கண்மணிவிரிப்பி - Mydriasis in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 30, 2019

March 06, 2020

கண்மணிவிரிப்பி
கண்மணிவிரிப்பி

கண்மணிவிரிப்பி என்றால் என்ன?

கண்களில் படும் ஒளிக்கு ஏற்ப, ஒளிக்கான மறிவினாயக, நமது கண்மணிகள் இருட்டில் அதிக ஒளியை அனுமதிப்பதற்கு ஏற்றவாறு விரிந்து அல்லது அகன்றும், வெளிச்சத்தில் சுருங்கவும் செய்கின்றன. கண்மணிகள் 6 மில்லி மீட்டரை விட அதிகமாக, அசாதாரணமாக விரிந்து காணப்படும் நிலையே கண்மணிவிரிப்பி எனப்படுகிறது. இதனால் ஒளியால் தூண்டப்படும் போதும், கண்மனிகள் சுருங்குவதில்லை.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

  • கண்மணிகளின் அளவு வெளிச்திற்கு ஏற்ப மாறாமல் விரிந்த நிலையில் வழக்கத்தை விட பெரிதாகவே இருப்பது இதன் முக்கிய அறிகுறி.
  • மங்கலான பார்வை.
  • கண்களைச் சுற்றியுள்ள பகுதியும், நெற்றியும் சுருங்கியது போல உணர்தல்.
  • தலைவலி.
  • தலைச்சுற்றல்.
  • கண்களில் எரிச்சல்.
  • கண்களை அசைப்பதில் சிரமம்.
  • கண் இமைகள் தொய்வடைதல்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

கண்மணிவிரிப்பி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:

  • பெரும் அதிர்ச்சி.
  • ஹிசுட்டமின் எதிர்ப்பிகள், தசை தளர்த்திகள் போன்ற மருந்துகள்.
  • மருந்துகளை தவறாக பயன்படுத்துதல் மற்றும் அடிமையாகைவிடுதல்.
  • கண்மணி நரம்பிழைகளில் ஏற்படும் காயம்.
  • மூடிய கோண கண் அழுத்த நோய்.
  • ஊமத்தை, தேவதை எக்காளம், பெல்லடோன்னா தாவர வகையைச் சேர்ந்தவைகள் போன்ற செடிகள்.
  • அடிக்கடி தலைவலி/ஒற்றைத் தலைவலி ஏற்படுதல்.
  • மனஅழுத்தம்.
  • ஆக்சிட்டாசின் அளவு அதிகரித்தல்.
  • மண்டையோடு நரம்புகள் பழுதடைதல், மூளை காயங்கள் மற்றும் மூளைக்கு அதிகபடியான அழுத்தம் ஏற்படுதல்
  • தொற்று நோய் அல்லது கண்களில் ஏற்படும் காயம்.
  • நீரிழிவு நோய்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

நோய் கண்டறிதல்:

  • நோயாளியின் உடல் நல போக்கையும், உட்கொண்ட மருந்துகளையும் வைத்து காரணங்களைக் கண்டு கொள்ளுதல்.
  • அடிக்கடி வெளிச்சத்தில் கண்மணிகள் விரிவடைதல் போன்ற அறுகுறிகளை கண்டறிதல்.
  • பார்வைத் திறன் மற்றும் கண் அசைவுகளைப் பரிசோதிப்பதன் மூலம் கண் தசைகளின் செயல்பாடுகளைக் கண்டறிதல்.
  • 1% பிலோகார்பைன் சொட்டு மருந்து வழங்கப்படுகின்றது. இதனை வழங்கிய 45 நிமிடங்களுக்கு பின்னர் கண்மணிகள் விரிவடைகின்றன.

தடுக்கும் முறைகள்:

  • நேரடியாக சூரிய ஒளிக்கு வெளிப்படுதலைத் தவிர்த்தல்.
  • பிரகாசமான சூழல்களில் கருப்புக்கண்ணாடி (சன்கிளாஸ்) அணிதல்.
  • கண்களுக்கு மிக அருகில் வைத்துப் படிப்பதைத் தடுத்தல்.

சிகிச்சைகள்:

  • கண்களின் செயற்பாடுகளை பாதுகாக்கவே சிகிச்சை அளிக்கப்படும். அடிப்படை காரணத்தை கருத்தில் கொண்டு சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது.
  • கண் நரம்புகள் மற்றும் அமைப்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.



மேற்கோள்கள்

  1. Spector RH. The Pupils. In: Walker HK, Hall WD, Hurst JW, editors. Clinical Methods: The History, Physical, and Laboratory Examinations. 3rd edition. Boston: Butterworths; 1990. Chapter 58.
  2. American Academy of Ophthalmology [Internet] California, United States; Pupil Efferent Defects.
  3. Wilhelm H,Wilhelm B,Schiefer U. Mydriasis caused by plant contact. Fortschr Ophthalmol. 1991;88(5):588-91. PMID: 1757054
  4. National Institutes of Health; [Internet]. U.S. National Library of Medicine. Lidocaine Usage for Pupil Dilatation (Mydriasis).
  5. National Institutes of Health; [Internet]. U.S. National Library of Medicine. Optimal Method for Mydriasis in Cataract Surgery.

கண்மணிவிரிப்பி க்கான மருந்துகள்

Medicines listed below are available for கண்மணிவிரிப்பி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.