பாலிமோசைடிஸ் - Polymyositis in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 04, 2019

March 06, 2020

பாலிமோசைடிஸ்
பாலிமோசைடிஸ்

பாலிமோசைடிஸ் என்றால் என்ன?

பாலிமோசைடிஸ் என்பது அரிய அழற்சி நிலைகளின் குழு தசைகளில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பாகும்.இது தசைகள் பலவீனமடையவும், அதை சார்ந்திருக்கும் திசுக்கள் அதாவது இரத்த நாளங்கள் போன்றவைகள் பலவீனமடையவும் வழிவகுக்கிறது.இந்நிலை இடுப்பு, தொடைகள் மற்றும் தோள்பட்டைகள் போன்ற பல தசைகளில் பாதிபேற்படுத்துகின்றது.இது எல்லா வயதிற்குட்பட்டோரிடத்திலும் பாதிபேற்படுத்தக்கூடியது, ஆனால் பெண்கள் மற்றும் 30 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு சற்று அதிகமான பாதிப்பை விளைவிக்கின்றது.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

பின்வரும் சில அறிகுறிகளை சில வாரங்களிலோ அல்லது சில மாதங்களிலோ ஒருவரால் கவனிக்கமுடியும்:

 • தசைகள் பலவீனப்படுதல்.
 • உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்படும் வலி மற்றும் நொய்வு.
 • முழங்காலை நீட்டுவதில் சிரமம் ஏற்படுதல்.
 • மாடிப்படிகளை ஏறி இறங்குவதில் சிரமம் ஏற்படுதல்.
 • ஏதேனும் எடை மிகுந்த பொருளை தூக்கவதில் சிரமம் ஏற்படுதல்.
 • உயரத்தில் இருக்கும் ஷெல்ப்களில் ஏதேனும் பொருளை வைப்பதில் சிரமம் ஏற்படுதல்.
 • படுத்திருக்கும் போது தலையை உயர்த்துவதில் சிரமம் ஏற்படுதல்.
 • விழுங்குதல் மற்றும சுவாசித்தலில் ஏற்படும் பிரச்சனைகள்.
 • கீல்வாதம்.
 • களைப்பு.
 • அரித்மிக் இதய துடிப்புகள்.

இதன் முக்கிய காரணங்கள் யாவை?

பாலிமோசைடிஸிற்கான சரியான காரணம் இன்னும் அறியப்படவில்லை, ஆனால் இது பின்வரும் நிலைகளுடன் தொடர்புடையதாகக் காணப்படுகிறது.இதுவே அதன் நிகழ்வுக்குப் பின்னிருக்கும் காரணிமாகவும் இருக்கலாம்:

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

பாலிமசைடிடிஸ் அறிகுறிகள் ஏற்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு, சுகாதார சேவை வழங்குநர் நோயை கண்டறிந்து உறுதிப்படுத்த பின்வரும் சோதனைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடக்கூடும்:

 • இரத்த சோதனை: இது அல்டொலேஸ் மற்றும் கிரியேட்டின் கினேஸ் அளவுகள் போன்ற பல்வேறு என்சைம் அளவுகளைக் கண்டறிய உதவுகிறது.இது நோய் எதிர்ப்பு அமைப்பில் ஏற்பட்டிருக்கும் நோய்கள் காரணத்தினால் எதேனும் ஆட்டோ ஆன்டிபாடிகள் இருக்கின்றதா என்பதை அடையாளம் காண உதவுகிறது.
 • தசைகள் மற்றும் நரம்புகளின் ஆரோக்கியத்தை சோதனை செய்ய எலெக்ட்ரோமியோகிராஃபி.
 • தசைகளின் மேற்பார்வையிட காந்த அதிர்வு இமேஜிங் மற்றும் அல்ட்ராசவுண்ட் இமேஜிங் போன்ற இமேஜிங் தொழில்நுட்பங்கள்.
 • தொற்று மற்றும் சேதங்களை கண்டறிய தசை திசுப்பரிசோதனை.

அறிகுறிகளை கையாளுவதில் ஈடுபடும் சிகிச்சை முறைகள்:

 • தசைகளை வலுப்படுத்தவும் மற்றும் தசை இளக்கத்தை மேம்படுத்தவும் உடலியல் தெரபி.
 • பேசுவதில் மற்றும் விழுங்வதில் ஏற்படும் சிக்கல்களை கையாள பேச்சு தெரபி.
 • தடுப்பாற்றடக்கிகள் மற்றும் கார்டிகோஸ்டீராய்டுகள் போன்ற மருந்துகள்.
 • ஆட்டோ ஆன்டிபாடிகளை கொல்ல நரம்பு தடுப்பாற்றல் தடுப்பு மருந்து.மேற்கோள்கள்

 1. Muscular Dystrophy Association Inc. [Internet]. Chicago, Illinois; What is polymyositis (PM)?
 2. National Organization for Rare Disorders [Internet]; Polymyositis.
 3. National Health Service [Internet]. UK; Myositis (polymyositis and dermatomyositis).
 4. Muscular Dystrophy Association Inc. [Internet]. Chicago, Illinois; Signs and Symptoms.
 5. Hunter K, Lyon MG. Evaluation and Management of Polymyositis. Indian J Dermatol. 2012 Sep-Oct;57(5):371-4. PMID: 23112357