கண் அழுத்த நோய் (கிளாக்கோமா) - Glaucoma in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

December 28, 2018

October 28, 2020

கண் அழுத்த நோய்
கண் அழுத்த நோய்

கண் நீர் அழுத்த நோய் (கிளாக்கோமா) என்றால் என்ன?

கண் அழுத்த நோயின் போது கண்ணில் அழுத்தம் அதிகரிப்பதனால் பார்வை சார்ந்த நரம்பு பாதிக்கப்படுகிறது. கண்ணின் முன் பகுதியில் இந்த கூடுதல் திரவம் அழுத்தத்தை அதிகரிப்பதை கண் அழுத்த நோய் என்று கூறுவார்கள். இது இரண்டு வகை ஆனது:

 • திறந்த கோணம் கண் நீர் அழுத்த நோய்: இது மிகவும் பொதுவான கண் அழுத்த நோய் வகை, இதை பரந்த கோணம் கண் அழுத்த நோய் என்றும் அழைப்பார்கள்.
 • மூடிய கோணம் கண் நீர் அழுத்த நோய்: இது பொதுவாக வரும் வகை அல்ல, மற்றும் இதை கூர்மையான அல்லது நீண்ட காலம் கோணம் மூடல் அல்லது குறுகிய கோணம் கண் அழுத்த நோய் என்று கூறுவார்கள்.இது பொதுவாக கண்புரை மற்றும் தொலைநோக்குப்பார்வை உடன் தொடர்புடையதாகும். 

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இந்த நோயின் தாக்கமும் அறிகுறிகளும் மிகவும் குறைவு என்பதால் இது நீண்ட காலத்திற்கு கவனிக்காமலேயே போய்விடும். பெரும்பாலும் புறப்பார்வை இழப்பு தான் இதனால் ஏற்படுகிற முதல் பிரச்சனை ஆகும்.

கண் அழுத்த நோயின் அறிகுறிகள் இவை:

 • ஒளி உமிழ்வும் பொருள்களை சுற்றி ஒளிவட்டம் தெரிவது.
 • பார்வை இழப்பு.
 • கண் சிவத்தல்.
 • ஒரு கண் மங்கலாக தெரிவது (கைகுழந்தைகளில்).
 • கண்களில் அரிப்பு மற்றும் வலி.
 • குறுகிய அல்லது மங்கலான பார்வை.
 • குமட்டல் மற்றும் வாந்தி.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

கண்ணுக்குள் லென்ஸின் முன்புறத்தில், கருவிழியும் (ஐரிஸ்) கார்னியாவும் இணைகிற இடத்தில் சிலியரி இழைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு திரவம் சுரக்கிறது. இதற்கு ‘முன்கண் திரவம்' என்று பெயர். கண்ணில் இருக்கும் கூடுதலான முன்கண் திரவத்தினால் கண்ணில் ஏற்படும் அழுத்தம் தான் கண் நீர் அழுத்த நோய்க்காண முக்கியமான காரணம். எனினும், கண் அழுத்த நோயின் அபாயம் மற்றும் அது வருவதற்கு வெவேறு காரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டு உள்ளது:

 • வயது – வயது அதிகரிக்க கண் அழுத்த நோய் வருவதற்கு  அதிக வாய்ப்புகள் உள்ளது.
 • இனம் – ஆப்பிரிக்கா, கரீபியன் மற்றும் ஆசியா கண்டத்தில் வாழும் மக்களுக்கு இந்த கண் நீர் அழுத்த நோய் அதிக ஆபத்து உள்ளது.
 • குடும்ப வரலாறு – பெற்றோருக்கு அல்லது உடன்பிறந்தவருக்கு கண் நீர் அழுத்த நோய் இருந்தால் இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
 • மற்ற மருத்துவ நிலைமைகள் – அதாவது குறுகிய பார்வை, தூர பார்வை அல்லது நீரிழிவு நோய்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

கிளாக்கோமா போன்ற கண் நீர் அழுத்த நோய்க்கு வழக்கமான கண் பரிசோதனையே போதுமானதாகும். கண் அழுத்தத்தை சரிபார்க்க, டோனோமெட்ரி எனப்படும் ஒரு சோதனை நடத்தப்படுகிறது. மேலும் புற பார்வை இழப்பின் அளவை தெரிந்துகொள்ள காட்சி புலம் சோதனை செய்யப்படும்.

சிகிச்சையால் கண் அழுத்தத்தால் ஏற்பட்ட கண் பார்வை இழப்பை திரும்பி பெறுவது என்பது இயலாத ஒரு காரியம், எனினும் இதற்கு அளிக்கப்படும் சிகிச்சை நிலைமை மோசமாவதை தடுக்கிறது. கண் நீர் அழுத்த நோயின் வகையைப் பொறுத்து அதற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மாறுபடும். பொதுவாக கண் நீர் அழுத்த நோய்க்கு தரப்படும் சிகிச்சை முறைகள் கீழே குறிப்பிட்டுள்ளது:

 • ஸ்டீராய்டு கண் சொட்டு மருந்துகள் – கண்ணில் ஏற்படும் அழுத்தத்தை இது குறைக்க உதவுகிறது.
 • லேசர் சிகிச்சை – தடுக்கப்பட்ட பார்வை வடிகால் குழாய்களை திறப்பதற்கு அல்லது கண்ணில் ஏற்படும் முன் கண் திரவ உற்பத்தியை குறைபதற்கு இது அளிக்கப்படுகிறது.
 • அறுவை சிகிச்சை – கண்களின் மூலையில் அமைந்துள்ள குறுகிய கோணத்தை விரிவாக்குவதன் மூலம் கண்களின் திரவ வடிகாலை அதிகப்படுத்துவது ஆகியவை பொதுவாக அளிக்கப்படும்  சிகிச்சை முறைகள் ஆகும்.மேற்கோள்கள்

 1. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Glaucoma.
 2. National Eye Institute. Facts About Glaucoma. U.S. National Institutes of Health [Internet].
 3. American Academy of Ophthalmology. [Internet]. San Francisco, California, United States; What Is Glaucoma?.
 4. National Eye Institute. Glaucoma. U.S. National Institutes of Health [Internet].
 5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Glaucoma.

கண் அழுத்த நோய் (கிளாக்கோமா) டாக்டர்கள்

Dr. Bhavna Harshey Dr. Bhavna Harshey Ophthalmology
20 वर्षों का अनुभव
Dr. Meenakshi Pande Dr. Meenakshi Pande Ophthalmology
22 वर्षों का अनुभव
Dr. Upasna Dr. Upasna Ophthalmology
7 वर्षों का अनुभव
Dr. Akshay Bhatiwal Dr. Akshay Bhatiwal Ophthalmology
1 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

கண் அழுத்த நோய் (கிளாக்கோமா) க்கான மருந்துகள்

கண் அழுத்த நோய் (கிளாக்கோமா) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।