myUpchar प्लस+ के साथ पूरेे परिवार के हेल्थ खर्च पर भारी बचत

நாள்பட்ட நிணநீர்மை இரத்தப் புற்றுநோய் என்றால் என்ன?

நாள்பட்ட நிணநீர்மை இரத்தப் புற்றுநோய் (சிஎல்எல்) என்பது நிணநீர் அணுக்களில் (லிம்போசைட்ஸ்) பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு வகை புற்றுநோய் ஆகும், நிணநீர்அணுக்கள் என்பது ஒரு வகையான வெள்ளை இரத்த அணுக்கள் (டபுள்யூ.பி.சி கள்), அவை எலும்பு மஜ்ஜையின் உள்ளே உருவாகிக்கொண்டிருக்கும் சமயத்திலேயே இந்த நோயினால் தாக்கப்படுகின்றன. இது பெரியவர்களில் பெரும்பாலும் காணப்படும் லுகேமியாவின் வகை ஆகும். சிஎல்எல் லில் இரண்டு வகைகள் உள்ளன:

 • ஒன்று மெதுவாக வளருவதால் தோன்றுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
 • மற்றோரு வகையானது, விரைவாக வளர்வதனால் மிகவும் தீவிரமான தாக்கத்தை கொண்டது.

மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிட்டு (25% -30%) பார்க்கையில் இது இந்தியாவில் (1.7% -8.8%) வழக்கத்திற்கு மாறாக இருக்கின்றது.

சி.எல்.எல் நிகழ்வு ஒரு வருடத்திற்கு தலா 100,000 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 4.7 வீதம் என வழக்கத்திற்கு மாறாக உள்ளது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

பெரும்பான்மையான நிகழ்வுகளில், சிஎல்எல் பல ஆண்டுகளுக்கு எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. இதற்கான அறிகுறிகள் மிக தாமதமாக புற்றநோய் பரவவும்போதே தோன்றுகிறது, மேலும் இது முக்கியமாக நிணநீர் முனைகள், கல்லீரல் மற்றும் மண்ணீரல் ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அறிகுறிகள் பின்வருமாறு:

 • கழுத்து, அக்குள், வயிறு அல்லது இடுப்பு ஆகியவற்றில் உள்ள நிணநீர் முனைகளில் ஏற்படும் வலியில்லா வீக்கம்.
 • சோர்வு.
 • விலா எலும்புகளுக்கு கீழே எற்படும் வலி.
 • காய்ச்சல்.
 • இரவு நேரங்களில் அதிகமாக வியர்த்தல்.
 • அடிக்கடி ஏற்படும் தொற்றுகள்.
 • விவரிக்க முடியாத எடை இழப்பு.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இன்னும் சி.எல்.எல்-இன் சரியான காரணம் அறியப்படவில்லை என்றாலும், இரத்த உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் அபிவிருத்தியைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் (மாறுபாடு) காரணமாக இந்நிலை எழுகிறது என்று கருதப்படுகிறது. இந்த மாற்றமே செல்களை, இரத்தம் மற்றும் வேறு சில உறுப்புகளில் பெருகக்கூடிய மற்றும் குவிந்திருக்கக்கூடிய அசாதாரணமான, பயனற்ற நிணநீர் அணுக்களை (லிம்போசைட்டுகளை) உருவாக்கச் செய்கிறது. இந்த செல்கள் இரத்த அணுக்களின் உற்பத்தியை கூட பாதிக்கும்.

ஆபத்து காரணிகள் பின்வருமாறு:

 • நடுத்தர வயதில் இருக்கும் ஆண்கள் அல்லது வயதில் முதிர்ந்த ஆண்கள்.
 • ஏற்கனவே, குடும்பத்தினருக்கு சி.எல்.எல் அல்லது நிணநீர் முனைகளில் புற்றுநோய் இருக்கும் வரலாறு.
 • வெள்ளையர்கள், ரஷ்சியர்கள், மற்றும் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த யூத வம்சத்தவர்கள்.
 • களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற சில இரசாயன வெளிப்பாட்டினாலும் ஏற்படலாம்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

சி.எல்.எல்-ஐ பின்வரும் முறைகளை கொண்டு கண்டறியலாம்:

 • உடல் பரிசோதனை மற்றும் வரலாறு: முழு உடல்நிலையையும் சரிபார்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
 • முழுமையான இரத்த எண்ணிக்கை (சிபிசி): இரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் அளவினை சரிபார்க்க உதவுகிறது.
 • இம்முனோபினோடைப்பிங் அல்லது ஃ ப்லொ சைட்டோமெட்ரி சோதனைகள்: வெண்குருதியணு பிறபொருளெதிரியாக்கியை கண்டறிய செய்யப்படுகிறது.
 • உடனொளிர்வு மூலம் மூல இடத்தில் இனக்கலப்பு (எப்.ஐ.எஸ்.ஹெச்): இந்த சோதனை மரபணுக்களை மதிப்பிடுவதற்காக மேற்கொள்ளப்படுகிறது.

சி.எல்.எல் உடைய நோயாளிகளுக்கான ஐந்து நிலையான சிகிச்சைகள் பின்வருமாறு:

 • நோயாளியின் நிலையை ஆரம்ப நிலைகளில் உற்று கண்காணித்தல்.
 • கதிர் மருத்துவம்.
 • வேதிச்சிகிச்சை (கீமோதெரபி).
 • மண்ணீரலை நீக்க அறுவை சிகிச்சை.
 • ஒரு செல் எதிர்ப்பான் கொண்ட இலக்கு சிகிச்சை.
 • எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை.

தொடர்கண்காணிப்பு முறைகள் பின்வருமாறு:

 • நோயை கண்டறிந்த பிறகு, நோயின் செயல்பாட்டை கண்காணிக்க சோதனைகள் மேற்கொள்ளப்படலாம்.
 • இதற்கான சிகிச்சையின் மூலம் நோய் முழுவதையும் குணமாபடுத்தமுடியாது, மற்றும் இதற்கான அறிகுறிகள் குணமடைந்த குறிப்பிட்ட காலத்தற்கு பிறகும் உருவாகலாம்.
 • இதற்கான சிகிச்சை முறைகள் சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ அல்லது சில வருடங்களுக்கோ கூட நீடிக்கலாம்.
 • முந்தைய சிகிச்சையின் செயல்திறனை பொறுத்தே மேற்கொண்டு சிகிச்சையளிக்க வேண்டும்.

வாழ்க்கைமுறையில் பின்பற்றக்கூடிய மாற்றங்கள்:

 • புகைபிடிப்பதை நிறுத்துதல்
 • நல்ல சுகாதாரத்தை பேணிக்காப்பதன் மூலம் நோய்த்தொற்றின் அபாயத்தை குறைக்கலாம்.
 • உணவு முறையில் மாற்றங்கள். உணவு நிபுணரின் உதவியுடன் உங்களுக்கான உணவுத் திட்டத்தை திட்டமிடுங்கள்.
 • தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல்.
 • மன அழுத்தம் மற்றும் சோர்வு ஆகியவற்றை சமாளித்தல். பணிகளுக்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் தினசரி பணிகளில் உதவ மற்றவர்களையும் அனுமதித்தல்.
 • குடும்பதினர், நண்பர்கள் அதே போல் ஆதரவு குழுக்களின் ஆதரவை நாடுங்கள்.
 • ஆலோசனை அமர்வுகளுக்கு செல்தல்.
 1. நாள்பட்ட நிணநீர்மை இரத்தப் புற்றுநோய் (சிஎல்எல்) க்கான மருந்துகள்

நாள்பட்ட நிணநீர்மை இரத்தப் புற்றுநோய் (சிஎல்எல்) க்கான மருந்துகள்

நாள்பட்ட நிணநீர்மை இரத்தப் புற்றுநோய் (சிஎல்எல்) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

Medicine NamePack SizePrice (Rs.)
WysoloneWysolone 10 Mg Tablet Dt14.0
RedituxReditux 100 Mg Injection9999.0
CampathCampath 30 Mg Injection86.25
Gatiquin PGatiquin P 0.3% W/V/1% W/V Eye Drop94.0
PredzyPredzy 3 Mg/10 Mg Eye Drops60.0
BemustinBemustin 100 Mg Injection6303.85
Gatsun PGatsun P 0.3%/1% Drops12.84
BenditBendit 100 Mg Injection6950.0
Siogat PSiogat P 0.3%/1% Eye Drops55.53
BenzzBenzz 100 Mg Injection6582.85
Zengat PZengat P Eye Drops13.1
BimodeBimode 100 Mg Injection6416.15
Z PredZ Pred 0.3%/1% Eye Drops51.25
CytomustineCytomustine 100 Mg Injection6571.42
Gate PdGate Pd 3 Mg/10 Mg Eye Drops25.9
MaxtorinMaxtorin 100 Mg Injection7683.81
Gate P PGate P P 3 Mg/10 Mg Eye Drops28.35
MustinMustin 100 Mg Injection19.9
PurplzPurplz 100 Mg Injection7102.03
ZumustinZumustin 100 Mg Injection5952.38

உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா? தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்

और पढ़ें ...