கண்ணெரிச்சல் - Burning Eyes in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

November 29, 2018

October 29, 2020

கண்ணெரிச்சல்
கண்ணெரிச்சல்

கண்ணெரிச்சல் என்றால் என்ன?

கண்ணெரிச்சல் என்பது கண்களில் அரிப்பு, உறுத்துதல் அல்லது எரிச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுவது ஆகும்.  பெரும்பாலும் இவை ஏற்படும்போது கண்களில் நீர்கசிவு ஏற்படும். இமை அழற்சி, உலர் கண்கள், விழிவெண்படல அழற்சி மற்றும் கண் ஒவ்வாமைகள் ஆகியவையே கண்ணெரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் ஆகும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

கண்ணெரிச்சலுடன் காணப்படும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

நோயின் அடிப்படையை சார்ந்த குறிப்பிட்ட அறிகுறிகள்:

 • இமை அழற்சி: இது கண் இமைகளில் ஏற்படும் வீக்கமே ஆகும். இதில் கண் இமையின் அடிப்பகுதியில் எண்ணெய்ப் பசையுடைய பொடுகு-போன்ற செதில்களுடன் கண் கட்டிகள் தோன்றும். (கண்இமை விளிம்பின் அருகில் சிவந்து, வீங்கியிருக்கும் கட்டிகள் இருக்கும்).
 • உலர் கண்கள்: கண்களில் ஏற்படும் உறுத்துதல் மற்றும் எரிச்சல் உணர்வு, சிவந்த கண்கள்; கண்களினுள்ளோ அல்லது கண்களை சுற்றியோ உருவாகும் சளி அடுக்குகள்; கண்களின் உள்ளே ஏதோ சிக்கிக்கொண்டது போன்ற உணர்வு போன்றவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.
 • கண் ஒவ்வாமை அல்லது விழிவெண்படல அழற்சி: ஒவ்வாமை மற்றும் விழி வெண்படலத்தில் ஏற்படும் அழற்சி  புண், வீக்கம், கண்கள் அரித்தல், கண்களில் நீர் வடிதல்; மூக்கடைப்பு மற்றும் தும்மல் போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

கண்ணெரிச்சலுக்கான பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

 • பாக்டீரியா நோய்த்தொற்று.
 • கண்ணீர் சுரப்பிகள் மற்றும் குழாய்களின் செயல் பிறழ்ச்சி.
 • தூசி, மகரந்தம் போன்ற எரிச்சலூட்டும் பொருட்கள் கண்ணுக்குள் நுழைவதால் ஏற்படும் ஒவ்வாமை.
 • மிகுந்த புற ஊதா கதிர்களின் வெளிப்பாட்டினால் ஏற்படும் வெங்குரு.

கண்ணெரிச்சலுக்கான பொதுப்படையாயில்லாத காரணங்கள் பின்வருமாறு:

 • புகை, காற்று அல்லது மிகவும் வறண்ட காலநிலையின் வெளிப்பாடு.
 • கான்டாக்ட் லென்ஸ்களின் நீண்ட-கால பயன்பாடு.
 • முடக்கு வாதம், தைராய்டு கோளாறுகள் மற்றும் தோல் அழிநோய் (லூபஸ்).
 • தூக்க மாத்திரைகள், நெஞ்செரிச்சலுக்கான மருந்துகள் போன்ற சில மருந்துகள்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

கண்ணெரிச்சலுக்கான சிகிச்சையை முன்னிட்டு அடிப்படை நோயைக் கண்டறிவது என்பது அவசியமானது. மருத்துவர்கள் முழுமையான மருத்துவ வரலாற்றை எடுப்பார்கள், குறிப்பாக ஒவ்வாமையினால் ஏற்படும் வெளிப்பாடு அல்லது எரிச்சல், தொற்றுக்கான காரணிகளையும் குறித்துக்கொள்கின்றனர்.

பிளவு நுண்ணோக்கியின் உதவியைக் கொண்டு எடுக்கப்படும் உடலியல் பரிசோதனையின் மூலம் வீக்கம் மற்றும் சிவந்த தன்மைக்கான காரணம் கண்டறியப்படுகிறது. மேலும் கண்ணீர் ஓட்டம் மற்றும் கண்ணீரின் சீர்நிலையும் ஆராயப்படுகின்றன.

கண்ணெரிச்சலுக்கான சிகிச்சை அடிப்படை நிலையை பொறுத்தே அளிக்கபடுகிறது. அவை பின்வருமாறு:

 •  நோய்த்தொற்று இருக்கும் பட்சத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கொடுக்கப்படுகின்றன.
 • புண் மற்றும் வீங்கிய கண்களை குணப்படுத்த செயற்கை கண்ணீர் அல்லது இரத்தச் சேர்க்கை நீக்கும் கண் மருந்துகள் மற்றும் மிதமான ஒத்தடங்கள் கொடுப்படுகின்றன.
 • ஒவ்வாமையிருக்கும் நிலையில் குறிப்பிட்ட ஒவ்வாமை ஊக்கிகளிடமிருந்து விலகியிருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சுய-கவனிப்பு பின்வருவனற்றை கொண்டது:

 • நல்ல சுகாதாரத்தை பராமரித்தல் என்பது மிக்க அவசியம்.
 • ஆண்டிபயாடிக் ஸ்ப்ரேக்கள் மற்றும் ஷாம்பு, குழந்தை ஷாம்பு ஆகியவைகளை உங்கள் கண் இமை மயிர் வரிசை, கூந்தல் மற்றும் உச்சந்தலையை கழுவ உபயோகப்படுத்தலாம்.
 • சூரிய ஒளியின் வெளிப்பாட்டினால் ஏற்படும் வெங்குருக்களை தவிர்க்க சன்கிளாஸ்கள் பயன்படுகிறது.
 • தூசி அல்லது மற்ற எந்த எரிச்சலூட்டிகளின் வெளிப்பாட்டின் பிறகு உப்பு கலந்த கண் சொட்டு மருந்து பயன்படுத்துவதன் மூலம் ஒவ்வாமையூக்கிகள் நீக்கப்படுகிறது.
 • நிறைய தண்ணீர் குடிப்பது மற்றும் மீன் எண்ணெய்களை  நிறைத்த பொருட்களை கூடுதலாக உட்கொள்வதன் மூலம் கண்கள் ஈரப்பததுடன் இருப்பதற்கு உதவிபுரிகிறது.மேற்கோள்கள்

 1. American academy of ophthalmology. Burning Eyes. California, United States. [internet].
 2. Nicklaus Children's Hospital. Eye burning - itching and discharge. South Florida; U.S. state
 3. American Academy of Allergy, Asthma and Immunology [Internet]. Milwaukee (WI); Eye Allergy
 4. American academy of ophthalmology. What Is Dry Eye?. California, United States. [internet].
 5. American academy of ophthalmology. What Are Eye Allergies?. California, United States. [internet].
 6. American academy of ophthalmology. What Is Blepharitis?. California, United States. [internet].

கண்ணெரிச்சல் க்கான மருந்துகள்

Medicines listed below are available for கண்ணெரிச்சல். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.