மைக்கோசிஸ் ஃபன்கோடைட்ஸ் - Mycosis Fungoides in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 26, 2019

March 06, 2020

மைக்கோசிஸ் ஃபன்கோடைட்ஸ்
மைக்கோசிஸ் ஃபன்கோடைட்ஸ்

மைக்கோசிஸ் ஃபன்கோடைட்ஸ் என்றால் என்ன?

மைக்கோசிஸ் ஃபன்கோடைட்ஸ் என்பது வெள்ளை இரத்த அணுக்களில் ஏற்படும் ஒரு வகை இரத்த புற்றுநோய் ஆகும். இது இந்தியாவில் ஹாட்ஜ்கின் அல்லாத லிம்போமாவின் பொதுவான வகைகளில் ஒன்றாகும். மைக்கோசிஸ் ஃபன்கோடைட்ஸ் முக்கியமாக தோலை பாதிக்கிறது மற்றும் புண்களை ஏற்படுத்துகிறது. இது 40 வயதிற்கு மேலானவர்களிடம் பொதுவாக இருப்பதாக கூறப்படுகிறது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். பெண்களை விட ஆண்கள் பொதுவாக பாதிக்கப்படுகிறார்கள் என்று அறிக்கைகள் கூறுகின்றன.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

மிகவும் பொதுவாக காணப்படும் அறிகுறிகள் தோல் புண்கள் ஆகும். தோல் புண்களின் வகைகள் பின்வருமாறு:

 • தோல் மீது சிவப்பு திட்டுகள்.
 • தடித்தல்.
 • உயர்ந்த புடைப்புகள்.
 • உயர்ந்த அல்லது கடினமான திட்டுகள்.

மார்பு, வயிறு, பிட்டம், மேல் தொடைகள் மற்றும் மார்பகப் பகுதி ஆகியவற்றில் காயங்கள் பொதுவாக காணப்படுகின்றன, மேலும் அவை எரிச்சல் மற்றும் வலியுடன் தொடர்புடையவை. இந்த தோல் புண்கள் சிரங்கு அல்லது படை நோய் மற்றும் மீன்செதில் நோய் (சொரியாசிஸ்) போன்ற பிற தோல் கோளாறுகளுக்கு ஒத்ததாக தோன்றுகிறது.

நோயின் தீவிர நிலைகளில், பலவீனம், காய்ச்சல், எடை இழப்பு, குடல் புண்கள், கண் வலி மற்றும் மங்கலான பார்வை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் யாவை?

மைக்கோசிஸ் ஃபன்கோடைட்ஸ் நோயின் சரியான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த நிலையில், டி-செல்கள், வெள்ளை இரத்த அணுக்கள் ஒரு வகை, புற்றுநோய் அணுக்களாக மாறி தோலை பாதிக்கிறது. இந்த நோயில் தோல் சம்பந்தப்பட்டிருந்தாலும், தோல் அணுக்கள் புற்றுநோய் அல்லாத அணுக்கள் ஆகும். பாதிக்கப்பட்டு நபர்களின் சில மரபணுக்களில் அசாதாரணமான மாற்றங்கள் பொதுவாக காணப்படுகிறது.

ஆராய்ச்சியாளர்கள் கூறும் மற்ற காரணங்கள் பின்வருமாறு:

 • தீங்கு விளைவிக்கும் (புற்றுநோய்) பொருட்களுக்கு வெளிப்படுதல்.
 • பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று.

இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?

உங்கள் மருத்துவர் (தோல் மருத்துவர்) உங்கள் தோலை முழுமையாக பரிசோதித்தார் மற்றும் இரத்தத்தில் உள்ள அசாதாரணத்தை அடையாளம் காண இரத்த பரிசோதனைகள் செய்வார். திசு பரிசோதனை, நோயை கண்டறிவதற்காக புண்களிலிருந்து சில அணுக்கள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும் இந்த முறை உங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது. திசு பரிசோதனை முறையில் எடுக்கப்பட்ட அணுக்கள் மைக்கோசிஸ் ஃபன்கோடைட்ஸ் நோயை கண்டறிய பரிசோதனைக்கு அனுப்பப்படும். சில நேரங்களில் உங்கள் மருத்துவர் திசு பரிசோதனை மூலம் பெறப்பட்ட ஆய்வு முடிவுகளை உறுதிப்படுத்த ஒரு புரத பரிசோதனையை பரிந்துரைக்கலாம். பிற சோதனைகளின் முடிவு தெளிவாக இல்லாதபோது, மரபணுக்களில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பதை கண்டறிய மரபணு சோதனை உதவும்.

உங்கள் நோயின் தீவிர நிலையை பொருத்து, உங்கள் மருத்துவர் கார்ட்டிகோஸ்டிராய்டு, புற ஊதா சிகிச்சை, ஒளிப்படவியல் கீமோதெரபி மற்றும் பிற மருந்துகளை பரிந்துரைப்பார்.மேற்கோள்கள்

 1. National Organization for Rare Disorders [Internet]; Mycosis Fungoides.
 2. National Institutes of Health; [Internet]. U.S. National Library of Medicine. Mycosis fungoides.
 3. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Mycosis Fungoides (Including Sézary Syndrome) Treatment (PDQ®)–Patient Version.
 4. National Comprehensive Cancer Network [Internet]: Plymouth Meeting,Pennsylvania; Mycosis Fungoides.
 5. Raychaudhury T. Management Strategies for Mycosis Fungoides in India. Indian J Dermatol. 2017 Mar-Apr;62(2):137-141. PMID: 28400632

மைக்கோசிஸ் ஃபன்கோடைட்ஸ் க்கான மருந்துகள்

Medicines listed below are available for மைக்கோசிஸ் ஃபன்கோடைட்ஸ். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹145.0

₹90.25

Showing 1 to 0 of 2 entries