ஓரிடஉணர்வுநீக்கி - Local Anesthesia in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 01, 2019

March 06, 2020

ஓரிடஉணர்வுநீக்கி
ஓரிடஉணர்வுநீக்கி

ஓரிடவுணர்ச்சிநீக்கி (குறிப்பிட்ட இடத்தில் கொடுக்கப்படும் மயக்க மருந்து) என்றால் என்ன?

ஓரிடவுணர்ச்சிநீக்கி (குறிப்பிட்ட இடத்தில் கொடுக்கப்படும் மயக்க மருந்து) என்பது உடலில் எந்த ஒரு சிறிய குறிப்பிட்ட பகுதியை மரத்துப்போகச் செய்யும் ஒரு பொதுவான மருத்துவ முறையாகும். இந்த நுட்பச் செயல்முறையானது புற நரம்புத்தூண்டல் கடத்தலை தடைசெய்தல் அல்லது நரம்பு முனையங்களில் உணர்வு தாழ்வு நிலையை தூண்டுதலில் ஈடுபடுகிறது, இது உணர்ச்சி இழப்புக்கு வழிவகுக்கிறது.

ஏன் இது செய்யப்படுகிறது?

பின்வரும் காரணங்களுக்காக ஒரு சிறிய பகுதி அல்லது உங்கள் உடலின் ஒரு பகுதியை உணர்விழக்கச் செய்ய ஓரிடவுணர்ச்சிநீக்கி பயன்படுத்தப்படுகிறது:

  • நீங்கள் விழித்திருந்து, அமைதியடைந்து, அசௌகரியத்தை தாங்கிக் கொள்ளும் திறனைக் கொண்டிருக்கும் போது ஒரு வலியற்ற அறுவை சிகிச்சையை மேற்கொள்ள இது உதவுகிறது.
  • வயிற்றுப் புண் (அல்சர்), புற அதிர்ச்சிப்புண், குழந்தை பிறப்பின் போது ஏற்படும் பிரசவ வலி ஆகியவை காரணமாக ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் வழங்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
  • நரம்புகளை எளிதில் அடைந்திடும் போது, குறிப்பிட்டபகுதி உணர்வு நீக்கிகளின் ஸ்ப்ரே, களிம்புகள் அல்லது ஊசி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

யாருக்கு இது தேவைப்படுகிறது?

சில அறுவை சிகிச்சை நடைமுறைகளுக்கு உட்படும் நோயாளிகளுக்கு ஓரிடவுணர்ச்சிநீக்கி தேவைப்படுகிறது:

  • கடைவாய்ப் பல் அல்லது கடுமையாக சொத்தையான பல் அகற்றுதல் அல்லது ஆழ்ந்த சொத்தை பல் மறுசீரமைப்பு.
  • கண்புரை அறுவை சிகிச்சைகள் அல்லது பிற வகையான கண் அறுவை சிகிச்சைகள்.
  • மச்சம் அல்லது மரு அகற்றுவதில் ஈடுபடும் சிறு அறுவை சிகிச்சைகள்.
  • துளையிடும் ஆய்வு முறைகளான உடல் திசு ஆய்வு மற்றும் இரத்தக்குழாய் வரைவி (ஆஞ்சியோகிராபி) போன்றவற்றின் போது.
  • அறுவை சிகிச்சை செய்யும் போது நோயாளி விழித்திருக்க வேண்டிய அல்லது விழித்திருக்க விரும்பும் மூளை அறுவை சிகிச்சை போன்றவைகளின் போது.
  • பொது மயக்க மருந்தின் கீழ் செய்யப்பட்ட ஒரு பெரிய அறுவை சிகிச்சைக்கு பிந்தைய குணமாகும் காலத்தின் போது.

இது எப்படி நிகழ்த்தப்படுகிறது?

ஓரிடவுணர்ச்சிநீக்கிகளை நிர்வகிப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன:

  • மேற்பூச்சு ஓரிடவுணர்ச்சிநீக்கி:
    இது தோலின் மேற்பகுதியில் மரத்து போக வேண்டிய இடத்தில் தடவப்படும். ஓரிடவுணர்ச்சிநீக்கி  ஜெல், கிரீம், ஸ்ப்ரே அல்லது பேட்ச் வடிவில் பயன்படுத்தப்படுகிறது
  • தோலடி ஓரிடவுணர்ச்சிநீக்கி:
    இதில் நோயாளிக்கு தோல் மற்றும் தோலின் அடிப்பகுதியில் நரம்புகளை உணர்ச்சியற்றுப் போகச் செய்ய ஊசி மூலம் உட்செலுத்தப்படுகிறது.
  • பகுதி உணர்வகற்றும் (மண்டல) மயக்க மருந்து:
    இந்த செயல்முறையானது, அதிக பொதுப்படையான உணர்வு நீக்கி வடிவத்தை வழங்குகிறது மற்றும் பின்வரும் வகைகளைக் கொண்டுள்ளது: 
    • எபிடியூரல் மயக்க மருந்து (தண்டுவட மேல்சவ்வில் இடப்படும் மயக்க ஊசி):  
      ஓரிடவுணர்ச்சிநீக்கி மருந்து முதுகு தண்டு வடத்தை பாதுகாக்கும் திரவம் நிரப்பப்பட்ட பையை சுற்றியுள்ள இடத்திற்குள் உட்செலுத்தப்படுகிறது. இது முக்கியமாக அடிவயிறு மற்றும் காலின் கீழ் பகுதி அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது.
    • ஸ்பைனல் மயக்க மருந்து (இடுப்புத் தண்டுவடம் மூலம் மயக்கமருந்தளித்தல்):
      ஓரிடவுணர்ச்சிநீக்கி மருந்து முதுகெலும்பை சுற்றி உள்ள திரவம் நிரப்பப்பட்ட பையில் உட்செலுத்தப்படுகிறது, இதனால் அந்த பகுதி உணர்ச்சியற்றதாகின்றது.
    • புற நரம்பு முடக்கம்:
      நரம்பு மற்றும் அதன் கிளைகளால் வழங்கப்பட்ட மற்றும் தூண்டப்பட்ட குறிப்பிட்ட பகுதிகள் உணர்விழப்பதற்கு ஓரிடவுணர்ச்சிநீக்கி மருந்து முக்கிய நரம்பு மண்டலத்தில் உட்செலுத்தப்படுகிறது.



மேற்கோள்கள்

  1. American Pregnancy Association. Local Anesthesia. [Internet]
  2. Department of Health. Local anaesthetic. The State of Queensland; [Internet]
  3. American Society of Anesthesiologists. Local Anesthesia. U.K; [Internet]
  4. Radiological Society of North America. Anesthesia Safety. America; [Internet]
  5. National Health Service [Internet]. UK; Local anaesthesia

ஓரிடஉணர்வுநீக்கி க்கான மருந்துகள்

Medicines listed below are available for ஓரிடஉணர்வுநீக்கி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.