வாய் புற்றுநோய் - Oral Cancer in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 20, 2018

September 10, 2020

வாய் புற்றுநோய்
வாய் புற்றுநோய்

சுருக்கம்

பரவலாக வீரியம் மிக்க புற்று நோய்யாக அனைத்து பாலினம் மற்றும் வயது உடையவர்களுக்கு அறியப்படும் நோயாக தொண்டை புற்று நோய் அல்லது வாய்வழி புற்று நோய் உள்ளது. இதன் விளைவாக ஏற்படும் உயிரிழப்பு நடுத்தர வயதினரிடையே (29-50 வயது) மிக அதிகமாக இந்த நோயின் தாக்கங்களால் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சி கூறுகிறது. உலகளாவிய வாய்வழி புற்றுநோயியல் புள்ளிவிவரங்கள் படி, இந்தியாவில் அதிகமான புகையிலை பயன்படுத்துதல் காரணமாக முக்கிய மூன்று புற்றுநோய்களில் ஒன்றாக வாய்வழி புற்றுநோய் அறியப்படுகிறது. இருப்பினும், ஆரம்ப கால நோய் அறிகுறிகளுக்கு தகுந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவ அறிவியல் வழிமுறைகள் மூலம் முழுவதுமாக நோயை குணமடைய செய்ய இயலும். இந்த வாய்வழி புற்று நோய்க்கான சிகிச்சையானது, போதை பழக்கம் மாற்று சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி எனப்படும் மருந்துகள் கொண்டு செய்யும் சிகிச்சை மற்றும் வாய் புற்று நோய் அறுவை சிகிச்சைகளாகும். வாய் புற்று நோய் பற்றி மேலும் அறிய மேலும் கீழ் படிக்கவும்.

வாய் புற்றுநோய் என்ன - What is Oral Cancer in Tamil

வாய்வழி புற்றுநோயானது தொண்டைகுள் (வாய்க்குள்) உள்ளே இருக்கும் செல் அணுக்களிலில் காணப்படும் வீரியமிக்க நோய் தொற்று அல்லது புற்றுநோய் செல்கள் காரணமாக ஏற்படும் நோயாகும். இவை சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் இருப்பின் உயிர்க்கு ஆபத்தானதாகும். ஆராய்ச்சிகளின் கூற்றுப்படி, வாய்வழி புற்று நோயின் முக்கிய காரணம் புகையிலை மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் ஆகும். இருப்பினும் மற்ற சில காரணங்களாலும் வாய் புற்று நோய் ஏற்படுகிறது. வாய் புற்று நோய் பற்றி மேலும் அறிய மேலும் கீழ் படிக்கவும்.

வாய் புற்றுநோய் அறிகுறிகள் என்ன - Symptoms of Oral Cancer in Tamil

வாய்வழி புற்றுநோய் அறிகுறிகள் பெரும்பாலும் முதிர்ந்த நிலையில் குறிப்பாக நோய் பரவும் நிலையிலேயே கண்டறியப்படுகின்றன. முதிர்ச்சியற்ற நோயின் அறிகுறிகள் மிகக்குறைவாகவும் குறைந்த அடையாளங்களுடனும் பார்க்க சாதாரண தொண்டை அலற்சி அல்லது வாய் புண்கள் போல இருப்பதனால் ஆகும். நீங்கள் உங்களை பின்வரும் சில அறிகுறிகள் இருப்பின் பல் மருத்துவர் / பொது மருத்துவரை அனுகும் படி பரிந்துரைக்கப்படுகிறீர்கள்.

 • வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற தொற்றுகள் மூன்று வாரங்களுக்கு மேலாக தொண்டையில் (வாயில்) இருப்பின்,
 • வறட்சியான தொண்டை நிலை ஒரு மாதங்களுக்கு மேல் இருப்பின்,
 • வாய் / தொண்டை புண்கள் 3 லிருந்து  - 4 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருப்பின்
 • தொண்டை குழியில் அல்லது வாயினுள் கட்டி அல்லது ஒரு அசாதரண கட்டி போன்ற அமைப்பு இருப்பின்
 • காரணம் இன்றி பற்கள் வலிவிழப்பு அல்லது விழுதல்
 • தொடர் தொண்டை வலியினால் மிலுங்குவதில் பிரச்சனை.
 • அசாதாரண கடின குரல் அல்லது பேசுவதில் சிரமம்
 • 2 லிருந்து 3 வாரங்களுக்கு மேலாக வாயை திறப்பதில், உதடு, தாடை, நாக்கு காது,கழுத்து தொண்டை பகுதியில் வலி இருப்பின் கவனிக்காமல் இருக்க கூடாது. அதற்கான காரணங்களை உடனடியாக அறிவது வாய் தொற்று நோயை ஆரம்ப நிலையில் அறிய உதவும்.

வாய் புற்றுநோய் சிகிச்சை - Treatment of Oral Cancer in Tamil

தகுந்த மேம்படுத்தப்பட்ட மருத்துவ அறிவியல் வழிமுறைகள் மூலம், நோயின் முதிர்வுநிலை மற்றும் கண்டறியப்படும் முறை பொறுத்தது வெற்றிகரமாக வாய் புற்று நோயை குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் உள்ளன. உலகளாவிய வாய்வழி புற்றுநோயியல் கருத்துப்படி, ஆரம்ப முதல் நிலையில் 90 சதவீத வாழும் வாய்வழி புற்று நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளார்கள். பொதுவாக இதற்க்கான சிகிச்சைமுறையானது கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரப்பி சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைமூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நீக்குதல் போன்ற ஒன்றுக்கு மேற்பட்ட சிகிச்சைமுறைகளை உள்ளடக்கியது.

 • கதிர்வீச்சு சிகிச்சை
  கதிர்வீச்சு சிகிச்சையானது உயர் அலைவரிசை கொண்ட x - கதிர்களை கொண்டு அசாதாரணமாக வளரும் புற்று நோய் செல்களை அழிப்பது. இந்த கதிர்வீச்சு சிகிச்சை மிகச்சாதாரணமாக அனைத்து புற்று நோய் கட்டிகளை குறைக்க பெருமளவில் யன்படுத்தப்படுகிறது. மருத்துவ விபரங்கள்படி முதல் நிலை வாய்வழி புற்று நோய் குறைந்தது ஒரு சிறிய அறுவை சிகிச்சை மற்றும் கார்த்திவிச்சு சிகிச்சை உடன் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக்கொள்வதன் மூலம் சிறப்பாக நோயை எதிர்கொண்டு வெற்றி கொள்ள இயலும்.
   
 • கீமோதெரபி சிகிச்சை
  கீமோதெரபி சிகிச்சையானது, வேறுபட்ட ஒன்றுக்கு மேற்பட்ட செயல்முறைகளை கொண்ட புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை ஊசிமூலம் இரத்தத்தில் கலப்பதின் மூலம் வேகமாக வளரும் புற்றுநோய் செல்களை நோக்கி செலுத்துவது. கீமோதெரபி சிகிச்சையானது, வாய்வழி புற்றுநோய் யின் ஒரு குறிப்பிட்ட நோய் வடிவமான ஒரேபரீன்ஹியால் புற்றுநோய்க்கான மிக சிறந்த சிகிச்சையாகும்.பொதுவாக பயன்படுத்தப்படும் வாய்வழி புற்றுநோய்க்கான மருந்துகள் சிஸ்பிளாட்டின், கார்போபிளாட்டின், ஹைட்ராக்ஸியூரிய. ஏனினும், கீமோதெரபி அதற்கான பலன் மற்றும் எதிர்பலன்களை கொண்டுள்ளது. இந்த சிகிச்சையின் மூலம் குமட்டல், வாந்தி, உணரும் தன்மை, பசியின்மையை பெறலாம். இருப்பினும் வெற்றிகரமான சிகிச்சை சுழற்சிக்கு பின் நீங்கள் உணர்த்த எதிர்வினைகளில் சில குறைய தொடங்கும் மற்றும் நோயாளி தனது அன்றாட வாழ்க்கை முறையை தொடர இயலும்.
   
 • அறுவை சிகிச்சை
  வாய்வழி புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையானது ஒரு பொதுவான செயல்முறை சிகிச்சை ஆகும். ஆனால் அறுவை சிகிச்சையை பொது மருத்துவரிடம் அல்லாது மிகசிறந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவரிடம் செய்யும் படியாக கவனத்துடன் பரிந்துரைக்கப்படுகிறது. ஏன்னெனில், சிறப்பு மருத்துவர் சிறப்பு பயிற்சியுடன் அறுவை சிகிச்சையின் மூலம் புற்றுநோய் பரவுதலுக்கான பகுதியை மிக திறம்பட நீக்கவல்லவர். அவர்கள் சிறந்த புதிய நுண்ணறிவு உபகரணங்களை உபயோகிப்பது மட்டும் இன்றி அனைத்து வில்வழி புற்றுநோய் பகுதிகளை நீக்குவதை உறுதி செய்வார்.

  புக்கள் கேவிட்டி (வாய்) எனப்படும் வாய்வழி புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையானது மிக கடினமான அறுவைசிகிச்சை மற்றும் சில சமயங்களில் முகத்தோரணையை மாறச்செய்யும் வகையில் செய்யபடும் அறுவைசிகிச்சை என மருத்துவ குறிப்புகள் குறிப்பிடுகிறது. சில வாய்ப்புகளில் அறுவைசிகிச்சைக்கு பிறகு உணவு மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்வதற்க்கு குழாய் இணைப்புகள் தேவைப்படலாம். மேலும் உங்களது குரல் திறனை நிரந்தரமாக / தற்காலிகமாக கூட இழப்பத்திறக்கு கூட   வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏனினும், ஒரு நோயாளி இந்த முறையினால் ஏற்படும் பக்கவிளைவுகளை தொடர பயம் கொள்ளாது அறுவைசிகிச்சையினை மேற்கொண்டு புற்றுநோய் பரவுவதை நிறுத்த முடியும். சரியான தருணத்தில் சிகிச்சை மேற்கொள்ளவில்லையெனில் புற்றுநோய் உயிர்கொள்ளும் நோயாக மாறிவிடும்.


மேற்கோள்கள்

 1. The Oral Cancer Foundation. [Internet]. Newport Beach Ca. Dental Articles .
 2. Mangalath U, Aslam SA, Abdul Khadar AH, Francis PG, Mikacha MS, Kalathingal JH. Recent trends in prevention of oral cancer. J Int Soc Prev Community Dent. 2014 Dec;4(Suppl 3):S131-8. doi: 10.4103/2231-0762.149018. PubMed PMID: 25625069; PubMed Central PMCID: PMC4304049.
 3. Oral Cancer. [Internet]. Volume 3 ; 2019 Springer International Publishing Online ISSN 2509-8837. Oral Cancer.
 4. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Lip and Oral Cavity Cancer Treatment
 5. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Oral Cavity, Pharyngeal, and Laryngeal Cancer Prevention

வாய் புற்றுநோய் டாக்டர்கள்

David K Simson David K Simson Oncology
11 वर्षों का अनुभव
Dr. Nilesh Ranjan Dr. Nilesh Ranjan Oncology
3 वर्षों का अनुभव
Dr. Ashok Vaid Dr. Ashok Vaid Oncology
31 वर्षों का अनुभव
Dr. Ashu Abhishek Dr. Ashu Abhishek Oncology
12 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

வாய் புற்றுநோய் க்கான மருந்துகள்

வாய் புற்றுநோய் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।