கண் அரிப்பு - Itchy Eyes in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

April 24, 2019

July 31, 2020

கண் அரிப்பு
கண் அரிப்பு

கண் அரிப்பு என்றால் என்ன?

மிகவும் பொதுவான ஒரு பிரச்னையான கண் அரிப்பு (ஒக்குலர் ப்ருரிடிஸ்) என்பது ஒரு ஒவ்வாமை காரணி அல்லது தூண்டுதலுக்கு எதிராக, ஹிஸ்டமின் என்றழைக்கப்படும் ஒரு வேதிப்பொருளை உடல் வெளியிடும் ஒரு நிலை ஆகும். இது கண்களில் உள்ள இரத்த குழாய்கள் விரிவடைவதற்கு வழிவகுக்கிறது. இதன் காரணத்தினால் கண்களில் உறுத்துதல், அரிப்பு, நீர்க்கசிவு மற்றும் கண்கள் சிவந்து போதல் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

கண்கள் அரிப்பு நோயுடன் தொடர்புடைய முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

கண் அரிப்பு பொதுவாக கீழ்காணும் அறிகுறிகளில் ஒன்றால் ஏற்படுகிறது:

 • ஒவ்வாமை காரணி (மகரந்த தூசி பூச்சிகள், பூசணம், கண் சொட்டு மருந்து அல்லது விலங்குகளின் முடி).
 • கண்களை சுற்றி தோல்அழற்சி.
 • உலர் கண் நோய்க்குறி — கண்களின் மேற்பரப்பு சுற்றி ஈரமாகவும் சரியாகவும் செயலாற்ற தேவையான கண்ணீரை உங்கள் உடல் உற்பத்தி செய்யத் தவறுதல்.
 • கண்களுக்குள் வேதிப்பொருள் மற்றும் அந்நியப் பொருள் செல்லுதல (ஒப்பனை பொருட்கள் மற்றும் நீச்சல் குளங்களில் கலக்கப்படும் குளோரின்).
 • கண்ணிமை அழற்சி — கண் இமைகளில் வீக்கம் ஏற்படுத்தும் நோய்த்தொற்று.
 • தோடுவில்லை காரணமாக ஏற்படும் தொற்று
 • பாதகமான மருந்துகளினால் ஏற்படும் எதிர்வினை (ஆண்டிஹிஸ்டமைன்கள், வலிநிவாரணிகள் மனச்சோர்வு எதிர்ப்பிகள் மற்றும் பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள்) போன்றவை. 

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

உங்கள் மருத்துவர் கீழ்க்கண்டவற்றில் முழுமையான பரிசோதனைக்கு பரிந்துரை செய்வார்:

 • கண் இமைகள், கருவிழிப்படலம் மற்றும் விழிவெண்படலம்.
 • கண்களின் இயக்கம்.
 • உங்கள் கண்கள் வெளிச்சத்திற்கு எவ்வாறு எதிர்வினை புரிகிறது என்று சோதித்தல்.
 • பார்வை.

குறைபாட்டிற்குரிய காரணங்கள் கண்டறியப்பட்ட பிறகு கண்கள் அரிப்பிற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

 • ஆரம்பத்தில், ஏதேனும் அந்நிய துகள் உங்கள் கண்களில் நுழைந்தால், பின்வருவனவற்றை செய்யலாம்:
 1. உப்பு அல்லது சூடான நீரை கொண்டு கண்களை சுத்தம் செய்ய வேண்டும்.
 2. ஒரு ஐஸ் பேக் அல்லது சுத்தமான, குளிர்ந்த, ஈரமான துணியை மூடிய கண்களின் மீது வைப்பது.
 3. உங்கள் கண்களை கழுவ குளிர்ந்த நீரை பயன்படுத்தவும்.
 4. உங்கள் கண்களை தேய்ப்பதை தவிருங்கள் மற்றும் 24 மணி நேரத்திற்குள் அரிப்பானது சரியாகவில்லையென்றால் மருத்துவரின் ஆலோசனையை அணுகுங்கள்.
 • ஒவ்வாமை இருப்பின் ஹிஸ்டமைன் எதிர்ப்பு மருந்துகள் அல்லது அழற்சி எதிர்ப்பு கண் சொட்டு மருந்துகள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும்.
 • கண்களின் மேற்பரப்பில் உள்ள ஒவ்வாமைகளை நீக்க, உலர்ந்த கண்களுக்கு ஈரப்பதம் தரும் பொருட்டு (செயற்கை கண்ணீர்) சொட்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
 • அறையை சுற்றி தண்ணீர் கிண்ணங்கள் வைப்பதன் மூலம், உலர் கண்களுக்கு தேவையான காற்று ஈரப்பதமாக இருக்க உதவும், சுற்றி ஈரப்பதம் இல்லாதது கூட அரிப்பிற்கு காரணமாக இருக்கலாம். 
 • கண் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஆண்டி வைரஸ் அல்லது நுண்ணுயிர்க்கொல்லி சொட்டு மருந்துகள் அல்லது களிம்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.                                                                                மேற்கோள்கள்

 1. Healthdirect Australia. Itchy eyes. Australian government: Department of Health
 2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Eye burning - itching and discharge.
 3. National Eye Institute. Facts About Dry Eye. U.S. National Institutes of Health [Internet].
 4. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Pink Eye: Usually Mild and Easy to Treat.
 5. National Institute of Aging. [Internet]. U.S. Department of Health and Human Services. Aging and Your Eyes.

கண் அரிப்பு க்கான மருந்துகள்

Medicines listed below are available for கண் அரிப்பு. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.