மலேரியா - Malaria in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

December 21, 2018

March 06, 2020

மலேரியா
மலேரியா

சுருக்கம்

மலேரியா என்பது கொசுக்களினால் பரவக்கூடிய நோயாகும். இது பிளாஸ்மோடியம் என்ற ஒட்டுண்ணினால் ஏற்படுகிறது. கொசுக்களின் மூலம் இந்த நோய் உருவாகிறது. உலகெங்கிலும் ஏற்படுகின்ற மரணங்களின் முன்னணி காரணங்களில் இதுவும் ஒன்றாகும். பெண் கொசு கடிப்பத்தின் மூலம் ஒட்டுண்ணியானது மனிதர்களுக்கு பரவுகிறது மற்றும் காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற சளிக்காய்ச்சல்கான அறிகுறிகளையும் ஏற்படுத்துகிறது. சரியான நேரத்தில் நோயை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் நோயாளிகளை முழுமையாக குணப்படுத்தலாம். நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சையில் தாமதம் ஏற்படுவதினால், கடுமையான தொற்று ஏற்படலாம், மேலும் தீவிர சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மலேரியா காரணமாக ஏற்படும் இறப்புகளில் பெரும்பாலானவை போதுமான நோய் கண்டறிதல் வசதிகள் மற்றும் முறையான சிகிச்சை பற்றாக்குறை காரணமாக ஏற்படுகின்றன. மலேரியாவை ஏற்படுத்தும் பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகள் 5 வகைகள் ஆகும். மலேரியாவை ஏற்படுத்தும் ஒட்டுண்ணி வகைகளில், பிளாஸ்மோடியம் ஃபால்ஸிபாரமானது ஒவ்வொரு வருடமும் சுமார் 90% மலேரியா மரணங்களுக்கு காரணமாகிறது.

மலேரியா அறிகுறிகள் என்ன - Symptoms of Malaria in Tamil

மலேரியாவின் அறிகுறிகள் இரண்டு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன - சிக்கலற்ற மற்றும் கடுமையானவை ஆகும்.

சிக்கலற்ற மலேரியாவின் அறிகுறிகள்

சிக்கலற்ற மலேரியாவானது அனைத்து பொதுவான அறிகுறிகளையும் கொண்டிருக்கும், ஆனால் இந்த அறிகுறிகளானது கடுமையான தொற்றுநோய்களின் அறிகுறிகள் கிடையாது மற்றும் உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்தாது.

சிக்கலற்ற மலேரியாவானது, சிகிச்சையளிக்கப்படாமல் இருந்தால் பின்பு அது கடுமையான மலேரியாவாக முன்னேற்றமடையும். மிகக் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உடையவராக இருந்தால், அவர்களுக்கு கடுமையான மலேரியா நோய் ஏற்படலாம். மலேரியாவின் அறிகுறிகள் 6 முதல் 10 மணி நேர இடைவெளியில் நீடித்து, மீண்டும் இரண்டாவது நாளும் தொடரும். இதன் அறிகுறிகள் ஒட்டுண்ணியின் வகையைப் பொறுத்து மாறுபடும், இதனால் சில நேரங்களில் கலப்பு அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.

சிக்கலற்ற மலேரியா நோய்க்கான அறிகுறிகளின் முன்னேற்றம், பின்வருமாறு:

கடுமையான மலேரியாவின் அறிகுறிகள்

கடுமையான மலேரியா அறிகுறிகள், உடலின் முக்கிய உறுப்புகளில் சேதத்தை ஏற்படுத்த கூடிய அறிகுறிகளாகும்.

கடுமையான மலேரியாவின் சில அறிகுறிகள்:

 • காய்ச்சல் மற்றும் குளிர்.
 • குறைவான விழிப்புணர்வு மற்றும் உணர்வு நிலை போன்ற சிக்கல்கள்.
 • சாய்ந்து கீழே படுப்பது பாதிப்புக்குள்ளாகும் நிலையாகும் (மார்பு கீழே மற்றும் பின்புறம் மேலே போன்று உறங்கும் நிலை).
 • ஆழ்ந்த சுவாசம் மற்றும் சுவாசத்தில் சிரமம்.
 • இரத்த சோகையின் அறிகுறிகளினால் சோர்வு மற்றும் பலவீனம் போன்று உணரலாம்.
 • மஞ்சள் காமாலைகளின் அறிகுறிகள், உதாரணமாக, கண்கள் மற்றும் நகங்கங்கள் மஞ்சள் நிற மாற்றங்களுடன் சேர்ந்த அதிகப்படியான மஞ்சள் நிற சிறுநீர் வெளியெற்றம்.

கடுமையான மலேரியாவுக்கு, சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிர் இழப்பு கூட ஏற்படலாம்.

மலேரியாவின் அறிகுறிகளும், சதாராண காய்ச்சலின் flu அறிகுறிகளும் ஒரேமானவையாகும் அல்லது வைரஸ் சார்ந்ததாகவும் இருக்கலாம் ஆதலால் மலேரியா நோய்க்கு ஆட்படாதவர்களை கண்டறிவதில் கடினம் ஏற்படலாம்.

மலேரியா சிகிச்சை - Treatment of Malaria in Tamil

மலேரியா எதிர்ப்பு மருந்துகளின் வகைகள், மலேரியா எதிர்ப்பி மற்றும் இரசாயன அமைப்பு ஆகும். அவைகள்:

 • திசு செனிசோனிகைடுகள்
  மருந்தானது கல்லீரலில் உள்ள ஒட்டுண்ணிகளின் செயல்பாடு மற்றும் அதன் பெருக்கத்தை தடுக்கின்றது. பொதுவாக மலேரியாவுக்கு இந்த மருந்துகளால் மட்டுமே சிகிச்சையளிக்கப்பட முடியாது, ஏனென்றால் இதன் அறிகுறிகள் ஒட்டுண்ணிப் பெருமளவில் பெருக்கிய பின்பு தான் தோன்றும் மற்றும் இரத்த சிவப்பணுக்களை அழிக்கவும் தொடங்கிவிடும். அறிகுறிகள் தொடங்கும் முன்பாகவே தொற்றுநோயை கண்டறிவது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதாகும்.
 • திசு செனிசோனிகைடுகளின் மறுபயன்பாடுகள்
  மருந்தானது கல்லீரலில் உள்ள மலேரியாவை தூண்டும் ஒட்டுண்ணியின் மீது செயல்படுகின்றன.
 • இரத்த சிவப்பணுக்களின் செனிசோனிகைடுகள்
  மருந்துகள் இரத்தத்தில் உள்ள ஒட்டுண்ணியின் மீது செயல்படுகின்றன மற்றும் மிக முக்கியமான மலேரியா எதிர்ப்பு மருந்துகளாகும்.
 • கெமீடோஸைடஸ்
  மருந்துகள் இரத்தத்தில் இருக்கும் பாலின முதிர்ச்சியுள்ள ஒட்டுண்ணிகளின் மீது செயல்படுகின்றன மற்றும் பாதிக்கப்பட்ட நபரைக் கடித்த மற்ற கொசுக்களினால் ஏற்படுக்கின்ற நோய்த்தொற்று பரவுதலை தடுக்கவும் உதவுகிறது. இந்த வகைக்குரிய சில மருந்துகள் அனைத்து வகையான மலேரியாவிற்கும் எதிராக செயல்படுகின்றன, மற்ற மருந்துகள் ஒட்டுண்ணிகளின் சில வகைகளுக்கு மட்டுமே வேலை செய்கின்றது.
 • ஸ்போரொன்டொஸைடஸ்
  மருந்துகள் கொசுவில் உருவாகும் கூட்டுப்பருவத்தை தடுக்கின்றன மற்றும் தொற்று பரவுதலையும் தடுக்கின்றது.
 • சேர்க்கை சிகிச்சை
  சிகிச்சையானது ஒரே நேரத்தில் கல்லீரல் மற்றும் இரத்தத்தில் காணப்படும் ஒட்டுண்ணிகளின் மீது செயல்படுக்கின்ற ஒரு பயனுள்ள மலேரியா சிகிச்சையாகும். ஒரே நேரத்தில் பல்வேறு பாகங்களில் உள்ள ஒட்டுண்ணிகளை கொள்ளுவதற்கு, வெவ்வேறு முறைகள் கொண்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மருந்துகள் பயன்படுத்தபடுகிறது. இது போன்ற சிகிச்சை முறையில் சிகிச்சையின் நேரம் மற்றும் ஒட்டுண்ணிகளினால் ஏற்படும் ஆபத்தை குறைக்க உதவுகிறது.

இந்த சேர்க்கை சிகிச்சை முறையானது அதன் தொற்று வகை, நோய்த்தொற்றின் தீவிரம், நோயாளியின் உடல் நிலை தொடர்பான நிலைமைகள் மற்றும் நோய்கள் இது போன்ற பல காரணிகளின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுக்கிறது. பி. ஃபால்ஸிபாரம் நோயால் பாதிக்கப்பட்டவர்களை முற்றிலுமாக பரிசோதனை செய்யப்படுவதுடன், மலேரியா எதிர்ப்பு மருந்துகளின் செயல்பாட்டினை குறைக்கும் வாய்ப்புள்ளதா என ஆய்வு செய்யப்பட வேண்டும். சில மலேரியா மருந்துகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்பதால், கர்ப்பத்திலுள்ள நோயாளிகளுக்கு இந்த கலவை மருந்துகளின் பயன்பாட்டை கண்கானிப்பது அவசியமாகும். கை-கால் வலிப்பு, இதய நோய், சிறுநீரக செயலிழப்பு மற்றும் தோல் நோய் இது போன்ற நோயாளியாக இருந்தால் மருத்துவர் அவர்களின் மருத்துவ நிலைமைகள் மற்றும் மருந்துகளின் வலிமைகளையும் சரிபார்க்க வேண்டும்.

வாழ்க்கை மேலாண்மைகள்

சில தனி நபர் வாழ்க்கைமுறை மாற்றங்களின் வெளிப்பாட்டினால், தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அதுவே நோய் பரவுதலுக்கு முக்கிய காரணியாகும். மலேரியா என்பது கொசுக்கள் மூலம் பரவும் ஒரு ஒட்டுண்ணி ஆகும். எனவே, கொசுக்கள் உருவாகும் சூழ்நிலைகளை குறைந்தபட்சம் அல்லது முற்றிலுமாக குறைக்கவும் மற்றும் அதனால் ஏற்படும் தொற்று ஆபத்துகளை தவிர்க்கலாம். கொசு உற்பத்தியைத் தடுக்க, தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும், தண்ணீர் தேங்கியிருந்தால் அதில் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பது போன்றவற்றைச் செய்யலாம்.கொசுக்கள் உருவாகும் தற்காப்புகளை தவிர, மலேரியா நோய்த்தொற்றுக்களுக்கு வாழ்க்கைமுறை மாற்றங்களானது மிகச் சிறிய பங்குகாக உள்ளது.

மலேரியா என்ன - What is Malaria in Tamil

ஒவ்வொரு ஆண்டும் 800,000 க்கும் மேற்பட்ட இறப்புகளுக்கு காரணமாக மலேரியா உள்ளது. உலக சுகாதார அமைப்பின் (WHO) புள்ளிவிபரங்களின்படி, ஒவ்வொரு 45 விநாடிக்கு ஒரு குழந்தையின் உயிர் மலேரியாவால் இழக்கப்படுக்கிறது.இந்த நோய் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது என கி.மு. 6000 ஆம் ஆண்டளவில் தோன்றிய காய்ச்சலானது, இது போன்ற காய்ச்சல்கள் இருந்தாக அறிக்கைகளில் குறிப்பிடப்படுக்கிறது. இது ஒரு பொதுவான மற்றும் பரவலான நோயாகும், குறிப்பாக இது வெப்பமண்டல பகுதியில் அதிகமாக உள்ளது.

மலேரியா நோயானது ஆப்பிரிக்காவில் தோன்றியதாக நம்பப்படுகிறது, அங்கிருந்து உலகம் முழுவதிலும் பரவியதாக கருத்தப்படுக்கிறது. மனிதகுலத்தை பாதிக்கக் கூடிய மோசமான கொலையாளி நோய்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. மலேரியாவின் அனைத்து இனங்களும் மாபெரும் குரங்குகளிலிருந்து மனிதனுக்கு மாறியிருக்கலாம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. பி. ஃப்ல்ஸிபேரம் என்னும் வகையானது கொரில்லாக்களிடமிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது. மலேரியா காய்ச்சல் ஒவ்வொரு வருடமும் அதன் கொடுரத்தை காட்டி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 மில்லியன் மலேரியா நோயாளிகள் அதாவது 85%ம் சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் பாதிக்கப்படுக்கின்றனர் மற்றும் ஆப்பிரிக்காவில் ஏற்படக்கூடிய 85% மலேரியா நோயாளிகளாலும் பி.ஃபால்சிபாரம் எனப்படும் மலேரியா நோயினால் பாதிக்கப்படுக்கின்றனர்.

மலேரியா என்றால் என்ன?

மலேரியா என்பது உயிர் அச்சுறுத்தல் நோயாகும். ஆபிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்காவின் வெப்ப மண்டல மற்றும் மிதவெப்பமண்டலங்கள் உள்ள பல நாடுகளில் பரவலாக பரவியிருக்கிறது. இது பிளாஸ்மோடியம் எனப்படும் ஒட்டுண்ணிகளின் காரணத்தினால் ஏற்படுகிறது.  மலேரியாவை ஏற்படுத்தும் ஐந்து வகை பிளாஸ்மோடியங்கள், பி.ஃபால்ஸிபாரம், பி. விவாக்ஸ், பி. ஓவல், பி. நெயில்ஸ் மற்றும் பி. மலேரியா ஆகியவையாகும்.பெண் அனாஃபிலிஸ் கொசு கடிப்பத்தின் மூலம் நோய் ஏற்படுத்தும் ஒட்டுண்ணிகள் மனிதர்களுக்கு பரவுகிறது (இது நோய் கடத்தி அல்லது திசையன்). ஒருமுறை ஒட்டுண்ணியானது மனித இரத்த ஓட்டத்தில் நுழைந்துவிட்டால், அது கல்லீரலில் வளர்ந்து பெருக்கி நோய் தொற்றை ஏற்படுத்துகிறது, பின்னர் சிவப்பு அணுக்களையும் அழிக்கத் தொடங்குகிறது.மேற்கோள்கள்

 1. Vicki Symington. Malaria – A Global Challenge. The Society for General Microbiology [Internet]
 2. Alessandro Bartoloni, Lorenzo Zammarchi. Clinical Aspects of Uncomplicated and Severe Malaria. Mediterr J Hematol Infect Dis. 2012; 4(1): e2012026. PMID: 22708041
 3. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Malaria
 4. World Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Malaria .
 5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Malaria Diagnosis (United States)
 6. Alessandro Bartoloni, Lorenzo Zammarchi. Clinical Aspects of Uncomplicated and Severe Malaria. Mediterr J Hematol Infect Dis. 2012; 4(1): e2012026. PMID: 22708041

மலேரியா க்கான மருந்துகள்

Medicines listed below are available for மலேரியா. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.