போதை மருந்துப் பொருட்களை தவறான முறையில் பயன்படுத்துவது - Drug Abuse in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 24, 2019

July 31, 2020

போதை மருந்துப் பொருட்களை தவறான முறையில் பயன்படுத்துவது
போதை மருந்துப் பொருட்களை தவறான முறையில் பயன்படுத்துவது

போதை மருந்துப் பொருட்களை தவறான முறையில் பயன்படுத்துவது என்றால் என்ன?

போதை மருந்துப் பொருட்களை தவறான முறையில் பயன்படுத்துவது என்பது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஒரு மருந்தை சார்ந்திருக்கும் நிலையாகும், இது ஒரு நபரை குறிப்பிட்ட ஒரு மருந்தை அடிக்கடி பயன்படுத்துவதற்கு கட்டாயப்படுத்தும். போதை மருந்துப் பொருட்களை தவறான முறையில் பயன்படுத்துவது என்பதுதான் உலகெங்குமுள்ள வயது வந்தவர் மற்றும் பெரியவர்களால் எதிர்கொள்ளப்படும் ஒரு பேரழிவுப் பிரச்சனையாகும். அனைத்து போதை மருந்துகளும் மூளைக்கு   அதிக கிளர்ச்சியூட்டி நரம்பியக்கடத்திகளை உருவாக்குகிறது, இதனால் ஏற்படும் ஒரு நன்னிலை உணர்வு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதால் அந்த நபர் மீண்டும் மீண்டும் அதே மருந்தை எடுத்துகொள்ளத் தூண்டப்படுகிறார்.

இதன் முக்கிய அறிகுறிகள் என்ன?

போதை மருந்துப் பொருட்களை தவறான முறையில் பயன்படுத்துவது என்பது இந்தியாவில் ஒரு முக்கிய பிரச்சனையாகும் மற்றும் இது சமூகப்பொருளாதார வேறுபாடின்றி அனைத்து மக்களையும் பாதிக்கிறது. பெரும்பாலான நேரங்களில் இளைஞர்கள் சிறிதும் உணராமலேயே குறிப்பிட்ட பரிந்துரைக்கப்பட்ட அல்லது பரிந்துரைக்கப்படாத மருந்துகள் அல்லது சட்டவிரோத பொருட்களினால் கவரப்படுகிறார்கள்.போதை மருந்துப் பொருட்களை தவறான முறையில் பயன்படுத்துவதின் அறிகுறிகள் உடல்ரீதியானவை, நடத்தை ரீதியானவை மற்றும் உயிரியல் ரீதியானவை என வகைப்படுத்தப்படுகின்றன.

உடல்ரீதியான அறிகுறிகள்:

 • அதிக உறக்கம் அல்லது உறக்கமின்மை.
 • சிவந்த கண்கள்.
 • விரிந்திருக்கும் அல்லது சுருங்கியிருக்கும் கண்ணின் மணிகள்.
 • உடல் எடையில் திடீர் வேறுபாடுகள்.
 • வாந்தி.
 • பசியின்மை.

நடத்தைரீதியான அறிகுறிகள்: போதை மருந்துப்   பொருட்களை தவறான முறையில் பயன்படுத்துவது சில பழக்கங்களையும் நடத்தையையும் மாற்றிவிடும். கீழ்கண்ட அறிகுறிகளை அடையாளம் காண்பதன் மூலம் நிலைமை மேலும் மோசமாகாமல் தவிர்க்கலாம்.

 • சமூக வலைத்தளங்களில் மாற்றம்.
 • மனஅழுத்தம்.
 • முரட்டுத்தனமாக நடந்துகொள்வது.
 • அதிகரிக்கும் எரிச்சல்.
 • எப்போதும் தனிமையை விரும்புவது.
 • குடும்ப மற்றும் சமூக விழாக்களை புறக்கணிப்பது.

உயிரியல் ரீதியான அறிகுறிகள்: போதை மருந்துப்   பொருட்களை தவறான முறையில் பயன்படுத்துவது உங்கள் உறுப்புக்களை மோசமாக பாதிக்கும். அதன் விளைவாக கீழ்க்காணும் சிக்கல்கள் ஏற்படக்கூடும்:

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

போதைப்பொருள் துஷ்பிரயோகம் பற்றிய தேசிய நிறுவனத்தின் ஆய்வின்படி போதை மருந்துப் பொருட்களை தவறான முறையில் பயன்படுத்துவது என்பது வளர்மாற்றம்சார் ஸ்டெராய்டுகள் (அனபோலிக் ஸ்டெராய்டுகள்), மருந்துச்சீட்டு இல்லாமல் கடைகளில் வாங்கப்படும் மருந்துகள், ஹெராயின், மெத்தாம்பெடாமைன் போன்ற இன்னும் பலவற்றையும் உள்ளடக்கியது. போதை மருந்துப் பொருட்களை தவறான முறையில் பயன்படுத்துவதற்க்கான காரணங்கள் உணர்வுரீதியானதாகவோ அல்லது சமூகரீதியானதாகவோ இருக்கலாம். போதை மருந்துப்   பொருட்களை தவறான முறையில் பயன்படுத்துவதற்க்கு வழிவகுக்கும் சில காரணிகளைப் பற்றி பார்ப்போம்:

 • போதை மருந்து முறைகேட்டை ஊக்குவிக்கும் நபர்களுடன் தொடர்பு வைத்திருப்பது.
 • உடன்பிறந்தவரோ அல்லது குடும்ப உறுப்பினரோ ஏற்கனவே போதை மருந்துக்கு அடிமையாக இருப்பது.
 • இளம் வயதிலேயே தவறான பொருட்களுக்கு பழகுவது.
 • தனிமை மற்றும் மனஅழுத்தம்.
 • பெற்றோர்களின் கவனிப்பு இல்லாதது அல்லது கடினமான குடும்ப சூழ்நிலைகள்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

குறிப்பிட்ட பொருட்களுக்கு அடிமையாவது அந்த நபரின் அறிகுறிகளைக் கொண்டே முதன்மையாக அறியப்படுகிறது. ஒரு முழுமையான ஆய்வு கீழ்கண்ட சோதனைகளை உள்ளடக்கி இருக்கும்:

 • மருத்துவரின் வினாப்பட்டியலுக்கு பதிலளிப்பது.
 • ரத்த சோதனைகள்.
 • சிறுநீர் சோதனைகள்.

போதை மருந்துப் பொருட்களை தவறான முறையில் பயன்படுத்துவது என்பது ஒரு முழுமையாக குணப்படுத்தக்கூடிய நிலையாகும்.முறையாக வரையறுக்கப்பட்ட மறுவாழ்வுத் திட்டங்கள் நோயாளிக்கு பெரிதும் உதவும். ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்குதல் மருந்து முறைகேடின் சிகிச்சையின் இரு தூண்களாகும். மருந்தின் சிகிச்சையுடன் சேர்ந்து உளவியல் நிபுணர்களின் ஆலோசனைகள் அற்புதங்களை நிகழ்த்தும். மருந்து முறைகேட்டின் சிகிச்சைக்கு பொதுவாக வழங்கப்படும் சிகிச்சைகள் இவற்றை உள்ளடக்கியதாகும்:

 • ஆண்டிடிப்ரெசென்ட்கள்.
 • ஆண்டிசைக்கோடிக்ஸ்.
 • மதுவுக்கான மாற்று மருந்து.
 • ஓபியாயிட் முறைகேட்டில் ஆண்டிஓபியாயிட்கள்.

தினசரி நடவடிக்கையில் யோகா மற்றும் தியானம் போன்ற குறிப்பிட்ட வாழ்க்கைமுறை மாற்றங்கள் மன அமைதிக்கு உதவுவதோடு நோய் குணமாவதையும் எளிதாக்கும். மருந்து முறைகேடிலிருந்து விடுபடுவதென்பது ஒரு நீளமான செயல்முறை என்றாலும் ஒரு சாதாரணமான, அரோக்கியமான வாழ்விற்கு திரும்புவதென்பது முற்றிலும் சாத்தியமானதே. சிகிச்சை அட்டவணையை முறையாக பின்பற்றி அதனுடன் கண்டிப்பாக ஒத்திசைந்து செல்லுதல் நீங்கள் முழுமையாக குணமாக உதவும். பாதிக்கப்பட்டவர் இந்தப் பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட குடும்பம் மற்றும் நண்பர்களின் நிபந்தனையில்லாத ஆதரவு மிகவும் இன்றியமையாததாகும்.மேற்கோள்கள்

 1. Nessa, A & Latif, Sara & Siddiqui, Naveed & Hussain, MA & Hossain, Md.Abul. Drug abuse and addiction. Mymensingh medical journal : MMJ. 17. 227-35.
 2. Shekarchizadeh H, Khami MR, Mohebbi SZ, Ekhtiari H, Virtanen JI. Oral Health of Drug Abusers: A Review of Health Effects and Care. Iran J Public Health. 2013 Sep;42(9):929-40. PMID: 26060654
 3. National institute of drug abuse. Commonly Abused Drugs Charts. National Institute of health. [internet].
 4. Indian Journal Psychiatry. Substance use and addiction research in India. Indian Psychiatric Society. [internet].
 5. National institute of drug abuse. Understanding Drug Use and Addiction. National Institute of health. [internet].