காது அரிப்பு - Itchy Ear in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

December 03, 2018

March 06, 2020

காது அரிப்பு
காது அரிப்பு

காது அரிப்பு என்றால் என்ன?

காது அரிப்பு என்பது பெரும்பாலும் காதில் ஏற்படும் நோய்த்தொற்றின் விளைவாக ஏற்படும் ஒரு அறிகுறியாகும்.இது வழக்கமாக காது கால்வாயின் சருமத்தின் இயற்கை சுரப்பிகளின் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படுகிறது.காது அரிப்பு என்பது ஒரு பொதுவான பிரச்சனையே ஆகும்.இது பொதுவாக ஒரு அடிப்படை நோய் இருப்பதையே சுட்டிக்காட்டுகிறது.காதில் உள்ள மெழுகு போன்ற அழுக்கை அதிகமாக சுத்தம் செய்தால், சருமம் பாதிப்படையக்கூடும்.இதனால் காதில் நோய்த் தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.பட்ஸ், பல்குத்தி மற்றும் ஊக்கு போன்றவற்றை பயன்படுத்தி காதை அரிப்பது, காது கால்வாயை சேதப்படுத்தக்கூடும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இதனோடு தொடர்புடைய அறிகுறிகள் பின்வருமாறு:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

இதனோடு கூடிய பொதுவான நிலைமைகள் பின்வருமாறு:

காது அரிப்பு ஏற்படுவதற்கான பொதுவான காரணம் பூஞ்சை தொற்று ஆகும்.சில நபர்களில், காது மிகுந்த கூச்ச உணர்திறன் கொண்டிருக்கும், ஒரு நிமிடம் கூட அழுக்கு அல்லது அயல்பொருட்கள் இருந்தால், அது அரிப்பை தூண்டக்கூடும். 

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

உங்கள் மருத்துவர் விரிவான நோய் சார்ந்த வரலாற்றை அறிந்து, அரிப்பு ஏற்படுத்தும் நிலைமைகளை அறிய உடல் பரிசோதனையை மேற்கொள்வார்.காதுகளை ஆய்வு செய்ய காது கோளாறுகளை போக்க, காது நோக்கியைப் பயன்படுத்தக்கூடும்.நோயறிதலின் அடிப்படையில் பின்னர் சிகிச்சை வழங்கப்படும்.

இதற்கான சிகிச்சை பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:

 • நோய்த்தொற்றை சரிசெய்ய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அல்லது பூஞ்சைக்காளான் எதிர்ப்பு சொட்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம்.
 • மிதமான ஸ்டீராய்டு சொட்டு மருந்துகள் இதற்கு பயன்படுத்தப்படலாம்.
 • அடைப்பிலிருந்து நிவாரணம் பெற காது அழுக்கை கரைக்கும் மருந்துகள் உதவுகின்றன.

நோய்த் தடுப்பு பராமரிப்பு நடவடிக்கைகள்:

 • காது அரிப்பு மிதமாக இருந்தால், எளிதில் வீட்டிலேயே கவனித்துக் கொள்ளலாம், ஆனால் அது தொடர்ந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுது நல்லது.
 • காதை பாதிக்கக்கூடிய தோல் நோய்த்தொற்று இருந்தால், ஒரு இஎன்டி நிபுணர் அல்லது தோல் மருத்துவரை அணுக வேண்டும்.
 • செவிப்புலன் உதவிச் சாதனத்தை பயன்படுத்தினால், நோய்த்தொற்றை அகற்றுவதற்கு அதனை  சரியாக சுத்தம் செய்வது அறிவுறுத்தப்படுகிறது.
 • நீங்கள் அசாதாரண இரத்தப்போக்கை தொடர்ச்சியாக அனுபவித்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.மேற்கோள்கள்

 1. Flushing Hospital Medical Center. [Internet]. New York, United States; Itchy Ears – What is the Cause and How do You Treat Them?
 2. St. Louis Children's Hospital. [Internet]. Washington University, St. Louis, Missouri. Ear - Pulling At.
 3. Cleveland Clinic. [Internet]. Euclid Avenue, Cleveland, Ohio, United States; The Sticky Truth About Itchy Ears: You May Be Causing the Problem.
 4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Ear Infections.
 5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Seborrheic dermatitis.

காது அரிப்பு டாக்டர்கள்

Dr. Chintan Nishar Dr. Chintan Nishar ENT
10 वर्षों का अनुभव
Dr. K. K. Handa Dr. K. K. Handa ENT
21 वर्षों का अनुभव
Dr. Aru Chhabra Handa Dr. Aru Chhabra Handa ENT
24 वर्षों का अनुभव
Dr. Jitendra Patel Dr. Jitendra Patel ENT
22 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

காது அரிப்பு க்கான மருந்துகள்

காது அரிப்பு के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।