யோனி ஈஸ்ட் தொற்று - Vaginal Yeast Infection in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

February 06, 2019

March 06, 2020

யோனி ஈஸ்ட் தொற்று
யோனி ஈஸ்ட் தொற்று

சுருக்கம்

யோனி ஈஸ்ட் தொற்று, பெரும்பாலான பெண்களை, அவர்களின் வாழ்நாளில் எப்போதாவது ஒரு நேரமாவது பாதிக்கிற, ஒரு நோய் தொற்று ஆகும். கெட்டியான வெள்ளைப்படுதல் மற்றும் எரிச்சலுடன் கூடிய யோனி, மற்றும் யோனித்துவாரத்தில் எரிச்சல் உணர்வு மற்றும் அரிப்பு ஆகியவை, ஒரு யோனி ஈஸ்ட் தொற்றுள்ள பெண்களிடம் காணப்படுகிறது. யோனி ஈஸ்ட் தொற்று என்பது, யோனியில் ஏற்படுகிற, ஈஸ்ட் எனப்படும் ஒரு வகை பூஞ்சையின் அதீத வளர்ச்சியாகும். இது பூஞ்சைத் தொற்று எனவும் அறியப்படுகிறது. இது ஒரு பால்வினை நோய் தொற்று இல்லை, ஆனால், பாலுறுப்புத் தொடுகை மூலம் வாய் வழியாக, ஒரு பெண்ணால் பூஞ்சையைப் பரப்ப முடியும்.

யோனி ஈஸ்ட் தொற்றுக்கான சிகிச்சை, நோய் தொற்றின் கடுமையின் பரவலைப் பொறுத்து இருக்கிறது. ஒரு சிக்கலான நோய் தொற்று நீண்ட நாள் நீடித்திருப்பதோடு, அதனால் நீண்ட-கால சிகிச்சை தேவைப்படுகிற அதே வேளையில், ஒரு சிக்கலில்லாத நோய் தொற்று மிதமான மற்றும் நடுத்தரமான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். பெண்கள், இந்த வகை நோய் தொற்றுகளுக்கு சுய-சிகிச்சையளிக்க, மருந்துக்கடையில் வாங்கும் மருந்துகளை  விரும்பித் தேர்ந்தெடுக்கிறார்கள். பாலியல் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடுவது, கட்டுப்பாடற்ற நிரிழிவைக் கொண்டிருப்பது மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்துவது ஆகியவை, ஒரு யோனி ஈஸ்ட் தொற்றை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகளில் சில ஆகும். அசௌகரியம், யோனி ஈஸ்ட் தொற்றுகளோடு, இணைந்திருக்கும் அடிக்கடியான பெரிய சிக்கலாகும். பெரும்பாலான பெண்களுக்கு, முறையான சிகிச்சையினால், நோய் தொற்றின் அறிகுறிகள் மறைகின்றன.

யோனி ஈஸ்ட் தொற்று அறிகுறிகள் என்ன - Symptoms of Vaginal Yeast Infection in Tamil

யோனி ஈஸ்ட் தொற்றுக்கள் மிதமானவையாக இருந்தாலும், சில பெண்களுக்கு வீக்கம், யோனி சுவர்களில் வெடிப்புகள் மற்றும் சிவந்து போதல் போன்ற கடுமையான நோய் தொற்றுகளாக வளரக் கூடும். யோனி ஈஸ்ட் தொற்றின் அறிகுறிகள், மற்ற வகை யோனி நோய் தொற்றுகளின் அறிகுறிகள் மாதிரியே இருக்கின்றன. நீங்கள் பூஞ்சைத் தொற்றைக் கொண்டிருக்கிறீர்களா அல்லது வேறு ஏதாவது நோய் தொற்றைக் கொண்டிருக்கிறீர்களா என, உங்கள் மருத்துவரால் அடையாளம் காண முடியும். யோனி பூஞ்சைத் தொற்றின் அறிகுறிகள் பின்வருமாறு:

 • சிறுநீர் கழித்தலின் பொழுது, எரிச்சல் உணர்வு அல்லது வலி. (வலிமிகுந்த சிறுநீர் கழித்தல் சிகிச்சை).
 • யோனி திறப்பு (யோனித் துவாரம்) மற்றும் யோனியின் திசுக்களில் அரிப்பு மற்றும் எரிச்சல்.
 • யோனியில் வேதனை அல்லது வலி.
 • யோனித் துவாரம் வீங்குதல் மற்றும் சிவந்து போதல்.
 • யோனியில் அரிப்பு.
 • யோனியில் இருந்து, பாலாடைக்கட்டி போன்ற ஒரு தோற்றத்தில், வெண்மையான, கெட்டியான, நிறமற்ற திரவ வெளியேற்றம்.
 • யோனியில் நீர் போன்ற திரவ வெளியேற்றம்.

உங்களுக்குப் பின்வரும் அறிகுறிகள் இருந்தால், நீங்கள் ஒரு சிக்கலான யோனி ஈஸ்ட் தொற்றைக் கொண்டிருக்கக் கூடும்:

 • நீங்கள் ஒரு வருடத்தில், நான்கு அல்லது அதற்கு மேல் ஈஸ்ட் நோய் தொற்றைக் கொண்டிருந்தால்  .
 • நீங்கள் கர்ப்பமாக இருந்தால்.
 • உங்களுக்கு கட்டுப்பாடற்ற நீரிழிவு இருந்தால்.
 • நீங்கள், வெடிப்புகள், கிழிதல்கள் அல்லது புண்கள், அல்லது பரவலான சிவந்து போதலுக்கு காரணமான வீக்கம் அல்லது அரிப்பு போன்ற தீவிரமான அறிகுறிகளைக் கொண்டிருந்தால்.
 • சில மருந்துகள் அல்லது எச்.ஐ.வி போன்ற பிரச்சினைகள் காரணமாக, உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமானதாக மாறியிருந்தால்.
 • உங்கள் நோய் தொற்று, கான்டிடா அல்பிகன்ஸ் மூலமாக இல்லாமல், மற்றொரு வகையான கான்டிடா ஸ்பீஸிஸ் காரணமாக ஏற்பட்டிருந்தால்.

யோனி ஈஸ்ட் தொற்று சிகிச்சை - Treatment of Vaginal Yeast Infection in Tamil

யோனி ஈஸ்ட் தொற்றுக்கான சிகிச்சை, அது ஒரு சிக்கலில்லாததா அல்லது சிக்கலான ஈஸ்ட் நோய் தொற்றா என்பதைப் பொறுத்து இருக்கிறது.

உங்களுடைய ஈஸ்ட் தொற்று, திரும்பத் திரும்ப வராமலும், அறிகுறிகள், மிதமானதிலிருந்து நடுத்தரமானவையாகவும் இருந்தால், அது ஒரு சிக்கலில்லாத யோனி ஈஸ்ட் தொற்று. ஒரு சிக்கலில்லாத யோனி ஈஸ்ட் தொற்றுக்கு, பின்வரும் சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகின்றன:

 • ஒற்றை அளவு பூஞ்சை-எதிர்ப்பு மருந்துகள்
  உங்களுக்கு ஒரு, ஒரு-முறை ஒற்றை அளவை வாய்வழி மருந்தாக, ஒரு பூஞ்சை எதிர்ப்பு மருந்தான  ஃபுளுகோனசல் பரிந்துரைக்கப்படலாம். அறிகுறிகள் கடுமையாக இருந்தால், நீங்கள் மூன்று நாட்களுக்கு, இரண்டு அளவைகள் கூட எடுத்துக் கொள்ளலாம்.
 • யோனிக் களிம்புகள் மற்றும் குளிகை மருந்துகள்
  மருந்துக்கடைகளில் வாங்கும் மருந்துகளான, யோனிக் களிம்புகள் மற்றும் குளிகை மருந்துகள், பெரும்பாலான பெண்களுக்கு பயன்மிக்கதாக இருக்கின்றன, மேலும், கர்ப்பத்தின் பொழுது, ஒரு பாதுகாப்பான தேர்வாக இருக்கின்றன. இவற்றைக் கொண்டு அளிக்கப்படும் சிகிச்சைகள், மூன்று முதல் ஏழு நாட்களுக்கு நீடிக்கிறது.
 • குறுகிய கால யோனி சிகிச்சை
  களிம்புகள், க்ரீம்கள், மாத்திரைகள் மற்றும் குளிகை மருந்துகள் போன்ற பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படலாம். ஒரு பூஞ்சை எதிர்ப்பு செயல்பாடு, ஒன்று, மூன்று அல்லது ஏழு நாட்கள் வரை, வழக்கமாக ஈஸ்ட் நோய் தொற்றை நீக்கும் வரை நீடிக்கலாம். பின்வரும் மருந்துகள் சக்திவாய்ந்தவையாகக் காணப்படுகின்றன:
  • புட்டோகோனசோல்
  • குளோட்ரிமஸோல்
  • மிக்னோஸோல்
  • டெர்கோனஸோல்

இந்த மருந்துகள், மருந்துக்கடைகளில் வாங்கக் கூடியதாக அல்லது பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கக் கூடிய மருந்துகளாகக் கிடைக்கின்றன. இந்த மருந்துகளைத் தடவும் போது உறுத்தல் அல்லது லேசான எரிச்சலை நீங்கள் உணரக் கூடும். இந்த களிம்புகள் மற்றும் குளிகை மருந்துகள் எண்ணெய்-சார்ந்தவை, எனவே, டையாஃபாரம்கள் மற்றும் இரப்பர் ஆணுறைகளை பலவீனப்படுத்தக் கூடும் என்பதால், வேறு ஒரு மாற்று கருத்தடை முறை உங்களுக்குத் தேவைப்படலாம்.

சிகிச்சையைப் பின்பற்றிய பிறகும் உங்கள் அறிகுறிகள் சரியாகவில்லை அல்லது சிகிச்சைக்குப் பின் அறிகுறிகள்  இரண்டு மாதங்களுக்குள் திரும்ப வருகின்றன என்றால், தொடர்ந்த பின்பற்றலுக்காக உங்கள் மருத்துவரை சந்திப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். (மேலும் படிக்க - யோனி ஈஸ்ட் தொற்று மருத்துவங்கள்) ஒருவேளை, உங்களுக்கு ஒரு சிக்கலான ஈஸ்ட் நோய் தொற்று இருந்தால், உங்கள் மருத்துவர் பின்வரும் சிகிச்சைகளைப் பரிந்துரைக்கக் கூடும்:

 • பன்மடங்கு அளவை பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள்
  ஒரு யோனி சிகிச்சைக்குப் பதிலாக, இரண்டு முதல் மூன்று அளவைகள் வாய்வழி ஃபுளுகோனசல் பரிந்துரைக்கப்படலாம். இந்த சிகிச்சை கர்ப்பிணி பெண்களுக்குப் ப ரிந்துரைக்கப்பட மாட்டாது.
 • நீண்ட கால யோனி சிகிச்சை
  அசோலஸ் மருந்துகளை 7-14 நாட்கள் அளிக்கப்படும் சிகிச்சை நடைமுறை, ஈஸ்ட் நோய் தொற்றைத் திறம்பட நீக்குகிறது. வழக்கமாக மருந்துகள், யோனி கிரீம்கள், யோனி களிம்புகள், யோனி மாத்திரைகள் அல்லது குளிகை மருந்துகள் வடிவில் இருக்கின்றன.
 • பராமரிப்புத் திட்டம்
  ஒருவேளை உங்களுக்கு அடிக்கடி ஈஸ்ட் நோய் தோற்று ஏற்பட்டால், உங்கள் மருத்துவர், ஈஸ்ட்டின் அதீத வளர்ச்சி மற்றும் எதிர்கால நோய் தொற்றுக்களைத் தடுக்க, ஒரு மருத்துவ ஒழுங்கு நடைமுறையைப் பின்பற்ற அறிவுறுத்தக் கூடும். சிகிச்சையின் மூலம் ஈஸ்ட் நோய் தொற்று நீக்கப்பட்ட உடனே, ஒரு பராமரிப்பு சிகிச்சை ஆரம்பிக்கப்படுகிறது. சிகிச்சையின் மூலம் ஈஸ்ட் நோய் தொற்று நீக்கப்பட்ட உடனே, ஒரு பராமரிப்பு சிகிச்சை ஆரம்பிக்கப்பட முன்பு, ஈஸ்ட் நோய் தொற்றை நீக்க, 14 நாட்கள் வரை நீடிக்கக் கூடிய ஒரு நீளமான சிகிச்சை தேவைப்படலாம். பரராமரிப்பு நடவடிக்கையில் அடங்கியவை.
 • ஃபுளுகோனசல்
  இந்த மாத்திரைகள், ஆறு மாதங்களுக்கு, வாரத்திற்கு ஒருமுறை பரிந்துரைக்கப்படுகின்றன.
 • குளோட்ரிமஸோல்
  சில மருத்துவர்கள், வாய்வழி மருந்துகளுக்குப் பதிலாக, வாரத்திற்கு ஒரு முறை, ஒரு குளிகையாக, குளோட்ரிமஸோலைப் பரிந்துரைக்கக் கூடும்.

ஒருவேளை நீங்கள் திரும்பத் திரும்ப வரும் ஈஸ்ட் நோய் தொற்றைக் கொண்டிருந்தால், உங்கள் மருத்துவர், உங்கள் உடலுறவுத் துணைக்கான சிகிச்சையை, கண்டிப்பாக அறிவுறுத்துவார். ஒரு பிறப்புறுப்பு ஈஸ்ட் நோய் தொற்றினால் அல்லது உடல் உறவின் பொழுது ஆணுறையைப் பயன்படுத்தும் பொழுது, ஏதேனும் அறிகுறிகள் தோன்றினால், அந்தத் துணைக்கு, ஒரு ஈஸ்ட் நோய் தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.

வாழ்க்கைமுறை மேலாண்மை

ஒரு யோனி ஈஸ்ட் தொற்றினை சமாளிக்க, நீங்கள் குறித்துக் கொள்ள வேண்டிய, சில குறிப்புகள் இங்கே:

 • உங்களுக்கு நீரிழிவு இருந்தால், இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உறுதி செய்யவும்.
 • சுவையூட்டப்படாத வெறும் தயிரை உண்பது, ஈஸ்ட் நோய் தொற்றுக்களைத் தடுக்க உதவுவதாக, ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அது, 'நல்ல' லாக்டோபசில்லஸ் நுண்ணுயிரியைக் கொண்டிருக்கிறது. ஈஸ்ட்களுக்கு இனிப்பு மிகவும் பிடிக்கும் என்பதால், ஒரு இனிப்பற்ற நிறுவன பொருளைத் தெரிந்தெடுக்கவும். தினசரி, வாய்வழி ப்ரோபயாட்டிக்குகளும் பயன் தரக்கூடியவையாகும்.
 • ஈஸ்ட் நோய்தொற்றுக்களில் இருந்து தள்ளி இருக்க சிறந்த வழி, உங்கள் அந்தரங்க சுகாதாரத்திலும், உணவுப் பழக்கத்திலும் மாற்றங்களை ஏற்படுத்துவதாகத் தான் இருக்க முடியும்.
 • உங்கள் மாதவிலக்குப் பட்டைகள் மற்றும் சுகாதாரப் பட்டைகளை அவ்வப்போது மாற்றுவதை உறுதி செய்யவும்.
 • சோப்பு நுரை குளியல், நிறமேற்றப்பட்ட கழிவறை காகிதம், உடல் கழுவிகள் மற்றும் மணமூட்டப்பட்ட பெண்களுக்கான பொருட்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.


மேற்கோள்கள்

 1. Am Fam Physician. 2004 May 1;69(9):2189-2190. [Internet] American Academy of Family Physicians; Vaginal Yeast Infections.
 2. Office on Women's Health [Internet] U.S. Department of Health and Human Services; Vaginal yeast infections.
 3. HealthLink BC [Internet] British Columbia; Vaginal Yeast Infection
 4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Vaginal yeast infection
 5. HealthLink BC [Internet] British Columbia; Vaginal Yeast Infections
 6. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Candidiasis
 7. American College of Obstetricians and Gynecologists [Internet] Washington, DC; Vaginitis
 8. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Vulvovaginal Candidiasis
 9. Sima Rasti, Mohammad Ali Asadi, Afsaneh Taghriri, Mitra Behrashi, Gholamabbas Mousavie. Vaginal Candidiasis Complications on Pregnant Women. Jundishapur J Microbiol. 2014 Feb; 7(2): e10078. PMID: 25147665

யோனி ஈஸ்ட் தொற்று டாக்டர்கள்

Dr. Arun R Dr. Arun R Infectious Disease
5 वर्षों का अनुभव
Dr. Neha Gupta Dr. Neha Gupta Infectious Disease
16 वर्षों का अनुभव
Dr. Lalit Shishara Dr. Lalit Shishara Infectious Disease
8 वर्षों का अनुभव
Dr. Alok Mishra Dr. Alok Mishra Infectious Disease
5 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

யோனி ஈஸ்ட் தொற்று க்கான மருந்துகள்

யோனி ஈஸ்ட் தொற்று के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।