கண்களில் ஏற்படும் ஒவ்வாமை - Eye Allergies in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

December 08, 2018

July 31, 2020

கண்களில் ஏற்படும் ஒவ்வாமை
கண்களில் ஏற்படும் ஒவ்வாமை

கண்களில் ஏற்படும் ஒவ்வாமை என்றால் என்ன?

கண்களில் ஏற்படும் ஒவ்வாமையானது, தூசி, மகரந்ததூள், அச்சு வார்ப்பு போன்ற ஒவ்வாமையை விளைவிக்கும் பொருட்களின் வெளிப்பாடு காரணமாக கண் வீக்கம் மற்றும் சிவத்தல் காணப்படுகிறது. இவை ஒவ்வாமைகள் என அழைக்கப்படுகின்றன. கண்களில் ஏற்படும் ஒவ்வாமை ஆஸ்துமா, வைக்கோல் காய்ச்சல், ஒவ்வாமை தோல் நிலைகள் (அரிக்கும் தோலழற்சி, சிரங்கு போன்றவை) மற்றும் பிற நோயாளிகளுடன் தொடர்புடையவை.

இதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?

கண்களில் ஏற்படும் ஒவ்வாமை என்பது ஒவ்வாமையுடன் தொடர்புள்ள, இரத்தத்தில் ஹிஸ்டமைன் என்றழைக்கப்படும் இரசாயனத்தின் வெளியீடு காரணமாக தோன்றுவதாகும். அறிகுறிகள் நீண்ட காலமாகவோ அல்லது காலநிலை மாற்றங்களிலோ மற்றும் தொற்றும் தன்மை இல்லாது காணப்படும்.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

ஒவ்வாமைக்கு கண்களின் வெளிப்பாடு என்பது நோய்எதிர்ப்பு சக்தியை ஒவ்வாமையிலிருந்து அகற்றுவதக்கு வழிவகுக்கிறது.பல்வேறு வகையான ஒவ்வாமைகளாவன:

 • தூசு.
 • மகரந்தம்.
 • காற்று மாசு, புகை, முதலியன.
 • செல்லப்பிராணிகள் முடி, உன்னிகள், முதலியன.
 • பூஞ்சை அல்லது மோல்ட்ஸ்.
 • வலுவான மணம் கொண்ட வாசனை திரவியங்கள், வர்ணங்கள், முதலியன.
 • உணவுப் பதப்படுத்த பயன்படும் பொருட்கள்.
 • பூச்சி கடித்தல்.
 • அரிதான சந்தர்ப்பங்களில்,பார்வை இழப்பு என்பது இளவேனிற் இமையிணைப் படலத்தின் அழற்சி எனப்படும் கண் ஒவ்வாமையுடன்  தொடர்புடையதாக இருக்கலாம், குறிப்பாக குழந்தைகளை இது பாதிக்கலாம்.

கண்களில் ஏற்படும் ஒவ்வாமை எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றன?

பின்வரும் அளவுருக்கள் அடிப்படையில் கண் ஒவ்வாமைகளை டாக்டர்கள் கண்டுபிடிப்பார்கள்:

 • அறிகுறிகளின் வரலாறு. 
 • ஒரு பிளவு ஒளி பயன்படுத்தி கண்கள் பரிசோதனை செய்யப்படும்.
 • இரத்தத்தில் ஐஜிஇ-ன் அளவு.
 • ஒவ்வாமை தோல் பரிசோதனை.
 • நுண்ணோக்கியினை பயன்படுத்தி வெள்ளை இரத்த அணுக்களை சோதனை செய்யும் கண் வெளியேற்ற பரிசோதனை.

 கண்களில் ஏற்படும் ஒவ்வாமை சிகிச்சைகள்:

 • சுய பாதுகாப்பு நடவடிக்கைகள்:
  • ஒவ்வாமைகளின் வெளிப்பாட்டை தடுத்தல்.
  • கண்கள் தேய்ப்பதை தவிர்க்கவும்.
  • கண் சிவப்பாக மற்றும் அரிக்கும் போது லென்ஸ்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  • மகரந்தங்களின் தாக்கத்தை தடுக்க காற்றோட்டமான காலநிலையில் சன்கிளாஸ்கள் பயன்படுத்தவும்.
  • ஈரப்பதம் பூஞ்சையின் வளர்ச்சியை ஆதரிப்பதால் வீட்டின் உள்ளே ஈரப்பதத்தை தவிர்க்கவும்.
  • மாசு, தூசி, புகையில் செல்வதை தவிர்க்கவும்.
  • பூச்சிகளினால் உண்டாகும் கண் ஒவ்வாமையை தவிர்க்க தினமும் படுக்கைகளை சுத்தம் செய்யுங்கள்.
  • வளர்ப்பு பிராணிகளிடமிருந்து தள்ளி இருங்கள்.
  • ஒவ்வாமை ஏற்பட்டவுடன் ஒவ்வாமையிலிருந்து பாதுகாக்க கண்களை நன்றாக கழுவுங்கள்.
 • கண்களில் ஏற்படும் ஒவ்வாமை சிகிச்சைக்கு உங்கள் கண் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உபயோகியுங்கள்:
  • மாத்திரைகளில் இருக்கும் ஆன்டி ஹிஸ்டமைன்கள் மற்றும் கண் சொட்டு மருந்துகள் கண் அரிப்பையும்,எரிச்சலையும் குறைக்க உதவும்.
  • கண்களில் ஏற்படும் ஒவ்வாமையினால் உண்டாகும் கட்டியை தடுக்க மாஸ்ட் செல் நிலைப்படுத்தி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • கண் சிவத்தல் மற்றும் கண் வீக்கத்தினை குறைக்க கார்டிகோஸ்டிராய்ட் கண் சொட்டு மருந்துகள் உதவுகின்றன.
  • கண்களை ஈரப்பத்துடன்வைக்கவும் மற்றும் கண்களில் உண்டாகும் ஒவ்வாமையை நீக்கவும் செயற்கை கண்னிற்கான சொட்டு மருந்து உதவுகிறது.
  • அதிக வீக்கத்தை குறைக்க கார்டிகோஸ்டெராய்டு கண் சொட்டு மருந்துகள் உதவுகின்றன.
  • இம்யூனோ தெரபி ஊசிகள் நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கி ஒரு குறிப்பிட்ட ஒவ்வாமை மற்றும் கண் ஒவ்வாமைகள் வராமல் தடுக்க உதவுகிறது.மேற்கோள்கள்

 1. British Medical Journal. Allergic eye disease. BMJ Publishing Group. [internet].
 2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Allergic conjunctivitis
 3. American academy of ophthalmology. What Are Eye Allergies?. California, United States. [internet].
 4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Conjunctivitis (Pink Eye)
 5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Vernal conjunctivitis

கண்களில் ஏற்படும் ஒவ்வாமை க்கான மருந்துகள்

Medicines listed below are available for கண்களில் ஏற்படும் ஒவ்வாமை. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.