தசைநார் தேய்வு - Muscular Dystrophy in Tamil

Dr. Ayush PandeyMBBS

April 26, 2019

March 06, 2020

ஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்
தசைநார் தேய்வு
ஆடியோவில் சிறிது தாமதம் ஏற்படலாம்

தசைநார் தேய்வு என்றால் என்ன?

தசைநார் தேய்வு என்பது தொடர்ந்த தசை இழப்பு மற்றும் தசை பலவீனம் போன்ற நோய்களின் ஒரு குழு ஆகும், இது வாழ்க்கைக்கு ஆபத்து விளைவிக்கும் நிலைகளுக்கு வழிவகுக்கும்.

தசைநார் தேய்வில் (எம்.டி) பல்வேறு வகைகள் உள்ளன: 

 • டுச்சென் எம்.டி - சிறுவர்களில் (ஆண் குழந்தைகள்) காணப்படுகிறது.
 • மயோடோனிக் டிஸ்டிராபி - முற்போக்கான தசை பலவீனம் அல்லது சிறிய தசைகளை முதலில் பாதிக்கும் தசை வீணாக்குதல். இது ஆண்கள் மற்றும் பெண்களை சமமாக பாதிக்கிறது.
 • ஃபாசியோஸ்காபுலார்ஹுமெரல் எம்.டி - முகம், தோள்கள், மேல்கை மற்றும் கெண்டைக்கால் பகுதிகளை பாதிக்கிறது.
 • பெக்கர் எம்.டி - பெரும்பாலும் சிறுவர்களை பாதிக்கிறது, ஆனால் டுச்சென் எம்.டி விட குறைந்த கடுமையானது.
 • லிம்ப்-கிர்டில் எம்.டி - தோள் மற்றும் இடுப்பு தசைகள் போன்ற பெரிய தசைகளை பாதிக்கிறது.
 • ஒக்குளோஃபாரிங்கியல் எம்.டி - வாழ்க்கையின் பிற்பகுதியில் தொடங்குகிறது (50 வயது மற்றும் அதற்குமேல்) மற்றும் கண்கள் மற்றும் தொண்டை தசைகளை பாதிக்கிறது.
 • எமிரி-ட்ரிஃபஸ் எம்.டி - இளம் பருவத்தில் தொடங்குகிறது மற்றும் மேல்கை, கழுத்து மற்றும் கால்களில் ஏற்படும் தசை சுருக்கங்களை உள்ளடக்கியது.

இதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

ஆரம்பகால அறிகுறிகள் பின்வருமாறு:

 • அசாதாரண நடைப்பாங்கு.
 • தசைகளில் வலி மற்றும் விறைப்பு.
 • ஓடுவது மற்றும் குதிப்பதில் சிரமம்.
 • உட்கார்ந்து எழுந்திரிப்பதில் சிரமம்.
 • கால்விரல்கள் மீது நடப்பது.
 • கற்றல் மற்றும் பேச்சு குறைபாடுகள்.
 • அடிக்கடி கீழே விழுதல்.

முற்போக்கான அறிகுறிகள் பின்வருமாறு:

 • வரையறுக்கப்பட்ட இயக்கங்கள்.
 • சுவாச பிரச்சனைகள்.
 • முதுகு வளைவு.
 • பலவீனமான இதய தசைகள்.
 • விழுங்குவதில் சிக்கல்கள்.
 • குறைந்த ஆயுட்காலம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

எம்.டி என்பது டிஸ்ட்ரோஃபின் என்று அழைக்கப்படும் தசை புரதத்தை உற்பத்தி செய்யும் மரபணுக்களின் பிறழ்வுகள் காரணமாக ஏற்படும் ஒரு மரபணு கோளாறு ஆகும். தசைநார் தேய்வின் ஒரு குடும்ப வரலாறு, ஒரு நபர் இந்த நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.

இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

நோய் கண்டறிதல்:

 • நிற்பது, பொருட்களைத் தூங்குவதில் சிரமம் அல்லது விளையாட்டுகளை விளையாடும் திறன் போன்ற அறிகுறிகளின் ஆய்வு.
 • குடும்ப வரலாற்றை ஆய்வு செய்தல்.
 • உடல் பரிசோதனை.     
 • தசைகள் சேதமடைந்தால், இரத்தத்தில் வெளிப்படும் கிரியாட்டினின் கைனேஸை ஆய்வு செய்யவும் தசை அணுக்களுக்கு எதிராக செயல்படும் ஆன்டிபாடிக்களை கண்டறியவும் இரத்தப் பரிசோதனை.
 • தசை சுருக்கங்கள் மற்றும் நரம்பு தூண்டுதல்களைக் கண்காணிக்க தசை மற்றும் நரம்புகளில் மின் சோதனை.
 • தசைத் திசுப்பரிசோதனையில் தசைத் திசுவின் மாதிரியை எடுத்து அதில் புரதங்கள் இருக்கிறதா என்பதை நுண்ணோக்கியின் கீழ் ஆய்வு செய்தல்.
 • பாதிக்கப்பட்ட தசைகள் மற்றும் தசை பாதிப்பின் அளவைக் கண்டறிய எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன் ஆய்வுகள்.
 • சுவாசம் மற்றும் இதய அறிகுறிகளை கண்காணிக்க மார்பக எக்ஸ்-கதிர்கள் சோதனை, ஈ.சி.ஜி மற்றும் 2டி எகோகார்டியோகிராம் ஆய்வுகள்.
 • டிஸ்ட்ரோஃபின் மரபணுவில் உள்ள பிறழ்வுகளை சரிபார்க்க மரபணு சோதனை.

சிகிச்சை முறைகள்:

 • தற்போது, ​​தசைநார் தேய்வுக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை.
 • கார்டிகோஸ்டீராய்டுகள் மற்றும் இருதய மருந்துகள் போன்ற மருந்துகள் தசைநார் தேய்வின் முன்னேற்றத்தை குறைத்து அறிகுறிகளை அதிகரிக்கிறது. எடெப்ளிர்சென் என்பது டுச்சென் எம்.டிக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ஒரு புதிய மருந்து.
 • கைகாலுறுப்புகளின் தவிர்க்க முடியாத உள்பக்க அசைவுகளை எதிர்த்துப் போராட பொதுவான உடற்பயிற்சிகள்.
 • ஆக்ஸிஜன் விநியோகத்தை மேம்படுத்த மூச்சு உதவி.
 • நோயாளிகளை எப்பொழுதும் இயங்க வைக்க இயக்க உதவிகள்.
 • தசைகள் மற்றும் தசைநாண்கள் விரிவடையவும் இளக்கமாக்கவும் பிணைப்பிகள் உதவுகின்றன.
 • முதுகு வளைவை சரிசெய்ய அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.மேற்கோள்கள்

 1. National Health Service [Internet]. UK; Muscular dystrophy.
 2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Muscular Dystrophy.
 3. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Muscular Dystrophy.
 4. National Institute of Neurological Disorders and Stroke [internet]. US Department of Health and Human Services; Muscular Dystrophy Information Page.
 5. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Muscular dystrophy.

தசைநார் தேய்வு டாக்டர்கள்

Dr. Hemanth Kumar Dr. Hemanth Kumar Neurology
3 वर्षों का अनुभव
Dr. Deepak Chandra Prakash Dr. Deepak Chandra Prakash Neurology
10 वर्षों का अनुभव
Dr. Virender K Sheorain Dr. Virender K Sheorain Neurology
19 वर्षों का अनुभव
Dr. Vipul Rastogi Dr. Vipul Rastogi Neurology
17 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

தசைநார் தேய்வு க்கான மருந்துகள்

தசைநார் தேய்வு के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

दवा का नाम

कीमत

₹16.8

20% छूट + 5% कैशबैक


₹374.6

20% छूट + 5% कैशबैक


₹839.3

20% छूट + 5% कैशबैक


₹504.0

20% छूट + 5% कैशबैक


₹384.0

20% छूट + 5% कैशबैक


₹1749.0

20% छूट + 5% कैशबैक


₹414.4

20% छूट + 5% कैशबैक


₹516.0

20% छूट + 5% कैशबैक


₹248.4

20% छूट + 5% कैशबैक


Showing 1 to 10 of 85 entries