நுரையீரல் நோய் - Lung Disease in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

April 24, 2019

July 31, 2020

நுரையீரல் நோய்
நுரையீரல் நோய்

நுரையீரல் நோய் என்றால் என்ன?

நுரையீரலின் செயல்பாட்டுடன் தொடர்புடைய எந்தவொரு கோளாறோ பிரச்சனையோ நுரையீரல் நோயாக குறிப்பிடப்படுகிறது. நுரையீரல் நோய்கள் சுவாசப் பாதை, காற்றுப்பைகள், காற்றுப் பைகளுக்கு இடையேயான திசுயிடை உட்பூச்சு, புளூரா (நுரையீரல் உறை), மார்பு சுவர் மற்றும் நுரையீரல்களின் இரத்த நாளங்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். ஆஸ்துமா, காசநோய், மூச்சுக்குழல் அழற்சிஅல்லது மார்புச்சளி நோய், நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், நுரையீரல் அழற்சி, நுரையீரல் இழைமப் பெருக்கம், நுரையீரல் வீக்கம், நுரையீரலின் தமனி அடைப்பு மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை மிகவும் பொதுவான நுரையீரல் நோய்கள் ஆகும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

நுரையீரலுடன் தொடர்புடைய லேசான அறிகுறிகளையும் கூட கவனிப்பது மிகவும் அவசியமானதாகும். நுரையீரல் நோயின் சில எச்சரிக்கைக்குரிய அறிகுறிகள் பின்வருமாறு:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பல்வேறு நுரையீரல் நோய்களுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:

 • பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை நோய்த்தொற்றுகள்.
 • காற்று மாசுபாடு.
 • புகைப்பிடித்தல் அல்லது புகைக்கு வெளிப்படுதல்.
 • தூசி மற்றும் மகரந்தம் போன்ற ஒவ்வாப்பொருட்கள்.
 • தன்னுடல் தாக்கு நோய் குடும்பத்தினரிடத்தில் முன்னரே இருத்தல்.
 • வேலைபார்க்கும் இடத்தில ரசாயன புகை அல்லது கல்நார் போன்ற எரிச்சலூட்டிகளின் வெளிப்பாடு.
 • பிறவி சார்ந்த இதய நோய் அல்லது மரபணு மாற்றம்.
 • நுரையீரல் புற்றுநோய் முன்னரே குடும்பத்தினரிடத்தில் இருத்தல்.
 • உடலின் மற்ற பகுதிகளில் புற்றுநோய் இருத்தல்.
 • பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

நுரையீரல் நோய் கண்டறிதல், நோய்க்கான அடிப்படை காரணத்தை அறிய ஒருவரின் விரிவான மருத்துவ மற்றும் குடும்ப பின்புலத்தை அறிந்து கொள்வதன் மூலமாகத் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து பின்வரும் கண்டறிதல் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன:

 • மார்பு பரிசோதனை.
 • உமிழப்பட்ட எச்சில் அல்லது சளி பரிசோதனை.
 • புரதங்கள், பிறபொருளெதிரிகள் மற்றும் தன்னுடல் தாக்கு நோய்களைக் குறிப்பான்களைக் கண்டறிவதற்கான இரத்த பரிசோதனை.
 • எக்ஸ்-ரே மூலம் நுரையீரலின் இயல்நிலை வரைவு, சி.டி ஸ்கேன் மற்றும் மார்பு காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ).
 • எலக்ட்ரோகார்டியோகிராஃபி (ஈசிஜி).
 • நுரையீரல் ஊடு சோதிப்பு.
 • மூச்சாற்றல் அளவி மற்றும் நாடி ஆக்சிஜன் அளப்பான் போன்ற நுரையீரல் செயல்பாட்டு சோதனைகள்.
 • திசுப் பரிசோதனை அல்லது நுரையீரல் கழுவுதல் (ஒரு வகை நுரையீரல் கழுவுதல்) சோதனை.

உங்கள் மார்பு நிபுணர் உங்களுக்கு இருக்கும் நுரையீரல் நோயைப் பொறுத்து சிகிச்சையைத் தீர்மானிப்பார். இதற்கான சிகிச்சை முறைமைகள் பின்வருமாறு:

 • மருந்துகள்:
  • நோய்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள், காய்ச்சலடக்கிகளுடன் (காய்ச்சலுக்கான மருந்துகள்) வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள்.
  • நுரையீரல்களின் வீக்கத்தைக் (நுரையீரல் அழற்சி) கட்டுப்படுத்தும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள்.
  • இயக்க ஊக்கி மருந்துகள் ஆஸ்துமாவுக்கு ஒரு உள்ளிழுக்கக்கூடிய வகையில், உட்செலுத்துதல் மூலம் மற்றும் / அல்லது வாய்வழி தயாரிப்புகளாக வழங்கப்படலாம்.
  • காசநோய்க்கு சிகிச்சையளிக்க காச நோய் எதிர்ப்பு மருந்துகள்.
  • நுரையீரலின் இழைமப் பெருக்கத்தை மெதுவாக குறைக்கக்கூடிய உட்கொள்ளும் இழைமப் பெருக்க தடுப்பு மருந்துகள்.
  • நுரையீரல் நோயை ஏற்படுத்தும் அமிலப் பின்னோட்ட நோயைக் கட்டுப்படுத்த ஹெச்2 - ஏற்பு எதிரி.
 • சுவாசத்தை எளிதாக்க இயற்கை சுவாச சிகிச்சை.
 • நுரையீரல் புனர்வாழ்வு.
 • கடுமையான நுரையீரல் சேதம் இருப்பின் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை.

புகை மற்றும் மாசை தடுக்க பாதுகாப்பு முகமூடிகளைப் பயன்படுத்தலாம். புகைப்பிடித்தலை கைவிடுதல், யோகா மற்றும் பிராணயாமா (சுவாச பயிற்சிகள்) ஆகியவை நுரையீரல் நோய்களை தடுக்க உதவும். தவறாமல் மருந்துகளை நேரத்திற்கு எடுத்துக்கொள்ளுதல், தொடர் கண்காணிப்பு, மற்றும் நிபுணரின் ஆலோசனைகள் நுரையீரல் நோய்களை தடுக்க மற்றும் குணப்படுத்த உதவும்.மேற்கோள்கள்

 1. American Lung Association. [Internet]. Chicago, IL‎, United States; Breathe Easy.
 2. Canestaro WJ, et al. Drug Treatment of Idiopathic Pulmonary Fibrosis: Systematic Review and Network Meta-Analysis.. Chest. 2016;149:756.
 3. Wielpütz MO. et al. Radiological diagnosis in lung disease: factoring treatment options into the choice of diagnostic modality.. Dtsch Arztebl Int. 2014 Mar 14;111(11):181-7. PMID: 24698073.
 4. Keith C Meyer. Diagnosis and management of interstitial lung disease. Transl Respir Med. 2014; 2: 4. PMID: 25505696.
 5. Anupama Gupta. Pranayam for Treatment of Chronic Obstructive Pulmonary Disease: Results From a Randomized, Controlled Trial. Integr Med (Encinitas). 2014 Feb; 13(1): 26–31.

நுரையீரல் நோய் க்கான மருந்துகள்

நுரையீரல் நோய் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।