வைரஸ் காய்ச்சல் - Viral Fever in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

May 22, 2019

March 06, 2020

வைரஸ் காய்ச்சல்
வைரஸ் காய்ச்சல்

வைரஸ் காய்ச்சல் என்றால் என்ன?

காய்ச்சல் என்பது உடலின் வெப்பநிலை சராசரி அளவைவிட அதிகமாக இருக்கும் நோயின் அறிகுறியாகும். பொதுவாக உடலில் நுழைந்துள்ள அந்நிய உயிரினத்தை எதிர்த்து உடல் போராடுகிறது என்பதைத்தான் காய்ச்சல் குறிக்கிறது. அந்த உயிரினம் வைரஸாக இருக்கும் போது அது வைரஸ் காய்ச்சல் எனப்படும். நிறைய வைரஸ் தொற்று நோய்கள் காய்ச்சலை உண்டாக்கலாம், எடுத்துக்காட்டு சளி, டெங்கு மற்றும் சுவாச தொற்று.

நோயின் தொடர்புடைய முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

ஒருவர் வைரஸ் காய்ச்சலுடன் பின்வரும் அறிகுறிகளை அனுபவிக்கலாம்:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

காய்ச்சலை ஏற்படுவதற்குரிய பொதுவான வைரஸ் தொற்றுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

வைரஸால் மாசுபடுத்தப்பட்ட உணவை உட்கொள்ளுவதால் உணவு நஞ்சேற்றம் ஏற்பட்டு வைரஸ் காய்ச்சல் உண்டாகலாம். நோய்த்தொற்றுடைய நபரிடமிருந்து மூக்கு வழி வெளியேறும் அசுத்தமான தொற்று நீர்துளிகளை காற்றின் மூலம் சுவாசிப்பது மூலமாக வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதுதான் வைரஸ் நோய்கள் பரவுவதற்கான முக்கிய காரணி. கொசுக்கள் போன்ற பூச்சிகளும் டெங்கு போன்ற வைரஸ் பரவுவதற்கான காரணிகளாக உள்ளன.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

மருத்துவர் அதிகரித்த உடல் வெப்பநிலை மற்றும் வைரஸ் காய்ச்சலின் மற்ற அறிகுறிகளை கண்டறிய உடல் பரிசோதனைகள் செய்வார். பிறகு, வைரஸ் ஆன்டிபாடிகள் (பல்வேறு வைரஸ் தொற்றுக்களுக்கு காரணமான ஆன்டிபாடிகள்) இருப்பதை உறுதிசெய்ய இரத்த பரிசோதனை செய்து காய்ச்சலின் சரியான காரணம் கண்டறிவார். அல்ட்ராசவுண்ட் மற்றும் மார்பு எக்ஸ்-ரே போன்ற இமேஜிங் சோதனைகளுடன் கூடிய மற்ற குறிப்பிட்ட சோதனைகளும்  வைரஸை கண்டறிய உதவலாம்.

வைரஸ் காய்ச்சலின் காரணத்தை பொறுத்து அதற்கான சரியான சிகிச்சை மாறுபடும். மருத்துவர் பின்வரும் பொது சிகிச்சைகள் பரிந்துரைக்கலாம்:

 • வலியை குறைக்க வலி நிவாரணி.
 • காய்ச்சலை குறைக்க காய்ச்சல் போக்கும் மருந்து.
 • வைரஸ் தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க வைரஸ் எதிர்ப்பு மருந்துகள்.

பின்வரும் வாழ்க்கைமுறை மேலாண்மை நடவடிக்கைகளை வைரஸ் காய்ச்சலைத் தடுக்கவும்  சிகிச்சையளிக்கவும் உதவும்:

 • மன அழுத்தத்தை குறைத்தல்.
 • ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு உட்கொள்ளுதல்.
 • முறையான உடற்பயிற்சி செய்தல்.
 • போதுமான ஓய்வெடுத்தல்.
 • நிறைய நீர் பருகுதல்.மேற்கோள்கள்

 1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Fever
 2. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Flu Symptoms & Complications
 3. InformedHealth.org [Internet]. Cologne, Germany: Institute for Quality and Efficiency in Health Care (IQWiG); 2006-. Fever in children: Overview. 2013 Dec 18 [Updated 2016 Nov 17].
 4. healthdirect Australia. Differences between bacterial and viral infection. Australian government: Department of Health
 5. A Sahib Mehdi El-Radhi. Fever management: Evidence vs current practice . World J Clin Pediatr. 2012 Dec 8; 1(4): 29–33. PMID: 25254165

வைரஸ் காய்ச்சல் டாக்டர்கள்

Pallavi Tripathy Pallavi Tripathy General Physician
3 वर्षों का अनुभव
Dr Sarath Dr Sarath General Physician
Dr. Mukesh Prajapat Dr. Mukesh Prajapat General Physician
3 वर्षों का अनुभव
Dr. Hitesh Suthar Dr. Hitesh Suthar General Physician
2 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

வைரஸ் காய்ச்சல் க்கான மருந்துகள்

வைரஸ் காய்ச்சல் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।