காசநோய் - Tuberculosis (TB) in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

December 10, 2018

March 06, 2020

காசநோய்
காசநோய்

சுருக்கம்

காசநோய் (டி.பி.) என்பது, மைக்ரோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் மூலமாக ஏற்படும் ஒரு தொற்றக்கூடிய வியாதியாகும். உலகம் முழுவதும், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில், இருக்கக்கூடிய பெரிய உடல்நலப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. உலக மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு நபர்களுக்கு வெளியே தெரியாத காசநோய் (டி.பி.) இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு பரவக்கூடிய நோய், ஒரு நோய்த்தொற்றுள்ள நபரைத் தொடுதல் மூலம் பரவுகிறது. உடலுக்குள் நுழைந்த பிறகு, காசநோய் (டி.பி.) கிருமி நுரையீரலில் சென்று சேர்கிறது. அந்தக் கிருமி நுரையீரலை மோசமாகப் பாதித்து, இருமல், இரத்தம் கலந்த சளி, காய்ச்சல் மற்றும் எடை இழப்புக்குக் காரணமாகிறது. சிலநேரங்களில், அது எலும்புகள், மூளை உறை (மூளையை மூடுபவை), சிறுநீரகங்கள் மற்றும் குடலையும் கூட பதிக்கிறது. பொதுவாக காசநோய் (டி.பி.)க்கு, காச் எதிர்ப்பு மருந்துகள் எனப்படும் மருந்துகளால் சிகிச்சையளிக்கப்படுகிறது, மேலும் சிகிச்சை, நோயின் வகை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து, வழக்கமாக ஆறு மாதங்களிலிருந்து மூன்று வருடங்கள் வரை நீடிக்கிறது. சரியான நேரத்தில் ஒரு நபர் சிகிச்சை பெற்றுக் கொண்டால், சிகிச்சையின் வெற்றி கிட்டத்தட்ட நூறு சதவிகிதம். ஆனால் சிலநேரங்களில், காசநோய் (டி.பி.) திரும்ப வரலாம் அல்லது முற்றிய நிலைகளில் மரணத்திற்கு காரணமாகிறது.

காசநோய் (டி.பி.) என்ன - What is TB in Tamil

காச் நோய்த்தொற்று எனவும் அறியப்படும் காசநோய் (டி.பி), மைக்ரோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் மூலம் ஏற்படக் கூடிய ஒரு பரவக் கூடிய தோற்று நோயாகும். வழக்கமாக இந்த நோய், அழற்சியை (வீக்கம்) ஏற்படுத்தி நுரையீரல்களைப் பாதித்து படிப்படியாக அவற்றை சேதப்படுத்துகிறது. சிலநேரங்களில், காசநோய் (டி.பி) மூளை, தண்டுவடத்திற்கு, அல்லது சிலநேரங்களில் சிறுநீரகங்களுக்குப் பரவுகிறது. நோய்த்தொற்று சம்பந்தமான இறப்புகளுக்கு இது ஒரு முக்கிய காரணமாகவும், உலக அளவிலான அனைத்துக் காரண இறப்பு விகிதப் பட்டியலில் முதல் 10 இடங்களிலும் இருக்கிறது. 

காசநோய் (டி.பி.) அறிகுறிகள் என்ன - Symptoms of TB in Tamil

உலகம் முழுவதும், அதிகமான மக்கள் மைக்ரோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் மூலம் பாதிக்கப்பட்டும், நிறைய பேர் இந்த நுண்ணுயிரியை உடலில் கொண்டும் இருக்கிறார்கள். ஒரு செயலற்ற அல்லது வெளிப்படாத நோய் அரிதாகவே எந்த ஒரு அறிகுறிகளையும் வெளிப்படுத்துகிறது, இருப்பினும், காசநோய் தோல் சோதனையில் (மாண்டோக்ஸ் சோதனை) மட்டும் அது உறுதியான தாக்கத்தைத் காட்டலாம். இந்த வெளிப்படாத காலம் எவ்வளவு தூரம் நீடிக்கும் அல்லது இது ஒரு செயல்படும் நோயாக மாறுமா என்பது கணிக்க இயலாததாக இருக்கிறது.

ஒரு செயல்படும் நோயில், நோயின் தீவிரத்தை முடிவு செய்ய உதவுகிற அறிகுறிகள் காணக் கூடும். வழக்கமாக, நுரையீரலுடன் தொடர்புடையதாக இருக்கிறது, மேலும் காசநோயின் (டி.பி) அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. பல்வேறுபட்ட காசநோய்களின் (டி.பி.) அறிகுறிகள்:

நுரையீரல் காசநோய் (டி.பி)

 •  நாள்பட்ட இருமல் (மூன்று வாரங்களுக்கு மேல் தொடரும் ஒரு இருமல்).
 • இரத்தச்சளி (சளியுடன் கூடிய இரத்தம்).
 • மூச்சு விடுவதில் சிரமம்.
 • காய்ச்சல் (தொடக்கத்தில் குறைந்த அளவு, இறுதியாக அதிகமாக மாறுதல்).
 • இரவுநேர வியர்த்தல்.
 • எடை இழப்பு.
 • மயக்கம்
 • பசியின்மை.

காசநோய் (டி.பி) கிருமி, நிணநீர் முடிச்சுகள், எலும்புகள், மூளை (மூளை உறை), குடல்கள் மற்றும் சிறுநீரகங்களைக் கூட பாதிப்பதாகவும் அறியப்படுகிறது; இந்த நோய் நுரையீரல்களைத் தவிர்த்து மற்ற உறுப்புக்களைப் பாதிக்கும் போது நுரையீரலுக்கும் மிகையான காசநோய் (டி.பி) என அறியப்படுகிறது. நுரையீரலுக்கும் மிகையான காசநோயின் (டி.பி) அறிகுறிகளுள் அடங்கியவை:

காசநோய் (டி.பி.) சிகிச்சை - Treatment of TB in Tamil

காசநோய் (டி.பி) மிகவும் ஆராயப்பட்ட ஒரு நோய்  மற்றும் சிகிச்சைக்கு அதிக அளவிலான மருந்துகள் இருக்கின்றன. இந்த மருந்துகள், நுண்ணுயிர்கொல்லி (நுண்ணுயிர்களைக் கொல்லும் மருந்துகள்), மற்றும் நுண்ணுயிர்த்தடுப்பு மருந்துகள் (நமது நோய் எதிர்ப்பு சக்தி அவற்றைக் கொல்வதற்காக, நுண்ணுயிர்களின் வளர்ச்சியைத் தடுப்பது) என வகைப்படுத்தப்படுகின்றன. நோய்த்தொற்றின் வகை மற்றும் நோய்த்தொற்றின் தீவிரத்தைப் பொறுத்து மருந்தைத் தேர்ந்தெடுத்தல், அளவு, மற்றும் சிகிச்சையின் கால அளவு ஆகியவை தீர்மானிக்கப்படுகின்றன.

 • வெளிப்படாத நோய்த்தொற்று
  வழக்கமாக இதற்கு, ஆறுமாதங்களுக்கு எடுத்துக் கொள்ளப்படும் ஒரே ஒரு மருந்து மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.
 • செயல்படும் நுரையீரல் நோய்த்தொற்று
  வழக்கமாக, நுரையீரல் காசநோய்க்கு ஒரு கூட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது, மேலும் சிகிச்சை ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்கு நடைபெறுகிறது.
 • நுரையீரலுக்கும் மிகையான நோய்த்தொற்று 
  இது ஒப்பீட்டளவில் நோயின் தீவிரமான ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது, இதில் முதல் 6-9 மாதங்களுக்கு பல்வேறு கூட்டு மருந்துகள்  பயன்படுத்தப்பட்டு, அடுத்த 3 மாதங்களுக்கு ஒரே ஒரு மருந்து குறைந்தஅளவு கொடுக்கப்படுகிறது.
 • மருந்து-எதிர்ப்பு நோய்த்தொற்று
  மருந்து-எதிர்ப்பு நோய்த்தொற்றுவில், அந்த நுண்ணுயிர், மருந்துகளின் விளைவுகளை எதிர்த்து செயலாற்ற, குறிப்பிட்ட வழிமுறைகளை உருவாக்கி, அவற்றை எதிர்ப்பதாக மாறுகிறது. இதனால் முதலில், அந்த நுண்ணுயிரைக் கொல்ல பயன்படுத்தப்படும் சிகிச்சையாக, எந்த மருந்துகளைப் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிய உணர்திறன் சோதனை நடத்தப்படுகிறது. அந்த மருந்து, வேறு மருந்துகளோடு சேர்த்து கூட்டு சிகிச்சையாக அளிக்கப்படுகின்றன. எதிர்ப்பாற்றலை, அதாவது பல்வேறு-மருந்து எதிர்ப்பு (எம்.டி.ஆர்-காசநோய்(டி.பி) அல்லது தீவிர மருந்து எதிர்ப்பு (எக்ஸ்.டி.ஆர் காசநோய்(டி.பி)) பொறுத்து, சிகிச்சையும், 18 மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையுள்ள கால அளவில், சிகிச்சைக்கான கால அளவும் தீர்மானிக்கப்படுகின்றன       .

 பொதுவாக காசநோய்க்கு (டி.பி) சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் அடங்கியவை:

 • ரிஃபாம்பின்
 • ஐசோனியாஜிட்
 • எதம்புடோல்
 • பைராஜினாமைட்

ஒரு மருந்து-எதிர்ப்பு காசநோயில் (டி.பி), ஃப்ளுரோகியூனோலோனெஸ் மற்றும் அமிக்காசின், கனமைசின் அல்லது செப்ரோமைசின் போன்ற ஊசி மூலம் செலுத்தக் கூடிய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. வாய்வழி மருந்துகளோடு சேர்க்கையாக இந்த மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

காசநோய் (டி.பி) க்கான சிகிச்சை நீண்ட காலத்திற்கு நடைபெறுவதாலும், பயன்படுத்தப்படும் மருந்துகள் ஒப்பீட்டளவில் அதிக வீரியம் மிக்க மருந்துகளாக இருப்பதாலும்; இந்த மருந்துகள் கடுமையான பக்க விளைவுகளைக் கொண்டவை என அறியப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, கல்லீரலுக்கு நச்சுத்தன்மை கொடுக்க கூடியவை. உங்களுக்குப் பின்வரும் அறிகுறிகளில் ஏதேனும் தோன்றினால், உங்கள் மருத்துவரிடம் உடனடியாக அதனைக் கூற வேண்டியது மிக முக்கியம்:

 • தொடர்ந்த குமட்டல் மற்றும் வாந்தி.
 • தோல் மஞ்சள் நிறமடைதல் (மஞ்சள் காமாலை).
 • பசியின்மை.
 • தொடர்ந்த காய்ச்சல்.

வாழ்க்கைமுறை மேலாண்மை

காசநோய் (டி.பி)க்கான சிகிச்சை சிக்கலானதாகவும் அதே போல் நீடித்த காலத்திற்கும் இருப்பதால் ஒரு நபரின் சாதாரண வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து வெளியே வர சிறந்த வழி, உங்கள் மருத்துவருடன் தொடர்ந்த சிகிச்சை மற்றும் முறையாகப் பின்பற்றப்படும் பரிசோதனைகள் ஆகும். சிலநேரங்களில், விரக்தி, கவலை, மன இறுக்கம், மன அழுத்தம் அல்லது மறுதலிப்பு போன்ற உளவியல் குறைபாடுகள் தோன்ற சாத்தியங்கள் இருப்பதால், ஒருவருக்கு ஒரு உளவியல் நிபுணரின் உதவி தேவைப்படலாம். காசநோயைக் (டி.பி) கையாள்வதில், சரியான ஊட்டச்சத்து மற்றும் நேர்மறையான சமாளிக்கும் உத்திகள் மிகவும் முக்கியமானவையாகும்.

இவற்றைத் தவிர, குறிப்பிட்ட மற்ற வாழ்க்கைமுறை மாற்றங்களுள் அடங்கியவை:

 • தனிமைப்படுத்துதல்
  நோயின் தீவிரமான நிலையில், மற்றவர்களுக்கு நோய்த்தொற்று பரவக்கூடும் என்பதால், வீட்டிலேயே இருப்பது நல்லது. வீட்டிலும் கூட, இருமும் போது அல்லது தும்மும் போது வாயை மூடிக் கொள்வது, சளியை ஒரு தூக்கி எறியக் கூடிய பை அல்லது துணியில் சேகரித்து, அதற்கான இடத்தில் போடுவது போன்ற இருமும் நாகரீகத்தைப் பின்பற்ற்றுதல் வேண்டும். சிகிச்சைக்குப் பின் சில வாரங்களுக்குப் பிறகு, ஒருமுறை இனி உங்களுக்கு நோய்த்தொற்று இல்லையென்றதும், நீங்கள் உங்கள் சாதாரண நடவடிக்கைகளுக்குத் திரும்பலாம்.
 • சுய சுகாதாரம் 
  சுய சுகாதாரம், இந்த நோய் பரவுவதைத் தடுப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில், அறையைக் காற்றோட்டமாக வைத்தல், மூக்கையும் வாயையும் மூடிக் கொள்ள முகமூடிகளைப் பயன்படுத்துதல்,மற்றவர்கள் மத்தியிலுள்ள சொந்தப் பொருட்களைத் தவறாமல் சுத்தப்படுத்தி வைத்தல் ஆகியவை  அடங்கும்.
 • முறையான சிகிச்சை 
  போதுமான அளவு ஓய்வெடுத்தல் மற்றும் மருத்துவ அட்டவணையைப் பின்பற்றுதல் ஆகியன முக்கியக் காரணிகள் ஆகும். ஒருவேளை, நீங்கள் மருந்து எடுத்துக் கொள்வதை இடையிலேயே நிறுத்தினால் அல்லது மருந்துகளின் அளவை மாற்றினால், சிகிச்சையளிக்க கடினமானதும், நீண்ட கால சிகிச்சை தேவைப்படக்கூடியதுமான, மருந்து எதிர்ப்பு பிரச்சினை உருவாக வாய்ப்புகள் உள்ளன. இந்த மருந்துகளில் பெரும்பான்மையானவை, கல்லீரலுக்கு நச்சுத்தன்மை ஏற்படுத்துபவை என்பதால், அளவுக்கு அதிகமான மருந்து பயன்பாடும் கூட பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது.
 • தொடர் கண்காணிப்பு மற்றும் இரத்த கூறுகளை மதிப்பிடுதல் 
  மருந்துகளைத் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதைத் தவிர, தொடர்ச்சியான பரிசோதனைகளுக்கு, மற்றும் இந்த மருந்துகள் கல்லீரலுக்குத் தீங்கான சில பாதிப்புகளைக் கொண்டவை  என்பதால், முழு இரத்த எண்ணிக்கை (சி.பி.சி), கெரடினைன் மற்றும் கல்லீரல் செயல்பாட்டு சோதனை (எல்.எஃப்.டி) போன்ற இரத்த சோதனைகள் மதிப்பிடப்பட்டு, செயல்படுத்தப்படுவதற்கு உங்கள் மருத்துவரிடம் செல்லுதல் முக்கியமானதாகும்.

ஊட்டச்சத்து நிலை 
ஒரு நல்ல ஊட்டச்சத்து நிலை அல்லது நேர்மறை நைட்ரஜன் சமநிலை என்பது தொடர்ந்து பராமரிக்கவும், நோயிலிருந்து மீள்வதைத் துரிதப்படுத்தவும், குணமாகும் காலத்தைக் குறைக்கவும் அவசியம். புரதங்களும் கார்போஹைட்ரேட்டுகளும் நிறைந்த ஒரு நல்ல உணவுப்பழக்கம், நோய்த்தொற்றின் பொழுது ஏற்பட்ட எடை இழப்பை சரி செய்வதற்கு மற்றும்ஆரோக்கியமான உடல் எடை அதிகரிப்புக்கான அடித்தளத்தை அமைக்கிறது.மேற்கோள்கள்

 1. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Tuberculosis (TB)
 2. Ian A Campbell, Oumou Bah-Sow. Pulmonary tuberculosis: diagnosis and treatment. BMJ. 2006 May 20; 332(7551): 1194–1197. PMID: 16709993
 3. Shourya Hegde, K B Rithesh, Kusai Baroudi, Dilshad Umar. Tuberculous Lymphadenitis: Early Diagnosis and Intervention. J Int Oral Health. 2014 Nov-Dec; 6(6): 96–98. PMID: 25628495
 4. Uma Debi, Vasudevan Ravisankar, Kaushal Kishor Prasad, Saroj Kant Sinha, Arun Kumar Sharma. Abdominal tuberculosis of the gastrointestinal tract: Revisited. World J Gastroenterol. 2014 Oct 28; 20(40): 14831–14840. PMID: 25356043
 5. Ravindra Kumar Garg, Dilip Singh Somvanshi. Spinal tuberculosis: A review. J Spinal Cord Med. 2011 Sep; 34(5): 440–454. PMID: 22118251
 6. Elizabeth De Francesco Daher, Geraldo Bezerra da Silva Junior, Elvino José Guardão Barros. Renal Tuberculosis in the Modern Era. Am J Trop Med Hyg. 2013 Jan 9; 88(1): 54–64. PMID: 23303798
 7. Sayantan Ray, Arunansu Talukdar, Supratip Kundu, Dibbendhu Khanra, Nikhil Sonthalia. Diagnosis and management of miliary tuberculosis: current state and future perspectives. Ther Clin Risk Manag. 2013; 9: 9–26. PMID: 23326198
 8. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Tuberculosis (TB) Disease: Symptoms and Risk Factors
 9. National Health Service [internet]. UK; Tuberculosis (TB)
 10. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Tuberculosis (TB)
 11. Vijayashree Yellappa, Pierre Lefèvre, Tullia Battaglioli, Devadasan Narayanan, Patrick Van der Stuyft. Coping with tuberculosis and directly observed treatment: a qualitative study among patients from South India. BMC Health Serv Res. 2016; 16: 283. PMID: 27430557
 12. National Jewish Health [Internet]; Coping With Mycobacterial Disease
 13. Shah M, Reed C. Complications of tuberculosis.. Curr Opin Infect Dis. 2014 Oct;27(5):403-10. PMID: 25028786

காசநோய் டாக்டர்கள்

Dr Rahul Gam Dr Rahul Gam Infectious Disease
8 वर्षों का अनुभव
Dr. Arun R Dr. Arun R Infectious Disease
5 वर्षों का अनुभव
Dr. Neha Gupta Dr. Neha Gupta Infectious Disease
16 वर्षों का अनुभव
Dr. Lalit Shishara Dr. Lalit Shishara Infectious Disease
8 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

காசநோய் க்கான மருந்துகள்

காசநோய் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

translation missing: ta.lab_test.sub_disease_title

translation missing: ta.lab_test.test_name_description_on_disease_page