வைட்டமின் டி குறைபாடு - Vitamin D Deficiency in Tamil

Dr. Anurag Shahi (AIIMS)MBBS,MD

May 14, 2019

July 31, 2020

வைட்டமின் டி குறைபாடு
வைட்டமின் டி குறைபாடு

வைட்டமின் டி குறைபாடு என்றால் என்ன?

வைட்டமின் டி குறைபாடு, தாழுயிர்ச்சத்துவம் டி என்றும் அழைக்கப்படுகிறது. இது உடலில்  வைட்டமின் டி குறைவாக இருத்தல் அல்லது இல்லாமல் இருக்கும் நிலைமையே ஆகும்.வைட்டமின் டி என்பது கால்சியம் உறிஞ்சுதலை சீர்படுத்தும் மிக முக்கியமான வைட்டமின்களில் ஒன்றாகும்.இது இணைகேடயச் (பராதைராய்டு) சுரப்பிகள் மூலம் ஹார்மோன்கள் வெளியிட உதவுகிறது.இந்த குறைபாடு இந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் 70% -100% மக்களுக்கு இக்குறைபாடு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

இது அறிகுறி ஆற்றதாக இருப்பதால், பெரும்பாலானவர்களில் இது ஆரம்ப காலத்தில் கண்டறியப்படுவதில்லை.கடுமையான வைட்டமின் டி குறைபாடு பின்வருவனவற்றை விளைவிக்கும்:

 • குழந்தைகளில் என்புருக்கி நோய் (ரிக்கெட்ஸ்).
 • பெரியவர்களில் எலும்புநலிவு நோய்.
 • தசை சோர்வடைதல்.
 • ஆழமான எலும்பு வலி.
 • தொடு வலி உணர்வு.
 • தோற்றப்பாங்கை பராமரிப்பதில் சிரமம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

வைட்டமின் டி மிக குறைந்த உணவு மூலப்பொருட்களில் காணப்படுகிறது.சூரிய ஒளியே இதன் முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது. சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் சருமத்தில் உள்ள வைட்டமினின் செயலற்ற வடிவத்தை இயக்கத்திலுள்ள வடிவமாக மாற்றுகிறது. உடலில் கால்சியத்தை சீர்படுத்தும் செயல்பாட்டைச் செய்வதற்கு முன்னர் இது மேலும் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் செயல்படுத்தப்படுகிறது.

வைட்டமின் டி குறைபாட்டை தூண்டக்கூடிய பல காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு,

 • வைட்டமின் டி நிறைந்த உணவு உட்கொள்ளாதல்.
 • உணவில் கொழுப்பு சேர்த்துக் கொள்ளாததால் உடலில் வைட்டமின் டி உறிஞ்சுதல் போதுமானதாக இல்லாமை.
 • சூரிய ஒளிபடுதல் போதுமானதாக இல்லாதிருத்தல்.
 • வைட்டமின் டி பதப்படுத்தப்படுவதால் சிறுநீரக அல்லது கல்லீரல் நோய்களின் காரணமாக  வைட்டமின் டி இயக்கத்திலுள்ள வடிவமாக மாற்றமடைவதில் ஏற்படும் சமநிலையின்மை.
 • வைட்டமின் டி உடனான மருந்துகளின் இடைத்தாக்கம், வைட்டமின் டி இயக்கத்திலுள்ள வடிவமாக மாற்றமடைதல் மற்றும் உறிஞ்சுதல் ஆகியவற்றில் குறுக்கிடுகிறது.

இவ்வாறான காரணங்களினால் எலும்பு அடர்த்தி குறைந்து, எளிதில் உடையக்கூடிய எலும்புகள் மற்றும் விரைவில் எலும்பு முறிவதற்கு வழிவகுக்கும்.

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

வைட்டமின் டி குறைபாடு இரத்தத்தில் உள்ள வைட்டமின் டி அளவை அளவிடுவதன் மூலமாகக்  கண்டறியப்படுகிறது.அதற்கு முன், மருத்துவர் உடல் பரிசோதனை செய்து நோய் சார்ந்த வரலாற்றைப் பற்றி கேட்டறிவார். கனிமங்களுக்காக குறிப்பாக கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இணைகேடய இயக்குநீர் அளவுகள் போன்ற பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பெரியவர்களுக்கு வைட்டமின் டி-இன் பரிந்துரைக்கப்பட்ட உணவு உட்கொள்ளல் (ஆர்.டி.ஏ) நாள் ஒன்றுக்கு 15 எம்.சி.ஜி ஆகும்.வைட்டமின் டி குறைபாட்டை சரிசெய்ய பல்வேறு குறைநிரப்புகள் கிடைக்கின்றன. வைட்டமின் டி2 மற்றும் டி3 வாய்வழி மற்றும் உட்செலுத்தத்தக்க வடிவங்கள் என இது இரண்டு வடிவங்களில் கிடைக்கிறது.வைட்டமின் டி குறைபாட்டை நிர்வகிப்பதற்கான முக்கிய வழிமுறைகள் உணவுமுறை மாற்றங்களே ஆகும். தினசரி தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வைட்டமின் டி நிறைந்த உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.எ.கா. கல்லீரல், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் பாலாடைக்கட்டி.போதுமான சூரிய ஒளி இருக்கும் காலை நேரத்தில் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வது அறிவுறுத்தப்படுகிறது.இது போதுமான சூரிய ஒளியின் வெளிப்பாட்டை வழங்க உதவுகிறது.இது உடலில் உள்ள வைட்டமின் டி-ஐ இயக்கத்தில் உள்ள வடிவமாக மாற்ற வழிவகுக்கிறது. காலை நேரத்தில் உள்ள சூரிய ஒளி உங்கள் சருமத்தின் மீது அவ்வளவு கடுமையானதாக இருக்காது இது, குறைபாட்டை ஈடுசெய்ய உதவும். வைட்டமின் டி குறைபாடு சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால் எளிதில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.மேற்கோள்கள்

 1. G,Ritu & Gupta, Ajay. (2014). Vitamin D Deficiency in India: Prevalence, Causalities and Interventions. Nutrients. 6. 729-75. 10.3390/nu6020729.
 2. Cleveland Clinic. [Internet]. Cleveland, Ohio. Vitamin D & Vitamin D Deficiency.
 3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Vitamin D Deficiency.
 4. Health Harvard Publishing. Harvard Medical School [Internet]. Vitamin D and Health. Harvard University, Cambridge, Massachusetts.
 5. Linus Pauling Institute [Internet]. Corvallis: Oregon State University; Vitamin D.
 6. National Institutes of Health; Office of Dietary Supplements. [Internet]. U.S. Department of Health & Human Services; Vitamin D.
 7. American Heart Association, American Stroke Association [internet]: Texas, USA AHA: On the Possible Link Between Vitamin D Deficiency and Cardiovascular Disease.

வைட்டமின் டி குறைபாடு டாக்டர்கள்

Dr. Narayanan N K Dr. Narayanan N K Endocrinology
16 वर्षों का अनुभव
Dr. Tanmay Bharani Dr. Tanmay Bharani Endocrinology
15 वर्षों का अनुभव
Dr. Sunil Kumar Mishra Dr. Sunil Kumar Mishra Endocrinology
23 वर्षों का अनुभव
Dr. Parjeet Kaur Dr. Parjeet Kaur Endocrinology
19 वर्षों का अनुभव
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

வைட்டமின் டி குறைபாடு க்கான மருந்துகள்

வைட்டமின் டி குறைபாடு के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

translation missing: ta.lab_test.sub_disease_title

translation missing: ta.lab_test.test_name_description_on_disease_page