முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் (புரோசுட்டேட் புற்றுநோய்) - Prostate Cancer in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

May 12, 2019

March 06, 2020

முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்
முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்

முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் என்றால் என்ன?

முன்னிற்குஞ்சுரப்பி (புரோஸ்டேட்) என்றழைக்கப்படும் இனப்பெருக்க மண்டலத்தின் சிறிய சுரப்பியிலுள்ள உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியே முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் ஆகும். ஆண்கள் மத்தியில் மிகவும் பொதுவாகக் காணப்படும் புற்றுநோய் வகைகளில் இதுவும் ஒன்று.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் முற்றிய நிலையை எட்டப்படும் வரை எந்தவிதமான அறிகுறிகளையோ தாக்கங்களையோ காட்டுவதில்லை. சில சமயங்களில், சில அறிகுறிகள் புற்று நோய் இருப்பதனை சுட்டிக்காட்டும் விதத்தில் இருக்கின்றன. அத்தகைய அறிகுறிகள் மற்றும் தாக்கங்கள் பின்வருமாறு:

 • சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல்.
 • விறைப்பு அடைவதில் சிரமம்.
 • சிறுநீர் அல்லது விந்துநீரில் இரத்தம் இருப்பது.
 • மலக்குடல், இடுப்புப் பகுதி, தொடைகள், அல்லது இடுப்பில் வலி.
 • சொட்டுச் சொட்டாக சிறுநீர் ஒழுகுதல்.
 • சிறுநீர் பாய்ச்சுவதை துவக்குவதில் சிரமம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் விளைவதற்கான முக்கிய காரணம் எது என்பது தெளிவாக இல்லை. ஆனால் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்க்கான காரணத்தைக் குறிக்கும் பல பொது நோய்க்காரணிகள் உள்ளன. டி.என்.ஏ வில் ஏற்படும் மாற்றங்களால் முன்னிற்குஞ்சுரப்பி உயிரணுக்களில் கட்டுப்பாடற்ற வளர்ச்சி ஏற்பட்டு முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்க்கு வழிவகுக்கிறது.

புற்றுநோய் உருவாக்கும் மரபணுக்கள் மற்றும் புற்றுநோய் கட்டி ஓடுக்கும் மரபணுக்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு இந்நோயின் ஒரு முக்கிய காரணியாகும். புற்றுநோய் உருவாக்கும் மரபணுக்களே உடலில் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சிக்கு காரணமாகும். புற்றுநோய் கட்டி அடக்கும் மரபணுக்கள் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை குறைத்தும் அல்லது புற்றுநோய் உயிரணுக்களை சரியான நேரத்தில் அழித்து புற்றுநோய்க் கட்டியின் வளர்ச்சியை தடுக்கும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

சிறுநீரக மருத்துவர் நடத்தும் திசுப் பரிசோதனை முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் இருப்பதை உறுதி செய்வதற்கான உறுதியான மற்றும் முக்கிய சோதனை ஆகும்.

டிஜிட்டல் மலக்குடல் சோதனை (டி.ஆர்.ஆர்), மற்றும் புரோஸ்டேட்-ஸ்பேஸிபிக் ஆன்டிஜென் (பி.எஸ்.ஏ) சோதனை ஆகியவை இதற்கான மற்ற சோதனைகள் ஆகும். எனினும், இச்சோதனைகள் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோயை உறுதிப்படுத்துவதில்லை. ஏனெனில் முன்னிற்குஞ்சுரப்பின் வளர்ச்சி பிற தொற்றுநோய்களின் விளைவாகவோ அல்லது புற்றுநோய் சம்பந்தமில்லாத விரிவாக்கமாகவோ இருக்கலாம்.

முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய்க்கான சிகிச்சை பெரும்பாலும் வெற்றிகரமாகவே இருக்கிறது. இந்நோய்க்காக வழங்கப்படும் சில மருந்துகள் மற்றும் சிகிச்சைகள்:

 • கதிர்வீச்சு சிகிச்சை - புற்றுநோய் உயிரணுக்களுக்கு காம்மா அலைகள் போன்ற நேரடி கதிர்வீச்சை மருத்துவர்கள் செலுத்துவார்கள்.
 • அறுவை சிகிச்சை - புற்றுநோய் கட்டி விரிவடையாமலும் மற்றும் சிறியதாக இருக்கும் ஆரம்ப கட்டங்களில் அறுவை சிகிச்சை செய்ய ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
 • வேதிசிகிச்சை (கீமோதெரபி) – முற்றிய நிலையில் உள்ள புற்று நோய்க்கு சிகிச்சையளிக்க கீமோதெரபி உதவுகிறது.
 • மருந்துகள் - புற்றுநோயின் வளர்ச்சியை கட்டுப்படுத்த சில மருந்துகளும் பயன்படுத்தப்படலாம்.மேற்கோள்கள்

 1. Prostate Cancer Foundation, Santa Monica [Internet]; About Prostate Cancer
 2. National Health Service [Internet]. UK; Prostate cancer.
 3. Prostate Cancer Foundation of Australia [Internet]; What you need to know about prostate cancer
 4. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Prostate Cancer—Patient Version
 5. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; Treatment Choices for Men With Early-Stage Prostate Cancer
 6. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Prostate Cancer
 7. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Prostate Cancer

முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் (புரோசுட்டேட் புற்றுநோய்) டாக்டர்கள்

David K Simson David K Simson Oncology
11 वर्षों का अनुभव
Dr. Nilesh Ranjan Dr. Nilesh Ranjan Oncology
3 वर्षों का अनुभव
Dr. Ashok Vaid Dr. Ashok Vaid Oncology
31 वर्षों का अनुभव
Dr. Ashu Abhishek Dr. Ashu Abhishek Oncology
12 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் (புரோசுட்டேட் புற்றுநோய்) க்கான மருந்துகள்

முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் (புரோசுட்டேட் புற்றுநோய்) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।