myUpchar प्लस+ के साथ पूरेे परिवार के हेल्थ खर्च पर भारी बचत

மரபுவழித் தோல் அழற்சி என்றால் என்ன?

அடோபிக் டெர்மடைடிஸ் (மரபுவழித் தோல் அழற்சி) , எக்ஸிமா ( சிரங்கு ) என்றும் அழைக்கப்படுகிறது, இது அரிப்பு மற்றும் செதில் போன்ற தோல் தன்மை கொண்ட பொதுவான தோல் நிலை ஆகும். இது பொதுவாக பெரியவர்களை விட குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கிறது, மேலும் மீண்டும்  வரக்கூடிய வாய்ப்பும் உண்டு. பிறந்த 6 மாதத்திலிருந்தே இந்த அழற்சி நோய் ஒருவரை தாக்கக்கூடும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

 • அரிப்புத் தோலழற்சியின் மருத்துவத் தோற்றம் நபருக்கு நபர் மாறுபடும், ஆனால் இது பொதுவாக வறண்ட தோல் மற்றும் அதிக அரிப்புடன் தோல் சிவப்பாக மாறுதல் போன்ற குணாதிசயங்களை கொண்டது .
 • சொரிவதினால், தோல் எரிச்சல் மற்றும் இரத்த கசிவு ஏற்படுகிறது.
 • இவை சீல் நிறைந்த வெடிப்புகளாகவே பெரும்பாலும் காணப்படுகின்றன, இது ஒரு நோய் தொற்றின் அறிகுறியாகும். ஒருவேளை தொற்று ஏற்பட்டிருந்தால், அது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவ கூடும்.
 • இருண்ட/நிறமிழந்த மற்றும் சுருங்கிய தோல், சீழ் நிறைந்த வெடிப்புகள், ஆகியவை மற்ற அறிகுறிகளாகும். கண்கள் மற்றும் உதடுகளை சுற்றி உள்ள பகுதிகள் இருண்டு காணப்படுகின்றன.
 • இரவில் அரிப்புத் தன்மை அதிகமாக இருக்குமென்பதால் இது தூக்கச் சுழற்சியை பாதிக்கலாம்.
 • அரிப்புத் தோலழற்சி என்பது ஆஸ்துமா, தூசியால் வரும் சளிக்காய்ச்சல் அல்லது பிற ஒவ்வாமைகளுடன் சேர்ந்து வரும் ஒரு நாட்பட்ட நிலையாகும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

 • இதற்கு குறிப்பிட்ட ஒரு காரணம் மட்டும் இல்லை என்றாலும், அரிப்புத் தோலழற்சியை தூண்டக்கூடிய பல ஆபத்தான காரணிகள் உள்ளன.
 • இதற்கு மரபணு இணைப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஒரே குடும்பத்தின் பல உறுப்பினர்கள் இந்த நோயால் பாதிக்ககூடும்.
 • அதிகப்படியான மாசுபாடு உள்ள சூழலில் வாழ்வது, அல்லது மிகவும் வறண்ட மற்றும் குளிர்ந்த இடங்களில் வசிப்பது போன்றவை ஒருவரை இந்த நோய் தாக்க ஏதுவான நிலைகளாகும்.
 • உணவு ஒவ்வாமை, மகரந்தம், கம்பளி ஆடைகள், தூசி, தோல் பொருட்கள் மற்றும் புகையிலை புகை ஆகியவை அரிப்புத் தோலழற்சியை தூண்டக்கூடிய பிற காரணிகள் ஆகும்.

இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

 • எக்ஸிமா வை கண்டறிய தோலியல் மருத்துவர் மருத்துவ ரீதியாக உங்கள் தோலினை  பரிசோதனை செய்வார்.சிவந்த, வறண்ட மற்றும் நமைச்சல் உடைய தோல் இந்த நிலைக்கு பொதுவான அறிகுறியாகும்.
 •  இது மருத்துவ பரிசோதனையில் தெளிவாக தெரியக்கூடிய மேற்பூச்சு நிலை என்பதால், இதற்கு இரத்த பரிசோதனை அல்லது இமேஜிங் தேவை இல்லை.
 • உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைக்கு தொடர்ச்சியான காய்ச்சல் அல்லது மற்ற குறிப்பிடத்தக்க அறிகுறிகள் இருப்பின் , உங்கள் மருத்துவர் ஒரு அடிப்படையான இரத்த பரிசோனைக்கு பரிந்துரைப்பார்.
 • பிரச்சனையை முழுமையாக தீர்க்க முடியாது என்றாலும், ஹிஸ்டமின் எதிர்ப்பிகள் (ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள்)  , நுண்ணுயிர்க்கொல்லிகள் மற்றும் ஸ்டீராய்டு களிம்புகள் போன்றவை நிவாரணம் பெற பயன்படுத்தப்படுகிறது. 
 • நோயின் தூண்டுகோள்களை அடையாளம் கண்டு, அதனை தவிர்த்தல், கடுமையான சோப்புகள் அல்லது தோல் பொருட்கள் மீது கவனம் கொள்ளுதல், எப்பொழுதும் நல்ல சுகாதாரத்தை பராமரிப்பது போன்றவை இந்த நிலை மீண்டும் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை தடுக்கக்கூடிய பிற வழிகள் ஆகும்.
 • குளியலுக்குப் பின் உங்கள் குழந்தையின் சருமத்தை நன்றாக துடைக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது தோலினை  ஈரப்படுத்த வேண்டும்.
 1. மரபுவழித் தோல் அழற்சி க்கான மருந்துகள்

மரபுவழித் தோல் அழற்சி க்கான மருந்துகள்

மரபுவழித் தோல் அழற்சி के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

Medicine NamePack SizePrice (Rs.)
TacrografTacrograf 0.25 Mg Tablet126.0
FivasaFivasa 27 Mcg Nasal Spray240.0
EsifloEsiflo 100 Transcaps130.5
SerofloSeroflo 25 Mcg/125 Mcg Autohaler864.0
EczridEczrid 0.3% Ointment174.0
SpectraSpectra 10 Mg Capsule49.5
ImografImograf 0.03% W/W Ointment170.0
XeprichXeprich 10 Mg Capsule25.0
KivitroKivitro 0.03 Mg Ointment128.0
WoxepinWoxepin 25 Mg Capsule75.0
OlixOlix 0.1% Ointment270.0
OlmisOlmis 0.03% W/W Ointment121.0
TacosealTacoseal 0.1%W/W Ointment102.0
TacrodermTacroderm 0.03% Ointment97.0
TacrojonTacrojon 0.1% Ointment325.0
TacrokidTacrokid 0.03% Ointment110.0
TacromTacrom 0.03% Ointment94.0
TacromentTacroment 0.03% Ointment120.0
TacropexTacropex 1 Mg Ointment299.0
TacrotopicTacrotopic 0.03% Ointment121.0
TacrotorTacrotor 0.03% Ointment128.0
TacrovateTacrovate 0.03% Ointment93.0
TacroveraTacrovera 0.03% Ointment99.0

உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா? தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்

और पढ़ें ...