வாய் துர்நாற்றம் - Bad Breath in Tamil

Dr Razi AhsanBDS,MDS

February 07, 2019

March 06, 2020

வாய் துர்நாற்றம்
வாய் துர்நாற்றம்

சுருக்கம்

வாய் துர்நாற்றம் என்பது, மூச்சு விடும் பொழுது வாயிலிருந்து வெளிப்படும் ஒரு விரும்பத்தகாத வாடை, என வகைப்படுத்தப்படுகிறது. மருத்துவத் துறை சொற்களில், வாய் துர்நாற்றம் என்பது ஹாலிட்டோஸிஸ் அல்லது வாயின் மோசமான வாடை எனக் கூறப்படுகிறது. அதன் ஆதாரமான இடம் எதுவாயினும்(வாய் அல்லது உடல்), உடலில் இருந்து வெளிப்படும் விரும்பத்தக்கதாக வாடையும் ஹாலிட்டோஸிஸ் என அறியப்படுகிறது. ஆனால், வாயில் மோசமான வாடை என்பது, குறிப்பாக வாயிலிருந்து வரும் துர்நாற்றத்தைக் குறிக்கிறது. வாய் துர்நாற்றம், உலகளவில் அதிகளவு மக்களைப் பாதிக்கிறதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இது, அவ்வப்போது புறக்கணிக்கப்படுகிறது மற்றும் வாய் துர்நாற்றத்தினால் பாதிக்கப்படும் நபர்கள், குறிப்பிடத்தக்க உளவியல் மற்றும் சமுதாய ரீதியான தடைகளை சந்திக்கிறார்கள். வழக்கமாக நமது ஈறுகள் மற்றும் நாக்கில் ஒரு பூச்சை உருவாக்கும் ஈறு பிரச்சினை போன்ற நுண்ணுயிர் செயல்பாடு, வாய் துர்நாற்றத்தின் மிகவும் வழக்கமான காரணமாகும். நல்ல செய்தி என்னவென்றால், ஒரு நல்ல வாய் சுகாதாரம் மற்றும் ஒரு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட குறிப்பிட்ட மருந்துகள், வழக்கமாக, வாய் துர்நாற்றத்திலிருந்து முழுமையாக மீண்டு வர உதவுகின்றன என்பதாகும்.

உங்களுக்குத் தெரியுமா?

நாள்பட்ட வாய் துர்நாற்றம், உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 25% பேரைப் பாதிக்கின்ற ஒரு தீவிரமான பிரச்சினையாகும்.  வாய் துர்நாற்றத்தினால், ஆண்களும், பெண்களும் சம விகித அளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், ஆண்களை விடப் பெண்கள், விரைவாக உதவி மற்றும் சிகிச்சையை நாடுகிறார்கள் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மருத்துவர்கள், வாய் துர்நாற்றம், பலநேரம், குறைந்த அளவு மருத்துவத் தலையீடுகள் மூலமே குணப்படுத்தக் கூடியது என்கிறார்கள். இருந்தாலும், விரும்பத்தகாத வாடை மற்றும் வாய் துர்நாற்றம், குறிப்பிட்ட பின்னால் மறைந்திருக்கும் மருத்துவ பிரச்சினைகளின் காரணமாகவும் கூட ஏற்படக் கூடும். அதனால், அதைப் புறக்கணிக்காமல், உங்களுக்கு 15 நாட்களுக்கு மேல் வாய் துர்நாற்றம் நீடித்தால், ஒரு மருத்துவரை, குறிப்பாக, ஒரு பல் மருத்துவரை அல்லது இ.என்.டி நிபுணரை, தயவுசெய்து கலந்தாலோசியுங்கள்.

வாய் துர்நாற்றம் என்ன - What is Halitosis (bad breath) in Tamil

வாய் துர்நாற்றம், முக்கியமாக நுண்ணுயிரி மற்றும் பற்சிதைவை ஏற்படுத்தக் கூடிய (வாய்) மற்ற மருத்துவ காரணங்களால், பேசும் பொழுது அல்லது மூச்சை வெளிவிடும் பொழுது ஏற்படுகிற ஒரு பொதுவான பிரச்சினையாகும். ஒரு நாளின் வேறுபட்ட நேரங்களில் வித்தியாசப்படுகிற வாய் துர்நாற்றத்தின் அடர்த்தியை வைத்து இது கவனிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, காலையில் உங்கள் மூச்சு, மோசமான வாடையாக இருக்கலாம், ஆனால், மாலைக்குள் அந்த வாடை குறைந்து விடலாம். ஆராய்ச்சியாளர்கள், மன உளைச்சல், பட்டினி, குறிப்பிட்ட உணவுகளை (பூண்டு, வெங்காயம், இறைச்சி, மீன், மற்றும் வெண்ணை) உண்பது போன்ற, வாயில் மோசமான வாடைக்கு நேரடிப் பொறுப்பான பல்வேறு காரணிகள், வாய் துர்நாற்றத்துக்கு காரணமாவதாக கூறுகிறார்கள் . கூடுதலாக, புகைப்பிடித்தலும் மது அருந்துதலும், விரும்பத்தகாத வாடைகள் மற்றும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்புடையவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. வழக்கமாக, நமது காலை மூச்சு, வாடையைக் கொண்டிருக்கிறது, ஏனென்றால், நுண்ணுயிரிகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை அனுமதிக்கும் விதமாக, வாய் வறண்டு மற்றும் இரவு முழுவதும் செயல்படாமல் இருக்கிறது. ஆனால், வாய் துர்நாற்றம், சிகிச்சையைத் தொடர்ந்து, பல் கவனிப்பு தேவைப்படுகிற ஒரு நாள்பட்ட பிரச்சினையாகும். 

வாய் துர்நாற்றம் அறிகுறிகள் என்ன - Symptoms of Halitosis (bad breath) in Tamil

வாய் துர்நாற்றத்தின் அறிகுறி, அதிலிருந்து வரும் தனித்துவமான கெட்ட வாடையாகும். வாடைகள், அழுகிய இறைச்சியின், கெட்டுப் போன உணவின் அல்லது ஏதேனும் விரும்பத்தகாக ஒன்றின் வாடை போன்று இருக்கக் கூடும். இவை வழக்கமாக, ஒரு நபர் மூச்சை உள்ளே இழுக்கும் பொழுது அல்லது மூச்சை வெளியே விடும் பொழுது உணரப்படுகின்றன. மிகவும் நெருக்கத்தில் இருக்கும் ஒரு நபர், நீங்கள் பேசும் பொழுது, தும்மும் பொழுது, இருமும் பொழுது, அதே மாதிரி உணரக் கூடும். 

ஒரு மருத்துவரை எப்பொழுது பார்க்க வேண்டும்?

நீங்கள், வாய் துர்நாற்றத்துடன் சேர்த்து பின்வரும் குறிகள் மற்றும் அறிகுறிகளை உணர்ந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை, முன்னுரிமையாக பல் வெளித்திசு மருத்துவரை கண்டிப்பாக ஆலோசிக்க வேண்டும்.ஒரு பல் வெளித்திசு மருத்துவர், ஈறுகள், வாய் சவ்வு மற்றும் வாயின் மென்மையான திசுக்களில் ஏற்படும் பிரச்சினைகளைக் கையாள்வதில் ஒரு நிபுணர் ஆவார். 

நீங்கள் இவற்றை அனுபவித்தால் ஒரு பல் வெளித்திசு மருத்துவரை சந்தியுங்கள்:

 • ஒரு வலிமையான அடர்த்தியில் வாய் துர்நாற்றம் அல்லது ஒரு கெட்ட வாடை.
 • உங்கள் பற்கள் அல்லது ஈறுகளில் கண்ணுகுத் தெரிகின்ற வெள்ளைப் பூச்சு.
 • ஒரு உலோகம் போன்ற சுவை.
 • ஈறுகளில் இரத்தக் கசிவு.
 • வாயில் எச்சிலின் அளவு குறைதல்.

வாய் துர்நாற்றம் சிகிச்சை - Treatment of Halitosis (bad breath) in Tamil

வாய் துர்நாற்றத்துக்கான சிகிச்சை, ஒரு படிப்படியான நடைமுறையாகும். வாய் துர்நாற்றத்துக்கு சிகிச்சையளிக்க ஆரம்பிக்கும் முன்பு, ஒரு பல் மருத்துவர், வாய் துர்நாற்றத்தின் மூலாதாரத்தைக் கண்டறிவதில் கவனம் செலுத்த வேண்டும். வாய் அல்லது வாய் சாராத வாய் துர்நாற்ற மூலத்தை, அடையாளம் காண மிகவும் எளிதான வழி, வாய் மற்றும் மூக்கிலிருந்து வரும் வாடைகளை ஒப்பிடுவதாகும். அதன் மூலாதாரம் மூக்கு அல்லது வேறு ஏதாவது மருத்துவ காரணங்களின் விளைவாக இருந்தால்,அவர்கள், தொடர்புடைய ஒரு மருத்துவ நிபுணருக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.

வாயிலிருந்து உருவாகும் வாய் துர்நாற்றத்திற்கு, அவ்வப்போது ஒரு பல் சிகிச்சை தேவைப்படலாம். வாய் துர்நாற்றத்துக்கான சிகிச்சையில், ஒரு நிலையான மற்றும் நெறிமுறைகள் எதுவும் இல்லை, இருந்தாலும், ஒரு சாத்தியமுள்ள நெறிமுறை, தரமான பல் மற்றும் பல் வெளித்திசு சிகிச்சை உட்பட அடிப்படைக் கூறுகளை உள்ளடக்கி இருக்கிறது.

 வாய் துர்நாற்றத்துக்கு பின்வருமாறு சிகிச்சையளிக்கப்படக் கூடும்;

 • வாய் மற்றும் பல் திசுக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவது முதல் ஒரு அடிப்படை பல் சிகிச்சை வரை கொண்டு, நுண்ணுயிரிகளைக் (கிருமிகள்) குறைப்பது, தேவைப்பட்டால், வாயில் நீர் பாய்ச்சுதல், ஒலி அல்லது மீயொலி பல் துலக்கிகள் போன்ற உயர்தர சுகாதார வழிமுறைகளை இணைத்துக் கொள்வது.
 • முறையான வாய் சுகாதாரத்தைப் பராமரித்தும் கூட, வாய் துர்நாற்றம் நீடித்தால், உங்கள் நாக்கினை சுத்தப்படுத்துவது அறிவுறுத்தப்படுகிறது.
 • 0.2% குளோர்ஹெக்சிடைன் வாய் கொப்பளிப்பான், எடுத்துக்காட்டுக்கு லிஸ்டெரின், வாயில், ஈறு பூச்சுக்களை குறைக்கப் பயன்படுத்த இயலும். இருப்பினும், இவற்றின் நீண்ட-கால பாதிப்பு இன்னும் தீர்மானிக்கப்படாமல் இருக்கிறது மற்றும் இது பல் கறைபடுதலுக்கு வழிவகுக்கக் கூடும்.
 • வாய் துர்நாற்றத்துக்கான மற்றொரு சிகிச்சை உத்தி, பல்வேறு உலோக அயனிகளைப் பயன்படுத்தி வி.எஸ்.சிக்களை மாற்றுதல் ஆகும்.
 •  ஆல்கஹால் இல்லாத 0.05% குளோர்ஹெக்சிடைனைக் கொண்டிருக்கும் புதிய கரைசலான ஹாலிட்டா, மேலே கூறிய வாய் கொப்பளிப்பான்களை விட மிகவும் பயனளிக்கக் கூடியது.


மேற்கோள்கள்

 1. Yaegaki K1, Coil JM. Genuine halitosis, pseudo-halitosis, and halitophobia: classification, diagnosis, and treatment. Compend Contin Educ Dent. 2000 Oct;21(10A):880-6, 888-9; quiz 890. PMID: 11908365.
 2. Touyz LZ1. Oral malodor--a review. J Can Dent Assoc. 1993 Jul;59(7):607-10. PMID: 8334555.
 3. Bahadır Uğur Aylıkcı, Hakan Çolak. Halitosis: From diagnosis to management. J Nat Sci Biol Med. 2013 Jan-Jun; 4(1): 14–23. PMID: 23633830.
 4. National Health Service [Internet]. UK; Bad breath.
 5. Walter J. Loesche, Christopher Kazor. Microbiology and treatment of halitosis. First published: 09 July 2002; periodontology 2000, vol. 28, 2002, 256-279 [Internet].

வாய் துர்நாற்றம் டாக்டர்கள்

Dr. Raghu D K Dr. Raghu D K Gastroenterology
14 वर्षों का अनुभव
Dr. Porselvi Rajin Dr. Porselvi Rajin Gastroenterology
16 वर्षों का अनुभव
Dr Devaraja R Dr Devaraja R Gastroenterology
7 वर्षों का अनुभव
Dr. Vishal Garg Dr. Vishal Garg Gastroenterology
14 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

வாய் துர்நாற்றம் க்கான மருந்துகள்

வாய் துர்நாற்றம் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।