விழித் தசைநார் அழற்சி - Iritis in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 03, 2018

March 06, 2020

விழித் தசைநார் அழற்சி
விழித் தசைநார் அழற்சி

விழித் தசைநார் அழற்சி என்றால் என்ன?

விழித் தசைநார் அழற்சி என்பது விழித்திரைப்படலத்தின் அழற்சியே ஆகும் (கண்ணின் மணியை சுற்றியுள்ள மற்றும் கண்ணின் அளவைக் கட்டுப்படுத்தும் கண்ணின் வண்ணமயமான பகுதி).இதற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பகுதி அல்லது முழு குருட்டுத்தன்மை போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.விழித்திரைப்படலம் கண்களுக்குள் நுழையும் ஒளியின் அளவை ஒழுங்குபடுத்துகிறது.விழித்திரைப்படலத்திற்கு முன் திரவம் நிரம்பிய விழி முன்னறை உள்ளது.எனவே, விழித்திரைப்படலத்தின் அழற்சி கண் அழற்சிக்கு வழிவகுக்கக்கூடும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

விழித் தசைநார் அழற்சி ஒருபுறமாகவோ அல்லது இருபுறமாகவோ இருக்கக்கூடும்.இதனோடு தொடர்புடைய பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

 • தலைவலி.
 • வலி.
 • கண்கள் சிவத்தல் (மேலும் வாசிக்க: கண்கள் சிவப்பதற்கான காரணங்கள்).
 • மிதப்பான்கள் (பார்க்கும் போது சிறிய புள்ளிகள் அல்லது படிவங்கள் நகரும் ) சிலர் அனுபவிக்கக்கூடும்.
 • பாதிக்கப்பட்ட கண்ணின் மணி சிறியதாகிவிடும்.
 • வெளிச்சத்தைப் பார்க்கும் போது கண் கூச்சம் இருத்தல்.
 • பார்வை குறைபாடு.
 • கண்ணின் மணி ஒழுங்கற்ற வடிவத்தில் இருத்தல்.
 • இளம் பருவ முடக்கு வாதம் (ஜெஐஏ), அறிகுறியற்ற விழித் தசைநார் அழற்சி பெரும்பாலும் பார்வை இழப்பு ஏற்படும் போது அனுபவிக்கப்படுகிறது மற்றும் அடையாளம் காணப்படுகிறது.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

விழித் தசைநார் அழற்சி பின்வரும் காரணங்களால் ஏற்படும்:

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

அறிகுறிகளைப் புரிந்து கொண்ட பின், மேற்கொள்ளப்படும் கண் சார்ந்த கவனமிக்க பரிசோதனை அடிப்படையில் நோய் கண்டறிதல் அமைகிறது.பின்வரும் நோய் கண்டறிதல் நடைமுறைகள் மேற்கொள்ளப்படலாம்:

 • பிளவுபட்ட-விளக்கு கண் பரிசோதனை.
 • விழித் தசைநார் அழற்சி பிற நோய்களுடன் தொடர்புடைதால், முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது, அவை பின்வருமாறு:
  • ரத்த பரிசோதனைகள் ஹெச்எல்ஏ-பி27 ஒருமைப்பண்பு வகைமை, செல் உட்கரு எதிர்ப்பு ஆன்டிபாடி (ஏஎன்ஏ), முடக்கு வாத காரணி (ஆர்எஃப்), பல்வேறு நோய்த்தொற்றுகள் மற்றும் சிவப்பணு படியும் வீதம் (இஎஸ்ஆர்).
  • தோல் சோதனைகள்.
  • எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை.
  • மார்பின் வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (சிடி) ஸ்கேன்.
  • காலியம் ஸ்கேன்.
  • இணைப்புத்திசுப் புற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், திசுப் பரிசோதனை

நோயின் காரணம் மற்றும் தீவிரத்தன்மை பொறுத்து சிகிச்சை தீர்மானிக்கபடுகிறது.பல்வேறு சிகிச்சை முறைமைகள் பின்வருமாறு:

 • மூல காரணத்தைக் கருத்தில் கொண்டு சிகிச்சையளித்தல்: கண்ணில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் வைரஸ் தொற்றுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகள்.
 • அழற்சியை கட்டுப்படுத்த ஸ்டீராய்டுகளின் பயன்பாடு.
 • மேலும் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தடுக்க, கண் சொட்டு மருந்துகள் பயன்படுத்தப்படலாம், இவற்றில் இரண்டு வகைகள் உள்ளன:
  • கண்களை விரிவடையச் செய்வதற்கான சொட்டு மருந்துகள், இது வலியைக் குறைத்து, கண்ணிற்கு ஓய்வு அளிக்கிறது.
  • ஸ்டீராய்டு மருந்துகள் அழற்சியை குறைக்க உதவுகிறது, இது பார்வை மங்கலாவதை தவிர்க்க உதவும்.மேலும் வாசிக்க: (மங்கலான பார்வைக்கான காரணங்கள்).
  • எதிர்ப்புசக்தியொடுக்க மருந்துகள் அரிதாக பரிந்துரைக்கப்படலாம்.மேற்கோள்கள்

 1. Cedars-Sinai. [Internet]. Los Angeles, California, United States; Iritis.
 2. Eyecare Trust. [Internet]. Aylesbury, United States; Iritis.
 3. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Causes - Uveitis.
 4. National Health Service [Internet] NHS inform; Scottish Government; Iritis .
 5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Uveitis.