ஹெபாடிக் என்செபலோபதி - Hepatic Encephalopathy in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 05, 2018

July 31, 2020

ஹெபாடிக் என்செபலோபதி
ஹெபாடிக் என்செபலோபதி

ஹெபாடிக் என்செபலோபதி என்றால் என்ன?

என்செபலோபதி என்பது மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் இடையூறு அல்லது பிறழ்வின் காரணத்தினால் உண்டாகும் மன குழப்பம் மற்றும் மறதியை குறிக்கின்றது. ஹெபாடிக் என்செபலோபதியில், நாட்பட்ட கல்லீரல் நிலை (நீண்ட- கால கல்லீரல் நோய்) அல்லது கல்லீரல் செயலிழப்பு காரணமாக மூளையின் செயல்பாட்டில் பிறழ்வு ஏற்படுகின்றது. ஹெபாடிக் என்செபலோபதி மிக பொதுவாக லிவர் சிரோசிஸ் உள்ள தனிப்பட்டவர்களிடத்தில் காணப்படுகிறது.(நீண்ட- கால கல்லீரல் சேதம் குணப்படுத்தமுடியாத கல்லீரல் வடு மற்றும் கல்லீரல் செயல்பாடுகளில் கணிசமான சரிவினை ஏற்படுத்துகிறது).

இதன் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் என்ன?

ஹெபாடிக் என்செபலோபதின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

  • மறதி.
  • ஒருமுகப்படுத்துதலுக்கான பிரச்சனைகள்.
  • அதிக எரிச்சல்தன்மை.
  • குழப்பம்.
  • ஒருங்கிணைப்பு பிரச்சனை.
  • குறைந்த விழிப்புணர்வு.
  • விவரிக்க முடியாமல் அலைபாயக்கூடிய மனநிலை.
  • நேரம் மற்றும் இடத்தினை மோசமாக மதிப்பீடு செய்தல்.

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் மற்ற நரம்பியல் அறிகுறிகளுடனும் சேர்ந்து இருக்கலாம் அதாவது:

  • வலிப்பு.
  • பேசுவதில் சிரமம் (தெளிவற்ற பேச்சு).
  • உதறல்.
  • அனிச்சையான நடுக்கம்.
  • அனிச்சையான கண் அசைவுகள்.
  • தசை பலவீனம்.

கல்லீரல் மோசமடைந்து இருப்பதால், கல்லீரல் நோயுடன் தொடர்புடைய மற்ற அறிகுறிகளையும் ஒருவர் எதிர்கொள்ள நேரிடும்.

இதன் முக்கிய காரணங்கள் யாவை?

ஹெபாடிக் என்செபலோபதி ஏற்படுவதற்கான முக்கிய காரணி நாள்பட்ட கல்லீரல் செயலிழப்பே ஆகும். இது பெரும்பாலும் லிவர் சிரோசிஸ் உள்ளவர்களிலோ அல்லது நீண்ட-காலமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களிலோ அல்லது ஹெப்படைடிஸ் பி அல்லது சி தொற்று உள்ளவர்களிலோ காணப்படுகிறது. இந்த பிரச்சனைகளால், கல்லீரல் செயல்பாடான கழிவுகளை வெளியேற்ற முடியாத நிலை ஏற்படுகின்றது. இரத்தத்தில் வளர்ந்து-வரும் இந்த நச்சுகள் மூளை செயல்பாட்டை எதிர்மறையாக பாதிப்பதன் விளைவால் மாறிய மனநல செயல்பாடு மற்றும் நியூரோபிசிகியாட்ரிக் அறிகுறிகளுக்கு வழிவகுக்கின்றது.

ஹெபாட்டா என்செபலோபதி ஒரு மரபுவழி நோய் அல்ல.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

ஹெபாடிக் என்செபலோபதி நோயைக் கண்டறிதலை பொருட்டு, இதன் அறிகுறிகள் மற்றும் மருத்துவ வரலாற்றின் அடிப்படையில் வேறேதேனும் நோய் தொற்று உள்ளதா என அறிய மருத்துவர் விசாரணைகளை நடத்துவார், மற்ற நோயறிதல் சோதனைகள் பின்வருமாறு:

  • நச்சுகளின் இருப்பை கண்டறிதல் மற்றும் கல்லீரலின் ஆரோக்கிய நிலைகளை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றிற்கு இரத்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது.
  • செரிப்ரோஸ்பைனல் திரவத்தில் (சிஎஸ்எப்) ஏதேனும் பாக்டீரியா மற்றும் வைரல் நோய்த்தொற்றுகள் இருக்கிறதா என கண்டறிய முதுகெலும்பு குழாய் சோதனை (இடுப்பு துளை) செய்யப்படுகிறது.
  • மூளை உடற்கூற்றியலை மதிப்பீடு செய்வதற்கு கம்ப்யூட்டேட் டோமோகிராபி (சிடி) ஸ்கேன் மற்றும் காந்த அதிர்வு விம்பங்கள் (எம் ஆர் ஐ) போன்ற இமேஜிங் ஆய்வுகள் மேற்கொள்ளப்படலாம்..

ஹெபாடிக் என்செபலோபதி சிகிச்சை முறை மருந்துகளை உட்கொண்டது, அத்துடன், உணவு பழக்கத்தின் மாற்றங்களையும் கொண்டிருக்கிறது.

மருந்துகள் தற்செயலான தசை இயக்கங்களைக் குறைப்பதற்கும் இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மை அளவுகளை குறைப்பதற்கும் பரிந்துரைக்கப்படுகின்றன. ஹெபாடிக் என்செபலோபதி எனும் நிலைக்கு சிகிச்சையளித்தல் மற்றும் முறையான மருத்துவ ஆலோசனையுடன் குணப்படுத்துதல் ஆகியவை சாத்தியமாகும். இருப்பினும், கல்லீரல் என்செபலோபதி நாள்பட்ட கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களில் முதன்மையாக காணப்படுவதால், இந்நிலை மீண்டும் ஏற்படலாம். இவ்வாறு இந்நிலை மீண்டும் ஏற்படுவதை தடுக்க, நோய் தடுக்கும் சிகிச்சை முறை மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது.



மேற்கோள்கள்

  1. Health On The Net. Encephalopathy. [Internet]
  2. National Centre for Advancing Translational Science. Hepatic encephalopathy. U.S Department of Health and Human Services
  3. Wissam Bleibel et al. Hepatic Encephalopathy. Saudi J Gastroenterol. 2012 Sep-Oct; 18(5): 301–309. PMID: 23006457
  4. Wissam Bleibel et al. Hepatic Encephalopathy. Saudi J Gastroenterol. 2012 Sep-Oct; 18(5): 301–309. PMID: 23006457
  5. Saleh Elwir et al. Hepatic Encephalopathy: An Update on the Pathophysiology and Therapeutic Options. J Clin Transl Hepatol. 2017 Jun 28; 5(2): 142–151. PMID: 28660152

ஹெபாடிக் என்செபலோபதி க்கான மருந்துகள்

Medicines listed below are available for ஹெபாடிக் என்செபலோபதி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.