எள் விதைகள் மற்றும் நல்லெண்ணெய்  ஆகியவை பழங்காலத்தில் எண்ணெய்-காக பயிரிடப்பட்ட பயிர்களில் ஒன்றாக இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த நல்லெண்ணெய்  சமீபத்தில் தனது பெயரை நிலைநாட்ட தொடங்கியுள்ளது. இது திடீரென்று பிரபலமடைவதற்கான காரணம், சமையல் கலைஞர்களின் புதிய பரிசோதனைகள் மற்றும் சமீபத்திய ஆய்வுகள், இந்த எண்ணெயின் ஆரோக்கிய நலன்களை முன்னிலைப்படுத்த ஆரம்பித்துள்ளதே ஆகும். இந்தியர்கள், ஆபிரிக்கர்கள், தென்கிழக்கு ஆசியர்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் உணவு வகைகளில் நல்லெண்ணெயை பயன்படுத்துகின்றனர். சமையல் தவிர, இது ஒப்பனை மற்றும் குணமாக்கும் நோக்கங்களுக்காகவும், மசாஜ் மற்றும் சிகிச்சைகள் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக மத்திய தரைக்கடல் மற்றும் பிற நாடுகளின் கலாச்சாரங்களில் நல்லெண்ணெய் பல நூற்றாண்டுகளாக அதிகம் பயன்படுத்தப்படுகிறது மற்றும் இது ஆயுர்வேத சிகிச்சையில் ஒரு மசாஜ் எண்ணெயாக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணெய் உடலின் வெப்ப மற்றும் இனிமையான விளைவுகளை ஏற்படுத்துவதே இதற்கு காரணம் ஆகும்.

பல்வேறு பிரித்தெடுத்தல் செயல்முறைகள், நல்லெண்ணெய்க்கு வெவ்வேறு நிறம் மற்றும் சுவையை வழங்குகின்றன. குளிர்ச்சியான அழுத்த செயலால் மேற்கத்திய மக்களால் தயாரிக்கப்படும் நல்லெண்ணெய் வெளிர் மஞ்சள் வண்ணம் கொண்டது, அதே சமயம் இந்திய நல்லெண்ணெய்  இன்னும் தங்க பொலிவைக் கொண்டிருக்கிறது. வறுத்த விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் நல்லெண்ணெய் , ஒரு தனித்த பழுப்பு நிற சாயலில் உள்ளது, மேலும் சமையலுக்குப் பதிலாக ஒரு சுவையூட்டும் முகவராக அது பயன்படுத்தப்படுகிறது.

ஒரு பாலியன்சேச்சுரேட்டட் (பல்நிறைவுற்ற) கொழுப்பாக இருப்பதால், நல்லெண்ணெய்  உங்கள் உடல் நலத்திற்கு நல்லது. இதில் வைட்டமின் கே, வைட்டமின் பி கலவைகள்வைட்டமின் டி, வைட்டமின் ஈ, மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன. நல்லெண்ணெயில்  உள்ள புரதங்கள் சில முடிக்கு நன்மை பயக்கும். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் வணிகரீதியாக பாரம்பரிய எண்ணெய்களை மாற்றினாலும், தமிழ்நாட்டிலும், ஆந்திராவின் சில பகுதிகளிலும், குழம்புகள் மற்றும் வறுவல்களை தயாரிப்பதற்காக நல்லெண்ணெய்  பயன்படுத்தப்படுகிறது. இது இட்லி மற்றும் தோசை  உடன் பரிமாறப்படும் இட்லி பொடியுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது. சோப்புகள், வண்ணப்பூச்சுகள், லூப்ரிகண்டுகள் போன்றவற்றில் கூட குறைந்த தர எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

ஆயுர்வேதத்தின் படி, நல்லெண்ணெய் உடலில் வாதத்தை சமநிலைபடுத்த மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் இதை  கப தோஷத்திற்காகவும், பயன்படுத்த முடியும். மூன்று டோஷ்களில் இரண்டிற்கு இது பயன்படுகிறது அல்லது இயற்கையின் சக்திகளை ஒழுங்குபடுத்துகிறது. இது ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது, மேலும் ஆசனவாயில் மசகு எண்ணெயாக பயன்படுத்தப்படுகிறது.

நல்லெண்ணெய்  பற்றிய அடிப்படை தகவல்கள்:

 • எள்-ளின் தாவரவியல் பெயர் செசமும் இண்டிகும்
 • குடும்பம் - பீடாலியாசீஸ்
 • பொது பெயர் - டில்
 • சமஸ்கிருத பெயர் - டிலா
 • சொந்த பகுதி மற்றும் புவியியல் பரப்பு - எள் உலகம் முழுவதும் வளர்ந்து வருகிறது என்றாலும், உலகின் மொத்த எள் எண்ணெய் உற்பத்தியில் 18.3% உற்பத்தி செய்யும் மியான்மர், எள் எண்ணெய் உற்பத்தியின் முன்னணி தயாரிப்பாளராக உள்ளது. இந்தியாவை தொடர்ந்து சீனா இரண்டாவது பெரிய எள் எண்ணெய் தயாரிப்பாளராக எள் உற்பத்தி செய்யப்படுகிறது.
 • சுவாரஸ்யமான உண்மைகள் - "அலிபாபாவும் நற்பது திருடர்களும்" படத்தில் இருந்து பிரபலமான சொற்றொடர் "திறந்திடு சீசே" என்று குறிப்பிடப்படுவது உண்மையில் எள் தாவரம் என்று நம்பப்படுகிறது. எள் விதைகள் ஒரு நெற்றின் உள்ளே வளரும். அந்த நெற்று முதிர்ச்சியடையும் போது திறந்து கொள்ளும். "திறந்திடு சீசே" என்பதற்கு பொக்கிஷங்களை திறப்பதை குறிக்கிறது என்று கூறப்படுகிறது.
 1. நல்லெண்ணெய்யின் ஊட்டச்சத்து பற்றிய தகவல்கள் - Sesame oil nutrition facts in Tamil
 2. நல்லெண்ணெயின் சுகாதார நலன்கள் - Sesame oil health benefits in Tamil
 3. நல்லெண்ணெயின் பக்க விளைவுகள் - Sesame Oil Side Effects in Tamil
 4. புரிந்து கொண்டது - Takeaway in Tamil

நல்லெண்ணெய்-யின்  100 கிராம் அளவுக்கு 884 கி.கே. இருக்கிறது. இதில் இரும்பு போன்ற கனிம வகைகளும் மற்றும் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும் உள்ளன.  இதனால் இந்த எண்ணெய் மிகவும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தேர்வுகளில் ஒன்றாக இருக்கிறது. நல்லெண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலம் இதயத்தை ஆரோக்கியமானதாக மற்றும் கெட்ட கொழுப்பு அளவுகளை குறைவாக வைத்திருக்க உதவுகிறது.

யுஎஸ்டிஏ ஊட்டச்சத்து டேட்டாபேஸ் படி, 100 கிராம் நல்லெண்ணெய் பின்வரும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.

ஊட்டக்கூறுகள் 100 கிராமுக்கான மதிப்பு
ஆற்றல் 884 கி.கே.
கொழுப்பு 100 கிராம்
கனிமங்கள்  
இரும்பு 12.86 மிகி
உயிர்ச்சத்து  
வைட்டமின் ஈ 1.4
வைட்டமின் கே 13.6 கிராம்
கொழுப்புகள் / கொழுப்பு அமிலங்கள்  
சாசுரேட்டேட் 14.29 கிராம்
மோனோஅன்சாசுரேட்டேட் 39.7 கிராம்
பாலிஅன்சாசுரேட்டேட் 41.7 கிராம்

ஆயுர்வேதத்தில் நல்லெண்ணெயின் அதிகப்படியான பயன்பாடு பரவலாக உள்ளது மற்றும் பிற பாரம்பரிய மருந்துகள் நவீன ஆய்வாளர்களை இந்த எண்ணெயின் குணப்படுத்தும் நன்மைகளை ஆராய தூண்டியிருக்கின்றன. இந்த எண்ணெயின் பல்வேறு சத்துக்கள் நன்கு சமநிலையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவுகிறது. அது எப்படி என்று பார்ப்போம்.

 • முடிக்கு ஊட்டமளிக்கிறது: நல்லெண்ணெய் உங்கள் உச்சந்தலை மற்றும் முடியின் மீது ஒரு ஊட்டமளிக்கும் விளைவை கொண்டுள்ளது. இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து கொள்வது UV சேதத்தில் இருந்து உங்கள் முடி பாதுகாப்பது மட்டும் இல்லாமல், அது முடி சாம்பல் நிறமாக மாறுவதை தடுக்கிறது மற்றும் உங்கள் முடியின் வேர்களை உறுதிப்படுத்துகிறது.
 • தோல் பராமரிப்புக்காக: நல்லெண்ணெய் தொற்று நோயைகளைத் தடுக்கிறது, சூரியனால் ஏற்படும் சேதத்திலிருந்து உங்கள் தோலை பாதுகாக்கிறது மற்றும் தோல் வறட்சியை குறைப்பதில் உதவியாக இருக்கிறது. ஒரு ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், நல்லெண்ணெய் தோலிற்கு வயதாவதை தாமதமாகிறது.
 • எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: நல்லெண்ணெய் என்பது துத்தநாகம் மற்றும் கால்சியம் ஆகியவற்றின் நல்ல ஆதாரமாக இருக்கிறது. இந்த இரு கனிமங்களும் எலும்பு அமைப்புகளை பாதுகாக்க உதவுகின்றன, எலும்புப்புரையை தடுக்கும் சக்தி கொண்டது. இந்த எண்ணெய் பல உயிரி பொருட்களை கொண்டிருக்கிறது, அவை வீக்கம் மற்றும் மூட்டு வலி ஆகியவற்றைக் குறைக்கின்றன.
 • நல்லெண்ணெய் கொண்டு வாய் கொப்பளித்தல்: எள்-ளில் இயற்கை பாக்டீரியா எதிர்பு கலவைகள் உள்ளன. எனவே இது வாய் கொப்பளிப்பதற்கு மற்றும் பல் சிதைவை தடுப்பதற்கும் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. நல்லெண்ணெய் கொண்டு வாய் கொப்பளிப்பதால், வாய்வழி குழியில் 85 சதவிகிதம் பாக்டீரியல் எண்ணிக்கையைக் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
 • இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: நல்லெண்ணெய் முதன்மையாக பாலிஅன்சாசுரேட்டட் கொழுப்புகளால்  உருவாக்கப்பட்டதால், நல்லெண்ணெயின் வழக்கமான நுகர்வு, உடலில் உள்ள கொழுப்பு அளவுகளை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது. ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம் இருப்பதால், நல்லெண்ணெய் அதிரோஸ்கிளிரோஸிசை தடுக்கிறது மற்றும் விஷத்தன்மை அழுத்தத்தின் பாதிப்புக்குரிய விளைவுகளிலிருந்து நம் இதயத்தை பாதுகாக்கிறது.

முடிக்கு நல்லெண்ணெய் - Sesame oil for hair in Tamil

நல்லெண்ணெய்  உங்கள் ஊட்டசத்து மிக்க கூந்தலுக்கு ஏற்ற ஊட்டச்சத்து எண்ணையை உருவாக்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. எவ்வாறாயினும், நல்லெண்ணெயில் இருக்கும் செயலில் உள்ள கூறுகள் உங்கள் முடிக்கான வேறு பல நன்மைகளை வழங்குகின்றன. ஒரு நல்லெண்ணெய்  மசாஜ் உங்கள் முடிக்கு என்ன செய்ய முடியும் என்பதை ஆராய்வோம்.

 • நல்லெண்ணெய் வறட்சி மற்றும் பரட்டையை தவிர்த்து, உங்கள் உச்சந்தலை மற்றும் முடிக்கு ஈரப்பதமூட்ட உதவுகிறது.
 • நல்லெண்ணெயில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை பண்புகள் வெளிநாட்டு உடல்கள் மற்றும் பிற நோய்களிலிருந்து உச்சந்தலையை பாதுகாக்க உதவுகின்றன. இது முடியை நேராக்க மற்றும் முடி தண்டுகளை வலுப்படுத்தி முடியின் இயற்கை நிறத்தை தக்க வைத்து நன்மை பயப்பதாக காணப்படுகிறது.
 • உங்கள் முடியின் மேற்பரப்பில் பாதுகாப்பான ஒரு பூச்சு படலம் அமைப்பதன் மூலம் யூ.வி சேதத்திற்கு எதிராக நல்லெண்ணெய் செயல்படுகிறது.
 • இது உங்கள் கூந்தலை செம்பட்டையாவதில் இருந்து தடுத்து உங்கள் முடியின் இயற்கையான கருப்பு நிறத்தை தருவதாக நம்பப்படுகிறது.

தோல் பராமரிப்புக்கான நல்லெண்ணெய் - Sesame oil for skin care in Tamil

அதன் முடிக்கான நன்மைகள் போல, நல்லெண்ணெய்  தோலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆரோக்கியமான ஒன்றாக மற்றும் உங்கள் தோலிற்கு நல்லதாக இருக்கும் நல்லெண்ணெயின் நன்மைகளைப் பார்ப்போம்.

 • நல்லெண்ணெயில்  மிகுதியாக ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இது கரும் புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற வயது முதிர்வு அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது மற்றும் உங்கள் தோலின் அமைப்புகளை மேம்படுத்துகிறது.
 • இது உங்கள் தோல் மீது ஒரு எமோல்லியன்ட் (இலேபன) விளைவை ஏற்படுத்தும். இது உங்கள் சரும உயிரணுக்களுக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது மற்றும் சருமம் உலர்வதைத்  தடுக்கிறது. 
 • நல்லெண்ணெய் தடவுவதால் சருமத்தில் ஒரு பாதுகாப்பான அடுக்கு உருவாக்குகிறது, இதன்மூலம் சூரியனில் வெளிப்பாடு காரணமாக ஏற்படும் சேதங்களைத் தடுக்கிறது.
 • ஒரு பூஞ்சை எதிர்பானாக இருப்பதால், இது தோல் மீது பூஞ்சை தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
 • நல்லெண்ணெயின்  மேற்பூச்சு பயன்பாடு அதிர்ச்சி தொடர்பான வலி மற்றும் வீக்கத்தைக் குறைப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 • நடு-மேற்கு எத்தியோப்பியா பகுதியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உள்ளூர் மக்கள் அஸ்மெல்லா இலைகளுடன் நல்லெண்ணெயை சேர்த்து கலந்து காயங்களை குணப்படுத்துவதற்காக உபயோகப் படுத்துகின்றனர். பண்டைய நாகரிகங்களின் தனக்கு தானே குணப்படுத்துவதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தப்பட்டது.

இதய ஆரோக்கியத்திற்காக நல்லெண்ணெய் - Sesame oil for heart health in Tamil

நல்லெண்ணெயில் உள்ள முக்கிய கூறுகளில் பாலிஅன்சாசுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இந்த எண்ணெய்கள் மோசமான கொழுப்பின்  (எல்டிஎல்) குறைந்த அளவை பராமரிக்க மற்றும் நல்ல  (எல்டிஎல்) கொழுப்பின் (HDL)  நிலையை பராமரிக்க உதவுகிறது. இதையொட்டி, அதிவேக நெகிழ்திறன் தடுக்கப்படுகிறது மற்றும் இதயத்தை ஆரோக்கியமானதாக வைத்திருக்கிறது.

இதில், இது தீங்கு விளைவிக்கும் கொழுப்பு வகைகளில் ஒன்றான இதய ஆரோக்கியத்திற்கு நல்லது அல்லாததாக கருதப்படுகிற சாசுரேட்டட் கொழுப்புகள் குறைவாக இருக்கிறது.

மேலும், நல்லெண்ணெயின் ஆக்ஸிஜனேற்ற பண்பு நமது இதய தசைகள் மீது விஷத்தன்மை அழுத்தத்தைத் தடுக்கிறது, இதனால் இதயம் உகந்த முறையில் செயல்பட உதவுகிறது. இது லிப்பிட் பெராக்ஸிடேஷனை தவிர்ப்பதன் மூலம் அதிரோஸ்கிளிரோஸை தடுப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

எலும்புகளுக்கு நல்லெண்ணெய் - Sesame oil for bones in Tamil

நல்லெண்ணெய்  ஆரோக்கியமான கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றால் செறிவூட்டப்பட்டிருக்கிறது, அவை எலும்பு வளர்ச்சி மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான முக்கியமான தாதுப்பொருட்கள் ஆகும். நல்லெண்ணெயின் வழக்கமான பயன்பாடு எலும்பு முறிவை குணப்படுத்துவதற்கும் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் உதவுகிறது.

 ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படாமல் இது தடுக்கிறது. மற்றும் எலும்பின் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க உதவுவதன் மூலம் எலும்புகள் பலவீனப்படுவதில் இருந்து தடுக்கப்படுகின்றது.

நல்லெண்ணெய்  ஒரு வலிமையான அழற்சி எதிர்ப்பு முகவர் ஆகும். அரிசி தவிடு எண்ணெய் உடன் சேர்த்து நல்லெண்ணெயின் கீல்வாத  எதிர்ப்பு விளைவுகளை பரிசோதிக்கும் ஒரு ஆய்வில், அவை இரண்டும் கீல்வாதத்துடன் தொடர்புடைய அழற்சி விளைவுகள் மற்றும் வலியை குறைப்பதில் சமமான திறன் கொண்டதாக கண்டறியப்பட்டது.

எனவே, உங்கள் உணவில் நல்லெண்ணெயை சேர்த்துக் கொள்வதன் மூலம் பலவீனமான எலும்புகளுக்கு குட் பை சொல்லுங்கள். உங்களுக்கு நல்லெண்ணெயை சமையலின் சேர்த்துகொள்வது பிடிக்காது என்றால், வறுத்த எள் விதைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட நல்லெண்ணெயையை வாங்கி வந்து சாலட்-டில் சில துளிகளை தெளித்து சாப்பிடுங்கள்.

பற்களுக்கு நல்லெண்ணெயின் பயன்கள் - Sesame oil benefits for teeth in Tamil

எள் எண்ணெய் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு அறியப்படுகிறது, எனவே எண்ணெய் வாய் கொப்பளிப்பிற்கு உபயோகப்படுத்த நல்லெண்ணெய் ஒரு சிறந்த தேர்வாகிறது. எண்ணெய் வாய் கொப்பளிப்பு என்பது வாய் கொப்பளிப்பது போன்ற ஒரு செயலே ஆகும், உங்கள் வாயில் எண்ணெயை வைத்து, அதை துப்புவதற்கு முன்னால் கொப்பளியுங்கள் இதுவே எண்ணெய் வாய் கொப்பளிப்பு. எண்ணெய் வாய் கொப்பளிப்புக்கு நல்லெண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் பற்களில் தகடு உருவாவதை தடுக்க முடியும். இதனால் பல பாக்டீரியாக்களுக்கு எதிராக உங்கள் பற்கள் மற்றும் ஈறுகள் பாதுகாக்கப்படுகிறது மற்றும் பற்களும் வென்மையாக மினுமினுக்கும். லோவாவில் நடத்தப்பட்ட ஒரு பரிசோதனையில், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் வாயை நல்லெண்ணெயை கொண்டு கொப்பளித்தனர் இதனால் வாயில் இருக்கும் பாக்டீரியா 85% குறைவதைக் கண்டனர்.

புற்றுநோய்க்கான நல்லெண்ணெய் - Sesame oil for cancer in Tamil

பல்வேறு வகை புற்றுநோய்களை எதிர்த்து போராட நல்லெண்ணெயில் உள்ள சில சத்துக்கள் உதவுகின்றன. உதாரணமாக, அதிக அளவு மெக்னீசியம்  பெருங்குடல் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்கும், அதே போல கால்சியம் உள்ளடக்கம் கோலோன் புற்றுநோயை தடுக்க உதவும். நல்லெண்ணெய் செசமோல் எனப்படும் பினோலிக் ஆக்ஸிஜனேற்ற கலவையை கொண்டிருக்கிறது. இந்த கலவையானது பல்வேறு புற்றுநோய் வகைகளைத் தடுக்கும் திறன் வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.

இரத்த சோகைக்கு நல்லெண்ணெய் - Sesame oil for anaemia in Tamil

நல்லெண்ணெயில் செம்பு அதிக அளவு நிறைந்திருக்கிறது. சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்திக்கு காப்பர் அவசியம். நல்லெண்ணெயில் செம்பு அதிக அளவு இருப்பதால், அதன் நுகர்வு உடலுக்கு சரியான அளவு இரத்தத்தை வழங்குவதை உறுதி செய்கிறது. மேலும், நல்லெண்ணெயில் இருக்கும் இரும்புச் சத்துக்கள் இரத்த சோகையை எதிர்த்து போராட உதவுகின்றன.

நீரிழிவுக்கான நல்லெண்ணெய் - Sesame oil for diabetes in Tamil

ஹைபோக்லைசிமியா மற்றும் உயர் இரத்த சர்க்கரை அளவுகள் பெரும்பாலும் நிர்வகிக்க கடினமாக உள்ளன மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு பொதுவாக அவர்களுக்கு இரத்த சர்க்கரையை அதிகரிகாத ஆரோக்கியமான உணவைத் தீர்மானிப்பது கடினமாக ஒன்றாக இருக்கிறது. ஒரு இரத்தச் சர்க்கரைக் குறைப்பானாக (இரத்த குளுக்கோஸைக் குறைத்தல்), நீரிழிவு நோயாளிகளுக்கு சமையல் எண்ணெய்க்கு சரியான மாற்று எண்ணையாக நல்லெண்ணெய்  இருக்கலாம். ஒரு ஆய்வில், உடல் குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் நல்லெண்ணெய்  மற்றும் எள் வெண்ணெய் பயனுள்ளதாக இருக்கும் என்று கண்டறியப்பட்டது. எள் வெண்ணெய் ஆண்டிஆக்சிடேட்டிவ், ஆண்டிஹைபர்க்லைசிமிக் மற்றும் லிப்பிட்-லோவரிங் விளைவுகளைக் காட்டிய போது, எள் எண்ணெய் உடல் எடையை நிர்வகிப்பதில் உதவியதுடன், அதில் ஹைபர்க்லைசிமிக்-குக்கு எதிராக செயல்படும் பண்புகளும் இருந்தன.

ஒரு சமீபத்திய ஆய்வில், வெள்ளை எள் எண்ணெய் நீரிழிவு அறிகுறிகள் மற்றும் நீரிழிவு  சிக்கல்களை குறைக்க பயனுள்ளதாக இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டது.

மருத்துவ ஊட்டச்சத்து பற்றிய இதழ் வெளியிட்ட ஒரு மருத்துவ ஆய்வு படி, நல்லெண்ணெயில் இருக்கும் செசமின் நீரிழிவு நோயாளிகளுடன் ஒருங்கிணைந்த நீரிழிவு மருந்துகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நீரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நீண்ட காலத்திற்கு நல்லெண்ணெயை பயன்படுத்தப்படலாம்.

(மேலும் வாசிக்க: நீரிழிவு சிகிச்சை)

 • ஆஸ்பிரின், ஹெபரைன் முதலியன போன்ற ரத்த உறைதல் தடுப்பாங்களை எடுத்துக்கொள்பவர்களுக்கு நல்லெண்ணெயை பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுவது இல்லை. நல்லெண்ணெய் இரத்தத்தை இலக்கமடைய செய்ய கூடியது. ஆகையால் ஒரே நேரத்தில் இந்த இரண்டையும் பயன்படுத்துவது தீங்கு விளைவிக்கும்.
 • நல்லெண்ணெயை பயன்படுத்துவதால் ஒவ்வாமை  ஏற்படுவதாக கூறப்படும் அதிக சம்பவங்கள் உள்ளன. நல்லெண்ணெயை பயன்படுத்திய பிறகு அலர்ஜியின் அறிகுறிகள் எதுவும் ஏற்படுவதை நீங்கள் கவனித்தால்,  உடனடியாக மருத்துவ உதவி பெறவும்.

அதன் பல உடல்நல நன்மைகள் காரணமாக, சந்தையில் கிடைக்கும் மற்ற எண்ணெய்களுக்கு நல்லெண்ணெய் ஒரு ஆரோக்கியமான மாற்று ஆகும். இந்த எண்ணெய் ஆசியாவில் பிரபலமாக இருந்தாலும், மேலும் பல சமையல் முறைகள் இருந்தாலும், மருத்துவ மற்றும் தொழிற்துறை உபயோகங்களைக் கொண்டிருப்பினும், இந்த எண்ணெயின் பெருமளவு உற்பத்தி குறைந்துவிட்டது. நல்லெண்ணெயை  பிரித்தெடுக்கும் செயல் மிகவும் விலை உயர்ந்ததாகும். நல்லெண்ணெயைப் பயன்படுத்துவது பற்றிய ஆராய்ச்சி மிகவும் குறைவாக உள்ளது. இந்த எண்ணெயின் பயன்பாடு மற்றும் பக்க விளைவுகள் பற்றிய முழுமையான ஆராய்ச்சிகள் தேவை. இந்த எண்ணெயின் முழு பயன்பாட்டு நன்மைகளை இந்த எண்ணையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றிய ஆழமான புரிதலை பெற இது உதவும்.


उत्पाद या दवाइयाँ जिनमें Sesame Oil है

மேற்கோள்கள்

 1. E.S. Oplinger et al. Sesame. Alternative Field Crops Manual: University of Wisconsin- Madison, University of Minnesota, St. Paul
 2. United States Department of Agriculture Agricultural Research Service. Basic Report: 04058, Oil, sesame, salad or cooking. National Nutrient Database for Standard Reference Legacy Release [Internet]
 3. Nagpurkar Mukta, Patil Neeta M. A REVIEW ON SESAME - AN ETHNO MEDICINALLY SIGNIFICANT OIL CROP . International Journal of Life Science and Pharma Research, VOL 7/ ISSUE2/APRIL2017
 4. Edmund Hsu, Sam Parthasarathy. Anti-inflammatory and Antioxidant Effects of Sesame Oil on Atherosclerosis: A Descriptive Literature Review. Cureus. 2017 Jul; 9(7): e1438. PMID: 28924525
 5. Kandangath Raghavan ANILAKUMAR, Ajay PAL, Farhath KHANUM, Amarinder Singh BAWA. Nutritional, Medicinal and Industrial Uses of Sesame (Sesamum indicum L.) Seeds - An Overview . Agriculturae Conspectus Scientifi cus | Vol. 75 (2010) No. 4 (159-168)
 6. Liu Z et al. Sesamol Induces Human Hepatocellular Carcinoma Cells Apoptosis by Impairing Mitochondrial Function and Suppressing Autophagy. Sci Rep. 2017 Apr 4;7:45728. PMID: 28374807
 7. Fatemeh Haidari, Majid Mohammadshahi, Mehdi Zarei, Zahra Gorji. Effects of Sesame Butter (Ardeh) versus Sesame Oil on Metabolic and Oxidative Stress Markers in Streptozotocin-Induced Diabetic Rats. Iran J Med Sci. 2016 Mar; 41(2): 102–109. PMID: 26989280
 8. Yadav NV et al. Sesame Oil and Rice Bran Oil Ameliorates Adjuvant-Induced Arthritis in Rats: Distinguishing the Role of Minor Components and Fatty Acids. Lipids. 2016 Dec;51(12):1385-1395. Epub 2016 Oct 17. PMID: 27747452
 9. Adil Adatia, Ann Elaine Clarke, Yarden Yanishevsky, Moshe Ben-Shoshan. Sesame allergy: current perspectives. J Asthma Allergy. 2017; 10: 141–151. PMID: 28490893
 10. Marzieh Beigom Bigdeli Shamloo. The Effects of Topical Sesame (Sesamum indicum) Oil on Pain Severity and Amount of Received Non-Steroid Anti-Inflammatory Drugs in Patients With Upper or Lower Extremities Trauma. Anesth Pain Med. 2015 Jun; 5(3): e25085. PMID: 26161326
 11. Radava R. Korać, Kapil M. Khambholja. Potential of herbs in skin protection from ultraviolet radiation. Pharmacogn Rev. 2011 Jul-Dec; 5(10): 164–173. PMID: 22279374
 12. Farhan Aslam et al. Evaluation of White Sesame Seed Oil on Glucose Control and Biomarkers of Hepatic, Cardiac, and Renal Functions in Male Sprague-Dawley Rats with Chemically Induced Diabetes. J Med Food. 2017 May 1; 20(5): 448–457. PMID: 28332903
 13. Sankar D, Ali A, Sambandam G, Rao R. Sesame oil exhibits synergistic effect with anti-diabetic medication in patients with type 2 diabetes mellitus. Clin Nutr. 2011 Jun;30(3):351-8. PMID: 21163558