthood) என அழைக்கப்படுகிறது.
 • வகை 2
  ஆராய்ச்சி கூறுகிறது: வகை 2 மிகவும் பொதுவாக மற்றும் முக்கியமாக இருக்க வேண்டும், இந்த நிலை உடலில் உள்ள இன்சுலின் தேவையான அளவை விட உடல் குறைவாக உற்பத்தி செய்யும் போது, அல்லது உற்பத்தி செய்த இன்சுலின்-யை உடல் ஏற்றுக்கொள்ளாத நிலை இருக்கும் போது(insulin sensitivity) ஏற்படுகிறது. இந்த செயலிழப்பு காரணமாக, குளுக்கோஸின் அதிக அளவு உடலில் அதிக ரத்த சர்க்கரை அளவை உருவாக்குகிறது. வகை 2 நீரிழிவு பொதுவாக 30 வயதுக்கும் மேற்பட்ட மக்களயே பாதிக்கும் ஆனால் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் அது இளம் குழந்தைகளுக்கு  கூட ஏற்படும் என்று குறிப்பிடுகிறது. வகை 2 பெரும்பாலும் மரபணு மூலம் ஏற்படக்கூடியது மற்றும் இது ஒரு தலைமுறையிலிருந்து மற்றொன்றுக்கு பரவலாம். உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் டைப் 2 நீரிழிவு நோய் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பூஜ்ஜியம் அல்லது குறைவான உடல்ரீதியான செயல்பாடு, மன அழுத்தம் காரணமாக சாப்பிடுவது மற்றும் தவறான உணவுப் பழக்கம் ஆகியவற்றால்  நீரிழிவு ஏற்படடுகிறது.
 • கர்ப்பகாலத்தின் நீரிழிவு
  பெயரில் குறிப்பிட்டது போல இந்த நிலை கர்ப்ப காலத்தில் உருவாகிறது, பொதுவாக தாய் கர்ப்பத்தின் பிற்பகுதிகளில் நீரிழிவை அடைந்து உயர் இரத்த குளுக்கோஸ் (சர்க்கரை) அளவுகளைக் கொண்டிருப்பார். குழந்தையின் பிரசவத்திற்கு பின்னர் இந்த நிலை மறைந்து விடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அவ்வாறானாலும், இது சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படலாம் என்று அர்த்தமல்ல. இந்த நிலையை சரியான நேரத்தில் கண்டறிய முடியாவிட்டால், நீரிழிவு நோயால் தாய் மற்றும் குழந்தைக்கு சிக்கல் ஏற்படலாம். உங்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் என நீங்கள் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறீர்கள்
myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Madhurodh Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for diabetes with good results.
Sugar Tablet
₹899  ₹999  10% OFF
BUY NOW

நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) அறிகுறிகள் என்ன - Symptoms of Diabetes in Tamil

நீங்கள் கவனத்துடன் சில உடல் சமிக்ஞைகளை கவனிப்பவராக இருந்தால், நீரிழிவு அறிகுறிகள் விரைவாக அடையாளம் காணப்படலாம். நல்ல செய்தி என்னவென்றால் ஆரம்ப கட்டத்திலேயே இதை கண்டறிதலால், சிகிச்சை அளிக்கவும் அதை திறம்பட கட்டுப்படுத்தவும் முடியும். எனவே, நீங்கள் பின்வரும் அறிகுறிகளை உணர்ந்தால் உடனே உங்கள் மருத்துவருக்குத் தெரிவிக்கவும்:

 • கடுமையான பசி வேட்கை (சாப்பிடும் வெறி).
 • வழக்கத்தை விடவும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றுதல், குறிப்பாக இரவு நேரங்களில்.
 • எப்போதும் தாகமாக உணருதல்.
 • திடீர் எடை இழப்பு.
 • குழப்பம், பார்வை தெளிவின்மை அல்லது இரட்டை பார்வை.
 • சோர்வாக உணருதல், எளிதில் சோர்வடைதல்.
 • மீண்டும் மீண்டும் நோய்த்தொற்றுகள், குறிப்பாக ஈறுகளில், தோல், மற்றும் நீர்ப்பையில்.
 • புண்கள் மற்றும் வெட்டுக்கள் குணமடைய வழக்கமான நேரத்தை விட அதிக நேரம்  ஆகுதல் .
 • மன அழுத்தம் மற்றும் எரிச்சல்.
 • எரிச்சல் உணர்வுகள், குறிப்பாக உங்கள் காலில் மற்றும் உள்ளங்கைகளில்.
 • ஆண்களுக்கு பாலியல் செயலிழப்பு (விறைப்பு பிரச்சினைகள்) ஏற்படலாம்.

மருத்துவரை எப்போது பார்க்கலாம்

உயர் இரத்த குளுக்கோஸ் (சர்க்கரை) அளவுகளுடன் பின்வரும் அறிகுறியை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக ஒரு நீரிழிவு நிபுணர் / உட்சுரப்பியல் நிபுணரை சந்திக்க பரிந்துரைக்கப்படுகிறது:

 • இரத்தப் பரிசோதனை அறிக்கைகள் தொடர்ச்சியான உயர் இரத்த சர்க்கரை அளவைக் காட்டினால்(300 மில்லிகிராம் / டிஎல்).
 • ஒரு கண் அல்லது இரண்டு கண்களில் பார்வை திடீர் இழப்பு அல்லது மங்கலான பார்வை.
 • 5 நாட்களுக்கு மேலாக மேற்பூச்சு மருந்துகள் (க்ரீம் மற்றும் ஆன்டிசெப்டிகி) பயன்பாட்டிலிருந்தும் கூட புண்கள் குணமடையவில்லை, மேலும் மோசமடையக்கூடாது.
 • உங்கள் கர்ப்ப காலத்தில் அதிக  இரத்த சர்க்கரை அளவு.
 • குறிப்பாக கால் மற்றும் பாத அடி பகுதியில் உணர்வு இழப்பு.
 • திடீரென  கைகளில், தாடைகள், மார்பு, மற்றும் கணுக்கால் வலி உணர்வு மற்றும் வீக்கம்.
 • (பிகேமென்டேஷன்) தோல் நிறமிழத்தல் உடன் கடுமையான தோல் நோய்த்தாக்கங்கள்.

நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) சிகிச்சை - Treatment of Diabetes in Tamil

நீரிழிவு ஒரு நீண்ட கால நிலையில் இருப்பதால், நீரிழிவு சிகிச்சை பெரும்பாலும் சிரமமானதாகவும் சவாலாகவும் இருக்குமென தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.ஆனால் மாறாக, உண்மை என்னவென்றால், அதை கட்டுபடுத்துவதற்கான சரியான வழிகளை பின்பற்றுவதன் மூலம் இந்த நிலைமையை நாம் சமாளிக்க முடியும்.

 • சிகிச்சையில் மாறுதல்
  அனைவருக்கும் ஒரே சிகிச்சை இருக்க முடியாது. நபருக்கு நபர் நீரிழிவு வகையை பொறுத்து சிகிச்சை வேறுபடுகிறது . உதாரணமாக, வகை 1, வகை 2.
 • உடனடியாக சிகிச்சை பெறவும்
  நீரிழிவு ஒரு நாள்பட்ட முற்போக்கான நோயாக இருப்பதால், மருத்துவ சிகிச்சை முடிந்தவரை விரைவில் தொடங்க வேண்டும். இந்த நோய்க்கு உடனே மருந்துகள் உட்கொள்ளுதலை தொடங்க கூடாது என்று கூறப்படுவது  ஒரு கட்டுக்கதை தான். இதற்கு மாறாக, விரைவில் மருந்துகளை ஆரம்பத்திலேயே எடுத்துக்கொள்வதால் நீரிழிவு தொடர்பான ஆபத்துக்கள் மற்றும் சிக்கல்களை தவிர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்னும் உண்மையை டாக்டர்கள் தெரிவிக்கின்றன.
 • மருத்துவ இணக்கம்
  தினசரி மருந்துகளை சரியான அளவு மற்றும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுதல், நீரிழிவை கட்டுபடுத்துவதில் பெரும் நல்ல மற்றத்தைக் கொண்டுவருவதாகும். சரியான அளவு மற்றும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளாதிருப்பது, நீரிழிவுகளை நிர்வகிப்பதில் முற்றிலும் உதவுவதில்லை மேலும் இரத்தச் சர்க்கரை அளவை அதிகரிக்கிறது அல்லது இரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் வீழ்ச்சியை ஏற்பதுத்துகிறது.
 • உணவு மாற்றம்
  நீரிழிவு முகாமைத்துவத்தில் குறைந்த சர்க்கரை, குறைந்த கர்ப்ஸ் மற்றும் உயர் ஃபைபர் உணவு ஆகியவற்றுடன் சேர்த்து அடிக்கடி சிறிய அளவிலான உணவு உட்கொள்வது (6 உணவுகள்) நீரிழிவு நோயாளிகளுக்கு 'ஆக்ட்சிசனை சுவாசிப்பது' போன்றது.
 • உடல் செயல்பாடு
  நீரிழிவுக்கு முக்கிய காரணம் உடல் செயல்பாடு இல்லாத வாழ்க்கை முறையே என்பதை ஆராய்ச்சிக் குறிப்புகள் வலுவாக சுட்டிக்காட்டுகின்றன. எனினும், நீச்சல், ஜாகிங், சைக்கிள், யோகா மற்றும் ஜிம்மிங் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை பெரிய அளவில் கட்டுப்படுத்தலாம்.

வகை 1 நீரிழிவுக்கான சிகிச்சை

ஒன்றாம் வகை நீரிழிவுக்கான சிகிச்சையில் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவுகளை வெவ்வேறு நேர இடைவெளியில் கண்காணிக்கப்படுக்கிறது (சிறந்த விளக்கப்படம் தயாரிக்கப்படுகிறது). தேவைப்பட்டால்  இன்சுலினை  பல முறை உட்செலுத்தவும் செய்யலாம். மேலும், ஒன்றாம் வகையான நீரிழிவு நோயாளிகள் கட்டுப்பாடான உணவு மற்றும் உடற்பயிற்சிகளில்  தொடர்ந்து இருக்க வேண்டும். டைப் 1 நீரிழிவு பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடத்திலும் (சிறுநீரக நீரிழிவு என அறியப்படுவது) காணப்படுவதால், பெற்றோர்கள், கவனிப்பாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் கவனமாக இருந்து இன்சுலினை எவ்வாறு செலுத்த வேன்டும் என கற்றுக்கொள்வதன் மூலம் குறைவான வடுவையும் மற்றும் நோயாளிக்கு சரியான சிகிச்சையை அளிக்கலாம்.

வகை 2 நீரிழிவுக்கான சிகிச்சை

இராண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள், அவர்களின் உணவு மாற்றங்கள், பயிற்சிகள் மற்றும் மருந்துகள் வழியாக இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். மருத்துவர் பரிந்துரைத்தால் டைப் 2 வகை நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி தேவைப்படலாம். முன்னதாகவே டைப் 2 நீரிழிவு நோயைக் கண்டுபிடித்தால் அவர்களின் உணவு பழக்க  மாற்றங்கள் மற்றும் தீவிரமான உடற்பயிற்சிகள், ஜாகிங், சைக்கிள், நீச்சல் போன்றவற்றை மேற்கொண்டு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை வழக்கமான கால இடைவெளியில் சரிபார்க்கவும்.

நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) என்ன - What is Diabetes in Tamil

நீரிழிவு என்பது, இரத்த ஓட்டத்தில் அதிக அளவு குளுக்கோஸ் (சர்க்கரை) உள்ள சில குறிப்பிட்ட நிலைகளுக்கான பொதுவான ஒரு பெயராகும். இந்தியாவில் மட்டும் 73 மில்லியனுக்கும் மேற்பட்ட நோயாளிகளுடன் நீரிழிவு மேலும் வேகமாக பரவி வருகிறது. நீண்ட கால வியாதியான நீரிழிவுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாமல் விட்டால் பல நாள் பட்ட உடல் தொந்தரவுகளுக்கு வழிவகுக்கும். நீரிழிவு, முந்தைய காலத்தில் நம்பப்பட்டது போல, வளரும் பருவம் காரணமாக தூண்டப்படும் ஒரு நிலை அல்ல. உண்மையில், நீரிழிவு வயது மற்றும் பாலியல் வரம்பில்லாமல் யாரையும் பாதிக்கும். இருப்பினும், சில மருத்துவ ஆய்வுகள், வேறு எந்த வயதினரை விட நீரிழிவு நோய் ஆபத்திற்க்கு 40 வயதிற்கும் அதிகமான மக்கள் ஆளாகின்றன என்பதைக் குறிப்பிடுகின்றன.மேற்கோள்கள்

 1. National Kidney foundation [Internet]. New York: National Kidney Foundation; Diabetes - A Major Risk Factor for Kidney Disease
 2. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Diabetes, Gum Disease, & Other Dental Problems
 3. National Health Service [internet]. UK; What is type 2 diabetes?
 4. Diabetes.co.uk [internet] Diabetes Digital Media Ltd; Causes of Diabetes.
 5. Diabetes.co.uk [internet] Diabetes Digital Media Ltd; Juvenile Diabetes.
 6. National Health Service [Internet]. UK; Overview - Gestational diabetes

நீரிழிவு நோய் டாக்டர்கள்

Dr. Narayanan N K Dr. Narayanan N K Endocrinology
16 Years of Experience
Dr. Tanmay Bharani Dr. Tanmay Bharani Endocrinology
15 Years of Experience
Dr. Sunil Kumar Mishra Dr. Sunil Kumar Mishra Endocrinology
23 Years of Experience
Dr. Parjeet Kaur Dr. Parjeet Kaur Endocrinology
19 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

நீரிழிவு நோய் க்கான மருந்துகள்

Medicines listed below are available for நீரிழிவு நோய். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for நீரிழிவு நோய்

Number of tests are available for நீரிழிவு நோய். We have listed commonly prescribed tests below: