இடியோபடிக் ட்ரோம்போசைட்டோபெனிக் புருபுரா (ஐ.டி.பி.) - Idiopathic Thrombocytopenic Purpura (ITP) in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 24, 2019

March 06, 2020

இடியோபடிக் ட்ரோம்போசைட்டோபெனிக் புருபுரா
இடியோபடிக் ட்ரோம்போசைட்டோபெனிக் புருபுரா

இடியோபடிக் திரோம்போசைட்டோபெனிக் புர்புரா (.டி.பி.) என்றால் என்ன?

இடியோபடிக் திரோம்போசைட்டோபெனிக் புர்புரா (ஐ.டி.பி.) என்பது சரியான காரணம் இல்லாமல் இரத்தத்தில் உள்ள இரத்தத்தட்டுக்களின் (பிளேட்லெட்டுகள்) எண்ணிக்கை குறைந்து போவதாகும். இந்த நோய் இரத்த தட்டுகளின் எண்ணிக்கையை பாதிக்கிறது ஆனால் அவற்றின் செயல்பாடுகளை அல்ல. இந்த ஐ.டி.பி, நம் உடலில் உள்ள தசைகளுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது; எனவே, இது ஒரு தன்னுடல் தாக்கு நோய் ஆகும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இரத்தப்போக்கை நிறுத்த இரத்தத்தட்டுக்கள் தேவைப்படும் என்பதால், இடியோபடிக் திரோம்போசைட்டோபெனிக் புர்புராவின் அறிகுறிகள் அதிகப்படியான இரத்தப்போக்கிற்கு காரணமாகிறது. அதன் அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 • சிறிய இரத்த குழாய்களிலிருந்து ஏற்படும் இரத்தக்கசிவு காரணமாக தோலின் கீழே சிறிய அளவிலான சிவப்பு புள்ளிகள் தோன்றும் (இரத்தப் புள்ளிகள்).
 • எந்தவிதமான காரணங்களும் இன்றி எளிதாக புண்கள் போல் தோலில் ஏற்படுதல்.(புருபுரா).
 • மூக்கிலிருந்து இரத்தம் வடிதல்.
 • ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல்.
 • வாந்தி, மலம் அல்லது சிறுநீரிலிருந்து இரத்தம் வெளியேறுதல்.
 • தலையில் எந்த அதிர்ச்சி ஏற்பட்டாலும் அதனால் இரத்தக்கசிவு ஏற்படும், இதனால் உயிருக்கும் பாதிப்பு உண்டாகும். (மேலும் படிக்க: தலை காயத்திற்கான சிகிச்சை).

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இடியோபடிக் திரோம்போசைட்டோபெனிக் புர்புராவிற்க்கான காரணம் தெரியவில்லை என்றாலும் குறைந்த எண்ணிக்கையிலுள்ள இரத்தத்தட்டுக்கள் ஏற்படுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:

 • முதலாவதாக – இரத்தத்தட்டுகள் ஆன்டிபாடிகளால் அழிவது.
 • இரண்டாவதாக – இரத்தத்தட்டுகளை உருவாக்கும் எலும்பு மஜ்ஜை செல்களை ஆன்டிபாடிகள் அழிப்பது. இரத்தத்தட்டுகளை பாதுகாக்க புரத த்ரோபோபொய்டின் (டிபிஒ) மிக அவசியம். எனினும், குறைவான பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையின் காரணமாக புரத த்ரோபோபொய்டின் அளவு எப்போதும் உயர்வதில்லை.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

மருத்துவரால் முழுஉடல் பரிசோதனை நடத்தப்படும் மற்றும் நோயாளியின் மருத்துவ பின்புலத்தோடு தொடர்புபடுத்தி பரிசோதனை நடைபெறும். தொற்று மற்றும் இரத்தப்போக்கு நேரத்தை மதிப்பிடவும்  நோயாளிகளுக்கு அவர்களின் இரத்த தட்டுகளின்  எண்ணிக்கை மதிப்பிட  முழுமையான இரத்த அணுக்களின் எண்ணிக்கை  பரிசோதனை (சிபிசி), சிறுநீர் பரிசோதனை ஆகியவற்றை  பரிந்துரைக்கலாம். எலும்பு மஜ்ஜையில் உள்ள அசாதாரணங்களை கண்டறிய எலும்பு மஜ்ஜை சோதனை பரிந்துரைக்கப்படுகிறது.

இரத்தத்தில் இரத்தத்தட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே சிகிச்சையின் குறிக்கோள் ஆகும்.

 • இரத்தத்தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எதிர்ப்பு புரதம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க கார்ட்டிகோஸ்டீராய்டுகள் பயன்படுகின்றன.
 • இரத்தத்தட்டுக்களின் அழிவு விகிதத்தை கட்டுப்படுத்த ஸ்பெலெனெக்டோமி செய்யப்படுகிறது.
 • தீவிரமான மருத்துவ நிலையில் இரத்தத்தட்டுக்கள் உடலில் ஏற்றுதல் தேவைப்படுகிறது.
 • நாள்பட்ட இடியோபடிக் திரோம்போசைட்டோபெனிக் புர்புரா (ஐ.டி.பி.)க்கு ரிடக்சன் (ரிட்டுக்ஷிமப்) என அழைக்கப்படும் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.மேற்கோள்கள்

 1. MedlinePlus Medical: US National Library of Medicine; Immune thrombocytopenic purpura (ITP)
 2. L.Kayal, S.Jayachandran, Khushboo Singh. Idiopathic thrombocytopenic purpura. Contemp Clin Dent. 2014 Jul-Sep; 5(3): 410–414. PMID: 25191085
 3. Children’s Hospital of Philadelphia. Idiopathic Thrombocytopenic Purpura (ITP) Causes, Symptoms and Treatment. The Children’s Hospital of Philadelphia, USA. [internet].
 4. Blood. How I treat idiopathic thrombocytopenic purpura (ITP). American Society of Hematology; Washington DC, USA. [internet].
 5. National Heart, Lung, and Blood Institute [Internet]: U.S. Department of Health and Human Services; Immune Thrombocytopenia

இடியோபடிக் ட்ரோம்போசைட்டோபெனிக் புருபுரா (ஐ.டி.பி.) க்கான மருந்துகள்

இடியோபடிக் ட்ரோம்போசைட்டோபெனிக் புருபுரா (ஐ.டி.பி.) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।