ஆந்த்ராக்ஸ் - Anthrax in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

November 27, 2018

March 06, 2020

ஆந்த்ராக்ஸ்
ஆந்த்ராக்ஸ்

ஆந்த்ராக்ஸ் என்றால் என்ன?

ஆந்த்ராக்ஸ் என்பது பேசில்லஸ் ஆந்த்ராஸிஸ் பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய ஒரு தொற்றுநோயாகும். இந்த உயிரினம் பொதுவாக மனிதர்களை விட விலங்குகளிடமே காணப்படுகிறது. இது சிலக் கட்டங்களில் செயலற்று விதைகளின் வடிவத்தில் இருக்கின்றது மற்றும் இதனால் விதைகளாகவே பல ஆண்டுகள் உயிர் வாழ முடியும். இந்த வித்துகள் அதற்கு சாதகமான சூழ்நிலையில் முளைத்து மேலும் பெருகும். மனிதர்கள் இந்த தொற்றுநோயை வித்துகளின் மூலமே ஈட்டிக்கொள்கிறார்கள், இது அவர்களது உடலின்னுலேயே உயிர்ப்பெற்று, பெருகி, பரவி மற்றும் நச்சுத்தன்மையுடைய இந்த தொற்றை உற்பத்தி செய்து ஆந்த்ராக்ஸ் நோயிற்கு வித்திடுகிறது. ஆந்த்ராக்ஸ் என்றப் பெயர் ஒரு கிரேக்க வார்த்தையை பின்தொடர்ந்து நிலக்கரி என்ற அர்த்தத்தோடு இடப்பட்டிருக்கிறது. இதன் இயல்பான பண்பின் உண்மையை உணர்த்துவது போல ஆந்த்ராக்ஸ் இயற்கையாகவே தோலில் கருப்பு நிற புள்ளிகளை ஏற்படுத்துகிறது.

பயங்கரவாதிகள் இந்த நுட்பத்தை 2001 ஆம் ஆண்டில் ஆந்த்ராக்ஸை பரப்புவதற்காகப் பயன்படுத்தினர். இந்த ஆந்த்ராக்ஸின் பயோடேரோரிஸ்ட் தாக்குதலே நாம் கவலைபடுவதற்கான காரணம், மற்றும் விஞ்ஞானிகள் எதிர்காலத்தின் இவ்வாறு நடக்கும் தாக்குதலினால் ஆந்த்ராக்ஸ் நோய் பரவாமல் தடுக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

ஆந்த்ராக்ஸின் அறிகுறிகள் அதன் வகைகளை சார்ந்தவையாகும்.

க்யூடேனியஸ் ஆந்த்ராக்ஸ் (தோல் சார்ந்த) என்பது உடலில் ஏற்படும் வெட்டு அல்லது காயத்தின் மூலம் வித்துக்கள் மனித உடலில் நுழையும்போது ஏற்படுவது அத்தோடு எரிச்சலுடன் கூடிய ஒரு கருப்பு புண் உருவாகும். புண்கள் கை, தலை, கழுத்து மற்றும் முகத்தில் காணப்படலாம். சிலருக்கு தலைவலி, குமட்டல், வாந்தி, தசை வலி மற்றும் காய்ச்சல் ஏற்படலாம்.

கெஸ்ட்ரோன்டஸ்டினல் ஆந்த்ராக்ஸ் என்பது தொற்றினால் பாதிக்கப்பட்ட மிருகத்தின் இறைச்சியை உட்கொள்வதால் ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள் காய்ச்சல் மற்றும்  ஃபுட் பாய்சனிங்-னால்  ஏற்படும் வாந்தியை ஒத்திருக்கும் , ஆனால் நோய் தாக்குதல் கடுமையானதாக இருந்தால் வயிற்று வலி, இரத்தவாந்தி மற்றும் தொடர்  வயிற்றுப்போக்கு போன்றவைகளை ஏற்படுத்தக்கூடியது.

வித்துக்களை சுவாசத்தின் மூலம் உள்ளிழுப்பதால் ஏற்படும் ஆந்த்ராக்ஸ் மிகவும் கடுமையான நிலையை ஏற்படுத்தக்கூடியது. ஆரம்பக்கட்ட அறிகுறிகள் சளி, காய்ச்சல், இருமல், சோர்வு, உடல் வலி, மற்றும் தலைவலி உள்ளிட்டவைகளை போலவே இருக்கும், ஆனால் மேலும் வலுவடைந்து மூச்சுத்திணறல் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது.

அதன் முக்கிய காரணங்கள் என்ன?

பெரிய ராட்-வடிவ பாக்டீரியா பேசில்லஸ் ஆந்த்ராஸிஸை கொண்ட வித்துகளே இந்த நோய்தொற்றுக்கு காரணம் ஆகும். இந்த பாக்டீரியா பொதுவாக மண்ணில் பல ஆண்டுகளாக வித்துகளை செழித்தோங்கச் செய்கிறது. இந்த வித்துகள் அழிவை எதிர்ப்பவைகள். பொதுவாக, அவை மனிதர்களைவிட அதிகமாக மேய்ச்சல் விலங்குகளையே தொற்றுகிறது. வித்து கலந்த காற்றை சுவாசிப்பதனாலோ, தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்கினை உண்ணுவதாலோ, அல்லது விதையானது காயத்தில் அல்லது தோலில் வெட்டுப்பட்ட இடத்தில் படிவதனாலோ மனிதர்களால் இந்த தொற்று ஈட்டப்படுகிறது.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

நோயாளியின் மருத்துவ வரலாறு மற்றும் நோயின் ஆக்கிரமிப்பு பற்றிய தகவல்களை மருத்துவர்கள் விரிவாக விசாரிக்கக்கூடும். அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு, நோய்த்தாக்கப்பட்ட தோலின் மாதிரிகள், த்ரோட் ஸ்வாப் அல்லது   சளியை சேகரித்தல் மற்றும் இரத்தத்தை நேரடியாக ஆய்வு செய்வதன் மூலம் பாக்டீரியா அல்லது ஆன்டிபாடிகளின் இருப்பை கண்டறிதல். மருத்துவர்கள் மார்பக எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை மூலமாகவும் நோயை கண்டறிந்து உறுதிபடுத்தலாம். இதனால் நுரையீரல் ஓரங்களில் இருக்கும் திரவம் அல்லது மார்பு விரிவடைந்திருத்தலைக் காணலாம்.

அனைத்து வகையான ஆந்த்ராக்ஸையும் ஆண்டிபையோட்டிக்ஸினை கொண்டு சிகிச்சையளிக்கவும் மற்றும் குணப்படுத்த முடியும்; பிற மருந்துகளுடன் சேர்ந்து பாக்டீரியாக்களால் தயாரிக்கப்படும் நச்சுகளை அழிக்க அண்டிடாக்ஸின்கள் பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் நரம்பு வழி ஆண்டிபையோட்டிக்ஸ் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்டிபையோட்டிக்ஸ் கண்டிப்பாக பரிந்துரைக்கப்பட்டு மற்றும் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலேயே அதை உட்கொள்ள வேண்டும். ஆந்த்ராக்ஸினால் பாதிப்பு ஏற்பட்ட நபர்கள் 60 நாட்கள் தற்காப்புக்கு ஆண்டிபையோட்டிக்ஸை எடுத்துக்கொள்ளலாம். உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எஃப்.டி.ஏ) டாக்ஸிசைக்ளின், சிப்ரோஃப்லோக்சசின், லெவொஃப்ளாக்சசின், மற்றும் பாரெண்ட்ரல் ப்ரொகெய்ன் பென்சிலின் ஜி ஆகியவை.

ஆண்டிபையோட்டிக்ஸையும் பரிந்துரைச்செய்கிறது. இந்த மூன்று அளவுகளுடன் சேர்த்து, ஆந்த்ராக்ஸின் வெளிப்பாட்டின் பிறகு விரைவாக தடுப்பூசி தொடர்களை ஆரம்பித்துவிட வேண்டும். தடுப்பூசிகள் சுகாதார பராமரிப்பு மருத்துவரிடமிருந்தே பெறவேண்டும் பொது மக்கள் தாமாகப் பெறக்கூடாது.

ஆந்த்ராக்ஸ் ஒரு தெரிவிக்கப்படவேண்டிய நோயாகும்; நோய் கண்டறிந்த பின்னர் சுகாதார மையங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பி ஆந்த்ராஸிஸ்க்கு எதிராக செயல்படும் மற்ற ஆண்டிபையோட்டிக்ஸ் டாக்ஸிசைக்ளின், பென்னிசிலின், அமொக்ஸிசில்லின், அம்பிசில்லின், சிப்ரோஃப்ளோக்சசின், காடிஃப்லோக்சசின், குளோராம்பினிகோல் போன்றவையாகும்.மேற்கோள்கள்

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Anthrax
  2. Melissa Conrad Stöppler. Anthrax. eMedicineHealth. [health]
  3. orld Health Organization [Internet]. Geneva (SUI): World Health Organization; Guidance on anthrax: frequently asked questions
  4. National Institute of Health and Family Welfare. Anthrax. Health and Family Welfare. [internet]
  5. U.S. Department of Health & Human Services. A History of Anthrax. Centers for Disease Control and Prevention. [internet]