வாய்ப்புண் - Mouth Ulcer in Tamil

Dr Razi AhsanBDS,MDS

October 30, 2018

September 11, 2020

வாய்ப்புண்
வாய்ப்புண்

சுருக்கம்

வாய்ப்புண் என்பது லேசான வீக்கம் மற்றும் வலியுடன் ஒரு மென்மையான புண் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சினை ஆகும். இது, முக்கியமாக வாயிலுள்ள மிகவும் நுண்ணிய மற்றும் உணர்ச்சிமிக்க மெல்லிய படலத்தில் ஏற்படும் ஒரு பாதிப்பினால்  ஏற்படுவது ஆகும். வாய் அல்லது வாய் சம்பந்தமான புண்கள் அனைத்து வயதுப் பிரிவினரிடமும் பொதுவாக இருக்கிறது மற்றும் ஒரு காயம், ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் மோசமான வாய் சுகாதாரம் உட்பட பல வித காரணங்களைக் கொண்டிருக்கக் கூடும். அவை, மருத்துவமனை பரிசோதனையில் எளிதாகக் காரணம் கண்டறியக்கூடியவை ஆகும் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை. இருப்பினும், திரும்பத் திரும்ப வரும் வாய்ப்புண்களின் காரணத்தைக் கண்டறிய, இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படக் கூடும். வழக்கமாக, ஒரு மருத்துவர் புண் குணமாவதை துரிதப்படுத்த மருந்துகளை பரிந்துரைப்பார். வாய்ப்புண்களை குணமாக்குவதற்கு உதவக் கூடிய ஏராளமான வீட்டு மருத்துவங்களும் இருக்கின்றன. வாய்ப்புண்களுக்கான சிகிச்சை பெரும்பாலும் பழைய முறையே இருக்கிறது, அது, நுண்ணுயிர்க்கொல்லி வாய் கொப்பளிப்பான்கள், வைட்டமின் பி மாத்திரைகள் மற்றும் தற்காலிக வலி மரப்பு மருந்துக்களைப் பயன்படுத்துவது ஆகியவை ஆகும். வைட்டமின் பி12 மற்றும் ஃபோலிக் அமிலம் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் தடுப்பு நடவடிக்கைகளில் அடங்கியவை ஆகும். 

வாய்ப்புண் அறிகுறிகள் என்ன - Symptoms of Mouth Ulcer in Tamil

வாய்ப்புண்கள் கன்னங்களின் உட்புறம், உதடுகள் அல்லது நாக்கில் கூட ஏற்படக் கூடும். ஒரு நபருக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புண்கள் வருவதற்கு சாத்தியம் உண்டு. அவை வழக்கமாக, அவற்றை சுற்றி சிகப்பாக ஒரு வீக்கம் போல் ஏற்படுகிறது. புண்ணின் நடுப்பகுதி மஞ்சளாக அல்லது வெண்மையாக இருக்கக் கூடும்.

வாய்ப்புண்ணின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் உள்ளடக்கியவை பின் வருமாறு:

 • வாயின் உட்பகுதியில் ஏற்படும் மென்மையான சிவந்த அரிப்பு.
 • பேசும் போதும் சாப்பிடும் போதும் வலி ஏற்படுதல்.
 • எரியும் உணர்வு.
 • எரிச்சல்.
 • அதிகப்படியான எச்சில் சுரத்தல் அல்லது வடிதல்.
 • குளிர்ச்சியான உணவு அல்லது பானங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் தற்காலிக நிவாரணம் கிடைத்தல்.
 • முன்கோபம் (குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில்). 

வழக்கமாக வாய்ப்புண்கள் சில நாட்களில் குணமாகி விடும். இருந்தாலும், பின்வருவனவற்றில் ஏதேனும் காணப்பட்டால் ஒரு மருத்துவரைப் பார்ப்பது மிகவும் அவசியம் ஆகும்:

 • எந்த வலியும் ஏற்படுத்தாத ஒரு புண் ஏற்படும் போது.
 • புண்கள் புதிய பகுதிகளுக்குப் பரவும் போது.
 • 2-3 வாரங்களுக்கு மேல் புண்கள் நீடிக்கும் போது.
 • புண்கள் பெரிதாக வளரும் போது.
 • காய்ச்சல் உடன் புண்கள் ஏற்படும் போது.
 • இரத்தப்போக்கு, தோல் அரிப்பு அல்லது விழுங்குவதில் சிரமம் இவற்றுடன் புண்கள் ஏற்படும் போது.

வாய்ப்புண் சிகிச்சை - Treatment of Mouth Ulcer in Tamil

வாய்ப்புண்களுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படலாம் அல்லதுS தேவைப்படாமலும் இருக்கலாம். வழக்கமாக, அவற்றை சுய கவனிப்பு மற்றும் சில சிறிய வீட்டு மருத்துவத்தின் உதவியுடனே குணப்படுத்த முடியும். இருந்தாலும், மருத்துவர் விரைவான நிவாரணத்துக்காக கூடவே மருந்துகளும் பரிந்துரைக்கக் கூடும். அவற்றில் அடங்கியவை பின் வருமாறு:

 • ஸ்டெராய்டு இல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (என்எஸ்ஏஐடிக்கள்), வலியைக் குறைப்பதற்காக கொடுக்கப்படலாம்.
 • நுண்ணுயிர்க்கொல்லி வாய் கொப்பளிப்பான்கள் மற்றும் வலி மரப்பு மருந்துகள் அழற்சி (வீக்கம்) மற்றும் வலியைக் குறைக்க உதவுகின்றவை ஆகும். 
 • மறைந்திருக்கும் காரணம் கண்டறியப்பட்ட பிறகு, அந்த நோய்க்குரிய தனிப்பட்ட வகை சிகிச்சை பின்பற்றப்படக் கூடும். குறிப்பிட்ட நோய்த் தொற்றுகளுக்கு, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் போன்ற வாய்வழி எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
 • வைட்டமின் பி12 அல்லது பி, இவற்றில் எது பற்றாக்குறையாக உள்ளதோ அதற்கான மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
 • வலி மற்றும் அழற்சியில் இருந்து விடுபட தடவுவதற்காக, வலி நிவாரணி (வலி-மரப்பு மருந்து) மற்றும்/அல்லது அழற்சி எதிர்ப்பு களிம்புகள் பரிந்துரைக்கப்படும்.
 • கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை உட்பட வாய்ப்புற்று நோயின் நிலைக்குப் பொருத்தமான சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

வாழ்க்கைமுறை பராமரிப்பு

வாய்ப்புண்களைத் திறமையாகக் கையாள ஒரு சில படிகள் உள்ளன. அவை பின்வருமாறு.

செய்ய வேண்டியவை என்ன?

 • பற்களை சுத்தம் செய்ய மென்மையான குச்சிகள் கொண்ட உயர்தர பல் துலக்கும் பிரஷ்ஷை உபயோகிக்கவும். ஒரு நாளுக்கு இரண்டு முறை பல் விளக்க வேண்டும்.
 • வைட்டமின் ஏ, சி மற்றும் போன்ற ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். எ.கா சிட்ரிக் வகைப் பழங்கள், பப்பாளி, மாம்பழங்கள், கேரட்டுகள், எலுமிச்சை, கொய்யா, மணி மிளகுகள், பாதாம், நெல்லிக்காய்
 • மெல்லுவதற்கு எளிமையான மென்மையான உணவுகளை சாப்பிட வேண்டும்.
 • முறையான, தொடர்ந்த பல் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
 • அதிக தண்ணீர் அருந்த வேண்டும்.

செய்யக் கூடாதவை என்ன?

 • காரமான, அமிலம் நிறைந்த உணவுகளை உண்பது.
 • சோடா குடிப்பது.
 • கடினமான வாய் கொப்பளிப்பான்கள் அல்லது பற்பசையைப் பயன்படுத்துவது.
 • புண்ணை பிதுக்கி எடுக்க, அதை அழுத்துவது.
 • தொடர்ச்சியாக புண்ணைத் தொடுவது.
 • மது அருந்துவது மற்றும் புகைப்பிடிப்பது.
 • மிகவும் சூடான பானங்களைக் குடிப்பது.
 • அதிகமான சாக்லேட்கள் மற்றும் நிலக்கடலைகள் சாப்பிடுவது மற்றும் ஒரு நாளில் பல முறை காஃபி குடிப்பது.

வாய்ப்புண் என்ன - What is Mouth Ulcer in Tamil

வாய்ப்புண், மக்களில் 20-30 சதவிகிதம் பேரைப் பாதிக்கக் கூடிய ஒரு நிலை ஆகும். இது, சளிச்சவ்வு என அறியப்படும் வாயின் உட்புறமுள்ள மெல்லிய சவ்வில் ஏற்படும் ஒரு பாதிப்பு ஆகும். அவை, உயிருக்கு அச்சுறுத்தலானவை அல்ல மற்றும் வாய்ப்புண்ணுக்கு பரவலான காரணங் கள் உள்ளன. அதே போல் பரவலான சிகிச்சைகளும் உள்ளன. வயது வந்தவர்களும், அதே போல் குழந்தைகளும் வாய்ப்புண்களால் பாதிக்கப்படலாம் மற்றும் வழக்கமாக, அவை வலிமிகுந்தவை ஆகும். இந்தப் புண்கள் கன்னங்களின் உட்புறம் அல்லது உதடுகளில் ஏற்பட்டு இரண்டு நாட்கள் முதல் ஒரு வாரம் அல்லது அதற்கு மேலும் நீடிக்க க் கூடும்.மேற்கோள்கள்

 1. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Mouth ulcers
 2. National Health Portal [Internet] India; Mouth Ulcers (Stomatitis)
 3. Nidirect [Internet]. Government of Northern Ireland; Mouth ulcers
 4. Oral Health Foundation, Smile House, 2 East Union Street, Rugby, Warwickshire, CV22 6AJ, UK [Internet] Mouth ulcers
 5. Dental Health Foundation, Dublin, Ireland [Internet] Mouth Ulcers
 6. National Health Service [Internet]. UK; Mouth ulcers.
 7. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Mouth ulcers

வாய்ப்புண் டாக்டர்கள்

Dr. Raghu D K Dr. Raghu D K Gastroenterology
14 वर्षों का अनुभव
Dr. Porselvi Rajin Dr. Porselvi Rajin Gastroenterology
16 वर्षों का अनुभव
Dr Devaraja R Dr Devaraja R Gastroenterology
7 वर्षों का अनुभव
Dr. Vishal Garg Dr. Vishal Garg Gastroenterology
14 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

வாய்ப்புண் க்கான மருந்துகள்

வாய்ப்புண் के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

translation missing: ta.lab_test.sub_disease_title

translation missing: ta.lab_test.test_name_description_on_disease_page